Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்துக்கும், பொலிஸாருக்கும் புறம்பாக காடையர் கும்பல்! ராஜபக்‌ஷக்களின் தந்திர அணி -

Featured Replies

 
Family%2054845.jpg
 
ராஜபக்‌ஷ அரசு புதிய ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்துகின்றது. இராணுவத்துக்கும் பொலிஸாருக்கும் புறம்பாக காடையர் கும்பல் ஒன்றை ஏவி காரியத்தைச் சாதிக்கும் புதிய தந்திரயோபாயமே அது. 'ராஜபக்‌ஷ கும்பல் பித்து!' என்ற தலைப்பில் திஸரண குணசேகரா ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'மலரும்' இணையத்துக்காக தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறார் 'ராவ்'. அதன் முழு விவரம் வருமாறு"-
 
மதம் மற்றும் சமூகத்திற்கான நிலையத்தில் இடம்பெறும் கூட்டமொன்று குழப்பப்பட்டது அதன் நீண்ட வரலாற்றில் இதுவே முதற்தடைவை. இராஜதந்திர சமூகத்தினருக்கும் வடபகுதியில் காணமற்போனோரின் பெற்றோர், உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பை குழப்புவதற்காக பௌத்த மதகுருமார் தலைமையிலான காடையர் கும்பலொன்று அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தது. அந்த சந்திப்பை குழப்பியது. அவர்கள் சிறிதளவும் நாகரீகமாக நடந்துகொள்ளவில்லை. குறிப்பிட்ட கும்பலுக்கு எதிராக பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. குறிப்பிட்ட கும்பல் நினைத்ததே இறுதியில் இடம்பெற்றது. அந்த சந்திப்பு இடைநிறுத்தப்பட்டது.
 
ராஜபக்‌ஷ அரசாங்கம் புதிய ஆயுதம் ஒன்றை பயன்படுத்துகிறது. மேலிடத்து உத்தரவின் பேரில், சட்டத்திற்கு புறம்பாக செயற்படும் இந்தக் காடையர் கும்பல் ஆபத்தானதாக மாறி வருகிறது. அரசாங்கம் தன்னை விமர்சிப்பவர்களையும் எதிர்க் கட்சியினரையும் சிறுபான்மையினரையும் தாக்குவதற்கு பொலிஸ், இராணுவத்தை விட இந்தக் கும்பல் ஒரு சிறந்த ஆயுதம். அவர்கள் விரும்பும் வெற்றி கிடைக்கிறது. அதாவது அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கும் சந்தர்ப்பங்கள் குறைவடைகின்றன. இதன்மூலம் ஏதேனும் ஒருவிடயம் குறித்து பகிரங்க கலந்துரையாடலை முன் வைத்து கருத்துருவாக்கத்தை மேற்கொள்வது தடுத்து நிறுத்தப்படுகின்றது. ராஜபக்‌ஷக்கள் இதற்கும் எமக்கும் தொடர்பில்லை என அப்பாவித்தனமாக சொல்லலாம். காடையர் கும்பலைப் பயன்படுத்தி சில பரிசோதனைகளை அரசாங்கம் முன்னர் செய்திருந்தது.
 
சிறிகோத்தா மீதான தாக்குதல்கள், பொதுநலவாய மாநாட்டின் போது பி.பி.ஸி. செய்தியாளர்கள் வடக்கிற்குச் செல்லாமல் தடுக்கப்பட்டமை போன்றவற்றைச் சுட்டிக் காட்டலாம். ஜனவரி 2014 இல் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி ஒன்று பௌத்த மதகுருமார் தலைமையிலான காடையர் கும்பலின் அத்துமீறிய பிரவேசத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
 
அதன் பின்னர் மே மாதத்திலும் இவ்வாறான கும்பல் ஒன்றின் ஆர்ப்பாட்டத்தை காரணம் காட்டி இன்னொரு செயல் அமர்வும் தடுக்கப்பட்டது. இராணுவம் குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகத்திற்கு தான் அழுத்தம் கொடுத்தாதாக வெளியான குற்றச்சாட்டுகளை மறுத்து குறிப்பிட்ட செயல அமர்விற்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த முயல்கிறார்கள் என்ற தகவல் மாத்திரம் எமக்கு கிடைத்தது, அதனால் எச்ரிக்கை விடுத்தோம் என தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 7ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றுக் கொண்டு இருந்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கான இன்னொரு செயல் அமர்வும் திட்டமிட்ட முறையில் செயற்பட்ட காடையர் கும்பல் ஒன்றினால் தடுக்கப்பட்டது.
 
aluthgama%2055122.jpg
 
இதனை விட வேடிக்கையானது ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றாமல் பொலிஸார் செயலமர்வை நிறுத்தியமைதான். மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு சம்பவங்களிலும், உத்தரவின் பெயரில் செயற்படும் காடையர் கும்பலும், பொலிஸார் அல்லது இராணுவத்தினரும் ராஜபக்‌ஷக்களின் எதிராளிகளைப் பலவீனப்படுத்துவதிலும், சிறுபான்மையினரை அச்சுறுத்துவதிலும், இணைந்து செயற்பட்டனர். வாக்காளர்களைக் கவருதலிலும், தேர்தலில் வெற்றி பெறுதலிலும் ராஜபக்‌ஷக்களின் போக்கு கிரேக்கக் கும்பலின் ஆட்சியை ஒத்ததாக அமைந்தது.
 
இலங்கையிலும் இது இலங்கைக்கே உரிய குணாதிசயங்களுடன் காணப்படுகிறது. இங்கு அந்தக் கும்பல்கள் சுயாதீனமாகச் செயற்படவில்லை. மாறாக நாட்டின் ஆட்சியாளர்களின் கைகளில் அவர்கள் பகடைக் காய்களாக உள்ளனர். 2010 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷக்கள் மக்கள் ஆதரவின் உச்சியிலிருந்தனர். அடுத்த முறை நிலைமை ஒரு வழியில் இன்னும் சிறப்பானதாகவும் இன்னொரு வழியில் மோசமானதாகவும் காணப்படும். அவர்களுக்கு அது சிறப்பாக அமையப் போவதற்கான காரணம் - அரசமைப்பின் 18 ஆவது திருத்தம் - ஏனைய செயற்பாடுகள், நடவடிக்கைகள் காரணமாகவும் தேர்தல் போட்டிக்களம் அவர்களுக்கு சாதகமாக காணப்படும்.
 
இது ராஜபக்‌ஷக்களுக்கு எந்தத் தேர்தலிலும் சாதகமான தன்மையை வழங்கும். அதேவேளை அவர்களது கோட்டையாக விளங்கிய பகுதிகளில் ஆதரவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் , அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளும் பொருளாதாரம் குறித்து உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் சாத்தியமாகாதமையும் அரசிற்கு பிரச்சினையாக அமையலாம். - மாற்றுக் கொள்கை நிலையத்தின் கருத்துக்கணிப்பு இதனை தெளிவாக புலப்படுத்துகிறது.
 
மஹிந்த ராஜபக்‌ஷ அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆனால் இது இலகுவான வெற்றியாக அமையாது. ராஜபக்‌ஷக்களுக்கு இது தெரியும். அவர்களது செயற்பாடுகள் நம்பிக்கையை வெளிப்படுத்துவனவாக அமையவில்லை. மாறாக நிச்சயமற்ற தன்மையையும் கவலைகளையும் வெளிப்படுத்துவனாக உள்ளன. அடுத்த தேர்தலில் பொது வேட்பாளர் குறித்த நம்பிக்கைகள் யாவும் காணமற்போய்விட்டன.
 
தேர்தலில் பல எதிர்க்கட்சி வேட்பாளாகள் போட்டியிட்டாலும் அவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளாமல் ராஜபக்‌ஷ மீது தங்களது சீற்றத்தை வெளிப்படுத்தலாம். ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி., சரத்பொன்சேகா போன்றவர்கள் தங்களது ஆதரவாளாகளை உற்சாகப்படுத்தி அரச கூட்டணியின் அதிருப்தி வாக்குகளையும் கவரும் விதத்தில் செயற்பட்டால் ராஜபக்‌ஷவின் வெற்றி வீதத்தை குறைக்கலாம். இரண்டாவது சுற்றிற்கான வாய்ப்பை உருவாக்கலாம். இது ஒரு கடினமான செயற்பாடு. ஆனால் சாத்தியமற்றதல்ல. அடுத்த சில மாதங்களில் தங்களது வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக ராஜபக்‌ஷக்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சஜித் என்ற துரும்பை அவர்கள் பயனபடுத்தலாம். தங்களுடைய சிங்கள, பௌத்த ஆதரவை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காக சிறுபான்மை எதிர்ப்பு உணர்வுகளை தூண்டி விடுவார்கள், எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களை பொலிஸாரைப் பயன்படுத்தி குழப்ப முடியாது என்பதால் காடையர் கும்பலை பயன்படுத்துவார்கள்.
 
அளுத்கம சம்பவங்கள் இடம்பெற்று ஒரு மாத காலத்திற்குப் பின்னரும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட உயர்மட்டக்குழுவை இன்னமும் காணமுடியவில்லை. இதற்கிடையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ் மாணவர் ஒருவர் காடையர் கும்பலினால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. தங்கு விடுதியொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விடுதியின் பாதுகாப்பு , பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள 'ரகன ஆரக்சா' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காடையர் கும்பல் தமிழ் மாணவர்களை அச்சுறுத்தும் விதத்தில் இனவாத சுவரொட்டிகளை ஒட்டியதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
 
police%205435423.jpg
 
'இது எங்கள் நாடு; இங்கிருந்து ஓடுங்கள், நீங்கள் புலிகள்!' என்ற வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் காணப்பட்டுள்ளன. சப்ரகமுவவிலும் இன்னொரு பல்கலைக்கழகத்திலும் காடையர் கும்பலால் மாணவர்கள் தாக்கப்படுவதை நாம் மீண்டும் காணப்போகிறோம். கொழும்பில் சில பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடியிருப்பாளர்களின் விவரங்களை கோரும் விண்ணப்படிவங்கள் விநியோகிக்கப்பட்டன என அமீனா ஹுசைன் தனது கட்டுரையொன்றில் எழுதியுள்ளார். குறிப்பிட்ட படிவத்தை வழங்கிய பொலிஸ் அதிகாரி மத அடிப்படையில் பொலிஸ் நிலையங்களைப் பிரிக்கப்போகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறான படிவங்கள் எங்கிருந்து வந்தன, அவை சட்டபூர்வமானவையா, அவற்றின் நோக்கம் என்ன? முஸ்லிம்களை அச்சுறுத்துவதா? அல்லது ஜே.வி.பியின் இதயத்தையும் சிங்கள் மக்களின் வாக்குகளையும் வெல்வதா? இதற்கிடையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்து குறுஞ்செய்தியை அனுப்பிய ''பாரிய குற்றத்திற்காக’’ பொலிஸார் நான்கு முஸ்லிம் இளைஞர்களைக் கைதுசெய்துள்ளனர்.
 
ஊவா தேர்தலிற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைவதற்கு முன்னதாகவே அரசாங்கம் வன்முறைகளை ஆரம்பித்துவிட்டது. எதிர்வரும் மாதங்களில் இலங்கையர்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம் ராஜபக்‌ஷக்கள் ஒவ்வொரு தேர்தலையும் பாரிய வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதனால் எதிர்காலம் என்பது அந்த கும்பல் கையிலேயே இருக்கப்போகின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நிர்வாகம் நாட்டில் இடம்பெறும் சட்டபூர்வமான தனியார் நிகழ்வுகளை குழப்பும் வன்முறை கும்பலொன்றிற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதுடன், அந்த கும்பலுக்கு அங்கீகாரமும் வழங்கியுள்ளது. மருதானை கூட்டத்திற்கு இராஜந்திர சமூகத்தை சேர்ந்தவர்கள் சமுகம் தந்தமைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
 
poti%20pala%20sena%2054645.jpg
 
குறிப்பிட்ட கூட்டத்தில் என்ன நடைபெற்றது என்பதற்கான ஆதாரமாக இருக்கின்ற வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை புறக்கணித்துள்ள அரசாங்கம், இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதமே பதற்ற நிலைக்குக் காரணம் என உண்மையைத் திரிபுபடுத்தியுள்ளது. மத மற்றும் சமூக நிலையம் என்பது கிறிஸ்தவ தேவாலயமொன்றின் தனிப்பட்ட சொத்து. பௌத்த துறவிகள் அனுமதியின்றி உள்ளே நுழைந்தனர், கூட்டத்தை குழப்பினர், தகாத வார்த்தைகளால் திட்டினர், காணமற்போனவர்களின் உறவினர்களையும் ஏற்பாட்டாளர்களையும் மிரட்டினர். குறிப்பிட்ட கும்பலை நியாயப்படுத்தும் அரசாங்கத்தின் மனோநிலை தண்டனையின் பிடியிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்ட நிலையில் செயற்படும் இந்த கும்பலுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பை எந்தவித சந்தேகமுமின்றி உறுதிசெய்துள்ளது என்கின்றனர் சட்டத்தரணிகள். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.