Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சலுகை, அபிவிருத்திக்காக வாக்களித்தால் உரிமைகளை வெல்ல முடியாது! - என்கிறார் அரியம் எம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சலுகை, அபிவிருத்திக்காக வாக்களித்தால் உரிமைகளை வெல்ல முடியாது! - என்கிறார் அரியம் எம்.பி. 
[Friday 2014-08-08 09:00]
ariyanenthiran-100514-150.jpg

அபிவிருத்திக்காகவும்,சலுகைகளுக்காகவும் வாக்களிப்பவர்களாக இருந்தால், எமது உரிமையை வென்றெடுக்க முடியாது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். தாந்தாமலை மக்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட வேளையிலேயே இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் வீகிதாசாரம் 41 வீதமாகவே இருக்கின்றது. அந்த தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே சிந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தால் கிழக்கு மாகாணசபை த.தே.கூட்டமைப்பினர் வசம் வந்திருக்கும் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

  

ஆனால் மாகாணசபை தான் தமிழ் மக்களுக்கான இறுதித்தீர்வு இல்லை என்பதனை கடந்த 65 வருடகாலமாகவே தமிழ் மக்களுக்காக வேண்டி தலைமைதாங்கிய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். ஆனால் சிலர் நினைக்கின்றார்கள் மாகாணசபை முறைதான் தமிழ் மக்களுக்கான இறுதி தீர்வு என்று, அவ்வாறு இல்லை என்பதனை முதலில் அவர்கள் புரிந்து வைத்திருத்தல் வேண்டும். மாகாணசபையில் த.தே.கூட்டமைப்பு போட்டியிட்டதற்குக் காரணம் வட,கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பலத்தினை உறுதிப்படுத்தி, சர்வதேசத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் பலம் என்ன என்பதனை பற்றுறுதி கொண்ட தமிழ்மக்கள் நிருபித்து காட்டியிருக்கின்றார்கள்.

அந்த பலத்தின் ஊடாகத்தான் இன்று வடகிழக்கு தமிழ்மக்களின் அபிலாசைகளும், அவலங்களும், மனித உரிமை மீறல்களும், வடகிழக்கிலே நடைபெறுகின்ற காணி அபகரிப்புக்களும், இராணுவ மயமாக்கங்களும் இன்று சர்வதேசத்தில் கூர்மைபெற்றுள்ளது. அதன் நிமிர்த்தமாகத்தான் சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. வடகிழக்கு தமிழ்மக்களாகிய நாம் மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து அமைச்சர் பதவிகளையும், முதலமைச்சர் பதவிகளையும் பெற்றிருப்பார்களேயானால் இன்று வடகிழக்கிலே எஞ்சியிருக்கும் தமிழர் தாயக நிலங்களும் வரைபடத்திலிருந்து இல்லாமல் போயிருக்கும் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சிலர் நினைக்கின்றார்கள் அரசியல் என்பது பாலம் கட்டுவதும், குளங்கள் திருத்துவதும், விளையாட்டு மைதானங்களை புனரமைப்பு செய்வதும், பாடசாலைகளுக்கு அடிக்கல் நாட்டுவதும்இ வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் நிதியை வைத்துக்கொண்டு தாங்கள் இவற்றையெல்லாம் செய்வதாக தம்பட்டம் அடிப்பதுந்தான் அரசியல் என்று நினைக்கின்றார்கள். அபிவிருத்தி அரசியல் என்பது யாரும் செய்யக்கூடியதொன்று அபிலாஷைகளுக்கான அரசியல் என்பது அரசிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு இருப்பவர்களால் செய்யமுடியாது. இன்று இலங்கை அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் சவாலாக இருக்கும் எதிர்க்கட்சி என்றால் அது வேறெந்தக்கட்சியும் இல்லை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மாத்திரந்தான். இதனை தமிழ்மக்கள் சார்ந்த புத்திஜீவிகள் ஆராய்ந்து சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=114506&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.