Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீகவாபி சமரவீர கொலை வழக்கில் மரண தண்டனை -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தீகவாபி சமரவீர கொலை வழக்கில் மரண தண்டனை -
02 ஆகஸ்ட் 2014
 

மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாத சுந்தரம் தீர்ப்பு

judge20_CI.jpg


கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் தீகவாபி என்ற இடத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அலுத்கமகே சமரவீர என்பவர் கத்திக் குத்துக் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபராகிய மாரசிங்க முதியான்சலாகே லொக்கு பண்டா என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். 

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய போது நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் முன்னிலையில் இந்த வழக்கு வி;சாரணை நடைபெற்றிருந்தது. வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் அவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடம் மாற்றம் பெற்றிருந்தார். இந்தக் காரணத்தினால், இந்த கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பினை அங்கு சென்று வழங்குமாறு பிரதம நீதியரசர் பணித்திருந்ததையடுத்து, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கல்முனை நீதிமன்றத்தில் அவரால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் தீகவாபி பொலிஸ் சோதனை நிலையத்தில் இருந்து தமன பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த ஒரு தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற, தமன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலுப்பான முதலாளியின் கடைக்கு எதிரில் அலுத்கமகே சமரவீர என்பவர் கத்திக்குத்துக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டுள்ளார். 

இறந்தவரை அவருடைய தாயார் வைத்தியசாலையில் தனது மகன் சமரவீர என்று அடையாளம் காட்டியிருந்தார். 

இந்த வழக்கில் மாரசிங்க முதியான்சலாகே லொக்கு பண்டா என்பவர் மீது, சட்டமா அதிபரினால் கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கல்முனை மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது, கொல்லப்பட்டவரின் தாயாராகிய ஹேரத் முதியான்சலாகே சுமணாவதி, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராகிய ஏ.எம்.ஒபேசேன திசாநாயக்க, முதியான்சலாகே கருணாவதி மெனிக்கே, அத்துடன் இறந்தவரின் உடலை மருத்துவ பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த டாக்டர் ஜெயசிங்க மற்றும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை நடத்திய பொலிஸ் குழுவினர் ஆகியோர் சாட்சியமளித்திருந்தனர்.  

சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் அரச சட்டத்தரணி என்.நிஷாந்தன் ஆஜராகியிருந்தார். எதிரியின் சார்பில் சட்டத்தரணி எம்.எம்.முஸ்தபா தோற்றி;யிருந்தார். 

இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் எவரும் இல்லை. இதனால் சூழ்நிலை சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற விசாரணையின் முடிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் எதிரி மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு சுமணாவதி, கருணாவதி ஆகிய இருவருடைய சாட்சியங்கள் வழக்குத் தொடுனரினால் முக்கியமாகக் கவனத்தில் எடுக்கப்பட்டிருந்தன. சம்பவத்திற்கு முன்னரான எதிரியின் நடத்தை, முக்கிய சான்றுப் பொருட்களாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, இறந்தவர் அணிந்திருந்த ஷேட் என்பற்றுடன் மருத்துவ பரிசோதனை அறிக்கையும் சாட்சி;கள் அளித்த சாட்சியங்களுடன் ஒத்துப் போயிருந்தன. 

கொலைச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் சுமணாவதி என்ற சாட்சியிடம்  கொல்லப்பட்டவரை, விடிவதற்கு முன் கொலை செய்வேன் என்றும், கருணாவதி என்ற சாட்சியிடம் இறந்தவரைக் கொன்று குடலை எடுப்பேன் என்றும் எதிரி கூறியிருந்தார். இந்தக் கூற்றுக்கள் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவையாக இருக்கின்றன என்பதுடன் சாட்சியங்களில் முக்கிய விடயமாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமைந்திருக்கின்றன என்று நீதிபதி தமது தீர்ப்பில்  சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் இடம்பெற்றிருந்த எதிரியின் நடத்தையும் கண்டெடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களும், இந்தக் கொலைச் சம்பவத்தில் ஏற்கனவே வெளிப்பட்டிருந்த உண்மைகளை நீதிமன்றத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளதுடன், இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கும் வழிசமைத்திருந்தன என தெரிவித்து, விசாரணையின் போது, எதிரியே குற்றத்தைப் புரிந்தார் என்பது சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால் எதிரிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் தீர்ப்பளித்துள்ளார்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110134/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.