Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் பெருந்துயரம்: இறந்த பின்னும் பழிவாங்கப்படுகையில் எப்படி இணைந்து வாழ முடியும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவாய்க்கால் பெருந்துயரம்: இறந்த பின்னும் பழிவாங்கப்படுகையில் எப்படி இணைந்து வாழ முடியும்?
18 மே 2014
 
impossible_CI.jpg

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை இலங்கை அரசுதான் ஈழ மக்களுக்கு முதலில் நினைவுபடுத்துகிறது. இலங்கை அரசு மே மாத்தை யுத்த வெற்றி நாட்களாக கொண்டாடுகிற வரையில் அவை இனப்படுகொலை நாட்கள் என்பதை ஈழ தமிழினம் மறக்காது. அதைத்தவிரவும் எந்த ஒரு மனித சமூகத்தாலும் மறக்க முடியாத ஒரு கொடூரமே முள்ளிவாய்க்கால் படுகொலை. என்றுமே ஆறாத காயமாகவும் மாறாத வடுவாகவும் பெரும் துயரக் காலமாகவும் வரலாற்றில் இந்த நாள் இருக்கும்.

உலகத்தை நோக்கி எங்களை காப்பாற்றுங்கள் என்று இரத்தமும் சதையுமாக அவலக் குரல் எழப்பிய எங்கள் மக்களை மிக மிக கொடிய யுத்த வழிமுறைகளில் இலங்கை அரசு படுகொலை செய்தது. அந்த மக்களை படுகொலை செய்த இலங்கை அரசின் யுத்த வெறிப்படைகளும் கொடிய ஆயுதங்களும் சிங்கள அரசின் யுத்த வெற்றி விழாவில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிலும் எங்கள் அப்பாவிச் சனங்களின் இரத்தம்தான் அப்பியிருக்கிறது. யுத்தவெற்றி முழக்கங்களை திணிக்கும்போது அதற்கெதிராய் எங்கள் மண்ணில் யுத்த அவலத்தின் குரல்கள் எழுகின்றன.

இனப்படுகொலை சிங்கள அரசியல் முதலீடு

ஈழ இனத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்றுமே சிங்களப் பேரினவாத அரசியலின் முதலீடாகவே இருந்துள்ளன. ஈழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, உரிமை மறுப்புக்கள் எல்லாமே சிங்களப் பெருந்தேசிய இனவெறியின் முதலீடுகள்தான். இலங்கையை ஆண்ட ஒவ்வொருவரும் அதை முதலீடாகக் கொண்டே ஆட்சி செய்தனர். முள்ளிவாய்க்காலில் ஈழ இனத்திற்கு எதிராக செய்யப்பட்ட மாபெரும் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் என்பது இன்றைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் முதலீடே ஆகும்.

முள்ளிவாய்க்கால் சிங்களவர்களுக்கு வெற்றியின் நிலமாக தெரியாலாம். ஈழ மக்களுக்கு அது தோல்வியின் நிலம். அது மாத்திரமல்ல மாபெரும் அநீதியின் நிலமுமாகும். வாழ்வுக்கும் விடுதலைக்கும் போராடிய ஒரு இனத்தை பாரியளவில் மனித குலத்திற்கு விரோதமான குற்றங்களுடன் படுகொலை செய்த இடம். முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு இனப்படுகொலையாக எப்போது சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ளும். மாபெரும் இனப்படுகொலை என்பதும் மாபெரும் போர்க்குற்றம் என்பதும் அவர்கள் அறிந்தது. எனினும் அதை அவர்கள் ஏற்றக்கொள்ளவில்லை. தமது நாடும் தமது அரசும் தமது படைகளும் தண்டனைகளை அனுபவிக்கக்கூடாது என்பதற்காக மாத்திரமல்ல ஈழ மக்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்க முடியாது என்;பதற்காகவுமே அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
ஈழ மண்ணில் ஈழமக்களுக்குத் தடையா?

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை இலங்கை அரசாங்கமும் சிங்கள மக்களும் போர் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். ஆனால் போரில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் மக்களுக்கு அஞ்சலி செலுத்த ஈழ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த மறுக்கும் சிங்களப் பேரினவாத அரசு இருப்பவர்களுக்கு என்ன செய்யும்? இறந்தவர்களுக்காக கண்ணீர் விடுவதற்குகூட அனுமதியை மறுக்கும் இந்தச் செயற்பாட்டுக்குப் பெயர் மகிந்த அரசின் நல்லிணக்கமும் சமாதானமுமா?

இறந்தவர்களை நினைவுகூறும் ஒரு காலம் வரவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் சில இடங்களிலும் முழுவீடுகளும் இறந்துபோயிருக்கின்றன. ஒரு இனத்திற்கெதிரான மாபெரும் படுகொலையை அந்த இனம் நினைவுகூற அனுமதிக்க வேண்டும். இறந்துபோனவர்களை தெய்வத்தோடு ஒப்பிடுவது மனித சமூகத்தின் நம்பிக்கை.இறந்தவர்களையும் நினைவுகூற அனுமதி இல்லை என்ற மண்ணில் வேறு என்னதான் இருக்கும்? இறந்தவர்களையும் நினைவுகூற தடைவிதிப்பது என்பது ஈழ மண்ணில் ஈழ மக்களை தடை விதிக்கும் செயற்பாட்டின் வெளிப்பாடே. ஒரு இனம் தனது சொந்த மண்ணில் இத்தகைய அநீதிகளை எல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரம்.

புலிகளும் மக்களும் ஒன்றா?

காணாமல் போனவர்களுக்கு மரணப் பத்திரம் வழங்கும் இலங்கை அரசு இறந்தவர்கள் தொடர்பான மெய்யான விபரங்களை மறைப்பது ஏன்? இறந்தவர்களுக்கு மரணப் பத்திரம் கொடுக்க மறுப்பது ஏன்? அடையாளத்திற்காக இருப்பிற்காக போராடிய ஒரு இனம் இறந்த பின்னும் நினைவுகளும் தடயங்களும் அற்ற வித்தில் அழிக்கப்படுவது மிகவும் கொடுமையானது. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையை மெற்கொண்ட இலங்கை அரசும் எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் அதன் படைகளும் அந்தக் கொலையில் இறந்துபோன மக்களை நினைவுகூறாமல் தடுக்கும் இராணுவ நடவடிக்கையில் இன்று ஈடுபடுகிறது.

கொல்லப்பட்டவர்களை நினைவகூறுவதனால் அதன்மூலம் தமிழ் இனப்படுகொலை அம்பலம் ஆகிவிடும் என்று இலங்கை அரசு அஞ்சுகிறது. ஈழ இனப்படுகொலை மறைக்கப்பட முடியாத விடயம். அது மட்டுமன்றி கடந்த அய்ந்து ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் நினைவுநாட்கள் ஈழத்தில் அனுஷ்டிக்கப்படுவதை இலங்கை அரசால் தடுக்க முடியவில்லை. இலங்கை அரசும் அதன் படைகளும் வருடத்தில் இரண்டு காலங்களுக்கு மிகவும் அஞ்சுகிறது. அல்லது படை நடவடிக்கையில் ஈடுபடுகிறது. ஒன்று மாவீரர் வாரம். இன்னொன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒரே பார்வையில் இலங்கை அரசு பார்க்கின்றது. புலிகளை பயங்கரவாதிகள் என்று காரணம் சொல்லி நினைவகூறுவதை தடுக்கும் அரசு ஏன் முள்ளிவாய்க்காலை நினைவுகூறுவதைத் தடுக்க வேண்டும்? இலங்கை அரசைப் பொறுத்தவரையில் புலிகளும் ஒன்றுதான் மக்களும் ஒன்றுதான். யுத்த காலங்களிலும் இந்த வேறுபாடு அற்ற வகையிலேயே அப்பாவி மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். இந்த அணுகுமுறைதான் இலங்கை அரசின் யுத்தம். இதுவே ஒரு இனத்திற்கு எதிரான யுத்தம். ஒரு இனத்திற்கு எதிரான அரசியல். இனப்படுகொலை.  

இறந்தவர்களை பழிவாங்கும் ஆச்சரிய நாடு

சிங்கள போர்வெற்றியை கொண்டாடிக்கொண்டு இறந்தவர்களை நினைவகூறத் தடுக்கும் நடவடிக்கையை செய்து கொண்டு இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார் ராஜபக்ச. இறந்தவர்களுக்கு அஞ்சும் ஒரு நாடாகவும் இறந்தவர்களைகூட நினைவுகூறத் தடுக்கும் ஒரு நாடாகவும் இருப்பதினால் இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாகவே இருக்கிறது. இறந்தவர்களை பழி வாங்குவதாலும் இலங்கை ஆசியாவின் ஆச்சரிய நாடாகவே இருக்கிறது.

யுத்தவெற்றியின் மமதையில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்ட ஒரு இனத்தை தொடர்ந்தும் தங்கள் அரசியல் செயற்பாடுகளின் மூலம் படுகொலை செய்கின்றனர். விடுதலைக்காக சுய உரிமைக்ககாக போராடிய ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை மாபெரும் இனப்படுகொலையின் மூலம் அடக்கிவிட முடியும் என்பதுதான் இலங்கை அரசின் கற்பனை. ஆனால் இந்த மிகப் பெரிய இனப்படுகொலையும் போர்க்குற்றமும் ஈழப் போராட்டத்தை சர்வதேச அளவுக்கு கொண்டு சென்றது. ஒரு விடுதலைப் போராட்டத்தை அனுமதிக்காத உலகின் நிகழ்ச்சி நிரல் மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரத்தையும் அனுமதிக்காது. அவ் வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை செய்வனே செய்ததின்மூலம் ராஜபக்ச தனக்காக குழியையும் வெட்டியிருக்கிறார்.

மேதத்தில் 17ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த நாளாக இலங்கை அரசு அறிவித்தது. 18ஆம் திகதி புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நாளாக குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டு நாட்களில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டபோதும் இறுதி நாட்கள் மாத்திரமின்றி மே மாதம் மாத்திரமின்றி 2009ஆம் ஆண்டு மாத்திரமின்றி 2006ஆம் ஆண்டில் கிழக்கில் யுத்தம் வெடித்த நாட்களிலிருந்து மக்கள் வகைதொகையற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நர்காம் ஈழ யுத்தமே இனப்படுகொலை யுத்தம் என்பதே சரியானது. அதைவிடவும் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கணிப்பிட முடியாத இனப்படுகொலை

அதன் பின்னர் நடந்த பல்வேறு இனக்கரவலங்களிலும் இராணுவ நடவடிக்கைகளிலும் மக்கள் வகைதொகையற்றுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கால்திதலும் கொல்ப்பட்டவர்களையும் ஈழத் தமிழனிம் நினைவகூறவேண்டும். நான்காம் ஈழ யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை மே மாதத்தில் வரும் 19ஆம் திகதி வரையிலும் நினைவு கூறவேண்டும். சரணடைந்த பலர் 19ஆம் திகதி வரையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்கள். அதன் பின்னரும் கொண்டு செல்லப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உண்மையில் இலங்கை அரசின் இனப்படுகொலையை வரையறுத்துச் சொல்ல எந்த நாட்களும் இல்லை. இலங்கை சுகந்திரமடைந்ததன் பின்னர் ஈழமக்கள் படுகொலை செய்யப்பட்ட காலம் என்பதே பொருத்தமானது.

'முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்த அனுமதியளிக்க முடியாது. பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகளை நடாத்துவதன் மூலம் சிலர் பிரபாகரனை பெருமைப்படுத்த முயற்சிக்கக் கூடும்.' என்று யாழ் மாவட்ட இராணுவத்தளபதி சொல்கிறார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுக் காலத்தில் பயங்கரவாதிகளை - புலிகளை நினைவுகூர இடமளிக்க முடியாது என்று சிங்கள அரச தரப்பினர் கூறுவது அழிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் ஈழ மக்களும் பயங்கரவாதிகள் என்பதாலா?

'இந்த வெற்றிக் கொண்டாட்டம் பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்காகும். மாறாக ஒரு மக்கள் பிரிவினரை மற்றுமொரு மக்கள் பிரிவினர் தோற்கடித்ததார்கள் என்று அர்த்தமல்ல. பயங்கரவாதத்தை தேற்கடித்ததன் மூலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைத்துள்ளன. வடக்கு, கிழக்கு மக்களின் வெற்றியை தான் நாங்கள் கொண்டாடுகின்றோம்.' என்று இராணுவப் பேச்சாளர் ருவாண் வணிகசூரிய குறிப்பிடுகிறார். ஒரு இனத்தை தோற்கடிக்க மேற்கொள்ளப்பட்ட போரை, அப் போரில் கொல்லப்பட்ட மக்களின் வெற்றி என்று கூறுகிறார். இதுபோன்ற பயங்கரமான பல கருத்துக்களை நாங்கள் கேட்கச் சபிக்கப்பட்ருக்கிறோம்.

வடகிழக்கு மக்கள் பயங்கரவாதிகளா?

ஒரு இனத்திற்கெதிரான யுத்தத்தை நடத்தி லட்சக்கணக்கானவர்களை கொன்று ஒரு பெரும் பிரதேசத்தின் வாழ்வை ஒட்டுமொத்தமாக நீங்கள் நிர்மூலமாக்கிவிட்டு யுத்த வெற்றிவிழாவைக் கொண்டாடுவீர்கள். நாங்கள் வீடடுக்குள் முடங்கியிருந்து நினைவுகூறவேண்டுமா? ஒரு இனத்திற்கு எதிராக பொதுவாக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இனப்படுகொலையை மாபெரும் படையெடுப்பை மாபெரும் அழிவை பொதுவான நிகழ்வாகவே கொண்டாட வேண்டும். ஏனெனில் அது ஓர் இனப்படுகொலை. நாங்கள் யுத்த வெற்றி கொண்டாடுவோம். நீங்கள் இறந்தவர்களையும் நினைவு கூறக்கூடாது என்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு இறந்தவர்களை நினைவகூறும் உரிமையையும்கூட சிங்கள அரசு மறுக்கிறது.

வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் உருவாகுவதை உண்ணிப்பாக அவதானிப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஐ.நா பொதுச்சபைத் தலைவர் ஜோன் வில்லியம் ஆஷ் குறிப்பிடுகிறார். இலங்கை அரசாங்கம் கூறியதை ஏற்றுக்கொண்ட அமெரிக்காவும் வடக்கில் புலிகள் மீள உருவாகுகின்றனர் என்று ஸ்ரீலங்காவுக்கு ஆறுதல் அளிக்கிறது. மாபெரும் இனப்படுகொலையின் பின்னரும் வடக்கு கிழக்கில் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதைத்தான் இவர்கள் பயங்கரவாதம் என்று கருதுகிறார்போல தெரிகிறது. வடக்கு கிழக்கில் உள்ள மக்களை பயங்கரவாதிகள் என்ற பெயரிலேயே சிங்கள அரசு ஒடுக்குகிறது.  

சிங்கள அரசாங்கங்கள் சொல்வதை கிளிப்பிள்ளைபோல திருப்பிச் சொல்லும் ஐ.நாவும் ஸ்ரீலங்காவின் நட்பு நாடுகளும் மீண்டும் புலிகள் என்ற பெயரில் இன்னொரு முள்ளிவாய்க்காலை நடத்தி இன்னும் லட்சக்கணக்கானவர்களை படுகொலை செய்ய முனைகின்றனரா?? போரில் இறந்த மக்களுக்கு ஒரு தீபத்தை ஏற்றுவதற்கு போராடிக் கொண்டிருக்கும் காலத்தில் வடக்கில் பயங்கரவாதம் என்று இலங்கை அரசு போடும் நாடகத்தை உலகமும் ரசிப்பதுதான் பயங்கரமானது.

இனப்படுகொலையும் பேரினவாதிகளும்

'விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் உயிரிழந்த தினமாகையினால் அவர்களை நினைவுகூருவார்கள் என்ற ரீதியிலே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்று யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன  கூறுகிறார். நவம்பர் வாரத்தில் மாண்ட புலிகளை நினைவுகூறும் மாவீரர் நாள் வருகிறது. அதற்கும் இலங்கை அரசு தடை விதிக்கிறது. மே மாதத்தில் வரும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுக்கும் தடைவித்திக்கிறது.

மே மாதம் என்பது ஈழ மக்களை நினைவுகூறும் காலம் ஆனால் புலிகளை நினைவுகூறவே வடக்கு கிழக்கு துடிக்கிறது என்று சிங்களப் பேரினவாத கட்சியான தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் கூறுகிறது.  போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூற அனுமதிக்கக்கூடாது என்பதில் சிங்களப் பேரினவாதிகளும் அரசும் படைகளும் கடுமையாக உள்ளனர். கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூற இடமளிக்க வேண்டும் என்பதை விக்கிரபாகு கருணாரத்னவைத் தவிர எந்த சிங்களக் கட்சிகளும் குறிப்பிடவில்லை.

எல்லாக் கட்சிகளும் தமிழ் மக்களையும் புலிகளையும் ஒன்றாகத்தாக் பார்க்கிறார்களா? இந்த விடயத்தில் பலர் கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். ஜே.வி.பியிடம் இதுகுறித்து கொழும்பு பத்திரிகை ஒன்று வினவியபோது யுத்தவெற்றியும் கொண்டாட கூடாது தமிழ் மக்களுக்கு நினைவஞ்சலியும் கொண்டாடகூடாது என்று சொல்லியிருக்கிறது. தமிழ் மக்களின் உரிமையையும் விடுதலைப் போராட்டத்தையும் மேலும் ஒடுக்கும் ஜே.வி.பியின் போக்கே இங்கும் துலக்கமாக தெரிகிறது. போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த இடமளிக்க முடியாது என்று இலங்கை அரசு சொல்வதையே ஜே.வி.பியும் நினைவஞ்சலி தேவையில்லை என்று சொல்கிறது.

இறந்தவர்களுக்கான நீதி

முள்ளிவாய்க்கால் படுகொலையை மூடி மறைக்கவே ஜே.வி.பி இப்படிக் குறிப்பிடுகிறது. ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலை, நிகழ்த்தப்பட்ட காலத்தை விடவும் காலம் கடக்க கடக்கவே அதிக தாக்கத்தை உருவாக்குகிறது. அதுதான் ஒரு இனப்படுகொலை ஏற்படுத்திச் செல்லும் வடுவின் விளைவு. இந்த இனப்படுகொலையை மூடி மறைக்க சிங்கள அரசு எத்தகைய பிரயத்தனங்களைச் செய்கிறதோ அந்தளவுக்கு கொல்லப்பட்டவர்கள் பற்றிய நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் எங்கள் மக்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.

இறந்த பின்னும் ஈழத் தமிழினம் பழி வாங்கப்படுகையில் எப்படி இணைந்து வாழ முடியும்? இறந்தவர்களை நினைவகூறும் காலமும் சுதந்திரமும் எங்களுக்குத் தேவை. இறந்தவர்களுககே இந்தக் கதி எனில் இருப்பவர்களுக்கு என்ன நிலமை? இந்த விடயம்தான் அநியாயமாக கொன்றொழிக்கப்பட்ட எங்கள் மக்களின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பதை அவசியப்படுத்துகிறது. இதுதான் இங்கு நடத்தத இனப்படுகொலை என்பதை காட்டுகிறது. இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை தேவை என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும். தொடரும் இனப்படுகொலையை நிறுத்த சர்வஜன வாக்கெடுப்பு நடதப்படவேண்டும். இன்னமும் வாழும் ஈழ மக்களின் பாதுகாப்பிற்கு இதுவே அவசியம். இறந்தவர்களின் குரலும் இருப்பவர்களின் குரலும் ஒன்றுதான். 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107041/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. ஈழப்போராட்டத்தின் புதிய அத்தியாயம்.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி என்பதும் அவர்களது போராட்டத்தின் முடிவல்ல. மாவீரர்கள் இட்ட அடித்தளத்திலிருந்து ஈழ மக்களின் உரிமைப் போராட்டம் உயிர்த்தெழுந்து தமிழீழம் நோக்கி நகரட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.