Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்கியோரை கைது செய்வதற்கு பதில் தாக்குதலுக்கு உள்ளானவர் கைது - இலங்கையின் அதி உச்ச நல்லிணக்கம்

Featured Replies

GTN%20Flash%20News_CI.jpg

முகமாலைவாசியாகிய சபரகமுவ பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன் சந்திரகுமார் சுதர்சன் ரீஐடியினரால் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 
கடந்த வாரம் பல்கலைக்கழக விடுதியில் வைத்து தாக்கப்பட்டிருந்த இந்த மாணவன் இரத்தினபுரி வைத்தியசாலையில் கடைசியாக சிகிச்சை பெற்று வந்தார். இவர் குணமடைந்துள்ளதாகக் கூறி வைத்தியர்கள் அவரை பலாங்கொடை வைத்தியசாகை;கு அனுப்பி வைத்திருந்தனர். அங்கி;ருந்து அவர் வெளியில் செல்ல முயன்றபோது, வைத்தியசாலை பொலிசார் அவரைக் கொண்டு சென்று விசாரணை செய்ததுடன், சபரகமுவ பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் மேல் விசாரணைக்ககாக ஒப்படைக்கப்பட்டிருந்தார். 
 
அந்த பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற ரீஐடியினர் அவரை இன்று பகல் கைது செய்து விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு சென்றுள்ளதாக, வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு உதவியாக அவருடன் இருந்த உறவினர் ஒருவர் மாணவனின் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளார். 
 
அதேநேரம் பளை பொலிசார் ஊடாக பலாங்கொடை பொலிசாரும், மாணவன் சந்திரகுமார் சுதர்சன் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி அவருடைய பெற்றோருக்கு அறிவித்துள்ளனர். 
 
காயமடைந்த மாணவன் கைது செய்யப்பட்ட அதேநேரம், ரீஐடியினரால் கைது செய்யப்பட்டிருந்த வவுனியா சின்னடம்பன் மாணவன் யோகநாதன் நிரோஜன் என்ற மாணவன் நேற்று கொழும்பு நீதவான் நீpதிமன்றத்தினால் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு வருமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
கெழும்புக்குச் சென்றிருந்த அவருடைய தந்தையார் அவரைப் பொறுப்பேற்றுள்ளார்.
 

 

சபரகமுவ பல்கலை.யில் தாக்கப்பட்ட மாணவன் கைது

 

 

140803122937_threat_letter_sabaragamuv_u

தமிழ், முஸ்லிம் மாணவர்களை வெளியேறுமாறு கொச்சைத் தமிழில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி

சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் விடுதியின் கழிப்பறையில் கடந்த ஞாயிறன்று அதிகாலை அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு, இரத்தினபுரி வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சந்திரகுமார் சுதர்சனை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது அறையில் இரவு நெடுநேரம் படித்துவிட்டு, நித்திரையின் பின்னர் அதிகாலை 3 மணியளவில் எழுந்து கழிப்பறைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாமல் கறுப்புத் துணியால் முகத்தை மூடிக்கட்டியிருந்த இரண்டு நபர்களினால் சந்திரகுமார் சுதர்சன் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து விடுதியைச் சென்றடைந்த இவரை சக மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.கைகள், வாய் என்பன கட்டப்பட்ட நிலையில் மாணவர் விடுதியருகில் உள்ள பற்றைக்காட்டில் மயங்கிய நிலையில் இவர் போடப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு சனிக்கிழமை அவர் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோதே, அவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

140809104536_sabaragamuwa_chandrakumar_s

கைதுசெய்யப்பட்ட சந்திரகுமார் சுதர்சன்

இந்தத் தகவல் கிளிநொச்சி மாவட்டம் பளையில் உள்ள காவல்துறை ஊடாக முகமாலையில் உள்ள அவரது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கியுள்ள விடுதியின் கழிப்பறையொன்றில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் அங்கு கல்வி கற்கக் கூடாது. உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உயிரச்சுறுத்தல் விடுத்து, கொச்சைத் தமிழில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஒட்டப்பட்டிருந்தன.

இரண்டாவது தடவையாக அத்தகைய சுவரொட்டிகள் இரவு நேரத்தில் ஒட்டப்பட்டபோது, அந்தக் கழிப்பறைக்குச் சென்றபோதே இந்த மாணவன் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

கைதான இன்னொரு மாணவனுக்கு பிணை

இந்தச் சம்பவத்தை அடுத்து, இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவனாகிய யோகநாதன் நிரோஜன் கடந்த 6 ஆம் திகதி பரீட்சை எழுதிக் கொண்டிருந்த போது பரீட்சை மண்டபத்தில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்ட இந்த மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரது தந்தையாரிடம் சரீரப் பிணையில் வீடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த மாணவனின் கைத்தொலைபேசியில் பயங்கரவாதம் தொடர்பான சில தடயங்கள் இருந்தமையினால் அவரை விசாரணைக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்த காவல்துறையினர், கைத்தொலைபேசி தொடர்பான விசாரணைகள் இன்னும் முடியவில்லை என்று கூறியதையடுத்து நீதவான் இந்த வழக்கை வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/08/140809_sabaragamuva_arrest.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.