Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியை நினைத்து வெட்கப்படுகின்றோம் - பொதுபல சேனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kalapoda%20thero_CI.jpg

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நினைத்து வெட்கப்படுவதாக பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்தவின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டு வருதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி, ரவூப் ஹக்கீமை அரசாங்கத்திலிருந்து விலக்கியிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கமும் ஜனாதிபதியும் தங்களது கொள்கைகள் குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். 'நான் இந்த நாட்டின் தலைவராக இருந்திருந்தால் ரவூப் ஹக்கீமின் கதைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளி விரட்டியிருப்பேன்' என ஞானசார தேரர் இன்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அலுத்கம சம்பவம் தொடர்பில் பிழையான தகவல்கள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும், வீடு வீடாக சென்ற இது குறித்த உண்மையான விபரங்களை தெளிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரவூப் ஹக்கீம் நாட்டில் முஸ்லிம் கடும்போக்குவாதத்தை தூண்டும் பணியில் ஈடுபட்டு;ள்ளதாகத் தெரிவித்துள்ளார். ரவூப் ஹக்கீம் ஓர் அரசயில் பரத்தை எனவும், ஆளும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, மத மற்றும் இனக் குரோதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோர் அண்மைய நாட்களில் அடிக்கடி ஊடகங்களில் வலியுறுத்தி வந்தமை நினைவூட்டப்பட வேண்டியதாகும

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109432/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமின் கழுத்தைப் பிடித்து வெளியே விரட்டியிருப்பேன்! - ஞானசார தேரர் கூறுகிறார். 

[Wednesday 2014-07-16 07:00]
gnanasara-thero-150.jpg

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நினைத்து வெட்கப்படுவதாக பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்தவின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்தப்பில் பேசிய அவர், பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டு வருகிறார். ஜனாதிபதி, ரவூப் ஹக்கீமை அரசாங்கத்திலிருந்து விலக்கியிருக்க வேண்டும்.

  

அரசாங்கமும் ஜனாதிபதியும் தங்களது கொள்கைகள் குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டும்.நான் இந்த நாட்டின் தலைவராக இருந்திருந்தால் ரவூப் ஹக்கீமின் கழுத்தைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளி விரட்டியிருப்பேன். அலுத்கம சம்பவம் தொடர்பில் பிழையான தகவல்கள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று இது குறித்த உண்மையான விபரங்களை தெளிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். ரவூப் ஹக்கீம் நாட்டில் முஸ்லிம் கடும்போக்குவாதத்தை தூண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். ரவூப் ஹக்கீம் ஓர் அரசியல் பரத்தை. அவர் ஆளும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=113216&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.