Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்பிடி நீதி அமைச்சர்? சூப்பரெல்லே?: யாழ்ப்பாணத் தம்பி

Featured Replies

hakeem.jpg
 
(அளுத்மகக்கு சர்வதேச விசாரணை தேவை, முள்ளிவாய்க்காலுக்குத் தேவையில்ல! அதுவேற, இது வேற!)
 
இலங்கையில் வெட்கப்படும் அமைச்சு எண்டு ஒரு அமைச்சுப் பதவி இருக்கிறது இப்பதான் எனக்குத் தெரியும். ஆனா அதில கணபேர் அமைச்சராய் இருக்கினம். ஹக்கீம் நானா முதல்ல தான் அமைச்சராய் இருப்பதற்கு வெட்கப்படுவதாக சொன்னார். இப்ப ரிசாத் பதியூதினும் தானும் வெட்கப்படுவதாக சொல்லுறார். 
 
பொதுவா வேற விடயங்களுக்குத்தான் வெட்கப்படுவினம். ஆனால் இவையள் கொஞ்சம் வித்தியாசம் அமைச்சராய் இருக்கிறில வெக்கப்படுறினம். இனி துக்கப்படுவினம். பிறகு துயரப்படுவினம். இத்தின பட்டும் அமைச்சுப் பதவியள விட்டு மட்டும் விலக மாட்டினம். ஹக்கீம் நானாவும், ஒரு ரிசாத் பதியூதின்தான், ஒரு அத்தாவுல்லாதன், ஒரு கிஸ்புல்லாதான், ஒரு டக்கிளஸ்தான் எண்டுற காலம் நல்லா நிருப்பிச்சிருக்குது பாருங்கோ. 
 
கொழும்பில நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில ஹக்கீம் நானா என்ன கேக்கிறார் தெரியுமே? முஸ்லீம் மக்களின்ட பாதுகாப்புக்கு யாராவது உத்தரவாதம் தந்தால் தான் பதவி விலக தயாராம். அடப் பாவி மனுசரே? அதால தான் நீங்க பதவியில இருக்கிறிங்களா? இதென்னப்பா அநியாயமாய் இருக்குது? சரி உத ஏன் கேள்வி கேட்ட செய்தியாளரப் பாத்து கேட்டவர். நாங்கள் எப்பிடி பாதுகாப்புத் தாரது?
 
பதவி விலகுவன். ஆனால் விலக மாட்டன் எண்டுற ரேஞ்சில மனுசன் பதறி அடிக்குது. தன்ட சொந்த மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டிருக்கேக்குள்ள பதவி விலகிறதால என்ன பிரியோசனம் எண்டு கேக்கிறார்? பதவி விலகப் போறன் எண்டு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தவர் இப்பவும் விலகேல்ல. பொருத்தமான ஆளத்தானய்யா மகிந்த நீதி அமைச்சராய் போட்டிருக்கிறார். 
 
மனுசன் அமைச்சுப் பதவியை இரும்புப் புடியாய் புடிச்சிருக்குது. இடியே விழுந்தாலும் அசையாது. முஸ்லீம் மக்களுக்கே உந்தக் கதி எண்டால் தமிழ் மக்களுக்கு எந்தக் கதி பாருங்கோ? இன்னொரு பெரிய புதினம் தெரியுமே? அளுத்கம பேருவளை சம்பவத்த்திற்கு சர்வதேச விசாரணை தேவை எண்டுறியள்? ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை எண்டுறியள் இது என்ன நியாயம் எண்டு ஒரு முஸ்லீம் பொடியன் கேட்டான் கேள்விய. 
 
மனுசன் ஆடிப் போட்டுது. அது போன மாதம். நான் சொல்லுறது இந்த மாதம் எண்டுற மாதிரியும், அது வேற வாய் இது நாற வாய் எண்டுற மாதிரியும் மனுசன் என்ன சொல்லிச்சுது தெரியுமே? அது ஐஞ்சு வருசத்துக்கு முதல்ல நடந்தது? இது இப்ப நடந்தது? அது வேற இது வேற? அடப் பாவி அமைச்சரே? இதெல்லாம் ஒரு காரணமா? இதையெல்லாம் நீங்க பதறிக்கொண்டே சொல்லுவிங்களா நானா? 
 
எப்பிடி நீதி அமைச்சர்? சூப்பரெல்லே? 
 
இலங்கை நீதி தழைத்தோங்கும் நாடய்யா. அப்ப மகிந்தவுக்கு பொலிவியா என்ன எல்லா நாடுகளும் சமாதானம் ஐக்கியம் போன்ற சாதனையளுக்கு விருது குடுக்காதோ?
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரப்பு.. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி நீதி அமைச்சர்? சூப்பரெல்லே? 

சூப்பர்......... :D  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.