Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொலைக்காட்சியில் சூடாக விவாதித்த ஆளும் தரப்பு மாகாண முதலமைச்சரும் எதிரணி எம்.பியும் இடைவேளையில் மோதினர்

Featured Replies

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கடுமையாக வாக்குவாதப்பட்ட ஆளும் தரப்பு மாகாண முதலமைச்சர் ஒருவரும், எதிர்க்கட்சி எம்.பி. ஒருவரும் அந்த விவாதத்துக்கு இடையே, அந்த நேரடி ஒளிபரப்பு விளம்பரங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த போது நேரடியாகக் கைகலப்பில் ஈடுபட்டு மோதிக் கொண்டனர். அதனால் அந்த விவாதம் அத்தோடு இடைநிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒலிபரப்பு ஒன்றின் போது இடம்பெற்றது.
 
வடமேற்கு மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகராவும், ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட எம்.பியான ஹரீன் பெர்னாண்டோவுமே இப்படி மோதிக் கொண்டனர். இவர்களில் தயாசிறி சேனநாயக்கா இதுவரை ஐ.தே.கட்சியின் எம்.பியாக இருந்தவர். பின்னர் அந்தப் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு ஆளும் தரப்பின் சார்பில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி மாகாண முதலமைச்சரானவர். ஹரீன் பெர்னாண்டோ பதுளை மாவட்டத்தின் தற்போதைய ஐ.தே.கட்சி எம்.பியாவர். விரைவில் நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக தமது தற்போதைய எம்.பி.பதவியை இராஜினாமாச் செய்வார் என எதிர்பார்ப்படுபவர். இவர்கள் இருவரோடு ஆளும் தரப்பின் சார்பில் அருந்திக்க பெர்னாண்டோ எம்.பியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜே.வி.பியின் எம்.பியான சுனில் ஹந்துனெத்தியும் இந்த விவாதத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
 
முதலமைச்சர் ஜயசேகராவுக்கும், எதிரணி எம்.பி.ஹரீன் பெர்னாண்டோவுக்கும் இடையில் தொலைக்காட்சி விவாதத்தின்போது வாக்குவாதம் சூடாக இடம்பெற்றது. ஜனாதிபதியின் மகனான நாமல் ராஜபக்‌ஷ எம்.பிக்கும், ஹரீன் பெர்னாண்டோ எம்.பிக்கும் இடையிலான நெருக்கம் குறித்து முதலமைச்சர் ஜெயசேகரா குத்திக்காட்டிப் பேசினார். இரவு முழுவதும் நாமலுடன் சேர்ந்து ஹரீன் பெர்னாண்டோ குடிக்கிறார் என ஜெயசேகரா குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்ட ஹரீன் பெர்னாண்டோ அப்படியானால் நாமல் ராஜபக்‌ஷ மது அருந்துபவர் என்று கூறுகின்றீர்களா என முதலமைச்சரைப் பார்த்துக் கோட்டார். அவர் அதற்கு 'இல்லை' என்று பதிலளித்தார். அந்தச் சமயத்தில் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு இடைவெளிக்காக நிறுத்தப்பட்டது. அச்சமயமே கூச்சலுடன் குழப்பமும் இழுபறியும் ஏற்பட்டன. ஹரீன் எம்.பியும் விவாதத்தின் இணைப்பாளரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர். தயாசேகரா இந்த இழுபறியின்போது தன்னைக் கடித்துவிட்டார் என ஹரீன் எம்.பி. கூறினார். இந்த மோதலை அடுத்து அந்தத் தொலைக்காட்சி விவாதம் அத்துடன் நிறுத்தப்பட்டது. -
 
 
http://malarum.com/article/tam/2014/07/09/3515/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.html#sthash.1Gyi1u55.dpuf
 
 

"தயாசேகரா இந்த இழுபறியின்போது தன்னைக் கடித்துவிட்டார் என ஹரீன் எம்.பி. கூறினார்."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.