Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவாக- இது அழுவதற்கான நாளல்ல.. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - ஆதிலட்சுமி:-

Featured Replies

may%2017_CI.jpg

மே 17 எமது இனத்தின் தலையில் இடிவிழுந்து இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன...காலம் காயங்களை ஆற்றுப்படுத்தும் என்கிற உளவியல் இந்த விடயத்தில் பொய்த்துப் போய்விட்டது. காலம் கடந்துகொண்டு செல்ல செல்ல காயங்களின் வலியும் அந்த வலியின் விளைவாக ஏற்படும் மன உறுதியும் அதிகரித்தே செல்கின்றன.

தமிழ்மக்களின் இனவிடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே 30 ஆண்டுகள் நடைபெற்ற ஆயுதப்போராட்டம் மட்டுமல்ல. 1956இல் பட்டிப்பளையில் தமிழர்களின் முதல் இரத்தத்துளி தெறித்து விழுந்தபோது கருக்கொண்டது அது. தொடர்ந்து பல தடவைகள் குருதி பீறிட, தலைகள் தொங்க, தசைகள் கிழிய தெற்குத் தெருக்களில் தமிழர்களின் வாழ்வு பரிதாபமாகியது. கேட்பாரற்று, கவனிப்பாரற்று காயங்களுடனும் வலியுடனும் வாழ்ந்த தமிழர்கள், இரு கரங்களையும் நீட்டி எங்களை மனித உரிமைகளோடு வாழவிடுங்கள் என இறைஞ்சியது தான் அறப்போராட்டம்.

இதனை அன்றைய தமிழ்த்தலைவர்கள் முன்னெடுத்தார்கள். அவர்கள் ஊர்வலம் நடத்தினார்கள். பாராளுமன்றத்தில் கடுமையான மொழிப்போர் நடத்தினார்கள். சத்தியாக்கிரகம் இருந்தார்கள். வெற்றுக்கைகளுடன் இருந்த அவர்கள்மீது ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டன. அவர்களும் இரத்தம் சிந்தினார்கள். அவர்களின் தலைகளும் உடைந்தன.

தங்களால் இயன்றவரை அவர்கள் போராடினார்கள். அவர்களின் செயற்பாடுகளும் பலத்த விமர்சனங்களுக்கு உட்பட்டன. முரண்பாடுகள், அதிருப்தி உட்பிளவுகள் ஏற்பட்டன.

வட்டுக்கோட்டையில் தமிழ்மக்களுக்கு தீர்வு தமிழ்ஈழமே என அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த தீர்மானம் ஒட்டுமொத்த தமிழர்களாலும்; அங்கீகரிக்கப்பட்டது அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் துரதிஸ்டவசமாக அது நிறைவேறவில்லை அல்லது நிறைவேற்ற முடியவில்லை. மனமுடைந்துபோன அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள், 'இனி தமிழர்களை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்' என தெரிவித்தார்.

இதன்பிறகும் தமிழர்களின் மீதான கொடுரமான தாக்குதல்கள் அதிகரித்துவந்தன. அடிவிழுந்த கன்னத்தை தடவியபடி மறுகன்னத்தையும் காட்டிய தமிழர்களுக்கு அந்தக்கன்னத்திலும் பலத்த அடிகள் விழுந்தன. உயிர்க்குலை அறுந்து விழவிழ உச்சஸ்தாயியில் தமிழர்கள் அழுது கதறினாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. மறுவளத்தில் தமிழர்களின் உயிர்கள் அரசியலுக்கான பகடைக்காய்கள் ஆகிய சோகமே நிகழ்ந்தது.

இரத்தல், கண்ணீர் சிந்துதல், அறவழியில் போராடுதல் எல்லாமே நிராகரிக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் தான் இளையதலைமுறை அடிக்கு அடி என்ற தத்துவத்தை கையில் எடுத்தது.

தழிழர்களின் தலைவிதியோ சாபக்கேடோ ஒரு புள்ளியில் அவர்கள் ஒன்றிக்கவில்லை. நிமிர்ந்த இளந்தலைமுறை பிளவுபட்டார்;கள். ஆனாலும் அவர்களின் மனங்களில் விடுதலை உணர்விருந்தது.

ஆயுதத்தை ஆயுதத்தால் எதிர்கொள்ளும் பொறிமுறை விடுதலைப் போராட்டமாக பரிணமித்தது. ஆயிரம் ஆயிரமாய் உயிர் அர்ப்பணிப்புகள நிகழ்ந்தன. உயிர் என்பது உன்னதமானது எனினும் உயிரைவிட உன்னதமானது உரிமை என முழங்கி உயிர்களை அவர்கள் ஈந்தார்கள்.

விடுதலைப்போராட்டம் உச்சமடைந்தபோது, அதுகுறித்து அச்சமடைந்தவர்கள் அதனை நசுக்க பலவழிகளை கையாண்டபோது, ஒரு புள்ளியில் இணையமுடியாத, விரும்பாதவர்கள் உள்ளிட்டோர் அதற்கு பலியாகிப்போனதன் விளைவு ஈடிணையற்ற விடுதலைப்போராட்டம் அமைதியாகிப்போய்விட்டது.

அது மௌனித்துப்போன அல்லது அவலத்துக்குள்ளாகிப் போன பொதுநாள்தான் இன்றைய மே 18. இந்தநாள் கனத்த பல நினைவுகளை எமக்குள் பதித்துள்ளது.

இறுதிநாட்களில் அந்த மரணவலிக்குள் தத்தளித்தவர்களின் அனுபவங்கள் மிகவும் கொடுரமானவை. சாவு மனிதர்களுக்கு வரும். ஆனால் அந்த நாட்களில் வந்த மரணம் என்பது நினைத்துப் பார்க்காதது. எதிரிக்கு கூட நேரக்கூடாதது. அதன் காயங்கள் இன்னமும் ஆறவில்லை. அங்கு காணாமல் போனவர்களின் கதி இன்னமும் தெரியவில்லை. அந்த வலியுடன் வாழ்வை நகர்த்துதல் என்பது மிக மிக கொடுரமானது. புற்றுநோயைப்போல அந்த வலி எஞ்சியிருப்பவர்களை நாளுக்கு நாள் தின்றுதொலைக்கிறது.

உச்சக்கட்டமாக எல்லாவற்றையும் இழந்துவிட்டவர்கள் மிகுதி வாழ்வை நகர்த்த கால்களை பதிக்கமுடியாத அவலம் உள்ளது. இன்னமும் மரணபயம் இருக்கிறது.

அங்கு என்ன நடந்தது என்பதற்கு ஒற்றைச் சாட்சியாய் எல்லோருக்கும் முன் நிற்பவர் தங்கை இசைப்பிரியா. அவருக்கு நடந்ததை காலமே வெளிக்கொண்டு வந்துள்ளது. பிளவுகள் அனைத்தையும் கடந்து அனைவரும் இனத்தின் தீர்வுக்காக பாடுபடவேண்டும் என்பதை அவரின் அவலச்சாவு உணர்த்தியுள்ளது.

தமிழ் இனம் என்பது மிகப் பழைமை வாய்ந்த மூத்த இனம். எங்களுடைய இனம் அழிந்துபோகக்கூடாது. இவ்வளவு அழிவுகளில் இருந்தும் பெற்றுக்கொள்ளும் உறுதி இதுவாகத்தான் இருக்கவேண்டும். இது அழுவதற்கான நாளல்ல. எவரின் அழுகையையும் எவராலும் ஆற்றுப்படுத்த முடியாது. சாகும்வரை இந்த வலி இருந்துதான் ஆகும்.

விடுதலைப்போராட்டம் குறித்து பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். விமர்சனம் என்பது காழ்ப்புணர்வாக மாறுவதென்பது ஆரோக்கியமானதல்ல. விமர்சனம் அது தனிமனித கருத்து சுதந்திரம். ஆனால் அந்த விமர்சனங்கள் காழ்ப்புணர்வாக மாறி தமிழ்இனம் அழிவதற்கு வழிவகுத்து விடக்கூடாது என்பதே இன்றைய நாளின் நோக்கமாக உள்ளது. 

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107022/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி லக்ஷ்மியும் அவரது கணவரும் கடைசி வரை போராட்ட களத்தில் நின்றவர்கள், அதன் வலியை நன்கு உணந்தவர்கள், மனிதமே அனுபவித்திராத பல துன்பங்களை அவரது கணவர் அனுபவித்தார். முள்ளி வாய்கால் முடிவல்ல, அது ஒரு புது அத்தியாயத்தின் தொடக்கம். ஒன்று படுவோம், எதிரியை வீழ்த்துவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.