Jump to content

புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்


Recommended Posts

என்னவளே அடி என்னவளே' பாடலுக்கு புல்லாங்குழல் வாசித்த கலைஞர்

 

காதலியின் வருகைக்காக காதலன் காத்திருக்கின்றான். நேரம் போனதே தவிர அவள் வரவில்லை. வேதனையிலும் விரக்தியிலும் பாடுகிறான். அவ்வேளையில் தனது மதம் குடும்பம் சுற்றார் எல்லாவற்றையும் விட தனது காதல்தான் முக்கியம் என முடிவெடுத்த காதலி ஒருவாறாக காதலன் குறிப்பிட்ட இடத்துக்கு ஓடிவருகிறாள். அதுவரை ஹீரோ பாடுவதையே காட்டிவந்த கெமரா அப்போதுதான் முதன் முதலாக ஓடிவரும் காதலியைக் காட்டுகிறது. அதற்கு பின்னணியாக ஒற்றைப் புல்லாங்குழல் 1;34 நிமிடத்தில் இருந்து 2:00 நிமிடம் வரை ஓங்கி ஒலிக்கிறது. அந்த ஒலியில் காதலின் தவிப்பு, காதலனின் வேதனை எல்லாவற்ரையும் மொழிதெரியாதவரால் கூட சொல்லமுடியும் அதைத் தந்தவர் நவீன் குமார். பாடல்: உயிரே.. வந்து என்னோடு கலந்துவிடு... படம்: பம்பாய்.

 

 

 
 
பி.எம்.கே.நவீன் குமார் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் 1. 1, 1965 ஆம் திகதி பிறந்தவர். தனது 13ஆவது வயதிலேயே எவரிடமும் பயிலாமல் கேள்வி ஞானத்தில் புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கிய இவர் தப்லா கலைஞரான இவரது அண்ணன் ஜோதியுடன் சேர்ந்து, அண்னன் தப்லா வாசித்த உள்ளூர் இசைக்குழுக்களுக்கு புல்லாங்குழல் வாசிக்கத்தொடங்கினார். இருவரும் சிறிது காலத்திலேயே விசாகப்பட்டின வானொலியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்..
 
15naveenkumar1.jpg
 
1983 இல் தமிழ் நாட்டுக்கு சென்றால்தான் சினிமாவுலகில் முன்னணிக்கு வரமுடியும் என முடிவெடுத்து தனது தந்தையுடனும் அண்ணனுடனும் தமிழ்நாட்டுக்கு வந்து இசைஞானியை சந்தித்து அவரது படங்களுக்கு இசைக்கத் தொடங்கினார். அதில் குறிப்பிடக் கூடியது மைடியர் குட்டிச் சாத்தான்.
 
நவீன் என்ற சாதாரண புல்லாங்குழல் கலைஞரை உலகுக்கு அடையாளம் காட்டியவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் 1992 இல் வெளிவந்த முதல் படமான ரோஜாவிலேயே நவீனின் காலம், ராஜ்ஜியம் தொடங்கியது என்றால் மிகையல்ல. அதில் வெளிவந்து எல்லோரையும் கவர்ந்த மிகப் பிரபலமான சின்னச் சின்ன ஆசை என்ற பாட்டின் ஆரம்ப இசையை Pan flute என்ற புல்லாங்குழல் மூலம் வாசித்துள்ளார் என எனது சிற்றறிவுக்கு தோன்றுகிறது.
 
அதே புல்லாங்குழலை பாட்டின் இடையிடையேயும் மின்மினியின் குரலுக்கு பின்னணியாக பாவித்துள்ளார்.
 
 
ஆனால் இடையிசையில் சாதாரண புல்லாங்குழலையே உபயோகித்துள்ளார். (இந்த Pan flute இனைத்தான் எம்.எஸ்.விஸ்வநாதன், பயணம் என்ற படத்தில் இடம்பெற்ற பயணம்..பயணம்.. என்ற பாட்டில் அதன் முதலாவது இடையிசையிலும் பாவித்துள்ளார்.)
 
அதே படத்தின் 'காதல் ரோஜாவே' என்ற எஸ்.பி.பி யின் அற்புதமான மெலடியின் ஆரம்ப இசையில் சுஜாதாவின் ஹம்மிங்கிற்குப் பின்னே சேர்ந்து செல்கிறது இவரது வேதனை இழையோடும் புல்லாங்குழல்.
 
இதில் முதலாவது இடையிசையைக் கவனியுங்கள்... இவரின் கற்பனை வளம் அப்போதே தொடங்கிவிட்டதைப் புரிந்து கொள்ளலாம். 5:08 நிமிட நீளம் கொண்ட இந்தப் பாட்டின் முதலாவது இடையிசையில் 1:27ஆவது நிமிடத்தில் இவரின் புல்லாங்குழல் உள்நுழைந்து 3 செக்கன்கள் செல்கின்றது.
 
இது மேற்கத்தேய புல்லாங்குழல் அல்லது அமைப்பில்பெரிய புல்லாங்குழலின் ஒலியைக் கொண்டிருக்கிறது. அது தனன..தனன..தனன..தனன.. என்ற கேள்வியை மூன்று செக்கனில் எழுப்பவும் அதற்குப் பதில் சொல்லுமாப் போல் இன்னொரு இசையைக் கொண்ட புல்லாங்குழல் தனனா....ந...தானா.ந. என்று பதிலளிக்கிறது. இது இரு தடவைகள் நடக்கின்றது. அவைகளின் உரையாடல் முடிந்ததும் கோரசும் பின்னணி இசையும் மீண்டும் தொடர்வதைக் கேட்டு ரசியுங்கள் அற்புதமான, புல்லாங்குழல்கலின் மொழியது.
 
அதற்குப்பின் ரஹ்மானின் ஆஸ்தான புல்லாங்குழல் கலைஞராகவே ஆகிப்போன நவீன் அவரின் எல்லாப் பாடல்களுக்குமே பணிபுரிந்துள்ளார்.
 
சாதாரண கலைஞராக தென்னிந்திய இசை உலகிற்கு மட்டுமே தெரிந்திருந்த அவரை, உலகெல்லாவற்ரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர் ரஹ்மான். பம்பாய் படத்தில் இடம்பெற்ற தீம் (Theme)  இசையில் இவரின் புல்லாங்குழல் வகித்த முக்கிய பங்கானது, இவர் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் என்பதை உலகுக்கு நிரூபித்தது.
 
 
இந்தத் தீம் இசை உருவாக்கத்தைப் பற்றி நவீன் நினைவு கூரும் போது, ரஹ்மான் தன்னிடம் பம்பாய் தீமைப் பற்றி கூறும்போது 'மழைத்துளியொன்று இலையில் பட்டு பின் அந்த இலையிலிருந்து மெதுவாக நிலத்தில் வீழ்வதைப்போன்றதான உணர்வைக் கொண்ட இசை வேண்டும்' என்று  சொல்லியே அந்த இசையின் உருவாக்கத்துக்கு வழிவகுத்ததாகக் கூறினார். ஏ,ஆர். ரஹ்மானின் இசை ஆழத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்தச் சம்பவம் நல்லதொரு எடுத்துக் காட்டு.
 
15_naveenkumar5.jpg
 
காதலனில் இடம்பெற்ற என்னவளே..அடி என்னவளே என்ற தேசிய விருதுப் பாடலை தொடக்கியதும் இவரின் Pan flute  தான் . இரண்டாவது இடையிசையில் இவர் வாசித்த வேகத்துக்கு பிரபு தேவா சேஷ்டைகள் செய்து அருமையான இவரின் வாசிப்பைக் கொச்சைப் படுத்தியதைப் பார்த்து கோபப் பட்டவர்களில் நானும் ஒருவன். அதில் குரங்கின் கையில் அகப் பட்ட பூமாலையைப் போன்று காட்சி அமைக்கப்பட்டதானது இவரின் இசைக் கற்பனை இயக்குனராலும், நடிகராலும் உணரப்படவில்லை என்பதைக் காட்டியது.
 
 
 
தொடர்ந்து ஜீன்ஸ் என்ற படத்தில் உலக அழகியைப் புகழ்ந்தது நவீனின் புல்லாங்குழல். அதில் பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்ற உலக அதிசயங்கள் எல்லாவற்றையும் காட்டிய பாடலை அழகாக அழகிய ஐஸ்வர்யாராயுடன் ஆரம்பித்து வைத்தது நவீனின் சீன புல்லாங்குழல்.
 
இந்தப் பாடல் சீனப் பெருஞ்சுவரில் இருந்து ஆரம்பிப்பதால் அதற்கு சீன புல்லாங்குழலைப் பாவித்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். இடையிசையில் அழகாக ஒலிக்கும் புல்லாங்குழலை ஐஸ்வர்யா ராயின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஷங்கர் படமாக்கும் போது கவனிக்காமல் விட்டுவிட்டாரோ என்ற ஆதங்கம் எனக்குண்டு.
 
ரஹ்மானின் எல்லாப் பாடல்களிலுமே இவரின் பங்கிருப்பதால் எல்லாவற்றையும் பட்டியலிட முடியாது. கண்டு கொண்டேன்..கண்டு கொண்டேனில் ஷங்கர் மகாதேவனுக்கு விருதை அள்ளிக் கொடுத்த 'சந்தனத் தென்றலை...' என்ற பாட்டில் இவரின் வாசிப்பு சோகத்தின் உச்சம் என்றால் 'அலைபாயுதேயில்' இடம் பெற்ற 'பச்சை நிறமே..பச்சை நிறமே' அழகிய, மனதுக்குப் புத்துணர்ச்சியூட்டும் தொடக்கம். இளசுகளின் றிங்ரோன்.
 
ரஹ்மானின் இசை மூளையும் – நவீனின் இசை மூச்சும் கூட்டணியாகச் சேர்ந்து கட்டிய இசைக் கோட்டைகள் மிகப் பலமானவை அவர்களின் வெற்றிக் கூட்டணியைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
 
ரஹ்மானைத் தவிர்த்து இவர் ஹரீஷ் ஜெயராஜ், தேவா போன்றோருக்கும் வாசித்திருக்கிறார். ஹரிஷின் மாஸ்டர் பீஸான 'வசீகரா...' என்ற 'மின்னலே' பாட்டின் தொடக்க இசையை வாசித்தவர் இவர்தான். அதே படத்தின் சூப்பர் ஹிட்டான 'ஏ..அழகியதீயே..' என்ற பாட்டின் இளமைத்துள்ளலை மாதவனுடன் சேர்ந்து ஆரம்ப இசையில் புல்லாங்குழலில் கொண்டு வந்தவரும் சாட்சாத் இவரேதான்.
 
இவர் புல்லாங்குழல்களை வாசிப்பதுடன் நிறுத்துவதில்லை. அவற்றை மென்மேலும் நவீனப்படுத்துவதிலும், புதுப் புது உத்திகளை அவற்றுள் புகுத்தி புல்லாங்குழல் இசையின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். இவரின் தேடல்கள் மிகுந்த வெற்றியைக் கொடுத்துள்ளதைப் பற்றிய விளக்கம் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. http://www.flutenaveen.com எனும் இணையத்துக்குப் போய் Technique என்பதைக் கிளிக் பண்ணிப் படியுங்கள், நவீனின் இன்னொரு பரிமாணம் அது.
 
இவரின் தனி நிகழ்ச்சிகள் ஐரோப்பா, அமெரிக்காவில் அனேக நாடுகளில் நடப்பதுண்டு. முதல்நாள் நெதர்லாந்தில் நடக்கும் நிகழ்ச்சி அடுத்த நாள் பாரிஸில் நடப்பதுண்டு. நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் போது 5 , 6 கிழமைகள் பயணித்தே கச்சேரி செய்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். 2010 இல் ; 'ஏ.ஆர். ரஹ்மான் இன் லண்டன'; நிகழ்ச்சியில்  The London Philharmonic Orchestra உடன் சேர்ந்து இவர் வாசித்தது கண்களுக்கும் காதுகளுக்கும் கிடைத்த பரிசு.
 
 
சில வருடங்களுக்கு முன் இவரின் குடும்பத்தவரின் பேட்டியொன்றப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. அதில் இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு நிகழ்ச்சிகளுக்கு போய் வரும் போது, விதம் விதமான புல்லாங்குழல்களை வாங்கி வருவாரென்றும், அவற்றைத்தவிர வேறு ஒன்றுமே ஒருவருக்கும் வாங்கிவருவதில்லையென்றும் குடும்பத்தார் செல்லமாக கோபித்துக் கொண்டபோது ஒன்று மட்டும் விளங்கியது.
 
இந்த அற்புதக் கலைஞனுக்குத் தெரிந்தததும் விரும்புவதும் புல்லாங்குழல் ஒன்றே. பலரின் மனதை இலகுவாக்கி புத்துணர்ச்சியை, நாடுகடந்து, தேசம் கடந்து செய்யும் இவரின் இசைப்பயணம் தொடர வாழ்த்துவோம்.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இதை உக்ரேன் போர் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சொல்லிக்கொண்டு வருகின்றேன். அப்போது என் மீது கோபப்பட்டவர்கள் தான் அதிகம். அண்மையில் ஜேர்மனியும் மற்றும் ஒரு சில நாடுகளும் உக்ரேனுக்கான பண உதவியை நிறுத்தியிருந்தனர். இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருங்கள். உக்ரேனைப்பற்றிய நல்ல செய்திகள் வரும். 😂
    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.