Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களே யாழ்ப்பாணத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்! - யாழ். படைத் தளபதி குற்றச்சாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
uthya-perera-200514-150.jpg

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் தாம் தொடர்ந்து அங்கு வாழ்வதற்காக யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து, குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக, குற்றம்சாட்டியுள்ளார் யாழ். படைகளின் தளபதி உதய பெரேரா. நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட 11 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்களிடமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்ட வெளிநாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டனர்.

  

விமானம் மூலம் வந்த இவர்களை யாழ். படைகளின் தளபதி உதய பெரேரா பலாலியில் வரவேற்றார். பின்னர் இடம்பெற்ற சந்திப்பின்போதே வெளிநாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களிடம் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா உட்பட அவுஸ்ரேலியா, கானா, சாம்பியா, நெதர்லாந்து உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர். யாழ். குடாநாட்டின் சமூக, கலாசார மற்றும் சமய பின்னணி பற்றிய அடிப்படை தெளிவாக்க விளக்கமொன்றை வருகை தந்தவர்களுக்கு வழங்கிய கட்டளைத் தளபதி, யுத்தத்தின் பின்னர் பாதுகாப்புப் படையினரால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் பற்றி தெளிவுபடுத்தினார்.

யாழ்ப்பாண மக்களின் கல்வி, பொருளாதார, சுகாதார, மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கு யாழ். கட்டளைத் தலைமையகத்தினால் சுமார் 17 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனாலும் சிவில் செயற்பாடுகளில் நாம் எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை. ஆயிரத்து 118 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்படவேண்டியுள்ளன. அவர்களில் அதிகமானோர் தற்போது வசிக்கும் இடங்களிலேயே நிரந்தரமாக குடியிருக்கத் தயார். அதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சில பிரிவினர் அரசியல் இலாபத்திற்காக அதற்கு தடை ஏற்படுத்துகின்றனர்.

புலிகள் சார்புடைய அரசியல் பிரிவினரால் இலங்கை பாதுகாப்புப் படையினர் சிங்கள இராணுவம் என்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் காட்டப்படுகின்றனர். தற்போது இராணுவத்தில் இணைவதற்கு வடக்கின் இளைஞர், யுவதிகளுக்கு வழி ஏற்பட்டுள்ளது. எனினும் புலிகள் சார்பு அரசியல் பிரிவினர் வீடு வீடாகச் சென்று இராணுவத்திலோ அல்லது பொலிஸிலோ இணைந்துகொள்ள வேண்டாம் என்று இளையோரை அச்சுறுத்துகின்றனர். இந்த அச்சுறுத்தல்களையும் தாண்டி யாழ்ப்பாணத்தின் இளைஞர், யுவதிகள் 500இற்கும் மேற்பட்டோர் இலங்கை இராணுவத்தில் இணைந்துள்ளனர்என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

jaffna-military-visit-220814-seithy%20(1

 

 

jaffna-military-visit-220814-seithy%20(2

 

 

jaffna-military-visit-220814-seithy%20(3

 

http://www.seithy.com/breifNews.php?newsID=115421&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.