Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் கலைக்கப்படும் - அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் கலைக்கப்படும் - அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா:-
28 ஏப்ரல் 2014
 Ducklas_CI.gif
 யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் கலைக்கப்படவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா இன்று திங்கட்கிழமை (28.04.14) தெரிவித்தார்.
 
யாழ். மாநகர சபையில் தற்காலிக தொழிலாளர்களாக கடமையாற்றிய 87 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்.மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை (28.04.14) நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கலைக்கப்படாலும், அடுத்த ஆட்சி வரும் வரையில் மாநகர சபை செயற்படும். உங்கள் தொழிலுக்கும் தொழில் தருநருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நேர்மையான, நடைமுறைச் சாத்தியமான அரசியலை நான் பின்பற்றிக் கொண்டு வருகின்றேன்.
 
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நானும் ஒரு வகையில் காரணம். ஒரு காலகட்டத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவன் என்ற காரணத்தினால் மக்களின் கருத்துக்களுடன் சேர்ந்து போவதற்கு இணங்கி வருகின்றேன்.
 
இன்று வழங்கப்படும் நியமனங்கள் எவரின் அழுத்தத்தினாலும் வழங்கப்படவில்லை என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 
 
நியமனக்கடிதம் வழங்கும் இன்றைய நிகழ்விற்கு சிலர் வருகைதர தவறிவிட்டவர்களுக்கான நியமன கடிதங்கள் விரைவில் வழங்கப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

//உங்கள் தொழிலுக்கும் தொழில் தருநருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்.//

 

:D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

இதோட யாழ்ப்பாணத்தை விட்டே ஓடிடனும்.

 

எனி வவுனியா தான் தஞ்சம். அங்க.. ஒரு விளாம்பழம் கூடக் கிடைக்காது. :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.