Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான ஐ.நா குழுவினர் விசாரணைகளுக்கு இந்தியா உட்பட சில நாடுகள் எதிர்ப்பு!

Featured Replies

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் முன்னெடுத்துள்ள விசாரணைக்கு ஐந்து நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இந்தியா , நேபாளம் , பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய தெற்காசிய நாடுகளே இந்த விசாரணைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

ஐ.நா விசாரணைக் குழு தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான விசாவை வழங்க இந்தியா மறுத்துள்ளதாக   ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாம ஹேவா தெரிவித்துள்ளார்.

நாடொன்றை தனிமையாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள  விசாரணக்கு குறித்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்க மாட்டாது  என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்காக 13 பேர் கொண்ட குழுவையும் மூவர் அடங்கிய நிபுணர் குழுவையும் ஐநா மனித உரிமைகள் பேரவை நியமித்துள்ளது

இந்த விசாரணைகளுக்காக இலங்கைக்கும்   அயல்நாடுகள் சிலவற்றுக்கும் செல்வதற்கு ஐநா குழு திட்டமிட்டிருந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

விசாரணைகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாமற்போகும் பட்சத்தில் இந்தியாவிலிருந்தேனும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு  ஐ.நா குழு எதிர்பார்த்திருந்தாக மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானும் இலங்கை தொடர்பான விசாரணைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையின்போது ஐநா குழுவினர் ஸ்கைப் மற்றும் ரெலி கொன்பரன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி சாட்சியங்களை திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது

எவ்வாறாயினும் இலங்கை அல்லது அதன் அயல்நாடுகளுக்கு வருகைதரும் ஐநா குழுவின் பிரதான நோக்கம் நிறைவேறாத நிலையில் அவர்கள் ஆசியாவிற்கு வெளியேயிருந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஐ.நா குழு தற்போது ஒஸ்லோ, ரொரென்டோ மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் இருந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://www.pathivu.com/news/32601/57//d,article_full.aspx

எதிர்ப்பை வெளியிட்ட இந்த அனைத்து நாடுகளும் அயோக்கியர்களை அரசியலில் அமைச்சர்களாக கொண்டுள்ள நாடுகளே. ஒரு கேடியை விசாரிப்பதற்கு அடுத்த கேடி எதிர்ப்பு தெரிவிப்பது சகஜம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.