Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணதில் ஜே.பி.எல். இருபது 20 போட்டிகள் ஆரம்பம்

Featured Replies

ஜே.பி.எல். இருபது 20 போட்டிகள் ஆரம்பம்
புதன்கிழமை, 30 ஏப்ரல் 2014 16:16

 

ஜே.பி.எல் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்;டி எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 

யுவ பிரண்ட் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த இருபது 20 சுற்றுப்போட்டியில் யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றவுள்ளதுடன், அவை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

அதன்படி ஏ பிரிவில் கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், ஸ்ரான்லி, ஸ்கந்தா ஸ்ரார்ஸ், ஸ்ரீ காமாட்சி, மானிப்பாய் பரிஷ் ஆகிய அணிகளும், பி பிரிவில் ஜொலிஸ்ரார்ஸ், கிறாஸ்கோப்பர்ஸ், மூளாய் விக்டோரி, திருநெல்வேலி, யூனியன் ஆகிய அணிகளும், சி பிரிவில் சென்றலைட்ஸ், ஜொனியன்ஸ், நியு ஸ்ரார்ஸ், அரியாலை மத்தி ஆகிய அணிகளும், டி பிரிவில் சென்ரல், பற்றீசியன், திருநெல்வெலி வை.எம்.எச்.ஏ, யங்ஸ்ரார்ஸ் ஆகிய அணிகளும் மோதவுள்ளன.

 

முதல் சுற்றுப் போட்டிகள் லீக் முறையில் நடைபெற்று தொடர்ந்து காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் ஜுன் மாதம் 29 ஆம் திகதி இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/108736---20--.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கொக்குவில் சி.சி.சி, சென்றலைட்ஸ் அணிகள் வெற்றி
ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014 17:13

 

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் முதல் நாள் ஆட்;டத்தில் கொக்குவில் மத்திய சனசமூக நிலையமும், சென்றலைட்ஸ் அணியும் வெற்றிபெற்றன.

 

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்டக் கழகங்களுக்கிடையில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் (ஜே.பி.எல்) இருபது 20 சுற்றுப்போட்டிகள் சனிக்கிழமை (10) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

 

சனிக்கிழமை (10) நடைபெற்ற முதலாவது போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியினை எதிர்த்து மானிப்பாய் பரிஷ; விளையாட்டுக்கழகம் மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி 19.2 பந்துபரிமாற்றங்களில் 123 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

 

துடுப்பாட்டத்தில் கே.ஆதித்தன் 28, கே.ஜனுதாஸ் 17 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மானிப்பாய் பரிஷ; அணி சார்பாக எஸ்.சுபாஸ்கரன் 04 ஓவர்கள் பந்து வீசி 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 03 இலக்குகளையும், என்.கிNஷhக்குமார் ஆர்.வினோத் 02 விக்கெட்டுக்களையும் ரி.தில்லைராசன் ஆகியோர் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.

 

124 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மானிப்பாய் பரிஷ; அணியினர் 16.1 பந்துபரிமாற்றங்களில் 91 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளை இழந்தது. துடுப்பாட்டர்தில் ஆர்.வினோத் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 

பந்துவீச்சில் கொக்குவில் மத்தி சார்பாக கே.சுலோஜன் 04 இலக்குகளையும், கே.பபிதரன், கே.ஜனுதாஸ் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.

இரண்டாவது போட்டியில் சென்றலைட்ஸ் அணியினை எதிர்த்து நியுஸ்ரார்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸ்ரார்ஸ் அணி 17.1 பந்துபரிமாற்றங்களில் 90 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

 

துடுப்பாட்டத்தில் எஸ்.ரமணம் 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக கே.சௌமிதரன் 4, எம்.வதூஸனன் 3, இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

91 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி 14.3 பந்துபரிமாற்றங்களில் 4 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

 

துடுப்பாட்டத்தின் எஸ்.ஜேம்ஸ்ஜான்ஸன் 27, ஆர்.ஜெனோசன் 17 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/110112-2014-05-11-11-48-10.html

  • தொடங்கியவர்

ஜொலிஸ்டார்ஸ், ஸ்ரீ காமாட்சி அணிகள் வெற்றி
செவ்வாய்க்கிழமை, 13 மே 2014

-

 

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது: 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் ஜொலிஸ்டார், ஸ்ரீ காமாட்சி அணிகள் வெற்றிபெற்றன.

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்டக் கழகங்களுக்கிடையில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் (ஜே.பி.எல்) இருபது - 20 சுற்றுப்போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (10) முதல் நடைபெற்று வருகின்றன.

 

மேற்படி சுற்றுப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (11) இரண்டு ஆட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆட்டத்தில் ஜொலிஸடார்ஸ் அணியினை எதிர்த்து திருநெல்வேலி சி.சி அணி மோதியது.

 

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி சி.சி அணி  20 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.பிரபவன் 35 ஓட்டங்களைப் பெற்றார்.

 

பந்துவீச்சில் ஜொலிஸ்டார்ஸ் அணி சார்பாக எஸ்.சைலேஸ்வரன் 3, எம்.மணிவண்ணன், எஸ்.மதுசன் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.
132 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஜொலிஸ்டார்ஸ் அணி 18.4 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.சஜீகன் 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 

பந்துவீச்சில் ஆர்.சுரேந்திரன் 3, பி.பிரபவன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக 54 ஓட்டங்கள் பெற்ற எஸ்.சஜீகன் தெரிவாகினார்.

இரண்டாவது போட்டியில் ஸ்ரீ காமாட்சி அணியினை எதிர்த்து ஸ்ரான்லி அணி மோதியது, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ காமாட்சி அணி 20 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.  துடுப்பாட்டத்தில் எஸ்.தீபன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.

 

பந்துவீச்சில் ஸ்ரான்லி அணி சார்பாக எம்.சுதர்சன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.

177 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்ரான்லி அணி, 19.4 பந்துபரிமாற்றங்களில் 161 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. இதனால் 15 ஓட்டங்களால் ஸ்ரீ காமாட்சி அணி வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில் எல்.இனோஜன் 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஸ்ரீ காமாட்சி அணி சார்பாக எம்.தர்ஷன் 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இப்போட்டியில் சிறப்பாட்டக்காரராக ஸ்ரீ காமாட்சி அணியின் எஸ்.தீபன் தெரிவு செய்யப்பட்டார்.

 

இச்சுற்றுப்போட்டியில் இவ்வருடம் இரண்டாவது தடவையாக நடைபெறுவதுடன், கடந்த முறை நடைபெற்ற போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி வெற்றிபெற்றிருந்தது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/110180-2014-05-12-07-18-21.html

  • தொடங்கியவர்

எட்டு இலக்குகளால் சென்ரல் அணி வெற்றி
புதன்கிழமை, 14 மே 2014யாழ்ப்பாணப் பிறிமியர் லீக் போட்டியில் இன்று புதன்கிழமை (14) நடைபெற்ற போட்டியொன்றில் சென்ரல் விளையாட்டுக்கழகம் 8 இலக்குகளால் வெற்றிபெற்றது.

 

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக்கின் இரண்டாவது வருடப் போட்டிகள் கடந்த 10 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

 

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றும் இந்த இருபது – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று புதன்கிழமை (14) இடம்பெற்ற ஆட்டத்தில் சென்ரல் விளையாட்டுக்கழக அணியினை எதிர்த்து யங்ஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.

 

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யங்ஸ்ரார்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஏ.சதீஸ் 37, ஆர்.இராஜாராம் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 

பந்துவீச்சில் சென்ரல் அணி சார்பாக, எஸ்.சுபதீஸ், வி.றஜீவ்குமார் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்ரல் அணி, 15 பந்துபரிமாற்றங்களில் 2 இலக்குளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

 

துடுப்பாட்டத்தில் எஸ்.சுதர்சன் யு.கலிஸ்ரன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 42, 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக எஸ்.சுதர்சன் தெரிவு செய்யப்பட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/110518-2014-05-14-13-57-01.html

 

  • தொடங்கியவர்

யூனியன்ஸ், நியுஸ்டார்ஸ் அணிகள் வெற்றி

 

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் சுற்றுப்போட்டியில் புதன்கிழமை (14) இடம்பெற்ற போட்டியில் தெல்லிப்பளை யூனியன்ஸ் மற்றும் கந்தர்மடம் நியுஸ்டார்ஸ் அணிகள் வெற்றிபெற்றன.

 

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தில் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என்று அழைக்கப்படும் இருபது–20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

 

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றுகின்ற இந்த சுற்றுப்போட்டியில் புதன்கிழமை இரண்டு ஆட்டங்கள் இடம்பெற்றன.

முதலாவது ஆட்டத்தில் தெல்லிப்பளை யூனியன்ஸ் விளையாட்டுக்கழக அணியினை எதிர்த்து சுழிபுரம் விக்டோரியன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.சதீஸ்கண்ணா 60, ஆர்.ஆகீஸன் 34 ஓட்டங்களைப் பெற்றனர்.

 

பந்துவீச்சில் விக்டோரியன்ஸ் சார்பாக எஸ்.சிந்துஜன் 3, எம்.சுரேந்தர் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

201 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய விக்டோரியன்ஸ் அணி 17.1 பந்துபரிமாற்றங்களில் 130 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் கே.கஜேந்திரன் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

 

பந்துவீச்சில் யூனியன்ஸ் அணி சார்பாக எஸ்.தயாளன் 3, எம்.மகிதரன், பி.பிரசாந்தன். எம்.கலிராஜ் ஆகியோர் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக எஸ்.சதீஸ்கண்ணா தெரிவு செய்யப்பட்டார்.

 

இரண்டாவது போட்டியில் நியுஸ்டார்ஸ் அணியினை எதிர்த்து அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழக அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸ்டார்ஸ் அணி 20 பந்துப்பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் எஸ்.றம்மியராகுலன் 37, ஆர்.மோகனதீபன் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அரியாலை அணி சார்பாக இ.இனகநாதன், எஸ்.ஜெயரூபன் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.

 

 

தொடர்ந்து 132 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அரியாலை ஜக்கிய அணி, 18.2 பந்துபரிமாற்றங்களில் 109 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.நிரோசன் 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் நியுஸ்ரார்ஸ் அணி சார்பாக எம்.றொசான் 5 இலக்குகளைக் கைப்பற்றி போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/110664-2014-05-16-06-08-53.html

  • தொடங்கியவர்

கொக்குவில் சி.சி.சி, பற்றீசியன் அணிகள் வெற்றி
சனிக்கிழமை, 17 மே 2014 16:07

 

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது–20 சுற்றுப்போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி மற்றும் பற்றீசியன் அணிகள் வெற்றிபெற்றன.  யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் இருபது–20 துடுப்பாட்டப் போட்டிகள் கடந்த 10ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

 

மேற்படி சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றுவதுடன், போட்டிகள் லீக் முறையில் இடம்பெற்று வருகின்றன.

வியாழக்கிழமை (15) மாலை இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் முதற்போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும் ஸ்ரீ காமாட்சி விளையாட்டுக்கழக அணியும் மோதின.

 

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீகாமாட்சி விளையாட்டுக்கழக அணி 20 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஏ.அரவிந்தன் 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி சார்பாக பி.பிரதீஸ் 3, எஸ்.ஜனுதாஸ், ஆர்.இராகுலன் ஆகியோர் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

137 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி 16 பந்துபரிமாற்றங்களில் 2 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஏ.ஜெயரூபன் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களையும் ஜனுதாஸ் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஏ.ஜெயரூபன் தெரிவு செய்யப்பட்டார்.

 

இரண்டவாது போட்டியில் திருநெல்வேலி இந்துவாலிபர் சங்கத்தினை எதிர்த்து பற்றீசியன் விளையாட்டுக்கழகம் மோதியது.
இதில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றீசியன் விளையாட்டுக்கழக அணி 20 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

 

துடுப்பாட்டத்தில் எஸ்.அஜித் டார்வின் 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கம் சார்பாக என்.நிசாந்தன், கெ.சுதாகரன் ஆகியோர் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து 151 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க அணி, 20 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 103 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது.

 

துடுப்பாட்டத்தில் என்.ரஜீந்திரன்29, எஸ்.நிலாஜனன் 28  ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் எஸ்.அஜித்டார்வின் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்;. இப்போட்டியின் ஆட்டநாயகனாக எஸ்.அஜித் டார்வின் தெரிவு செய்யப்பட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/110806-2014-05-17-10-42-06.html

 

  • தொடங்கியவர்

ஜொனியன்ஸ், ஸ்கந்தா ஸ்டார்ஸ், மானிப்பாய் பரிஷ் அணிகள் வெற்றி
ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2014 13:47

 

 

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது  20 சுற்றுப்போட்டியில்  சனிக்கிழமை (17) இடம்பெற்ற போட்டிகளில் ஜொனியன்ஸ், ஸ்கந்தா ஸ்டார்ஸ், மானிப்பாய் பரிஷ் அணிகள் வெற்றிபெற்றன.

 

யுவ பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையிலான இருபது 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டிகள் கடந்த 10 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

 

இதில் மூன்று போட்டிகள் சனிக்கிழமை (17) இடம்பெற்றன.

ஜொனியன்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றி

முதற்போட்டியில் ஜொனியன்ஸ் அணியினை எதிர்த்து நியூஸ்டார்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எல்.லவேந்திரா 32, எஸ்.சஞ்சயன் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நியூஸ்டார்ஸ் அணி சார்பாக என்.றுசாந்தன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.

 

155 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூஸ்டார்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 135 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் கே.கபில்ராஜா 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் எஸ்.விதுசன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக எஸ்.சஞ்சயன் தெரிவு செய்யப்பட்டார்.

 

மானிப்பாய் பரிஷ் அணி 58 ஓட்டங்களால் வெற்றி

இரண்டாவது போட்டியில் மானிப்பாய் பரிஷ் அணியினை எதிர்த்து ஸ்ரான்லி விளையாட்டுக்கழக அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற ஸ்ரான்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.

 

அதற்கிணங்கக் களமிறங்கிய மானிப்பாய் பரிஷ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.சபேஸன் 29, பி.ஜெயதீபன் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

 

பந்துவீச்சில் ஸ்ரான்லி அணி சார்பாக கே.கஜதீபன் 4, யு.உதயசபேஸ், எஸ்.துஸ்யந்தன் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினர்.

154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்ரான்லி அணி, 16.5 பந்துபரிமாற்றங்களில் 95 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் எல்.இனோஜன் 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 

பந்துவீச்சில் மாபனிப்பாய் பரிஷ் அணி சார்பாக வி.வினோத்குமார் 3, என்.நிதர்சன் 2 இலக்குகளையும் கைபற்றினார்கள். இப்போட்டியின் ஆட்டநாயகனாக வி.வினோத்குமார் தெரிவு செய்யப்பட்டார்.

 

ஒரு ஓட்டத்தினால் ஸ்கந்தா ஸ்டார்ஸ் அணி வெற்றி

மூன்றாவது போட்டியில் ஸ்ரீ காமாட்சி அணியினை எதிர்த்து ஸ்கந்தா ஸ்டார்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா ஸ்டார்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் எஸ்.சிந்துஜன் 28, என்.விஸ்ணுப்பிரகாஸ் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஸ்ரீ காமாட்சி அணி சார்பாக கே.கார்த்திக், எஸ்.சுதர்சன், எல்.கேதீஸ் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினார்கள்.

 

157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்ரீ காமாட்சி அணி வெற்றிக்காக பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட போதும், இறுதியில் ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. 20 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.அரவிந்தன் 55, என்.திவாகர் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

 

பந்துவீச்சில் ஸ்கந்தா ஸ்டார்ஸ் அணி சார்பாக விஸ்ணுப்பிரகாஸ் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இப்போட்டியின் சிறப்பாட்டக்கரராக என்.விஸ்ணுப்பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/110914-2014-05-18-08-26-11.html

  • 1 month later...
  • தொடங்கியவர்

கொக்குவில் சி.சி.சி மற்றும் சென்றலைட்ஸ் அரையிறுதியில்
ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2014

 

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவென்டி – 20 துடுப்பாட்டப் போட்டியின் அரையிறுதிக்கு கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும் சென்றலைட்ஸ் அணியும் உள்நுழைந்தன.

 

யுவ பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என்னும் டுவென்டி – 20 துடுப்பாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

 

இந்தச் சுற்றுப்போட்டியில் மொத்தமாக 18 அணிகள் பங்குபற்றுவதுடன், முதற்சுற்றுப்போட்டிகள் லீக் முறையில் நடைபெற்று காலிறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு காலிறுதிப் போட்டிகளின் மூலம் பற்றீசியன் மற்றும் யூனியன் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன.
இந்நிலையில் 3 ஆவது மற்றும் 4 ஆவது காலிறுதி ஆட்டங்கள் நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றன.

 

 

செல்ரனின் அதிரடித் துடுப்பாட்டத்தின் மூலம் இலகு வெற்றி பெற்ற சென்றலைட்ஸ்

3 ஆவது காலிறுதியாட்டத்தில் ஸ்கந்தா ஸ்டார்ஸ் அணியினை எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற ஸ்கந்தா ஸ்டார்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கிணங்கக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணி எஸ்.செல்ரனின் அதிரடித் துடுப்பாட்டப் போட்டத்தின் மூலம் 20 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் எஸ்.செல்ரன் 25 பந்துகளில் 63 ஓட்டங்களையும் எம்.வதூஸனன் 52 ஓட்டங்களையும் எஸ்.எட்வேர்ட்எடின் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஸ்கந்தா ஸ்டார்ஸ் அணி சார்பாக கே.ஜனக்ஸன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.

195 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்கந்தா ஸ்டார்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் என்.நிசாகரன் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

 

பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக என்.சாள்ஸ், எஸ்.சௌமிதரன் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக எஸ்.செல்ரன் தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த கே.சி.சி.சி

4 ஆவது காலிறுதிப் போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியினை எதிர்த்து ஜொனியன்ஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற ஜொனியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கி 20 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.சஞ்சயன் 20, எல்.அகிலன் 18 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் எம்.பவிதரன், எஸ்.சாம்பவன் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து 136 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, ஆர்.இராகுலனின் அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் 18.1 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஆர்.இராகுலன் 28 பந்துகளில் 48 ஓட்டங்களையும், எஸ்.பங்குஜன் 20, ஏ.ஜெயரூபன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 

பந்துவீச்சில் ஜொனியன்ஸ் அணி சார்பாக எல்.லவேந்திரா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஆர்.இராகுலன் தெரிவு செய்யப்பட்டார்.

 

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/115218-2014-06-22-13-32-10.html

  • தொடங்கியவர்

ஜே.பி.எல் இறுதிப்போட்டியில் சென்றலைட்ஸ், கே.சி.சி.சி அணிகள்

 

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என்று அழைக்கப்படும் ஜே.பி.எல் டுவென்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

32376_zps5322d218.jpg

இந்த இறுதிப்போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியினை (கொக்குவில் கே.சி.சி.சி.) எதிர்த்து சென்றலைட்ஸ் அணி மோதவுள்ளது.

யுவ பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இந்த டுவென்டி – 20 சுற்றுப்போட்டியானது இரண்டாவது ஆண்டாக கடந்த மே மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றியிருந்ததுடன், நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் இடம்பெற்று ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் காலிறுதிப்போட்டிக்குத் தெரிவாகின.

தொடர்ந்து, காலிறுதிப் போட்டிகளிலிருந்து பற்றீசியன், சென்றலைட்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், மற்றும் தெல்லிப்பளை யூனியன்ஸ் அணிகள் நுழைந்தன.

அரையிறுதியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி 48 ஓட்டங்களால் பற்றீசியன் அணியினையும், சென்றலைட்ஸ் அணி 79 ஓட்டங்களால் யூனியன்ஸ் அணியினையும் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

23196_zps5be696a6.jpg

 

இறுதிப்போட்டிகளில் நுழைந்த இரண்டு அணிகளில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி கடந்த முறை ஜே.பி.எல். சம்பியனாகியிருந்த அணியாகும். ஆகவே தமது நடப்புச் சம்பியனைத் தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடும்.

சென்றலைட்ஸ் அணி வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்ட அணிகளுள் ஒன்றான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வீரர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள அணி. மேலும், வரிசையான துடுப்பாட்ட வீரர்கள் கொண்ட அணியாகவிருப்பதினால் இம்முறை கிண்ணத்திற்கான வாய்ப்பு சென்றலைட்ஸ்க்கும் இருக்கின்றது.

சென்றலைட்ஸ் அணி ஜேம்ஸ் ஜான்ஸன் தலைமையிலும், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி ஆர்.இராகுலன் தலைமையிலும் களமிறங்குகின்றது.

15609_zps7b1e2c6f.jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/115894-2014-06-27-05-35-13.html

 

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஜே.பி.எல். வெற்றிக்கிண்ணம் சென்றலைட்ஸ் வசமானது!

 

கே.சி.சி.சி அணியை 7 விக்கெட்டுக்களால் இலகுவாக வென்ற சென்றலைட்ஸ் அணி ஜே.பி.எல். வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. 'யெப்னா பிறிமியர் லீக்'கின் இரண்டாவது தொடர் கடந்த மே 10 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்று வந்தது. இந்த சுற்றுப் போட்டியில் 18 அணிகள் பங்கேற்றிருந்தன.

இதன் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த இறுதியாட்டத்தில் நடப்புச் சம்பியனான கொக்குவில் மத்திய சனசமூக நிலைய (கே.சி.சி.சி.) அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதின. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கே.சி.சி.சி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்கம் கொடுத்த பங்குஜன், ஜெயரூபன் இணையால் நீடிக்க முடியவில்லை பங்குஜன் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உமாநாத் 10 ஓட்ங்களுடன் ஆட்டமிழக்க ராகுலன் களமிறங்கினார் இந்நிலையில் ஜெயரூபன் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் எவரும் சிறப்பாக செயற்படாத நிலையில் 19.5 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு கே.சி.சி.சி சகல விக்கெட்களையும் இழந்தது.

 

சென்றலைட்ஸின் பந்துவீச்சில் டார்வின் 4 விக்கெட்களையும், ஜெரிக்துஷான், கோகுலன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதில் எட்வர்ட் எடின் 20 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஜெரிக் துஷான் 44, செல்ரன் 33 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். ஆட்டநாயகனாக ஜெரிக்துஷான் தெரிவானார்.
 

 

 

http://www.dailyjaffna.com/2014/06/blog-post_8072.html?m=0

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.