Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு போராட்டத்தில் ஆர்ப்பரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் மற்றும் கைது செய்யப்பட்ட ஜெகதீஸ்வரன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் பல்வேறு அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் நிறைவுக்கு வந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் 11 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டம் ஆனது 12 மணி வரையான ஒரு மணித்தியாலங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு , ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பன ஆதரவு வழங்கியிருந்தன.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எமது நிலமும் எமது வீடும் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு, சுயநிர்ணய உரிமையை அங்கிகரி, நில அபகரிப்பை நிறுத்து, சர்வதேசமே ஜகதீஸ்வரனின் விடுதலைக்கு நடவடிக்கை எடு, புனர்வாழ்வில் உள்ளவர்களை விடுதலை செய், பரவிப்பாஞ்சான் எங்களின் நிலம்  இராணுவமே வெளியேறு, பரவிப்பாஞ்சான் மண்ணில் எங்களை வாழ விடு, வடக்கு கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு போன்ற வாசங்களை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன், சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், உறுப்பினர்களான ரவிகரன், சிவாஜிலிங்கம், பசுபதிப்பிள்ளை , பிரதேச சபைகளைச் சேர்ந்த தலைவர்கள்,உறுப்பினர்கள் ,மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள்  கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். 

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான ஜெகதீஸ்வரன் குறித்த போராட்டம் தொடர்பில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த போதே அவர் புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நில அபகரிப்பை கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மு.ப 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

 

photo-%284%29.jpg

நில அபகரிப்பை கண்டித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இவ் ஆர்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன், ஸ்ரீதரன், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

 

photo-%283%29.jpg

 

photo-%285%29.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=716393053328271719#sthash.tKa8InKi.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.