Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அதிகாலையில் வெட்டிக்கொலை!-அச்சுவேலியில் பயங்கரம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அதிகாலையில் வெட்டிக்கொலை!-அச்சுவேலியில் பயங்கரம்!!  
[sunday, 2014-05-04 08:12:17]
murder-040514-150.jpg
யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை வாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் நிர்குணானந்தம் அருள்நாயகி (50), யசோதரன் மதுஷா(27), நிர்குணானந்தம் சுபாங்கன்(19) ஆகியோரே பலியானவர்களாவர்களாவர். இந்தச் சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான நிர்குணானந்தம் தர்மிகா(25),த.யசோதரன்(30) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
பலியானவர்களின் சடலங்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்திற்கு காதல் பிரச்சினையே காரணம் என்று கூறப்படுகின்ற போதிலும், அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

பாவம்... அதில் இருவர் பெண்கள், ஒருவர் வயதில் இளையவர்.

 

நள்ளிரவில்... நடமாடித் திரிபவர்கள் என்றால், நிச்சயம் ராணுவம் அல்லது ஒட்டுக் குழுக்களின் வேலையாக இருக்கும்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முக்கொலை சந்தேகநபர் கைது
ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014 09:46
-செல்வநாயகம் கபிலன், எம்.றொசாந்த்
 
யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் இன்று (04) அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (04) காலை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
அத்துடன் இந்த முக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும்  முச்சக்கரவண்டியொன்றினை மீட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
நவக்கிரி என்னும் இடத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த முச்சக்கரவண்டியினுள் பெருமளவு இரத்தக்கறைகள் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவரான தனஞ்செயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரே கொலைகளுக்கு காரணம் என தெரியவந்ததினையடுத்து, ஊரெழுப் பகுதியில் குறித்த நபர் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.
 
அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இன்று (04) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
 
இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படவில்லை.
 
இந்தக் கொலை தொடர்பாக அயலவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
 
தர்மிகா திருமணமாகி ஒரு பிள்ளையின் தயாராவர். இவர் தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை விட்டுப் பிரிந்து பிள்ளையுடன் தனது தாய் சகோதரர்களுடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கணவன் இவர்களது வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டதுடன் உங்கள் அனைவரையும் வெட்டிக்கொல்லுவேன் என கூறிச்சென்றதாகவும், அதன் பின்னரே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளதால், அவரே இக்கொலைகளை செய்திருக்கலாம் என அயலவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.
 
அதேவேளை சந்தேகிக்கப்படும் நபர் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்ததாகவும் இன்னும் ஒரிரு தினங்களில் வெளிநாடு செல்ல இருந்த நிலையிலையிலேயே இக்கொலைகளை செய்து விட்டு தப்பி செல்ல திட்ட மிட்டு இருந்திருக்கலாம் என அயலவர்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/109048-2014-05-04-04-17-25.html

முக்கொலை : இரண்டாவது சந்தேகநபர் கைது

யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபர்  அச்சுவேலி  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தினை மேற்கொண்ட முதலாவது சந்தேகநபரான பொ.தனஞ்சயன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் கண்டுபிடிக்கபட்ட பின்னரேயே தற்போது இரண்டாம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி கதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (04) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிவில்லை.

மேற்படி கொலைகளினால் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவனான தனஞ்செயன் கொலைகளை மேற்கொண்டிருந்தார் என பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்ததினையடுத்தே, மேற்படி நபர் முதலாவது சந்தேக நபராக கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

photo%202(7).JPG

யாழ். அச்சுவெலி பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை(04) அதிகாலை  இடம்பெற்ற கொலைச்சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கர வண்டியை  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.   
photo%201(6).JPG

photo%203(6).JPG
 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/109108-2014-05-04-06-46-31.html


D4f0ff040d0fdf.jpg

 

virakesari.lk

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

தமிழண்டா............. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்... அதில் இருவர் பெண்கள், ஒருவர் வயதில் இளையவர்.

நள்ளிரவில்... நடமாடித் திரிபவர்கள் என்றால், நிச்சயம் ராணுவம் அல்லது ஒட்டுக் குழுக்களின் வேலையாக இருக்கும்.

காக்கா இருக்க பனை மரமே விழுகிறது :)

தமிழண்டா............. :(:(:(

சகோதரப் படுகொலை நமக்கு புதுசா என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.