Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் இழப்பு குறித்து இலங்கையிடம் ஐ.நா கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

455(8).jpg

ஐ.நா மனித உரிமைகள் பேரவை 112ஆவது அமர்வு, ஐ.நா அலுவலகத்தில் ஒக்டோபர் 07 தொடக்கம் 31 வரை நடைபெறவுள்ளது.

இந்த அமர்வுகளின் போது ஒக்டோபர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் இலங்கை பற்றி ஆராயப்படும் என்று ஐ.நா அறிவித்துள்ளது.

யுத்தம் நடந்த காலத்தில் பொதுமக்களுக்கு உண்டான இழப்புக்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தின் விசாரணை, நீதிமன்றத்தின் விசாரணைகள் கண்டுள்ள முன்னேற்றம், அரசு அல்லது அரசல்லாத வேறு நிறுவனங்களிலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறலுக்கான 'தண்டனை இன்மை' எனும் பிரச்சினை தொடர்பில் அரசின் நடவடிக்கை உட்பட பல பிரச்சினைகள் பற்றியும் இலங்கை அரசாங்கத்திடம் வினவியுள்ளது.

112 ஆவது அமர்வின் போது இலங்கை புறுண்டி, ஹைய்ட்டி, மால்டா, மொன்ரேநெக்ரோ மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீதான அறிக்கைகள் கவனத்துக்கு வரவுள்ளன.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தத்தின் 40ஆவது உறுப்புகளுக்கு அமைய, மனித உரிமைகள் பேரவையின் ஒக்டோபர் அமர்வுக்கான அதன் அறிக்கையை அரசாங்கம் ஏற்கெனவே சமர்ப்பித்து விட்டது.
 
இதில,; 2003ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் முதல் 2012ஆம் ஆண்டு காலத்துக்கான முன்னேற்றங்கள் விசேடமாக காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, ஜெனிவாவில் உள்ள ஐ.நா விசாரணை ஆணையினருக்கு அனுப்புவதற்காக மோசடியான வகையில் தகவல்கள் பெறப்படுவதாக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பாணந்துறை- மொறட்டுவையில் வார இறுதி நாட்களில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதற்காக பயண செலவுகள் கொடுக்கப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட 21 குடும்பங்கள் வடக்கிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு தாங்கள் ஏன்? கொழும்புக்கு செல்கிறோம் என்ற காரணம் தெரிந்திருக்கவில்லை. இவர்களுக்கு பணம் மூலம் ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

இவர்கள் தங்கிருந்த அறைக்கு அருகில் ஒலிப்பதிவுக் கருவிகள் காணப்பட்டன. அங்கு சில வெளிநாட்டு தூதுவராலயங்களின் பிரதிநிதிகளும் காணப்பட்டனர்.

தெளிவில்லாத, நன்கு வரையறுக்கப்படாத திட்டங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஏராளமான பணம் அனுப்பப்பட்டு வரும் வேளையில், இதுவும் நடந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/122620-2014-08-17-14-01-03.html


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.