Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் காங்கிரஸ் - கூட்டமைப்பு கல்முனையில் சந்தித்துப் பேச்சு!

Featured Replies

tna%20slmc%201.jpg

 

கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கல்முனை மாநகர சபை மண்டபத்தில் தற்பொழுது உயர்மட்டப் பேச்சு நடைபெற்று வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. கல்முனை பிராந்தியத்தில் வளர்ந்து வரும் தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. குறிப்பாக, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இக்கூட்டத்தில் முதன்மை விடயங்களாக ஆராயப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன், எம்.யோகேஸ்வரன், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ஹென்ரி மகேந்திரன், கிழக்கு மாகாண சபை தமிழ்க்கூட்மைப்பு உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகர சபை மேயர் எம்.நிசாம் கரியப்பர், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலி, மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் எனத் தெரியவருகின்றது

 

malarum.com

 

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் மக்கள் மீது  கரிசனை  கொண்டவர்களுடன் செய்யவேண்டிய  விடயம் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.