Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஐந்து மாதங்களில் 800 பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டன!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(பிஸ்ரின் முஹம்மத்)

ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழுவுக்கு (CERT) கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில்  சுமார் 800 போலி பேஸ்புக் கணக்குகளின் செயற்பாடுகள்  முடக்கப்பட்டுள்ளன.

5755FB.jpg
 பேஸ்புக் தலைமையகத்துக்கு  அறிக்கைக்கு  அமைய வே இவற்றின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக  இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழுவின்  (CERT) சிரேஷ்ட பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த மெட்ரோ நியூஸுக்கு தெரிவித்தார்.

இவ்வருட ஆரம்ப ஐந்து மாத காலப்பகுதிக்குள் பேஸ்புக் தொடர்பான 900 முறைப்பாடுகள்  நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.  இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. கடந்த வருடம் முழுவதும் பேஸ்புக் தொடர்பான 1200 முறைப்பாடுகளே குறித்த நிறுவனத்துக்கு கிடைத்ததகவும் அவர் தெரிவித்தார்.

தமது பெயரில் யாராவது போலியான பேஸ்புக் கணக்கு ஒன்று நடத்தபடுவதை அறிந்தால் அது தொடர்பான தகவல்களுடனும் தம்மை அறிமுகப்படுத்துவதற்கான தகுதியுடைய ஆவணங்களுடனும் ஒருவர் முறைப்பாடு செய்ய முடியும். அது பற்றிய விசாரணைகளை முன்னெடுத்து பின்னர் இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழுவின்  ஊடாக பேஸ்புக் தலைமையகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டு அந்த போலி கணக்கின் செயற்பாட்டை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது பேஸ்புக் கணக்குகளை கையாளும் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறும் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிடும் போதும் நண்பர்களை இணைத்துக் கொள்ளும் போதும் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறான மோசடிகள் இடம் பெறும் போது 0112691692, 0112695749, 0112679888 ஆகிய இலக்கங்களுடாக  கணினி அவசரகால தயார்நிலைக் குழுவை  (CERT) தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=5755#sthash.dfxGwTQr.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.