Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப் பந்தைக் கைப்பற்ற முயன்ற ஜேர்மனி உதை பந்துக் கிண்ணத்தைக் கைப்பற்றுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Brasill-football-2014-article-200.jpg

அடல்வ் ஹிட்லர் காலத்தில் ஜேர்மனி உலகையே உலுக்கிக் கொண்டிருந்தது. போர்க் காலத்தில் . அது ஒரே நாளில் ஹோலாந்தைக் கைப்பற்றியது. போர்ப் பிரகடனத்தை கேட்டதுமே, போரிற்குப் போகாமலே போலந்து ஜேர்மனியிடம் சரன் அடைந்தது. இங்கிலாந்து கூட ஜேர்மனிக்கு பயந்து தன்னைத் தயார் படுத்துவதற்கான நேரத்தைப் பெற பேச்சுவார்த்தையை நடாத்தியே தப்பியது. குடையை ஊன்றியவாறு நடந்த அந்த இங்கிலாந்தின் பிரதமர் ஹிட்லரிற்கு ஜனநாயக உபதேசம் கூடச் செய்து பார்த்தார்.

  

இன்று ஜேர்மனி என்றவுடன் ஹிட்லரூடாகவே உலகம் ஜேர்மனியைப் பாரக்கிறது. அதன் இதர பண்டைய அதீத ஆற்றல்களையும் சிறப்புக்களையும் உலகு பார்க்கத் தவறி விடுகிறது. திறமையும் பலமுமுள்ள ஜேர்மனியை மட்டந் தட்ட உலகே ஹிட்லரையே பாவிக்கிறதெனலாம். முழு உலகினது கவனத்தை ஈர்ந்தவாறு இவ்வாண்டு நடக்கும் உலக உதைப்பந்தாட்டத்தின் பிறேசிலுடனான ஆட்டம் பற்றி முகநுாலில் ஒருவர் ஜேர்மனி இராணுவப் பாணியில் ஆடியதாக எழுதியிருந்தார். ஜேர்மனி வீரர்களினது உக்கிரமான துரிதமான ஆட்டத்தை விளக்க அவர் ஹிட்லரை நாடியிருக்க வேண்டும்.

ஆனால் உண்மையில் நாஜிக் கூட்டத்தினரை தவிர்த்துப் பார்த்தால் ஜேர்மனியரகள் ஆழமாகச் சிந்திக்கும் தத்துவார்த்தமானவர்கள் என்பதே உண்மை.

மேற்கில் தத்துவாசிரியர்கள் பலர் துலங்கிய பண்டைய மண் ஜேர்மனி. தமிழைப் போல் பல மொழிகளிற்கும் தாயானதும் ஜேர்மன் மொழியே. கிழக்கில் இந்தியா சீனா போல தத்துவத்திற்கு கிறீக் தேசத்திற்கு அடுத்தாற் போல் மேற்கில் விளங்கியது ஜேர்மனி. சமூக விஞ்ஞானி கார்ல் மார்க்ஸ் ,இயற்கை விஞ்ஞான அதிமேதை அயின்ஸ்ரன் போன்ற பலரும் கற்ற இடம் ஜேர்மனி..

ஒவ்வொரு இனத்திற்கும் வெவ்வேறான சிந்திக்கும் பாணியிருக்கும். இது அந்தந்தத் தேசத்தின் பாராம்பரியத்திலும் கலாச்சாரம் பண்பாட்டையும் சார்ந்திருக்கும். இந்தச் சிந்திப்பு அதன் சந்தரப்ப அணுகுமுறையிலும் விடயங்களை கையாள்வதிலும் வெளிப்படும். விளையாட்டு என்றாலே உதைபந்தாட்டந்தான் என எண்ணும் ஜேர்மனியின் விளையாட்டிலும் , புலனாய்வு பொலிஸ் துறையினரின் நகர்வுகளிவும் இதனை இலகுவாக இனங் காணலாம்.

உதை பந்தாட்டங்கள் நடைபெற்ற போதெல்லாம் , திரு பெக்ஹம் பவர் என்றொரு ஜேர்மன் பயிற்றுனர் சுமார் 90 நிமிடங்கள் கட்டிய கையை அசையாது அங்க அசைவுகளையும் காட்டாது கண்களையும் கறுப்புக் கண்ணாடியால் மறைத்தபடி வென்றாலும் சரி தோற்றாலும் சரி எதுவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாது நிறைகுடமாக மிளிர்ந்த காலம் ஒன்று இருந்தது. ஒரு பலமான வீரனிற்கு கிட்டும் அரிய வாய்ப்பை சுட்டிக் காட்ட பல நாட்டு உதைபந்தாட்ட பயிற்சியாளர்களும் ஓடுவர், ஆடுவர் கத்துவர் இன்னும் என்னென்னவோவெல்லாம் செய்வர். ஆனால் ஜேர்மானிய பயிற்றுனரான திரு பெக்கம்பவரோ அசையவே மாட்டார். பேசவும் மாட்டார்.

அவர் துள்ளுவதும் கிடையாது துவள்வதும் கிடையாது. அமைதியான நதி ஓடமாக தனது காலத்தை கடந்து சென்றவர் . உலகிலேயே தாங்கள் தான் மிகச் சிறந்த இனம் என எண்ணும் ஜேர்மனியர்களே அங்கு மிக அதிகம். அவர்கள் எந்த நாட்டவரிடமும் கையேந்த விரும்புவதில்லை. அவர்களுடைய பொறியியற் துறை போலவே பல்வேறு துறைகளையும் அவர்கள் உலகத் தரத்தில் வைத்துள்ளனர். ஓட்டோ பாண் எனப்படும் அவர்களது மோட்டார்ப் பெருந்தெரு உலகப் பிரசித்தமானது. அதில் அவர்கள் பயனிக்கும் வேகமோ மிக அதிகம். அதற்காக அவர்கள் தங்களிற்னெ சில் நியமங்களை வகுத்தும் உள்ளனர். அன்மையில் ஒரு ஜேர்மனியருடன் வட அமெரிக்காவிலே மிக நீண்ட பெருந்தெருவான 401 இல் பயனித்த போது அவர் கனேடியரிற்கு "கை வேயில்" கார் ஓடத் தெரியாது என அங்கலாய்த்தார்.

வலது புறத்தால் வேகத்துடன் முந்திச் செல்லும் வாகனங்களை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. இடது பக்கத்தால் வெளியேறும் ஒரு வழியைக் கண்ட போது அவர் அதிர்ந்தே போணார். இவ்வாறு பல்வேறு வழிகளிலும் உயர் தரத்தை கொண்டுள்ள ஜேர்மனியர் தங்களை உலகிலேயே முதற் தரமானவர்களாக எண்ணுவதை தவறு என்று கூறி விட முடியாது தான். அதாவது அவர்கள் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணுவதற்கு எதிர்மாறாக உலகத்தார் அவர்களை ஹிட்லரைச் சாட்டாக்கி தாழ்வாக அமிழ்த்துகின்றனர்.எனலாம்.

இருந்தாலும் அவர்களி்ற் சிலர் ஹிட்லர் சரியே என்ற நினைப்புடன் இன்றும் உள்ளனர். சுரிய அஸ்தனமே அற்ற இராச்சியத்தை கொண்டிருந்த ஆங்கிலேயரை அவர்கள் தீவார் (இன்ஜெலர்) என்று நையாண்டி செய்வதுமுண்டு. அவர்கள் இங்கிலாந்தை ஒரு தீவாகவே பார்க்கின்றனர். "அங்கிள்ஸ்" எனப்படும் ஜேர்மானிய இனத்தவர் சென்று குடியேறியதாலேயே �அங்கிள்ஸ�"லாண்ட்" என்பது இங்கிலண்ட் ஆனது வரலாறு. எண்பதுகளில் உதைபந்தாட்டத்தில் இத்தாலியுடன் ஜேர்மனி மோதித் தோற்ற போது , அடச் சீ போயும் போயும் இந்த இத்தாலியரிடம் தோற்றோ என்ற அபிப்பிராயம் ஜேர்மனியில் பலவாக இருந்தது. அவர்களது அதீத உயர்வான எண்ணமே ஹிட்லரிற்கும் முழு உலகையும் பிடிக்கும் ஆசையையும் கொடுத்திருக்க வேண்டும். இன்று உலக உதை பந்தாட்டத்தை கைப்பற்ற முயன்ற இதே ஜேர்மனியின் ஹிட்லர் உலகப் பந்தையே கைப்பற்ற முயன்றான்.

"மயின் வோல்ட்" ( திரு சாளிச் சப்ளின் அவர்கள் நடித்த "த கிரேட் டிக்றேற்றர்� என்ற திரைப்படம் இந்தச் சிந்தனையை தெளிவாக சித்தரித்துள்ளது.) இந்த உலகமே எனது என்று அவன் கனவு கண்டான். உறங்குகின்ற சீன யாணையை எழுப்பக் கூடாதென்று சரியாகக் கணித்த ஹிட்லர் உடனடியாக ரஜ்ஜியாவைத் தாக்காது இடம் நேரம் காலத்தை கச்சிதமாகக் கணித்திருந்தால் உலகை வென்ற இரண்டாவது அலெக்ஜாண்டராக அவன் வந்திருக்கக் கூடும். அந்த அளவிற்கு உலகில் உயர்வான இனம் ஜேர்மன் இனம்.

அவர்கள் டச்சுக்காரான ஹோலண்டரை வென்று உதைபந்தாட்டத்தில் டொச்சுக்காரரின் புகழை மீண்டும் நிலை நிறுத்துவர் என்றே எண்ண வேண்டியுள்ளது. நீண்ட காலமாக வட அமெரிக்காவிற்குள்யே சிறை பட்டுக் கிடந்ந கிணணத்தை சிறை மீட்டு வருபவனாக ஜேர்மனி முழு ஐரோப்பாவிற்குமே ஒரு தலை நிமிர்வைக் கொடுக்கவுள்ளது என்றால் அது மிகையாகாது.

 

குகதாசன் கனடா

http://www.seithy.com/breifArticle.php?newsID=113087&category=Article&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.