Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

தாயகக் கனவுகளுடன்  ....... [26]

 

"எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த
பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை.எமது கடின
உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது
வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம்.
அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக்
கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு."
 
"சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக
வாழவேண்டும்.தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும்.
பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும்.படிப்படியாக
அழிந்து போகவேண்டும்.ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடு
வதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை."

 
"எமது மக்கள் சுதந்திரமாகவும்,கௌரவமாகவும்,பாதுகாப்பாகவும்
வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின்
நாம் போராடியே ஆகவேண்டும்."


"இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில், வெற்றி தோல்வி என்ற பிரச்சனைபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர் கொள்ளும் உறுதியும் துணிவும் எம்மிடம் உண்டா என்பதுபற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைளையும் விட்டுக்கொடுப்பதில்லை. "
 

"சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுதந்திரம் எனும் சுவர்க்கத்தை நாம் காணமுடியும். "

--- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்

 

---------------------------------------------------------------------------------------------------

  • கருத்துக்கள உறவுகள்

தாயகக் கனவுகளுடன்  ....... [26]

 

"சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக
வாழவேண்டும்.தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும்.
பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும்.படிப்படியாக
அழிந்து போகவேண்டும்.ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடு
வதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை."
 

 

இதுதான் இப்போது நடந்துகொண்டுள்ளது.

  • தொடங்கியவர்

தாயகக் கனவுகளுடன்  ....... [27]

 


"போரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது."

"எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும். "

"போர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்யவேண்டும்."

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனம் அதனைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "

"எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்."

--- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்

 

 

---------------------------------------------------------------------------------------------------

  • தொடங்கியவர்

தாயகக் கனவுகளுடன்  ....... [28]

 


"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி."

"சத்தியத்திற்காகச் சாகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்."

"நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்."

"சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம். செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது."

"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது. "

"எதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள் ."

"எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். "

--- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்.

 

 

-------------------------------------------------------------------------------------------

  • தொடங்கியவர்

தாயகக் கனவுகளுடன்  ....... [29]

 


"நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போராளி."

"அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு. "

மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

"உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கிறது. தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது. "

"நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது.  "

"சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை."
 

" ஆகாயத்தில் இருந்து வீழும் குண்டுகள் எமது கட்டிடங்களை
அழிக்கலாம்; வீடுகளை அழிக்கலாம்; கோயில்கள்,பாடசாலைகளை
அழிக்கலாம். ஆனால் எத்தகைய குண்டுவீச்சுகளும் எமது
மனோபலத்தை அழித்துவிட முடியாது."

"ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம். "

"இன்றைய உலக ஒழுங்கை பலம்தான் நிர்ணயிக்கிறது."

"நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். "
"மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது."

"கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் தூண்டவேண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும். மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். "


--- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்

 

--------------------------------------------------------------------------------------------

  • கருத்துக்கள உறவுகள்

கட்டடங்கள் கட்டுவதால் மட்டும் உரிமைகள் கிடைத்துவிட்டதாக நீங்கள் எண்ணினால், சிறைக்கூடமும் உங்களுக்கு சுதந்திரச் சின்னமே.

  • தொடங்கியவர்

தாயகக் கனவுகளுடன்  ....... [30]



"இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி, உலக உறவுகளும் சரி, தர்மத்தின் சக்கரத்திலேயே இன்னமும் சுழல்கின்றன."

"பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்து வாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்.

எனவே, எமது மாவீரர்களை நினைவு கூரும் இன்றைய எழுச்சி நாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்து கிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்."


"எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் ..... , எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.

புனித இலட்சியத்திற்காகத் தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட எமது மாவீரரை நினைவுகூரும் இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அந்த மாவீரரின் இலட்சியக் கனவை எமது நெஞ்சங்களிலே சுமந்து,
அந்த மாவீரரின் இறுதி இலட்சியம் நிறைவுபெறும் வரை தொடர்ந்து போராடுவோம்."


--- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்

 

  • தொடங்கியவர்

        

       தாயகக் கனவுகளுடன்  ....... [31]

 

 

"காலமும், கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரித்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும், தமிழகத் தலைவர்களுக்கும், இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்."


"பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்ற போதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்."


"எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி, சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."

 

"இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்தக் கோடியில் வளர்ந்தாலும், எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

 

 

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

    --- தமிழீழத் தேசியத்தலைவர்  வே.பிரபாகரன்


--------------------------------------- மு  டி  வ டை  ந்  த  து -----------------------------------------------------------------------------

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.