Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலவரையரையற்ற பணிப்பகிஷ்கரிப்பு போராட்டதில் வவுனியா நகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலவரையரையற்ற பணிப்பகிஷ்கரிப்பு போராட்டதில் வவுனியா நகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள்..! photo.png 

[Tuesday 2014-07-15 18:00]
vavuniya-protest-150714-seithy-140.jpg

வவுனியா நகரசபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் காலவரையரையற்ற பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை மீண்டும் நகரசபை முன்றலில் இன்று திங்கட்கிழமையிலிருந்து (14) முன்னெடுத்துள்ளனர். கடந்த 02ஆம் திகதி வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது, கடந்த 11ஆம் திகதிக்குள் 03 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைத்து நியமனங்கள் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்திருந்தார். எனினும், இதுவரை அக்குழு நியமிக்கப்படவில்லை.தமது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி இவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

  

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில், வவுனியா நகரசபையில் பணியாற்றும் அனைத்து சுகாதாரத் தொழிலாளர்களும் நியமனம் கிடைக்காத சாரதிகளும் பங்குபற்றியுள்ளனர்.

வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதாரத் தொழிலாளர்களில் 07 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும், வடமாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமனற்ஙகளில் ஆளணி அதிகரிக்கப்பட வேண்டும், வவுனியா நகரசபையால் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட காவல் கடமை பதவிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், உள்ளக வெற்றிடங்கள் உள்ளகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும், 30 வருடங்களாக பணியாற்றுபவர்களுக்கு இதுவரையில் தரம் உயர்வு வழங்கப்படாமையால் அரச சுற்றுநிரூபம் 01 - 2001 இற்கு அமைய தரம் உயர்வு வழங்கப்பட வேண்டும், வேறு திணைக்களங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள்; வழங்கப்பட வேண்டும், தொழிலாளர்களுக்கு சாப்பாட்டறை கட்டிக் கொடுக்கப்படவேண்டும்.

தொழிலாளர்களுக்கான மலசலகூடம் புனரமைப்பு செய்து தரப்பட வேண்டும். அந்தந்த இடங்களில் பணிபுரிபவர்கள் அங்கேயே பணி புரிவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். சுகாதார பகுதி நலன்புரிச்சங்கத்துக்கு நகரசபையால் சலுகைகள் வழங்கப்பட வேண்டும், உமா எனப்படும் சுகாதார தொழிலாளியை தொழிலாளிகளுடன் பணியாற்ற அனுமதிக்க வேண்டும், வடமாகாண உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்பட வேண்டும் என்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30ஆம் திகதி வவுனியா நகரசபை சிற்றூழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

vavuniya-protest-150714-seithy-001.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=113169&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.