Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு. மஹாஜனக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம்

Featured Replies

DSC09893%20copy.jpg
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியினுள் அதிபரும் ஆசிரியர்களும் நுழையமுடியாதவாறு பூட்டுப் போட்டு பெற்றோரும் மாணவர்களும்  திங்கட்கிழமை (02)  காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'தகுதி இல்லாத அதிபரையும் குறிப்பிட்ட ஆசிரியர்களையும் இடமாற்று' என்று கோஷம் எழுப்பியவாறு பெற்றோரும் மாணவர்களும் பாடசாலைக்கு முன்பாக  நின்றிருந்தனர்.

மேற்படி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அதிபர் தடையாக இருப்பதாகவும் தற்போதைய அதிபரின் நடவடிக்கையால் பாடசாலையின் கல்வி சீரழிந்து செல்வதாகவும் பாடசாலை எந்தவொரு முன்னேற்றத்தையும் காணவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

இந்த நிலையில், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு வலய நிர்வாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் குருகுலசிங்கம் ஆகியோர் பெற்றோருடன்  கலந்துரையாடினர். 

இதனைத் தொடர்ந்து, மாணவர்களை பாடசாலையினுள் செல்லுமாறு கேட்டுக்கொண்ட நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ளே சென்றனர். உள்ளே சென்ற ஆசிரியர்கள் வரவு இடாப்பில் கையொப்பமிட்டனர்.

பாடசாலையிலுள்ள விஞ்ஞான ஆய்வுகூடம் ஒன்றை உள்ளூர் அரசியல்வாதி ஒருவரைக் கொண்டு திறந்து வைக்க வேண்டும் என்பதில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த சிலர் ஆர்வம் காட்டியதாலேயே குழப்ப நிலைமை  உருவானது என்று அதிபரும் ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (01)  மாலை இரகசியமாக  பெற்றோரை அழைப்பித்து பொய்யான கருத்துக்களைக் கூறி பெற்றோரைத் தூண்டி இன்று பாடசாலைக்குப் பூட்டுப் போட வைத்திருக்கின்றார்கள். 

இதற்குக் கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகளும் பின்னால் நிற்கிறார்கள் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி.உதயரூபன் தெரிவித்தார். 
DSC09904%20copy.jpg

 

DSC09904%20copy(1).jpg

tamilmirror

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பின் பிரபல பாடசாலை அதிபரையும் சில ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

 

மட்டக்களப்பு நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரையும் சில ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று (02.06.14) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை 7.15 தொடக்கம் 8.00 மணிவரையில் பாடசாலை நுழைவாயிலை மறித்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

´தகுதி இல்லாத அதிபரையும் சில ஆசிரியர்களையும் இடமாற்று´ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டதோடு, மேற்படி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அதிபர் தடையாக இருப்பதாகவும் தற்போதைய அதிபரின் நடவடிக்கையால் பாடசாலையின் கல்வி சீரழிந்து செல்வதாகவும் பாடசாலை எந்தவொரு முன்னேற்றத்தையும் காணவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

அர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஆளுமை இல்லாத அதிபர் வேண்டாம், திறனற்ற அதிபர் வேண்டாம், மாணவர்களை புறந்தள்ளும் அதிபரை நிறுத்து போன்ற அதிபருக்கு எதிரான சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு வலய நிர்வாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் குருகுலசிங்கம் ஆகியோர் பெற்றோருடன் கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களை பாடசாலையினுள் செல்லுமாறு கேட்டுக்கொண்ட நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ளே சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எம்.நிலாகரன்,

அதிபரை இடமாற்றுமாறு வலய, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு பல்வேறு தடவைகள் அறிவித்தும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பாடசாலையின் இணைப்பாட விதான செயற்பாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. பாடசாலையில் மாணவர்கள் தூங்கும் நிலையே உள்ளது. கடந்த காலத்தில் இருந்த நிலை பின்நோக்கி செல்கின்றது. அதிபர் ஆசிரியர்களை சரியான முறையில் கண்காணிப்பதில்லை.

ஒரு சில ஆசிரியர்களை வைத்துக்கொண்டு சிரேஸ்ட ஆசிரியர்களை பின்தள்ளும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் என்றார்.

இதேவேளை பாடசாலைக்கு சென்றிருந்த கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பாடசாலை சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு பாடசாலை ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடி மகஜர் ஒன்றினை வழங்குமாறு பெற்றோரிடமும் பணிப்பாளர் தெரிவித்தார். 

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107714/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.