Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிய திட்டத்தின் ஒரு பகுதியே ஆளுநரின் மீள்நியமனம் - அம்பலப்படுத்துகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Featured Replies

vikki11_CI.jpg

இராணுவப் பின்னணியைக் கொண்ட ஜி.ஏ.சந்திரசிறியையே வடமாகாண ஆளுநராக ஜனாதிபதி மீண்டும் நியமித்திருப்பது பாரிய திட்டம் ஒன்றின் ஒரு பகுதியாக உள்ளது என்றே தான் கருதுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். இதனால் தமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியவர்களாக தாம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையைப் புறக்கணித்து, வழங்கிய வாக்குறுதியை மீறும் வகையில் சந்திரசிறி மீண்டும் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என கேட்டபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது

'பாரிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதனை நான் பார்க்கிறேன். வடபகுதியில் பாரியளவு காணி இராணுவத்துக்கு வழங்குமாறு கோரப்பட்டிருப்பது தற்செயலான ஒன்றல்ல. வவுனியாவில் இராணுவத்தின் உதவியுடன் குடியேற்றங்கள் இடம்பெறுவது தற்செயலானதல்ல. அவர்களுடைய உள்நோக்கங்களைப் புரிந்துகொள்ளாத பலர் அரசாங்கத்துக்கும் ஆயுதப்படைகளுக்கும் உதவுகின்றார்கள்.

இப்போது நாம் எம்முடைய தந்திரோபாயங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியவர்களாகவுள்ளோம். இதனால், அடுத்த வாரமளவில் நாம் யாழ்ப்பாணத்தில் சந்தித்து நிலைமைகளை ஆராயவுள்ளோம்.

ஆளுநருடன் நாம் பழக்கப்பட்டுள்ளோம். அது பிரச்சினையல்ல. ஆனால், என்ன காரணத்துக்காக சந்திர சிறியையே ஆளுநராக ஜனாதிபதி மீண்டும் நியமித்துள்ளார் என்பதுதான் முக்கியமானது' இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஆளுநரின் மீள்நியமனம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி.ஆகியோருடனும் ஆலோசனை நடத்தியுள்ளார். அடுத்தவாரம் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள் யாழ்ப்பாணத்தில் சந்தித்து அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளார்கள்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109325/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.