Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலவீனமான சட்டங்களின் மத்தியில் இலங்கையில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரிப்பு

Featured Replies

 

தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் குடும்பத்தில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்களை சட்ட விரோதமானவையாகக் கணிக்கத் தவறியமையால் இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் 20 சதவீதத்தால் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த11 வயதுச் சிறுமி இலங்கைக் கடற்படையைச் சேர்ந்தவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் பற்றிய கவனத்தை ஏற்படுத்துகிறது.

காவல்துறையின் புள்ளிவிபரங்களின் படி பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளன. அதாவது கடந்த இரண்டு வருடங்களில் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் சம்பந்தமான வழக்குகள் 4,393 ஆகவும் 2010-2012 காலப்பகுதியில் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் சம்பந்தமான வழக்குகள் 3,624  ஆகவும் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் சிறுமி கடற்படையைச் சேர்ந்தவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த சந்த்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டதாக உறுதி செய்த இலங்கைக் காவல்துறை, இது தொடர்பில் மேலதிக கருத்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இத்தச் சம்பவம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இது போன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்கள் ஊடகங்களில் வெளி வருவதில்லை என பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உளவள ஆலோசனைகள் வழங்குபவரான பேராசிரியர் சாவித்திரி பர்னாண்டோ தெரிவித்துள்ளார்.    

பாலியல் பலாத்காரம் பாரிய அளவில் நடைபெறுவதாக ஆசிய மனித உரிமை கவுன்சிலின் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி அல்ஜசீராவிற்கு சாவித்திரி பர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

பிரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொழும்பிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் போது பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார். பிரீத்தி தெரிவித்ததாவது,

“சில ஆண் மேற்பார்வையாளர்கள் பெரும்பான்மையான பெண் பணியாளர்களை தமக்கான உதவியாளர்கள் போல நடத்துகின்றனர். முறைகேடான பாலியல் சொற்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை நான் முறைப்பாடு செய்தேன். இது தொடர்பில் விசாரணையும் நடந்தது. ஆனால் எந்தப் பெண் பணியாளர்களும் மேற்படி ஆண்களிற்கெதிராக எதுவும் சொல்ல மறுத்துவிட்டனர். பின்னர் நான் வேறு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். அதற்கு ஒருவாரம் பின்னர் என்னால் முறைப்பாடு செய்யப்பட்ட இருவரும் என்னைப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள். நான் வேலையிலிருந்து நீக்கப்படுவேன் என்ற பயத்தினால் நான் இது தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை.”

பிரீத்தி பலமாதங்களின் பின்பு வேலையிலிருந்து விலகினார்.  மேலும் பிரீத்தி தெரிவிக்கையில்,

“நான் தற்போது வேலை தேடிக்கொண்டு உள்ளேன். ஆனால் இன்னொரு ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிய எனக்குப் பயமாக உள்ளது. அங்கு பெண்களிற்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. இப்படியாகப் பலாத்காரத்திற்கு உள்ளானவர்களில் நான் முதலாவதும் இல்லை. இப்படியான சம்பவங்கள் மறுபடியும் நடைபெறும் என்ற பயத்தில் உள்ளேன்”.    

இது தொடர்பில் பிரீத்தி பணியாற்றிய ஸ்டார் குலோத்ஸ் மேக்கண்ட்ஸ் (Star Clothes Merchants) நிறுவனத்தின் முகாமையாளர், பர்னாண்டோ புத்திக்க  கூறுகையில், இது நிறுவனத்தின் உள்விவகாரம் எனவும் தாம் அதனைச் சரியாக அணுகியதாகவும் கூறினார். இது தொடர்பில் மேற்கொண்டு எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.  

குறைவான தண்டனை விகிதங்கள்

சம்பந்தமான 2013 இல் நடைபெற்ற ஐ.நாவின் ஆய்வு ஒன்றின் படி, ஏறத்தாள 15 வீதமான இலங்கை ஆண்கள் தாம் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சொல்கிறார்கள். அவர்களில் 65 வீதமானோர் தாம் ஒரு தடவைக்கு மேல் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதில் 5 வீதமானோரே கைது செய்யப்பட்டு தண்டனைக்குள்ளாகியுள்ளார்கள்.

நாட்டின் குற்றவியல் விதி 365 இன் பிரகாரம், பாலியல் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவர்கள்  கடுங்காவல் சிறைத் தண்டனைக்கு உள்ளாவார்கள். அந்த எதிர்கொள்ள நேரிடும். இந்தக் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடும் கொடுக்க வேண்டும்.

"இலங்கையில் காணப்படும் கலாச்சார நெறிகள் மற்றும் வழ க்கங்களினால், இந்தக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்குப் பாதிக்கப்பட்டவர்கள் தயங்குகிறார்கள். ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டமை தெரியவரின் அந்தப் பெண் அவளது சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுவாள். பாதிக்கப்பட்ட பெண் திருமணமாகாதவரெனில் அவளிற்கு வாழ்க்கைத் துணை தேடுவது பெரும்பாலும் சாத்தியமில்லாத ஒன்றாகிவிடும்", என கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் பர்னாண்டோ தெரிவித்தார்.  

பலவீனமான சட்டங்கள்

போலீஸ் செய்தி தொடர்பாளர், அஜித் ரோஹன, தாம்  பாலியல் வன்முறைகள் பற்றி விசாரிக்க குழந்தைகள் மற்றும் பெண்கள் மையம் நிறுவியதாக  அல் ஜஸீராவிற்கு  கூறினார். ஆனால் அவரால் நடைபெறும் பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கையைக் கூறமுடியவில்லை.

மேலும் அவர் தெரிவிக்கையில், பாலியல் பலாத்காரம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் தாம் உடனடியாக விசாரணை செய்து குற்றம் புரிந்தவரைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவதாகக் கூறினார்.

“நாட்டில் இருக்கும் சட்டங்கள் ஒருவர் தனது மனைவியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதை சட்டமுறையற்றதாக வரைவிலக்கணப்படுத்தாததினால், ஒருவகையில் இந்தச் சட்டங்கள் குடும்பப் பாலியல் வன்முறைகளை ஊக்குவிக்கின்றன. பெரும்பாலான பாலியல் பலாத்காரங்கள் வாழ்க்கைத் துணைக்கே ஏற்படுகின்றது. இதிலிருந்து பாதிக்கப்பட்டவர் சட்டப்பாதுகாப்பு பெற முடியாதவராக இருக்கிறார். நாட்டில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள் கணவனும் மனைவியும் சட்டரீதியாகப் பிரிந்தது வாழும் போது பாலியல் பலாத்காரங்கள் ஏற்படும் போது மட்டுமே அதைக் குற்றமாக அடையாளம் காண்கின்றது”, என பர்னாண்டோ தெரிவித்துள்ளார்.   

ஒரு தன்னை வெளிப்படுத்த பெண்விரும்பாத ஒருவர், தான் பல சந்தர்ப்பங்களில் ஒரு பகுதி நேர தொழிலாளியான தனது கணவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

“எமது நிதி நிலைமை இறுக்கமாக உள்ளது.  மற்றும் எனது கணவர் வேலை தேட முடியாமையின் பின்னர் அவர் குடிப்பழக்கத்திற்கு உள்ளானார். அடிக்கடி அவர் மது அருந்தி விட்டு என்னைத் துன்புறுத்துவார்”. என்று மேலும் அந்தப் பெண் கூறினார்.

"நான் என் கணவரை விவாகரத்து செய்ய வேண்டும் அல்லது இதைத் தாங்க வேண்டும். நான் விவாகரத்து செய்தால் வீட்டிலிருந்து விரட்டப்படுவேன்.  எனக்கு வேலையும் பெரிதாக இல்லை. வேறு எங்கும் வேலை பெற முடியும் என்றும் நான் நினைக்கவில்லை."

பாலியல் பலாத்காரம் செய்தவர் பாதிக்கப்பட்டவரை, பாதிக்கப்பட்டவர் சம்மதிக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் கடந்த சித்திரை மாதம் இலங்கையின் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவினால் முன்மொழியப்பட்டது. மேலும் இந்தச் சட்டம் குற்றம் புரிபவர்கள் குற்றமிழைக்க தயங்க வைக்கும் என்று அமைச்சர் அல்ஜசீராவிற்குத் தெரிவித்தார்.   

பாலியல் பலாத்காரத்திற்கு மேலும் பல கடுமையான தண்டனைகள்  முன்மொழியப்பட்ட போதும் அவை இன்னும் பாராளுமன்றத்திற்கு வரவில்லை.

ஆனால் பெண்ணுரிமை பெண்கள் மற்றும் ஊடக கூட்டு நிர்வாக இயக்குனரான சேப்பாளி கொட்டே கொட   இது பற்றித் தெரிவிக்கையில் அமைச்சர் முன்மொழிந்த சட்டம் பாலியல் குற்றங்களைக் குறைக்காது என்றார்.

பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் தன்னைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒரு நபரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பமாட்டார். அமைச்சர் இப்படியான முன்மொழிவுகளை திரும்பப் பெற வேண்டும் என கொட்டே கொட அல்ஜசீராவிற்கு மேலும் தெரிவித்தார்.   

இது போன்ற கருத்துக்கள் அமைச்சரால்த் தெரிவிக்கப்படுவது இது தான் முதற்தடவையல்ல. இது இவர் தனது கடமையைப் பொறுப்போடு  செய்யவில்லை அல்லது அதற்குரிய தகுதி அவரிடம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது என கொட்டே கொட மேலும் தெரிவித்தார்.   

Aljazeera இணையத்தளத்தில் வெளியான இப்பத்தி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தமிழில், இனியவன்-

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110713/language/ta-IN/article.aspx

 

 

சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய நபர் கைது

மஹரகம பகுதியில் சிறுமி ஒருவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

01-rape-latest-600.jpg
சம்பவத்தில் 16 வயது சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளதுடன்,சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சம்பவம் தொடர்பில் மஹியாங்கனையைச் சேர்ந்த  28 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.
 
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
தாதியை பாலியல் சேஷ்டை செய்ய முற்பட்ட மாணவனுக்கு பிணை
 
கிணற்றில் குளித்துவிட்டு வீடு நோக்கி வந்துக்கொண்டிருந்து தாதி ஒருவரை வழிமறித்து கட்டி பிடித்து பாலியல் சேஷ்டை செய்ய முற்பட்ட 15 வயது மாணவன் 
sexual-abuse2_3.jpgஒருவனை கலகெதர நடமாடும் நீதிமன்ற நீதவான் 50,000 ரூபா பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார்.
 
இச்சம்பவம் கலகெதர பொலிஸார் பிரதேசத்திற்குட்பட்ட எமதகம கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
 
தாதி ஒருவர் கிணற்றில் குளித்து விட்டு தம் வீடு நோக்கி வந்து கொண்டிருந்த போது மேலதிக வகுப்பு ஒன்றிற்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த குறித்த மாணவன் திடீரென தாதியை கட்டிப்பிடித்து பாலியல் சேஷ்டை புரிந்துள்ளார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த தாதி கூக்குரலிடவே தாதியின் குரலைக் கேட்டு அவரின் சகோதரரும் தந்தையும் விரைந்து அம்மாணவனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 
இச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்திய சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு பெண் பொலிஸார், மாணவனை நீதவான் மகிந்தலியானகே முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதவான் அம்மாணவனை 50,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்து விசாரணையை பிரிதொரு தினத்திற்கு ஒத்துவைத்துள்ளார்.
 
கடற்கரையோரத்திலிருந்த பிரித்தானிய பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்!
 
 
beach-people.jpgகடற்கரையோரத்தில் உலாவிக்கொண்டிருந்த பிரித்தானிய யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பொத்துவில் அறுகம்பை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
 
அறுகம்பை, குடாக்கள்ளி கடற்கரையோரத்தில் உலாவிக்கொண்டிருந்த பிரித்தானிய பெண்ணொருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
 
சம்பவத்தில் பாதிகப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.