Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களைச் சொல்லி அரசியல் செய்ய காங்கிரசும் தயார்!?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைத் தமிழர்களைச் சொல்லி அரசியல் செய்ய காங்கிரசும் தயார்!?

 

iftar_cong1_2025477g-300x204.jpgஇலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினை குறித்து இந்தியாவில் விசாரணை நடத்த வரும் ஐ.நா. குழுவுக்கு, பாஜக அரசு விசா வழங்கி, விசாரணை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸின் முக்கியஸ்தர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை கடற்படையினரின் தவறான அணுகுமுறையால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

ஜூன் மாதம் முதல், இதுவரை 258 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் கூட அவர்களது படகுகளும், உடைமைகளும் இலங்கை அரசின் வசமே உள்ளன.

கடந்த 22ம் தேதி, 43க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளையும், உடைமைகளையும் கைப்பற்றியுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முயற்சியால், இரண்டு முறை இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. மீண்டும் பேச்சு நடத்தி முடிவு காண, தற்போதைய பாஜக மத்திய அரசு வழி வகை செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கவும், எல்லை தாண்டும் பிரச்சினையை தவிர்க்கவும், மத்திய அரசு இலங்கை அரசுடன், பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்.

இலங்கையில் போரின்போது நடந்த மனித உரிமை மீறல் குறித்து, விசாரிக்க ஐ.நா., மனித உரிமை ஆணையம் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு இந்தியாவில் விசாரணைக்கு வர மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்க வில்லை. இது கண்டனத்துக்குரியது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பாஜக அரசு புறக்கணிப்பதாக உள்ளது.

எனவே, இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினை குறித்து விசாரணை நடத்த வரும் ஐ.நா.,குழுவுக்கு, பாஜக அரசு விசா வழங்கி, விசாரணை நடத்த ஒத்துழைக்க வேண்டும்” என்று வாசன் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை அரசியலாக்கி அரசியல் இலாபம் ஈட்டுவதில் பின்னடித்து வந்த காங்கிரசும் அந்த விடயத்தினை தற்போது கைலெடுத்துள்ளது என்கின்றனர் நோக்கர்கள்.

http://tamilleader.com/?p=38153

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.