Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திரா நூயி - PEPSI CEO

Featured Replies

 

PepsCoIndraNooyi2010-222x300.jpg

 

‘இந்திரா நூயி’ பெயரை கேட்டால் எதோ வேறு மாநிலத்தில் பிறந்தவர் போல் தெரியும். இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. 1955 ஆம் ஆண்டு சிங்கார சென்னையில் பிறந்தவர். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் ‘B.Sc’ படிப்பும், ‘IIM’- கல்கத்தாவில் MBA படிப்பும், யெல் பல்கலைக்கழகத்தில் ‘Public & Private Management’ முதுநிலை பட்டம் பெற்றவர். 1976ல் ‘Beardsell’ டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின் ‘Asea Brown Boveri, Motorala, Bostan Consulting Group, Johnson & Johnsn’ என்று பல நிறுவங்களில் பணி புரிந்துள்ளார்.
பெப்ஸி நிறுவனத்தில் 1994ல் Vice-President, Strategic Planning & Development’ ஆக சேர்ந்தார். தன் கடின உழைப்பால், இன்று பெப்ஸி நிறுவனத்தில் ‘Chairman & CEO’ வாக பணிபுரிந்து வருகிறார். ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் மேல் சம்பாதிக்கிறார். உலகில் பெப்ஸி நிறுவனம் இரண்டாம் இடத்தில் வர மிக முக்கிய பங்கு வகித்தவர். பெப்ஸி என்றவுடன் குளிர்சாதனம் பொருள் மட்டும் தயாரிக்கும் நிறுவனம் மட்டுமில்லை. உடல் ஆரோக்கியத்திற்காக கொழுப்பு சத்து குறைவுள்ள எண்ணெய், உப்பு போன்ற பொருட்களை கூட தயாரிக்கிறார்கள்.

ஒரு புறம், பெப்ஸி குளிர்பானத்தை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டம் இருக்க, பெப்ஸி குளிர்பான விற்பனையில் ‘இந்தியா’ முதல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஜனவரி 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவராக நூயி தேர்ந்தெடுக்கப்பட்டார், இலாபநோக்கற்ற வணிக ஆலோசனை அமைப்பான இது, இந்தியாவில் வணிகம் செய்யும் உலகின் 300க்கும் மேற்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களைக் குறிக்கின்றது. நூயி USIBC இன் போர்டு இயக்குநர்களை வழிநடத்துகின்றார், இது அமெரிக்க தொழில்துறையைப் பிரதிபலிக்கும் 60க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளின் கூட்டமைப்பு ஆகும்.

2008 ஆம் ஆண்டு பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கையில், இந்திரா நூயி $14,917,701 ஐ மொத்த சம்பளமாகப் பெற்றார், அதில் அடிப்படைச் சம்பளமான $1,300,000, போனஸ் $2,600,000, வழங்கப்பட்ட பங்குகள் $6,428,538 மற்றும் விருப்பமாக வழங்கப்பட்டவை $4,382,569 ஆகியவை உள்ளடங்கும்.

100 % வியாபாரியாக இல்லாமல் சுற்றுப்புறத்தை பற்றி நினைத்து செயல்ப்படுவதும், இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் எளிமையாக இருப்பதும், அதிக சம்பளம் வாங்கும் CEO என்ற கர்வமில்லாமல் இருக்கிறார். உலகளவில் இந்தியர்களை தலை நிமிர வைத்த பெண்களில் இவருக்கு தனி இடம் கண்டிப்பாக உண்டு

http://sathiyam.tv/tamil/wp-content/uploads/2013/12/PepsCoIndraNooyi2010.jpg

 

ரிசப்ஷனிஸ்டாக வேலை செய்தேன்!' இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி!!
 
images.jpg
உலகின் சக்தி மிகுந்த 100 பெண்களில், 4வது இடத்தில் உள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பெப்சி முதன்மை நிர்வாக அலுவலர் மற்றும் தலைவருமான இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி: என் சொந்த ஊர் சென்னை. டிகிரி முடிச்சதும், படிப்பு இதோட முடியலன்னு தோணிச்சு. சேலஞ்சிங்கா ஏதாவது படிக்கலாம்னு நினைச்சேன். மாஸ்டர் டிகிரி பிசினஸ்ல பண்ணலாம்ன்னு அப்பாகிட்ட கேட்டேன். அப்பா என் படிப்புக்கு உறுதுணையாக இருந்தார். கோல்கட்டா ஐ.ஐ.எம்.,ல் எம்.பி.ஏ., அப்ளை பண்ணினேன். அந்த நேரத்தில் இந்தியாவிலேயே இரண்டு பிசினஸ் ஸ்கூல் தான் இருந்தது. எம்.பி.ஏ., முடிக்கறப்போ தான் உலகம் எவ்வளவு பெரிசுன்னு தெரிஞ்சுது. எம்.பி.ஏ., முடித்ததும், சிறிது காலம் ஏ.பி.பி., நிறுவனத்தில் பணியாற்றினேன்; பின், "ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்' நிறுவனத்தில், புராடக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தேன். அங்கே வெற்றிகரமாக பணியாற்றினாலும், கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள வெறும் எம்.பி.ஏ., படிப்பு போதாது என்று முடிவு செய்து, "பப்ளிக் அண்ட் பிரைவேட் மேனேஜ்மென்ட்' படிப்பிற்காக அமெரிக்காவின், "யேல்' பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். படிக்கும் காலத்தில், படிப்பு செலவுக்காக, "பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்ட்' வேலை செய்தேன். படிப்பு முடிந்த பிறகு, பெப்சி நிறுவனத்தில், 1994ல் நுழைந்த போது, என் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. நான் மட்டும் ஒரு ஆணாக இருந்திருந்தால், இந்த இடத்தை அடைய என் உழைப்பில் பாதியை செலவிட்டிருந்தாலே போதும். பெண்ணாக இருந்ததால் இரு மடங்கு அதிகமாக உழைத்திருக்கிறேன். இந்த உழைப்புக்காக, இந்திய அரசு கடந்த 2007ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது.

 

Edited by Athavan CH

  • 4 years later...
  • தொடங்கியவர்

பெப்சி நிறுவனத்தை வழி நடத்திய இந்திரா நூயி அளிக்கும் தலைமைப் பதவி பாடங்கள்! 

இந்திரா நூயி, பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓவாக 12 ஆண்டுகள் பொறுப்பு வகித்த பிறகு அந்த பதவியில் இருந்து விலகியிருக்கிறார். அவரது இடத்தில் ரமோன் லகுவார்ட்டா அக்டோபர் 3 ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். பெப்சி நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அவர் 2019 வரை இருப்பார். 

இந்திரா நூயி பெப்சி நிறுவனத்தில் 1994 ல் பணிக்கு சேர்ந்தார் 2006 ல் அவட் சி.இ.ஓவாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் பெப்சி நிறுவனம், 2006 ல் 35 பில்லியன் டாலரில் இருந்து 2017 ல் 63.5 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது.

 
jhmnlywf-Indra-Nooyi.jpg
 
 

இந்திரா நூயி நிறுவனத்தின் தலைவராக 2019 வரை பதவியை தொடர்வார். 61 வயதான நூயி, பதவி விலகல் முடிவை அறிவித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

"பெப்சி நிறுவனத்தை தலமையேற்று நடத்தியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமையாகும். கடந்த 12 ஆண்டுகளில், எங்கள் செயல்பாடுகள் குறித்து, பங்குதாரர்கள் மட்டும் அல்லாமல் நாங்கள் செயல்படும் சமூகங்களில் உள்ள அனைத்து தொடர்புடையவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டிருப்பது குறித்து பெருமிதம் கொள்கிறேன். இந்தியாவில் பிறந்து வளர்ந்த நான், இத்தகைய அசாதரனமான நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்துவேன் என கனவிலும் நினைக்கவில்லை.”

அவரது இடத்தில் பொறுப்பேற்க உள்ள ரெமோன், பெப்சி நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். 2017 முதல் பெப்சி தலைவராக அவர் நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளை கவனித்து வந்தார்.

இந்திரா நூயி டிவிட்டரில் ரமோன் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 

"@PepsiCo நிறுவனத்தின் வெற்றி மற்றும் வலுவான நிலையை மேம்படுத்த ரெமோன் லகுவார்ட்ட பொருத்தமானவர். அவர் முக்கிய பங்குதாரராக மற்றும் நண்பராக இருந்திருக்கிறார். வரும் ஆண்டுகளில் நிறுவனத்தை அவர் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறேன்.”

இதனிடையே, நிறுவனத்தின் இயக்குனரான ஐயான் குக், நிறுவன வளர்ச்சியில் இந்திரா நூயியின் பங்களிப்பை பாராட்டினார். குறுகிய கால நோக்கில் அல்லாமல் நீண்ட கால நோக்கிலான பார்வையுடன் நிர்வகித்து, வலுவான மற்றும் சீரான நிதி செயல்பாடுகளை அளித்தார்,” என அவர் பாராட்டியிருந்தார்.

’இன்றைய தினம் எனக்கு கலைவையான உணர்வுகளை கொண்டது. @PepsiCo24 ஆண்டுகளாக என் வாழ்க்கையாக இருந்தது. என் இதயத்தின் ஒரு பகுதி இங்கு தான் இருக்கும். நான் என்ன செய்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். எதிர்காலம் பற்றி நம்பிக்கை கொண்டுள்ளேன். பெப்சி நிறுவனத்தின் சிறந்த காலம் வர இருப்பதாக நம்புகிறேன்” என்றும் அவர் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

 

ஒரு பெண்ணாக தலைமை வகித்தது பற்றி இந்திரா நூயியின் ஊக்கம் தரும் மேற்கோள்கள் இவை:

”நான் செய்யாத எதையும் மற்ற எவரையும் செய்யுமாறு கூற மாட்டேன்.”

“சி.இ.ஓ’வாக நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் தலைமை பதவி என்பது ஒவ்வொரு கட்டத்திலும் வேறுபட்டதாக இருக்கும். நிறுவனத்தில் உயர் பதவி பெறும் போது, பொறுப்புகள் அதற்கேற்ப அதிகரிக்காமல், பன்மடங்கு உயர்கின்றன.”

”நான் நேர்மையாக, மிக நேர்மையாக இருக்கிறேன். நான் எப்போதுமே, எல்லாவற்றையும் அவர்கள் கோணத்திலும், என் கோணத்திலும் பார்த்திருக்கிறேன். எப்போது விலகிக் கொள்ள வேண்டும் என எனக்குத்தெரியும்.”
”தலைமைப் பண்பை வரையறை செய்வது கடினம். நல்ல தலைமைப் பண்பை வரையறுப்பது இன்னும் கடினம். ஆனால் மற்றவர்களை பூமியின் விளிம்பை நோக்கி உங்களை பின் தொடர்ந்து வரச்செய்ய முடியும் என்றால் நீங்கள் நல்ல தலைவர்.”
”நீங்கள் நீங்களாக இருப்பது தான் வெற்றிக்கான முக்கிய அம்சங்களில் ஒன்று. உங்களை உருவாக்கும் அம்சங்களை ஒரு போதும் மறைக்க வேண்டாம்.”
”எல்லாவற்றையும் மீறி, நீங்கள் ஒரு மனிதர் என்பதை, நீங்கள் ஒரு அம்மா என்பதை, நீங்கள் ஒரு மனைவி என்பதை, நீங்கள் ஒரு மகள் என்பதை மறக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு வெற்றி பெற்றாலும் கடைசியில் குடும்பம், நண்பர்கள் மற்றும் நம்பிக்கை மட்டும் தான் உங்களுடன் இருக்கும்.

https://tamil.yourstory.com/read/1ec38aba69/leadership-leadership

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.