Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பிறக்கும் தமிழ் குழந்தைகளுக்கு கிட்னி பாதிப்பு: வேதாந்த மன்ற தலைவர் தகவல்

Featured Replies

Tamil_News_thumb_1001098.jpg

 

இலங்கையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மூலம், பல்வேறு உதவிகளை முல்லைத்தீவில் உள்ள, 'வேதாந்த மன்றம்' என்ற, இந்து சமய கலாசார அமைப்பு செய்து வருகிறது.

சிகிச்சைக்காக சென்னை வந்துள்ள, இந்த அமைப்பின் தலைவர் மங்களம்மாள், இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:இலங்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக, இந்தியா மூலமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு, மின்சாரம், சாலை, போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை.

நடை பிணமாக 
வருமானத்திற்கு வழியின்றி, தமிழர்கள் தவிக்கின்றனர். போருக்கு பிறகு, ஒவ்வொரு வீட்டிலும், இரண்டு, மூன்று பேர் வரை காணாமல் போய் உள்ளனர். இருப்பவர்களும், கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்து, நடை பிணமாக உள்ளனர்.இவ்வாறு, இலங்கை முழுவதும், ஒவ்வொரு கிராமத்திலும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளனர். உடலில், துப்பாக்கி தோட்டாக்களுடன், பலர் வாழ்கின்றனர். தோட்டாவை உடலிலிருந்து அகற்றினால், உயிர்போய் விடும். சிகிச்சை மேற்கொள்வதற்கும் போதுமான வசதி இல்லை.

10 ஆயிரம் பேர் 
நாங்கள் கணக்கெடுப்பு நடத்தியதில், முல்லைத்தீவில் மட்டும், இவ்வாறு, 10 ஆயிரம் பேர் உள்ளனர். இடுப்புக்கு கீழேயும், கழுத்துக்கு கீழேயும், உடல் உறுப்பு செயல்பாடு இழந்து, படுத்த படுக்கையாக பலர் உள்ளனர்.படுக்கை புண்ணுக்கான, 'ஸ்பிரே' மருந்தை வாங்கக் கூட வழி இல்லாமல், அவர்கள் தவிக்கின்றனர். வருவாய் ஈட்ட வேண்டும் என்றால், யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும். ஊனமுற்ற நபர்களை குடும்பத்தில் உள்ள ஊனமுற்ற நபர்களை விட்டுவிட்டு, அங்கு செல்ல முடியாமல், பலரும் தவிக்கின்றனர்.புலம் பெயர்ந்த தமிழர்கள், அனுப்பும் பணத்தை வைத்து, பலரும் காலத்தை ஓட்டி வருகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்து விடுவர் என்று கருதி, தங்கள் மகள்களுக்கு, 16 வயதுக்குள் பலரும் திருமணம் செய்து விட்டனர். அவ்வாறு, திருமணமானவர்களில் பலரும், தற்போது,விதவைகளாக உள்ளனர்.கணவன் இல்லாமலே, கர்ப்பிணியாகவும், குழந்தைப் பெற்றுக் கொண்டு வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களை கலாசார சீரழிவிற்கு பலர் தள்ளியுள்ளனர்.போலீசார் துணையுடன், இதை தடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இதில், சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளது.

இறந்தே பிறக்கின்றன 
மேலும், குழந்தைகளும், கிட்னி பாதிப்பு, உடல் ஊனம் ஆகிய குறைகளுடன் பிறக்கின்றன. போரால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டதால், இது போன்ற பிரசவங்கள் நடப்பதாக தெரிகிறது. மருத்துவ வசதி இல்லாததால், பல குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. மருத்துவமனைகள் இல்லாததால், பாம்பு கடித்துக் கூட பலரும் இறக்கின்றனர்.மன ரீதியாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முதலில் புத்துணர்ச்சி தேவை. இதற்காக, இசை, இறை வழிபாடு நிகழ்ச்சிகளை அதிகளவில் நடத்த வேண்டும்.ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த, இலங்கை வருபவர்களுக்கு, தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்புகிறது; இது, தேவையற்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தாவிட்டால், தமிழர்கள், மனநோயாளியாக

 

மாறும் நிலை உருவாகும். தமிழர்கள் வருமானத்திற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தேவையானநடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தண்ணீர் வசதி இல்லை 
இதற்கு, இந்திய அரசு உதவி செய்ய வேண்டும். மற்றவர்களிடம் கையேந்தாமல், விவசாயம் செய்வதற்கு, தமிழர்கள் தயாராக உள்ளனர். ஆனால், பாசனத்திற்கும், குடிக்கவும் தண்ணீர் வசதி இல்லை.பொது கிணறுகளை அதிகளவில் அமைத்து, விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலி, செயற்கை உடல் உறுப்புகள், தையல் இயந்திரங்கள், பாய்கள், உடைகள் வழங்க வேண்டும்.தமிழக அரசும், தமிழக மக்களும், இயன்ற உதவிகளை இலங்கை தமிழர்களுக்கு வழங்கவேண்டும். இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ரஜினி உள்ளிட்டோரை சந்தித்து, உதவிகள் பெற முயற்சித்து வருகிறோம். இருவரையும் சந்திக்க, இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

-- நமது சிறப்பு நிருபர் --

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1001098

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.