Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுண்டல் வாங்குவது கேவலமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் வாங்குவது கேவலமா?

தி.செங்கை செல்வன்

செப்., 23 நவராத்திரி ஆரம்பம்!

""நீ கோயிலுக்கு வர்றதே சுண்டல் வாங்கவும், சர்க்கரைப் பொங்கல் வாங்கவும் தானே!' என்று உங்களைக் கேலி செய்யும் நண்பர்கள் இருக்கிறார்களா?

"சுவாமியா பாயசமும், வடையும் கேட்குது. நீ சாப்பிடுறதுக்காகத்தானே இதையெல்லாம் செய்றே!' என்று உங்கள் வீட்டுக்காரர் உங்களை கிண்டலடிக்கிறாரா?

இந்தக் கிண்டல் ஆசாமிகளிடம் இந்தக் கட்டுரையைக் கொடுங்கள்.

சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நுõலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நுõலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நுõல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.

பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது. கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.

அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.

"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார். அதில் வரும் 480வது ஸ்லோகமான, "பாயஸான்ன ப்ரியாயை' என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்' எனப் பொருள். 501வது ஸ்லோகமான, "குடான்ன ப்ரீத மானஸாயை' என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்' என்று அர்த்தம். 526வது ஸ்லோகமான, "ஹரித் ரான்னைக ரஸியை' என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்' என பொருள் வருகிறது.

அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, "தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை' என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!' என்று பொருள். "முத் கௌத நாஸக்த...' என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!' என்று அர்த்தம்.

"ஸர்வெளதன ப்ரீதசித்தா' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!' எனப் பொருள். இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், "தாம்பூல பூரிதமுகிச்யை' என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.

"தாம்பூலம்' என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம். இது வழிபாட்டு முறைக்கு மாறானதல்ல. நவராத்திரியின் போது அம்பிகைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு மறுநாளான பிரதமை திதியில் துவங்கி நவமி திதி வரை ஒன்பது நாட்கள் ஒன்பது வகையான நைவேத்யத்தை படைக்க வேண்டும்.

முதல் நாள் அம்பிகையை அபிராமி, சைலபுத்ரி அல்லது குமாரி என பெயர் சூட்டி எலுமிச்சை சாதம், வெண்பொங்கல், தயிர்சாதம் படைக்க வேண்டும். இரண்டாம் நாள் கவுமாரி, பிரம்ம சாரிணி அல்லது திரிமூர்த்தி எனப் பெயரிட்டு, புளியோதரை அல்லது எள்பொடி சாதம் படைக்கலாம். மூன்றாம் நாள் அம்பிகையை இந்திராணி, கல்யாணி அல்லது சந்திரகாண்டி என பெயர் சூட்டி சர்க்கரைப் பொங்கல் படைப்பர்.

நான்காம் நாள் லட்சுமி, ரோகிணி அல்லது கூஷ்மாண்டி என பெயர் சூட்டி, பால் பாயசம், கதம்ப சாதம் படைக்கலாம். ஐந்தாம் நாள் ஸ்கந்தமாதா, மகேஸ்வரி அல்லது காளி என பெயர் சூட்டி, தயிர்சாதம் அல்லது அரிசி, வெல்லம், பாசிபருப்பு கலந்த பாயசம் படைக்க வேண்டும்.

ஆறாம் நாள் நரசிம்ஹி, காத்யாயனி அல்லது சண்டிகா என்ற பெயர் சூட்டி, பால்சாதம், தேங்காய் சாதம் படைக்கலாம். ஏழாம் நாள் சாமுண்டி, காள ராத்ரி அல்லது சாம்பவி என்ற பெயரில் அம்பிகையை அலங்கரித்து வெண்பொங்கல் படைக்கலாம்.

எட்டாம் நாள் வைஷ்ணவி, துர்க்கை அல்லது கவுரி என்ற பெயரில் அம்பிகையை அழைத்து, புளியோதரை, பாயசம் படைக்கலாம். ஒன்பதாம் நாள் அம்பிகைக்கு சரஸ்வதி அல்லது வராஹி என்ற பெயர் சூட்டி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல் படைக்க வேண்டும். இத்துடன் நவராத்திரி முடிந்து விடும். மறுநாள் தசமி திதியன்று அம்பிகையை விஜயை என்ற பெயர் சூட்டி பால் பாயசம் படைத்து வணங்க வேண்டும். இந்த நைவேத்தியத்துடன் அவரவருக்கு விருப்பமான மற்ற பொருட்களையும் சுவாமிக்கு படைக்கலாம்.

சாஸ்திர சம்பிரதாயம் என்பது விளையாட்டல்ல. ஆன்மிகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொன்றுமே அர்த்தமுள்ளது என்பதை உணர்ந்து நவராத்திரியை நலமுடன் கொண்டாடி மகிழ்வோம்.

2. முன்னோருக்கு மரியாதை!

செல்லப்பா

செப்., 22 மஹாளய அமாவாசை

மரணத்துக்கு பிறகு மனிதன் திரும்பவும் பூமிக்கு வருகிறான் என்ற நம்பிக்கை பல காலமாக இருக்கிறது. பிதுர்கள் என்ற பெயரில் அவர்கள் வருவராம். குறிப்பாக, அமாவாசை நாளில் அவர்கள் இப்படி வருவதாகச் சொல்வர். இந்த நாளில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அமாவாசைகளில் மிகவும் உயர்ந்தது மஹாளய அமாவாசை. "இந்த நாளில் எப்படி முன்னோரை வணங்க வேண்டும்? அவர்களுக்கு கர்ம காரியங்கள் எப்படி செய்ய வேண்டும்? என பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார் கருடன்.

அதற்கு கிருஷ்ணர் சொன்னார்...

"கருடனே! எந்த இடத்தில் கர்மம் செய்கிறோமோ... அந்த இடத்தை மெல்லிய பொருள் (மயிலிறகு போன்றவை) கொண்டு பெருக்கி, கோமயம் கொண்டு மெழுக வேண்டும். அந்த இடத்தைச் சுத்தம் செய்யாமல் காரியம் செய்தால், அந்த தர்ப்பணத்தின் பலன் அசுரர்களையும், பேய், பிசாசுகளையும் சென்று சேரும்.

"அந்தக் கர்மங்கள் நடக்கும் போதே அதைச் செய்பவர்களிடையே சண்டை சச்சரவு வந்து விடலாம் அல்லது ஏதோ காரணத்தால் தடை ஏற்பட்டு விடலாம். அந்த இடம் சுத்தமாக இருந்தால் தேவர்கள் வந்து காரியம் சிறப்பாக நடந்து முடிய ஆசிர்வதிப்பர்.

"இறந்து போனவன் காரியம் செய்வதைப் பார்க்கவா போகிறான்? அவன் இருக்கும் காலத்தில் என்னவெல்லாம் அட்டூழியம் செய்தான் தெரியுமா? அவனுக்கு இதுபோதும் என்று நினைத்து சுத்தமற்ற இடத்தில் காரியம் செய்தால், அது செய்பவனுக்கும், யாருக்காக செய்யப்படுகிறதோ அவனுக்கும் கேடு விளைவிக்கும். அவர்கள் நரகத்தையே அடைவர்.

"இறந்தவர்களுக்கு எள் தானம் செய்ய வேண்டும். பகவானாகிய என் வியர்வையில் இருந்து எள் உற்பத்தியாகிறது. கருப்பு, வெள்ளை ஆகிய இரு ரகங்கள் இதில் உண்டு. இதில் கருப்பு எள்ளை காரியத்திற்கும், வெள்ளை எள்ளை தானம் கொடுக்கவும் பயன்படுத்தலாம். கருப்பு எள் கொடுத்தால் அதிக பலன் உண்டாகும்.

"தர்ப்பைப் புல்லை முடிச்சு போட்டு மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். இந்தப் புல்லின் ஓரங்களில் பிரம்மாவும், சிவனும் உள்ளனர். நடுவில் நாராயணனான நான் இருக்கிறேன். பிராமணர், மந்திரம், தர்ப்பை, அக்னி, துளசி ஆகியவற்றிற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது, இதை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். ஒருவருக்கு பயன்படுத்தியதை இன்னொருவருக்கு பயன்படுத்தினாலும் தவறில்லை!' என்றார். இந்த முறைப்படி தீர்த்தக் கரைகளுக்குச் சென்று தர்ப்பணம் செய்து வர வேண்டும். தர்ப்பணம் செய்ய நான்கு சிறந்த ஆறுகள் உள்ளதாகவும் கூறியுள்ளார் பகவான் கிருஷ்ணன். அவை கங்கை, யமுனை. காவிரி, தாமிரபரணி.

கடற்கரைகளில் தர்ப்பணம் செய்வது இன்னும் மேலானது. காரணம், கடலில் தான் உலகிலுள்ள அத்தனை நதிகளும் கலக்கின்றன. எனவே, இது மிகப்பெரிய பலனைத் தரும். தர்ப்பணம் செய்வதால் நமக்கு மட்டுமின்றி, இறந்து போன நம் முன்னோர் செய்த பாவங்களும் நீங்குகின்றன என்பதும், வருங்கால வாரிசுகள் சுகமான வாழ்வைப் பெறுவர் என்பதும் நம்பிக்கை.

யாழ் கள நிர்வாகம் ஆன்மீகத்துக்கு ஒரு பகுதியை தொடங்கினால் என்ன?[/quote

என்னுடைய பதில் என்னவென்றால் சுண்டல் சுண்டல் வாங்குவது கேவலம் தான்

:wink: :wink: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதான் நான் கோயில்ல வாங்கிறேல்ல........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்லி கடலை தான் போடுறனான் சீ வாங்கிறனான்...

அதான் நான் கோயில்ல வாங்கிறேல்ல........

அது ஊருக்கே தெறிந்த விசயம் தானே

:lol::lol:

ஒன்லி கடலை தான் போடுறனான் சீ வாங்கிறனான்...

உங்களை நீங்கள் யாரிட்ட போட்டீங்க

:?: :?:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ கொயில் உண்டியல்ல என்ன நக்கலா?

ஆ கொயில் உண்டியல்ல என்ன நக்கலா?

உண்டியலில போட்டது எல்லாம் கோவில் நிருவாகத்துக்கு தான் சொந்தம் அப்ப நீங்கள்

:wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகனுக்கு

முருகனுக்கு

முருகனுக்கோ முருகன் கோவிலிற்கு வார ஆட்களிடமோ

:lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகனுக்கோ முருகன் கோவிலிற்கு வார ஆட்களிடமோ

:lol::lol::lol:

:oops: :oops: :lol:

:oops: :oops: :lol:

என்ன சிரிப்பு வேண்டி இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.