Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திபெத் பண்பாடு: சில ரகசிய பக்கங்கள்

Featured Replies

depeth%205988s.jpg

 

பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு திபெத். திபெத் பண்பாடு நடு ஆசியாவின் மலைப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் வாழும் மக்களின் பண்பாடு ஆகும். திபெத் பண்பாடு என்பது திபெத்திய பெளத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள், இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடு என உலக இனவரைவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள். திபெத் பண்பாட்டின் ஒரு சின்னமாக வெளி உலகால் நன்கு அறியப்பட்ட முகம் திபெத்திய பெளத்த சமயத்தின் தலைவராகக் கருதப்படும் பாரம்பரிய தலாய் லாமா ஆவார். ஆனால் பேராசை கொண்ட சீனா, இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் இருந்ததால், அதனை தனதாக்கிக் கொள்வதன் மூலம், இந்தியாவை, தனது தலைக்கு கீழ் இருக்கும் நாடாக உலகைக் கருத வைப்பதும், அதன்முலம் சீனாவை உலகின் இரண்டாம் பெரிய வல்லரசாக நிறுவதும்தான் நோக்கமாக இருந்தது. இதனால் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது.
 
ஆக்கிரமிப்பும் கலாச்சார அழிப்பும்
 
தற்போது திபெத்தின் பெரும்பகுதி சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கத்தில் காலனி நாடாக இருந்து வருகிறது. 1950களில் திபெத் நிலப்பரப்பை சீனப் பொதுவுடமை அரச ராணுவம் ஆக்கிரமித்தபோது, அப்போதைய திபெத் சமய அரசியல் தலைமையும் குறிப்பிடத்தக்க பொதுமக்களும் அகதிகளாக இந்தியா வந்தனர். இந்திய அரசு அவர்களுக்கு வாழவும், அவர்களுடைய சமய பண்பாட்டைப் பேணவும் வசதி செய்து கொடுத்தது. இன்றும் திபெத் சமூகத்தின் தலைவராகக் கொள்ளப்படும் தலாய் லாமா நாடு கடந்த நிலையில் இந்தியாவிலேயே வாழ்கின்றார். திபெத்துக்கு என்று நாடு கடந்த அரசு ஒன்றும் இயங்கி வருகிறது. ஆக்கிரமிப்பு செய்த திபெத்தில், அதன் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அழித்து, சீனக் கலாச்சாரத்தை புகுத்தி வருகிறது சீனா. திபெத்துக்கு இந்தியா வலுவாக ஆதரவுக்கரம் அளித்ததன் பின்னணியில் கடும்கோபம் கொண்ட சீனா, இந்தியாவின் கால் மாட்டில் இருக்கும் தீவு நாடாகிய இலங்கையில் நடந்துவந்த ஆயுதமேந்திய தமிழின விடுதலைப் போராட்டத்தை நசுக்க ராணுவ உதவி, தளபாட உதவி உள்ளிட்ட வசதிகளை அளித்துவிட்டு, அதற்கு பிரதிபலனாக இலங்கையை, இந்தியாவுக்கு எதிரான ராணுவக் கேந்திரமாக மாற்றிக்கொண்டது.
 
இந்து மதச் சின்னங்கள் தோற்றம் பெற்றது எங்கே?
 
இது ஒருபுறம் இருக்க இந்து மதத்தின் தோற்றமே திபெத்திலிருந்து தோன்றியதுதான் என்ற நாசிக்களின் கண்டுபிடிப்பை, மறைக்க படாதபாடு படுகிறது சீனா என்கிறார்கள் ஆரியர்களின் இந்திய வருகையை புதிய கோணத்தில் ஆய்வுசெய்துவரும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள். திபெத்தை வாழிடமாகக் கொண்ட மக்களையும் மேற்கில் நடுவண் ஆசியாவிலிருந்து மியான்மார், சீனா வரையில் பரந்து வாழும் மக்களையுமே ‘திபெத்திய மக்கள்’(Tibetan people) என்று இனவரைவியலாளர்கள் குறிக்கிறார்கள். திபெத் என்பது மொழியைக் குறிக்கும். குறைந்தது நான்கைந்து இனங்கள் அந்த மொழியைப் பேசுகின்றன. அவர்கள் எல்லோரும் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களும் அல்ல. குறிப்பிட்ட அளவு முஸ்லிம்களும், 'பொன்' (Bon) எனும் பழமையான மதத்தை பின்பற்றுவோரும் சிறுபான்மையாக உள்ளனர். இனத்துவ அடிப்படையில் பார்த்தால், திபெத்தியர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். பெரும்பான்மை ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள், வெள்ளை நிறமாக இருப்பர். இவர்களுக்கும், சீனர்களுக்கும் (பெரும்பான்மை ஹான் இனத்தவர்கள்) இடையில் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினமானது. அதே நேரம், அந்த நாட்டில் காணப்படும் பழுப்பு நிற மக்களை மட்டுமே திபெத்திய இனமாக வெளியுலகம் தவறாக கருதிக் கொண்டிருக்கிறது. திபெத்தியர்கள், மங்கோலிய இனத்திற்கும், ஐரோப்பிய இனத்திற்கும் இடைப்பட்டவர்கள். அதாவது, வெள்ளை இனத்தின் பரிணாம மாற்றம் அங்கே தான் நடைபெற்றது என்பது நாஜிகளின் நம்பிக்கை.
 
திபெத்திய ஆட்சியாளர்களும், ஜெர்மனியில் இருந்து வருகை தந்த நாஜி விருந்தினர்களை இரு கரம் நீட்டி வரவேற்று உபசரித்தனர். (1926 இற்கும் 1940இற்கும் இடையில் பல ஜேர்மனிய ஆராய்ச்சியாளர்கள் திபெத் மீது ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களில் ஒருவர் ஹைன்ரிஷ் எனும் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் குறிப்பிடத்தக்கவர். இவர் ஹிட்லரின் பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய நாசிக் கட்சி உறுப்பினர்) நாஜிகளின் இனங்களை பகுப்பாய்வு செய்யும் ஆராய்ச்சிகளுக்கும் இடம் கொடுத்தனர். இந்த விபரம் எல்லாம் வெளியில் தெரிந்தால், தலாய் லாமாக்களின் முகத்திரை கிழிந்து விடும் என்பதால், வரலாறு அவற்றை இருட்டடிப்பு செய்து விட்டது. அது ஒரு புறமிருக்க, நாஜிகளிற்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்தனவோ இல்லையோ, ஸ்வாஸ்திக் சின்னம் பற்றிய உண்மைகள் தெளிவாகின. திபெத்தில், இந்திய எல்லையோராமாக உள்ள இமய மலைத் தொடர்கள் ஸ்வாஸ்திகா வடிவத்தில் காணப்படுகின்றன. அதனை பண்டைய 'இந்துக்கள்' அதாவது ஆரியர்கள் தங்களது புனிதச் சின்னமாக கருதியிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? வெவ்வேறு திசைகளை நோக்கிய ஆரிய இனங்களின் புலம்பெயர்வு அங்கிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டும் என்பது முக்கால் கிணறு தாண்டியா நாஜிக்களின் ஆராய்ச்சி முடிவு.
 
திபேத்தில் இமயமலையை 'தாஜிக் ஓல்மொ லுங்'(Tagzig Olmo Lung Ring) என்ற பெயரால் அழைக்கிறார்கள். இந்தப் பெயரைக் கொண்ட மலைத் தொடரானது, கிழக்கே திபெத்திலும், மேற்கே தஜிகிஸ்தான் வரையிலும் நீண்டுள்ளது. மலையின் பெயரில் வரும் தாஜிக் என்ற சொல்லானது, இன்றைய தாஜிகிஸ்தான் நாட்டின் பெயருக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. தாஜிக்கியர்கள் பாரசீக (ஈரானிய) மொழி பேசும் மக்கள். அதாவது தாஜீக்கும், பார்சியும் ஒன்றுக்கொன்று தொடர்பான மொழிகள். நாகரிக வளர்ச்சி காரணமாக, நவீன ஈரான் நமக்கு நன்கு பரிச்சயமாகியுள்ளது. ஆனால், பார்சி மொழி பேசும் ஈரானியரின் மூதாதையர் தாஜிகிஸ்தானில் இருந்து வந்திருப்பார்கள், என்று சரித்திர ஆசிரியர்கள் நம்புகின்றனர். அநேகமாக, துருக்கிய மொழி பேசும் இனங்களுக்கும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் இனங்களுக்குமிடயிலான பிரிவினையும் அங்கே தோன்றியிருக்க வேண்டும்.
 
தாஜிக் ஓல்மோ லுங்
 
தாஜிக் ஒல்மோ லுங் ரிங் மலைத் தொடரை முழுமையாகப் பார்த்தால், எண் கோண வடிவில் அமைந்த தாமரைப் பூ போன்றிருக்கும். அதன் மையப் பகுதி ஸ்வாஸ்திக் என்று அழைக்கப்படுகின்றது. திபெத் பொன் மத ஸ்தாபகர், சொர்க்கத்தில் இருந்து நேராக, அந்த மலையில் தான் வந்திறங்கியதாக, பொன் மதத்தவர்கள் நம்புகின்றனர். அந்த மலைப் பகுதியின் மேலே உள்ள ஆகாயம், தர்ம சக்கரம் போன்றிருக்கும். இந்து மத நம்பிக்கையாளர்கள் புனிதமாகக் கருதும், 'ஸ்வாஸ்திக்', 'தாமரை மலர்', 'தர்ம சக்கரம்’ போன்ற குறியீடுகள் திபெத்தில்தான் தோன்றின. இந்த உண்மை பெரும்பாலான இந்துக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. 'ஓர் இனத்தின் பூர்வீகத்துடன் சம்பந்தப்பட்ட குறியீடுகள்' இவ்வாறு தான் மதச் சின்னங்களாக மாறின.
 
இன்றைய ஆய்வு
 
இன்று சீனாவின் ஆக்கிரமிப்பில் மதச் சுதந்திரத்தை இழந்து வாழ்ந்து வருகிறார்கள் திபெத்தியர்கள் திபெத் பீடபூமியில் உயரமான இடங்களில் மனிதர்கள் இயல்பாக எப்படி வாழ்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருந்தது. உயரமான இடங்களில் உயிர்வளி(ஆக்சிஜன்) மிகவும் குறைவாக இருக்கும். அத்துடன் அங்கு புவி ஈர்ப்புத்தன்மையும் குறைவாக இருக்கும். காற்றில் மனிதர்கள் எடையும் குறைவாக இருக்கும். ஆனால் இங்கு வாழும் திபெத்தியர்கள் எவ்வித சிரமமும் இன்றி இயல்பாக வாழ்கின்றனர்.
 
அவர்களுடைய முன்னோர்களின் மரபணு வழியாக இது சாத்தியமாகிறது என்று அண்மைக்கால மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன. திபெத்தியர்களிடம் காணப்படும் மரபணுவில் உள்ள டி.என்.ஏ சைபீரிய குகைகளில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த டெனிசோவின்கள் என்று அழைக்கப்படும் குகை மனிதர்களிடம் காணப்பட்டதாக அண்மையில் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். டெனிசோவின்களின் சில டி.என்.ஏ தற்போதைய நவீன மக்களிடமும் காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள் . வெகுநாட்களுக்கு முன் இன்றைய மனித இனத்தின் முன்னோடிகளும், டெனிசோவின்களும் கலந்து வாழ்ந்து வந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் உயரிய இடங்களில் வாழ்வதற்கு உதவி புரியும் டி.என்.ஏ. டெனிசோவின்களிடம், திபெத்தியர்களிடமும் மட்டும் காணப்படுகிறது. டெனிசோவின்களின் பல இதர டி.என்.ஏ காணப்படும் நவீன மனிதர்களிடம் இந்த குறிப்பிட்ட டி.என்.ஏ காணப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வின் மூலம் ஆரியர்களுக்கும் திபெத்தியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், நடுவண் ஆசியாவிலிருந்து வந்த நாடோடி இனத்தவர்களான ஆரியர்கள், திபேத்தியர்களின் கலாசாரத்தை தழுவிக்கொண்டார்கள் என்றும் வரையறுக்கிறார்கள். ஆனால் ஆரியர்கள் சிந்து நதியின் தீரத்திலும் பின்னர் கங்கை நதியின் தீரத்துக்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தபோது திபெத்திய பாரம்பரிய மதச்சின்னங்களை தனதாக்கி கொண்டதுடன், தங்கள் மூதாதைய வாழ்விடங்களுக்கும் அந்த சின்னங்களை பரப்பினார்கள். அதுவே பின்னால் நாஜிக்களின் சின்னமானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆரியர்கள் தங்கள் போர்த் திறமையால், சிந்து தீரத்தில் வாழ்ந்து வந்த திராவிட மக்களை தெற்கே துரத்தியடித்ததன் விளைவாகவே, பின்னாளில் திராவிட இனம் இந்தியாவின் தென்பகுதியில் ஒரு தொகுப்பாக வாழ ஆரம்பித்தது என்பதும் நவீன ஆய்வின் முடிவுகள் ஆகும்.
 
'மலரும்' இணையத்துக்காக யதுகுலன் -
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.