Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வன்முறைகள் குறித்த லண்டன் மாநாட்டில் இலங்கை விவகாரம் - அரசாங்கம் அச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்முறைகள் தொடர்பில் அடுத்த வருட முற்பகுதியில் லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான மாநாடு தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என இலங்கை அரசாங்கம் அச்சமடைந்திருக்கின்றது. இலங்கை அரசின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் பாலியல் வல்லுறவும், பாலியல் வன்முறைகளும் இலங்கையில் பெருமளவுக்கு இடம்பெறுவதாக ஐ.நா.வின் அறிக்கை ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது. இந்தப் பின்னணியில் அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறப்போகும் இந்த மாநாட்டில் இலங்கையில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்து கவனம் செலுத்தப்படலாம் என இலங்கை அஞ்சுகின்றது.

நெருக்கடிகளின்போது பாலியல் வன்முறைகள் குறித்த விவகாரங்களைக் கையாள்வதற்கான ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஷேட பிரதிநிதி ஸனீப் பங்குரட்ட, இலங்கையில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக தாம் கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஐநா.வுக்கான இலங்கையின் விஷேட பிரதிநிதி பாலிக கோகணவின் கவனத்துக்கும் அவர் கொண்டுவந்திருந்தார். நெருக்கடிகளின் போது பாலியல்  வன்முறைகள் இடம்பெறும் 21 நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் அவர் அண்மைய அறிக்கை ஒன்றில் வகைப்படுத்தியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106464/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
அடுத்தமாதம் லண்டனில் நடக்கப் போகும் மாநாடு குறித்து இலங்கை அரசு அச்சம்! 
[Monday, 2014-05-05 10:36:18]
 
பாலியல் வன்முறைகள் தொடர்பாக அடுத்தமாத முற்பகுதியில் லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச மாநாடு தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என இலங்கை அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.இலங்கை அரசின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார். போர் முடிவுக்கு வந்த பின்னர் பாலியல் வல்லுறவும், பாலியல் வன்முறைகளும் இலங்கையில் பெருமளவுக்கு இடம்பெறுவதாக ஐ.நா.வின் அறிக்கை ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
 
இந்தப் பின்னணியில் அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறப்போகும் இந்த மாநாட்டில் இலங்கையில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்து கவனம் செலுத்தப்படலாம் என இலங்கை அஞ்சுகிறது. நெருக்கடிகளின்போது பாலியல் வன்முறைகள் குறித்த விவகாரங்களைக் கையாள்வதற்கான ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஷேட பிரதிநிதி ஸனீப் பங்குரா, இலங்கையில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக தாம் கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். நெருக்கடிகளின் போது பாலியல் வன்முறைகள் இடம்பெறும் 21 நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் அவர் அண்மைய அறிக்கை ஒன்றில் வகைப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.http://seithy.com/breifNews.php?newsID=108726&category=TamilNews&language=tamil

40,000 சிறி லங்கன் சிறுவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் போது பயம் இருக்க செய்யும்.

ஒருத்தரும் இந்த குழந்தைகளுக்கு உதவுவதில்லை.

இவர்களுக்கு உதவ போன ஆர்தர் சி கிளார்க் மேலே கள்ள வழக்கு போட்டு மடக்கினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.