Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறச்சக்திகளின் தலையீடுகளுக்கு எதிராக கைகோர்க்க வேண்டும்! - நமீபிய பிரதமரிடம் கோரினார் ஜனாதிபதி மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புறச்சக்திகளின் தலையீடுகளுக்கு எதிராக கைகோர்க்க வேண்டும்! - நமீபிய பிரதமரிடம் கோரினார் ஜனாதிபதி மகிந்த Top News 
[sunday, 2014-06-15 19:19:14]
News Service
நாடுகளில் புறச்சக்திகளின் தலையீடுகளுக்கு எதிராக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நமீபியாவிடம் ஆதரவு கோரியுள்ளார். நியாயப்படுத்த முடியாத வெளிச்சக்திகள் உட்பட தடைகளை வெல்வதற்கு நாம் இணைந்து செயற்பட வேண்டும் என நமீபிய பிரதமர் ஹேகே கீயிங்கோப்பிடம் ஜனாதிபதி கூறினார். வெளிநாட்டு தலையீடுகளுக்கு உள்ளான நாடுகளின் நிலைமைகள் முன்பிருந்ததைவிட மோசமாகியுள்ளது. அவற்றில் குழப்பம் ஏற்பட்டதே கண்ட விளைவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதிக்கும் நபீபிய பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு, பொலிவியாவிலுள்ள லொஸ் தாஜிபொஸ் ஹோட்டலில் இடம்பெற்றதாக ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.
 
ஜனாதிபதி ராஜபக்ஷ ஜி 77 நாடுகளின் பொன்விழா கொண்டாட்டத்துக்காக பொலிவியாவுக்கு சென்றுள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் பற்றி ஜனாதிபதி, நமீபிய பிரதமருக்கு விளக்கினார். அவர் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தல், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்தல், சமூகத்துடன் இணைத்தல், முன்னய சிறுவர் போராளிகளை விடுவித்தல் ஆகிய விடயங்களில் இலங்கை அதிகளவில் வேலை செய்துள்ளதென கூறினார்.
 
நாம் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தினோம். நாம் தேசிய நல்லிணக்கத்துக்காக ஆணைக்குழுக்களை நியமித்துள்ளோம். கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு என்பனவையே அவையாகும். மக்கள் சமாதானமாக வாழ்கின்றனர். அரசியல்வாதிகளும் நாட்டுக்கெதிராக இயங்குவோரும் கவலையடைந்துள்ளனர். நமீபிய பிரதமர், தனது நாட்டில் முகங்கொடுக்கும் இதே போன்ற நிலைமையை விளக்கினார். இலங்கை, நமீபியாவுக்கு வழங்கிய உதவிக்காக ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.