Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் நிலைப்பாட்டில் தி மு க செய்தது என்ன என்று முக புத்தகம் ஊடாக தி மு க உறுப்பினர் ஒருவர் எனக்களித்த பதில்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Franklin Herbert நண்பர் நவரத்னம் பிரசாந்தன் அவர்கள் இலங்கை. பிரச்சனையில் கூறியிருக்கின்ற கருத்துக்களை ஆராய்ந்துப்பார்த்தால் .... கலைஞர் எதிர்ப்பு மனநிலை அவர் மனதிலே வேரூன்றி நிற்பது நன்கு புரிகிறது. இலங்கை பிரச்சனைக்கு திமுக அரசு துணை நின்று புலிகளை ஆதரித்து என்பதை காரணம் காட்டி கலைக்கப்பட்டது.திமுக புலிகளுக்கோ இலங்கை பிரிச்ச்சனைகளுக்கோ தேவையற்ற வாக்குறுதிகள் தந்து புலிகளை ஏமாற்ற்றவில்லை. ஆனால் பேச வேண்டிய இடங்களில் பேசினார்.செய்ய வேண்டியவற்றை செய்தார்.அப்பொழுது அவர் ஆட்ச்சியை கலைக்க மதிய அரசுக்கு ஜெயலலிதா விண்ணப்பித்தார். என்னவென்று..

திமுகவும் கலைஞரும் விடுதலப் புலிகளுக்கு உதவுகிறார்கள் ...புலிகள் நடமாட்டம் தமிழத்தில் அந்த சமயத்தில் அதிகமாக இருந்தது என்று...... அது பொய்ச்செய்தி என்று அன்றைய ஆளுநர் பர்னாலா விளக்கம் அளித்தும் அதை மீறி அன்றைய ஜனாதிபதி வெங்கட்ராமன் திமுக அரசைக் கவிழ்த்தார். 2009ல் கலைஞர் ஆட்சி நடக்கும் பொழுது இலங்கை இனஒழிப்பு சம்பவம் நடைபெற்றது. ஆனால் நீங்கள் கூறுகிறீர்கள் கலைஞர் நினைத்திருந்தால் போரை நிருதியிருக்கலாம் என்று .... பதிவு todarum...

6 மணிகள் · பிடிக்கவில்லை · 1

Navaratnam Prashanthan நிச்சையமாக பேசுவோம்.......தொடருங்கள்.....இப்பிடி ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து நிற்ப்பதால் எதுவும் ஆக போவதில்லை.......அப்பொழுதைய தமிழக அரசியல் களத்தில் நின்ற உங்களுக்கு பல விடையங்கள் தெரிந்திருக்கும் எழுதுங்கள்.....

6 மணிகள் · Like

Franklin Herbert பதிவு தொடர்கிறது நவரத்தினம் பிரசாந்தன் அவர்களே .... நாம் அதற்க்கு முன்பான சரித்திரத்தை உண்மையாக அறிய வேண்டும் ... ஆரம்பத்தில் புலிகள் இலங்கையில் கொரில்லா போரில் ஈடுபட்டிருந்தார்கள்.அவர்கள் என்றும் சிங்கள சாமானிய மக்களுக்கு உபவத்திரம் தரவில்லை. தமிழின உரிமைக்காக போராடினார்கள். அவர்களுக்கு திமுக ஆதரவாக குரல் எழுப்பியது. இந்நிலையில் எம்ஜிஆரும் ராஜீவ் காந்தியும் இணைந்து தமிழ்நாட்டில் ஒரு ஆயுதப்பயிற்சி முகாமை அமைத்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக்கொடுத்து அதை கையாண்டு போர் புரியும் பயிற்சியை கொடுத்தார்கள்.. இதை கேட்க்கும் பொழுது உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு அந்த செயல் மிக உயர்ந்ததாய் தெரிய வாய்ப்புண்டு. ஆனால் சற்று விவேகத்துடன் சிந்தித்தால் இது விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை தமிழினத்திற்கும் எத்தனை ஆபத்தினை விளைவித்தது,விளைவித்து கொண்டிருப்பது என்பது விளங்கும்...

thodarum

6 மணிகள் · பிடிக்கவில்லை · 1

Franklin Herbert தமிழகத்தில் புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவதற்கு முன்னர் புலிகளின் போராட்டம் இலங்கைக்கு உட்பட்டதாய் இருந்தது. அது தமிழின உரிமைகளுக்கு தமிழர்களுக்கான புலிகளின் தர்மப் போராட்டம். இதை உணர்வுள்ள தாய் தமிழகமும் குறிப்பாக தமிழின நன்மைக்காக சேவைபுரியும...மேலும் பார்க்கவும்

5 மணிகள் · பிடிக்கவில்லை · 1

Franklin Herbert தொடர்கிறது .... ரஷிய நாட்டின் பிளவிற்குப் பின்னர் அமெரிக்காவோடு தனது ராஜாங்க உறவை இந்தியா துவங்கிய நேரம் ... இலங்கை பிரச்சனையில் தன் நிலையை மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு வந்தது. ராஜீவ் காந்தி புளிகளுக்கு கொடுத்த ஒத்துழைப்பு காற்றில் பறக்கவிடப்பட்டது. பிராபகரன் ராஜீவ் காந்தியை டில்லியில் சந்தித்து தீர்வுக்காண முற்பட்டபொழுது ராஜீவ் காந்தி இறுதிவரை பிரபாகரனை சந்திக்கவே இல்லை..மாறாக சில அதிகாரிகளை விட்டுப் பேசச்செய்து இந்திய அரசின் உதவி மேலும் கிடைக்காது என்று கூறிவிட்டார்.. அப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்ஜிஆர்.அவர் பண்ருட்டி ராமச்ச்சந்திரனை ஒப்புக்காக டில்லி அனுப்பி பேசிவது போல் பாசாங்கு செய்தார்.அன்று எம்ஜிஆர் உண்மையாகவே இலங்கை தமிழருக்கு உதவிட நினைத்திருந்தால் எதாவது வழிமுறையை கையாண்டு நல்ல சுமூகத் தீர்வை ஏற்ப்படுதியிருக்கலாம்.அனால் அவன் நம் தமிழினத்தை ஏமாற்றிவிட்டான். அவன் மேல் கண்மூடித்தனமான அன்பு கொண்டிருந்த நம் தமிழ் மக்கள் அன்று நடந்தேறிய எம்ஜிஆரின் தமிழின துரோகத்தை உணராமல் போய்விட்டார்கள் ....... thodarum....

4 மணிகள் · பிடிக்கவில்லை · 1

Franklin Herbert தொடர்கிறது .... இந்நிலையில் விடுதலைப்புலிகள் இலங்கையிலோ இந்தியாவிலோ முன்புபோல பலத்துடன் செயல்படமுடியவில்லை....இந்திய தேசத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.திரு. மரிய அல்போன்ஸ் பதிவு செய்தது போல இலங்கை பிரச்சனைக்கு தீர்வுக்கான இந்திய தேசத்தின் தலைவர்கள் பலரை வைத்து அன்றைய பிரதமர் வி.பி.சிங்கின் இல்லத்தில் ஆலோசனை நடத்தி ஒருமித்தக் கருத்தை இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் முயற்ச்சி மேற்கொண்டார். அந்த வேளையில் தான் பத்பநாபன் படுகொலை நடக்கிறது .நவரத்ன பிரசாந்தன் குறிப்பிட்டபடி பத்பநாபன் கொலை செயப்படவேண்டியவரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நான் வர முற்ப்படவில்லை....ஆனால் இந்த செய்தி அறிந்த உலகம் முழுதும், இலங்கை தமிழ் உரிமைகளுக்காய் போராடும் போராளிகளுக்குள் ஒற்றுமையில்லை,மாறாக ஒருவரை ஒருவர் கொலை செய்ய துணிந்த தீவிரவாதிகள் என்ற கருத்து பரவலாக விதிக்கப்பட்டது... தொடரும்...

3 மணிகள் · பிடிக்கவில்லை · 1

Franklin Herbert தொடர்கிறது... கலைஞர் எடுத்த பெருமுயற்சி அந்தப் படுகொலையால் வெற்றிப்பெற முடியவில்லை,காரணம் ஒருமித்த கருத்து கொண்டிருந்தத் தலைவர்கள் அனைவரும் இதனால் குழப்பம் அடைந்தனர்...இந்தப் படுகொலையே இலங்கை பிரச்சனைக்கு தீர்வு ஏற்படக்கூடாது என்று எண்ணிய சில துரோகிகள் அரங்கேற்றிய நாடகமாகக்கூட இருக்கலாம் ... அதன் பின்னர் ஜனதா ஆட்சி ராஜீவ் காந்தியின் சூழ்ச்சியால் கவிழ்க்கப்பட்டு சந்திரசேகர் பிரதம மந்திரி ஆனபின் புலிகளுக்கு சாதகமாக செயல்பட வைப்பதாவகும் ,தமிழத்தில் புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும்,அதனால் இந்திய நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் பங்கம் விளைவதாகவும் மதிய அரசுக்கு கடிதம் எழுதி, அதன் அடிப்படையில் அப்பொழுது ஆட்சியில் இருந்த திமுகா ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மதிய அரசுக்கு ஜெயலலிதா நெருக்கடி கொடுத்தது வரலாறு. அதன் அடிபடையில் திமுக தன ஆட்சியை இழந்தது.. .. சற்று சிந்தியுங்கள்..... இலங்கை தமிழினத்திற்கு யார் துரோகி என்று....

thodarum...

3 மணிகள் · பிடிக்கவில்லை · 1

Franklin Herbert தொடர்கிறது... அதன் பின்னர் இலங்கை பிரச்னையில் பெரிய முனேற்றம் எழவில்லை இந்தியாவில் ஆனால் இலங்கை அரசுக்கு சிம்ஹ சொப்னமாக இருந்தார்கள். தமிழ் நாட்டிலும் சில சந்தர்பவாதிகள் சந்தர்பத்திற்கு ஏற்றார்போல் இலங்கைக்கு சாதகமாகவும் பாதகமாகவும் குரல் எழுப்பிக்கொண்...மேலும் பார்க்கவும்

2 மணிகள் · பிடிக்கவில்லை · 1

Franklin Herbert Meendum naalai thodarum...

2 மணிகள் · Like

Franklin Herbert . பின்னர் தேர்தலில் ஜெயலலிதா முதல்வராகி இலங்கை பிரச்சனைக்கு எந்த தீர்வும் எடுக்கவில்லை. மாறாக பிரபாகரனை இந்தியா கொண்டுவந்து தூக்கில் இடவேண்டும் என்று சட்டசபையிலே தீர்மானம் போட்டதை மறக்கமுடியுமா. அதுமட்டுமல்ல வள் வள் என்று சைகோத்தனமாக கத்துவானே அந்த மானம் கேட்ட வைகோ,அவனை இலங்கை தமிழ் ஆதரவாளன் என்று பொடா சட்டத்தில் உள்ளே தள்ளியது யார்... அவளைத்தான் ஈழத்தை என்று நெஞ்சுருக கூறி மகிழ்வீர்களோ? அது போல எதற்கெடுத்தாலும் கலைஞரை தமிழினத் துரோகி என்று பழிக்கும் ஒல்லிகுச்சி. பழ நெடுமாறனை போடா சட்டத்தில் உள்ளே அடைத்தது யார்? ஆனால் அந்த மானம் கேட்ட பயல் ஜெயலலிதாவின் கொள்கை பரப்பு செயலாளனாக செயல் பட்டுக்கொண்டிருப்பதை எப்படி ஜீரணித்துக்கொள்ள முடிகிறது? இவர்களை வெளியே கொண்டுவர எல்லா முயற்சியும் எடுத்து வெற்றிகண்டவர் கலைஞர். இது கதையல்ல வரலாறு....இந்த கூற்று கெட்டவனுங்க கலைஞரை வாழ்தவேன்டாம் தேவயில்லாமல குறை சொல்வதை நிறுத்துவது நல்லது. கலைஞர் ஆட்சியில் இருக்கும் பொழுது அவர் செய்த அணைத்து நலத்திட்டங்களையும் இந்த கயவக்கூட்டம எதிர்த்து.ஆனால் அவர் எல்லா பிரச்சனைகளையும் முறியடித்து திட்டங்களை நிறைவேற்றினார். ஆனால் இலங்கை பிரச்னையில் அவரால்எதுவும செய்ய முடியாமல் போனதற்கு தமிழகத்தில் ஒத்துழைப்பில்லாமை குறிப்பாக வைகோ சீமான் நெடுமாறன்ஜெயலலிதா காங்கிரஸ் கட்சி மற்றும் ஊடகங்கள்.கலைஞர் அன்று எடுத்தமுயற்ச்சிகளை நாடகம் என்றுக்கூறி காங்கிரஸ் கூட்டணி இர்ருப்பதால் கண்துடைப்பு என்றுக்கூறி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை வளர்தார்கள். மக்களை தங்கள் உனர்சிகரமான பேச்சால் மூளை சலவை செயதார்கள். இருந்தாலும் கலைஞர் தன் ஆட்சியில் அணைத்து கட்சி மனித சங்கிலியை ஏற்பாடு செய்தார் ....யாருக்காக ? இலங்கை தமிழ் மக்களுக்காக அங்கே நடந்துக்கொண்டிருந்த போரை நிறுத்தக் செய்ய ....

thodarum..

1 மணி · பிடிக்கவில்லை · 1

Franklin Herbert அந்த மனித சங்கிலியில் கலந்து கொள்ள காங்கிரசில் எதிர்ப்பு இருந்தது காரணம் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு துணைபோகக்கூடாது என்று.ஆயினும் கலைஞர் தனக்கு சோனியா காந்தியிடம் இருந்த மரியாதை கலந்த செல்வாக்கால் அணைத்து தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மானித சங்கிலியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார். பிற கட்சியினரும் தங்கள் ஒத்துழைப்பை தருவதாக ஒத்துக்கொண்டார்கள். அனந்த நிகழ்ச்சிக்கு முந்தய தினம் சீமானும் பாரதி ராஜாவும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசவேண்டிய கூட்டத்தில் அப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கும் ராஜீவ் காந்தி மற்றும் அவர்கள் குடும்பத்திற்கும் எதிராக அவதூறு பேசியது மதியப் புலனாய்வுத்துறையால் வீடியோ ஆடியோ பதிவு செய்யப்பட்டு மதிய அரசுக்கு அனுப்பப்பட்டது.இதை சாக்காக வைத்து காங்கிரஸ் மனித சங்கிலியை புறக்கணித்தது. ஜெயலலிதாவும் காங்கிரசையும் மதிய அரசையும் உசிப்பிவிடும் வகையில் கண்டன அறிக்கை விட்டது மட்டுமல்லாமல் சீமானை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிக்கை வெளியிட்டதை மறக்கமுடியுமா? இதனால் சீமானை கைது செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.அது vrayil கலைஞருக்கு ஆதரவாக இருந்த அவன் பெரும் எதிரியாய் மாறி அலைகிறான். ஆனால் இப்போதைய அவன் நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது அவன் ராமேஸ்வரத்தில் பேசியது கதை வசனம் எழுதப்பட்ட நாடகம் என்று தோன்றுகிறது.அவன் கைது மற்றும் அதன் பின்னர் அதை சாக்காக வைத்து ஜெயலலிதா புராணம் பாடுவதை பார்த்தால் இதில் பெரிய சதித்திட்டமே கலைஞர் திமுக எதிர்ப்பிற்காக நடட்தப் பட்டிருக்கிறதோ என்று எண்ண தோன்றுகின்றது. ..

43 நிமி. · பிடிக்கவில்லை · 1

Franklin Herbert மேலும் அணைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து டில்லி சென்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கை தமிழினத்தின் பிரச்சனைக்கு தீர்வு காண சென்றிருந்த அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.ஆனால் இதில் ஆதிமுக.வைகோ,கலந்துகொள்ளவில்லை.. அதற்கு அவர்கள் கூறிய காரணம் கண் துடைப்பு என்று. இதை மக்களும் ஏற்று கொள்வது மேலும். கொடுமையாக இருக்கிறது. நான் கேட்கிறேன் ஆட்சியில் இருக்கும் பொழுது இலங்கை பிரச்சனைகளை டெல்லிக்கு போய் பேச அணைத்து கட்சி தலைவர்களை அழைத்து சென்ற முதல் அமைச்சர் கண் துடைப்பு நாடகம் நடத்துகிறாரா அல்லது ஒப்ற்றுமே செய்யாமல் தேர்தல் வரும்பொழுது மட்டும் இலங்கை பிரச்சனையை பற்றி ப்பேசி கலைஞரை அது சம்பந்தமாய் இழித்து பேசும் முதலமைச்சர் கண்துடைப்பு நாடகம் நடத்துகிறாரா ? இவ்வாறு ஒற்றுமை இல்லாத சூழல் இருப்பதாலும் மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும்,மத்தியில் உள்ளவர்களுக்கு இலங்கை பிரச்சனையை சீரமைக்க விருப்பமில்லாததும் அதனால் தமிழர்களின் பிளவினை மத்தியில் உள்ளவர்கள் சாதகமாக பயன்படுத்தி பழி அனைத்தையும் திமுக மேல் வரும்படிக்கு பெரும் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் .இதற்கு பலிகடா ஆவது சாதாரண மக்கள். அதனால் தான் 2009 தமிழின படுகொலை நடந்தது. தமிழர்களிடையே ஒற்றுமையில்லை என்றால் கன்னடக்காரிகளும், மலையாளிகளும் தமிழகத்த அடிமைகலாக்குவார்கள் ....இலங்கையில் சிங்களர்கள் தமிழ் இனத்தை நிர்மூலமாகிவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.