Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்மூலமாக்கப்பட்ட தமிழின அடையாளங்களை மெல்ல மெல்ல மலரவைப்போம்; ரவிகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

e57824b276838ea30261da4e75372c09.jpg

இறுதி யுத்தத்தில் நிர்மூலமாக்கப்பட்ட தமிழினத்தின் அடையாளங்களை மீட்டெடுக்க அனைவரும் ஒன்று சேருமாறு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டம் முல்லைத்தீவு கள்ளப்பாடு பொதுநோக்கு மண்டப வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. அதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி யுத்தத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் அடையாளங்கள் அனைத்தும் இம்மண்ணில் மீள எழுச்சிபெறுவதற்கு பண்பான ஒழுக்கமுள்ள தூரநோக்கு சிந்தையுள்ள இளையசமுதாயமாக மாணவர்கள் உருவாகவேண்டும்.   

 

யுத்தத்தினால் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை குறைக்கும் பொருட்டு  இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

முதல் இரண்டு கட்டங்கள் மூலம் 87 மாணவர்கள் பயன்பெற்ற நிலையில் மூன்றாம் கட்டத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 20 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதன்படி அவர்களுக்கு தைத்த பாடசாலை சீருடை, காலணி , அப்பியாச புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கப்பட்டன. 

 

 ஒரு வருடத்திற்கு முன்னர் எனக்கு கிடைக்கப்பெற்ற ஒரு ஆய்வறிக்கையில் 2012ஆம் ஆண்டு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடக்கு கிழக்கு மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகியுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்த இலங்கையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

ஈழத்தமிழினம் கொண்டிருந்த அடையாளங்களுள் கல்வியும் ஒன்று. எமது தாயகம் பல நூற்றுக்கணக்கான கல்விமான்களை அடையாளப்படுத்திய தேசம். எனினும் அவை யுத்த அழிவுகளோடு எமது மரபுகளும் அழிந்துசெல்லும் நிலையை இங்கு அனுமதிக்கமுடியாது. 

அதன்படி பாடசாலை இடைவிலகலுக்கான காரணங்களை ஆராய்ந்தபோது ஈழத்தமிழினத்தின் வறுமையே அங்கு முன்னிற்கிறது. ஆதலால் பாடசாலை இடைவிலகலை குறைக்கும் பொருட்டு புலம்பெயர் உறவுகளுடன் கைகோர்த்து இச்செயற்திட்டத்தை முன்னெடுக்க தொடங்கினேன். 

 

புலம் பெயர் உறவுகளும் கைகொடுக்க தொடங்கினார்கள். இன்று இச்செயற்திட்டம் 107 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை உறுதிப்படுத்தியிருக்கிறது. 

 

இச்செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் 20 மாணவர்களுக்கான கல்வி சார் பொருட்களை வழங்க  தமிழ் சமூக நிலையம் லண்டன் திரு. என். சிவகணேஸ் மற்றும் திரு. தி. சதீஸ்குமார் ஆகியோர் முன்வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

 

இச்செயற்திட்டமானது இனிவரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் இன்னும் வறுமையால் வாடும் பல சிறார்கள் இச்செயற்திட்டங்களால் மலர்வார்கள். 

அவர்களால் எம் தேசம் மலரும். எம் மரபுகள் வளரும். எம் தாயகம் மேலும் சிறக்கும் என்ற நம்பிக்கையும் கனவும் நிறையவே எமக்கு இருக்கிறது என்றார்.

 

6(31).jpg

 

5(50).jpg

 

8(32).jpg

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=384003274930400926

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.