Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்...

 

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’, ‘கோபுர தரிசனம் பாப விமோசனம்’ என்று சொல்வார் நந்தனார் சரித்திரக்கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார்.

ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். 13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது.ஸ்ரீர‌ங்க‌ம்

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.

இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.

இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா  நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு  நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. இத்தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம். இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 1 வது திவ்ய தேசம்.மூல மூர்த்தியாகிய ஸ்ரீரங்கநாதப் பெருமாள் 21 அடி நீளத்தில் பள்ளிகொண்ட கோலத்தில் கருவறையில் அருள்பாலிக்கிறார். கருவறைக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் கருவறை மேல் தங்க விமானம் ஜொலிக்கிறது. தங்க விமானத்தின் தெற்குப் பக்கம் பரவாசுதேவரின் தங்க சிலையும் பளபளப்புடனும் நேர்த்தியுடனும் விளங்குகிறது.

பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று வணங்களினால், வறுமை அகன்று செல்வத்திற்கு அதிபதியான சுக்ரனே நேரில் வந்து நமக்கு அருள் கொடுப்பதாக ஐதீகம். இதனால் தான் இந்த ஸ்தலத்தை சுக்ர ஸ்தலம் என பெயர் பெற்றது.

பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம்.

108 வைணவ திருத்தலங்களில் இரண்டு, இந்நிலவுலகில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.

ஸ்ரீரங்கம் பெருமாள், பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள். பூலோகத்தில் சூரிய வம்சத்தில் வந்த இட்சுவாகு என்ற மன்னன் பிரம்மன் குறித்து கடும்தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மன், இட்சுவாகு வேண்டுகோள்படி தான் தினமும் பூஜித்த வந்த திருவாராதன விக்ரமான பெருமாளை வழங்கினார்.

இந்த பெருமாள் இட்சுவாகு மன்னன் முதல் ராமபிரான் வரை சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம். திரேதா யுகத்தில் ராமாவதாரம் எடுத்த திருமால், ராவணனை அழித்தபின் அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும் போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுக்கிறார்.

அதை தலையில் சுமந்தவாறு இலங்கை புறப்பட்ட விபீஷணன் களைப்பால் ஸ்ரீரங்கத்தில் தரையில் வைக்கிறார். பின்னர் விக்ரகத்தை எவ்வளவு முயன்றும் அங்கிருந்து எடுக்கமுடியவில்லை. அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுதுவிட்டு விபீஷணருக்கு ஆறுதல் கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் தர்மவர்மன் பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார். பின்னர், காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது.

தர்மவர்மனுக்கு பின் அவரது வழியில் வந்த கிள்ளிவளவன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று கோயில் இருந்த இடம் இது தான் என்று தெரிவிக்கிறது. அந்த கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில் கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கிள்ளிவளவன் பெருமாளை தொழுது மதில்சுவரும், கோபுரமும் கட்டினான். கிள்ளிவளவனுக்கு பின் வந்த சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள்,ஆழ்வார்கள், ஆச்சார்யார்களின் தொடர்பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது. வைணவத்தின் மையத் தலைமைச்செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது.

ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களம். சிலப்பதிகாரம், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இக்கோயில் குறித்த வர்ணனைகள் உள்ளன. கோயில் தோன்றிய விதத்துக்கு ஆதாரத்துடன் கூடிய கல்வெட்டு எதுவும் இல்லை. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.

கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது.

இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில்(ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும். கோயில் தல விருட்சம் புன்னை மரம், மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.

கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார்.

அவரது திருமேனி 5 வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.

ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி. 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது.

1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான நுழைவாயில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது. ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர். நித்ய வழிபாடுகள் இன்று நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன.

வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 7மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது.

கோபுரம் ஆசியாவிலேயே பெரிது.இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம், வாத்தியத்திற்கு பெரிய மேளம், பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர்.

ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள். இதனாலேயே இந்த கோயில் பல பெருமைகளை பெருகின்றது.

மூலவ‌ரி‌ன் ‌விமான‌ம் த‌ங்க‌க் கோபுர‌ம் ஆகு‌ம். மூலவரது ‌விமான‌த்தை முத‌லி‌ல் 23 ‌கிலோ த‌ங்க‌ம் கொ‌ண்டு த‌ங்க கோபுரமா‌க மா‌ற்‌றியமை‌த்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் ‌சில முறை த‌ங்க‌ம் கூடுதலாக சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டது‌ம், மெருகே‌ற்ற‌ப்ப‌ட்டது‌ம் உ‌ண்டு. கோபுர‌த்‌தி‌ன் பாதுகா‌ப்‌பி‌ற்காக கோபுர‌த்தை‌ச் சு‌ற்‌றி ‌மி‌ன் வே‌லி அமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.

திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.

மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது

108 ‌தி‌வ்ய தேச‌ங்க‌ளி‌ல் முத‌ன்மையானது‌ம், பூலோக வைகு‌ண்ட‌ம் ம‌ற்று‌ம் பெ‌ரிய கோ‌யி‌ல் எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌ம் ‌திரு‌ச்‌சி‌யை அடு‌த்து‌ள்ள ஸ்ரீர‌ங்க‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ள ர‌ங்கநாத‌ர் ஆலய‌ம் ஒ‌ன்ற‌ல்ல, இர‌ண்ட‌ல்ல ப‌ல்வேறு ‌சிற‌ப்புகளை‌ப் பெ‌ற்ற‌த் தலமாகு‌ம். இ‌ந்த கோ‌யி‌ல் இ‌ந்த ஆ‌ண்டுதா‌ன், இவரா‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்டது எ‌ன்பது கூ‌ட அ‌றிய‌ப்படாத அள‌வி‌ற்கு பல ஆ‌யிர‌ம் ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ன் ‌பி‌ன் வ‌ந்த பல ம‌ன்ன‌ர்க‌ள் இ‌ந்த கோ‌யி‌லி‌ன் புனரமை‌ப்பு‌ப் ப‌ணிக‌ளி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ள தகவ‌ல்க‌ள் ம‌ட்டுமே ‌கி‌ட்டியு‌ள்ளது.

க‌ம்ப‌ர் ராமாயண‌த்தை அர‌ங்கே‌ற்‌றிய ம‌ண்டப‌ம் இ‌‌த்தல‌த்‌தி‌ல் உ‌ள்ளது. ராமானுஜ‌ர் சுமா‌ர் 700 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு, இ‌ந்த கோ‌யிலு‌க்கு வ‌ந்து பூஜை முறைகளை ஒழு‌ங்குபடு‌த்‌தி அமை‌த்து, இ‌ங்கேயே இரு‌ந்து‌ள்ளா‌ர். கோ‌யி‌ல் வளாக‌த்‌தி‌ல் தா‌ன் அவ‌ர் சமா‌தி அடை‌ந்து‌ள்ளா‌‌ர். அவ‌ர் உ‌ட்கா‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல் பெருமா‌ளி‌ன் வச‌ந்த ம‌ண்டப‌த்‌தி‌ல் சமா‌தி ஆ‌கியு‌ள்ளா‌ர்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன், தன் உன்னதப் படைப்பான ‘ராமாவதாரம்’ என்ற ராமாயணக் காப்பியத்தை அரங்கேற்றம் செய்ய ஸ்ரீரங்கத்தையே தேர்ந்தெடுத்தான். ஸ்ரீரங்கம் தாயார் சன்னிதி அருகே கோயில் கொண்ட நரசிம்மர் சன்னிதியில்தான் கம்பன் தன் காவியத்தை அரங்கேற்றினான்.

கம்பன் தன் காவியத்தின் புதிய படைப்பான ‘இரணியன் வதைப் படல’த்தைப் பாடியபோது, ‘மேட்டு அழகிய சிங்கர்’ என்ற திருநாமம் கொண்ட நரசிம்ம மூர்த்தி, தன் தலையை அசைத்து கம்பன் காவியம் அரங்கேற அங்கீகாரம் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், "அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர்,  கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து  தலையாட்டினார்.மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில்  இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

 வைகுண்ட ஏகாதசி இந்த மாதத்தின் இறுதியில் ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும். பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும், பாடவும் பெறும். பிரம்மாண்டமான இந்த திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு பெருமாளை வணங்குவர். அதோடு இத்தலத்தில் நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்) லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். மாசி மாத தெப்பத்திருவிழா 10 நாள் விழாவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். தவிரமாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின்போதும் வாரத்தின் சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள் வருகை இருக்கும்.

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப் படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும்.ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில்கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தரு ளுகிறார். அங்கு  காவிரித்தாய்க்கு அவர்  சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.

  சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாத்துதல், சுவாமிக்கு மார்பிலும் பாதங்களிலும் சந்தன குழம்பு அணிவிக்கலாம். சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுபத்தி, வெண்ணெய், சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.

 இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு  மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.

 கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில்  அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.

ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி  ரங்கநாதருக்கு ஜேஷ் டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய  தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த  அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல் ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.

சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, "ஆதி பிரம்மோற்ஸவம்'  என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி,  ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, "பூபதி திருநாள்' என்றே அழைக்கப் படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.

அமுத கலச கருடாழ்வார் : கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து  வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ் வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர்,  இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர  கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள்.  பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது  சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.

 ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30  மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும்  சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால்  (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஒரே சன்னதியில் மூன்று தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள்  இயகப்படுகின்றன.

இந்தக் கோயில் எப்பொழுது தோன்றியது என்று எவராலும் சொல்ல முடியவில்லை. சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்கள், சரபோஜிகள் என்று பலபேர் திருப்பணி செய்த அற்புதமான இடம் இந்த ஸ்ரீரங்கம்

.

இந்த கோயிலில் மஹாவிஷ்ணு ரங்கநாதர் என்று பெயர்தரித்து பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கிறார். அவர் மட்டுமே தனியாக சாய்ந்தபடி படுத்து ஆதிசேஷன் மீது உறங்கி கொண்டிருக்கிறார்.

அது என்ன பாம்பின் மீது படுக்கை? ஏன் கடவுள் பாம்பின் மீது படுக்க வேண்டும்?

சேஷம் என்றால் எஞ்சியது என்று பொருள். எல்லாவற்றையும் ஒதுக்கி கடைசியில் என்ன மிஞ்சுகிறது என்று பார்த்தால் அந்த இடத்திலே இருப்பவர்தான் இறைவன் என்பதே இதன் பொருள்.

 நீங்கள் உங்கள் குணம், உங்கள் தொழில், உங்கள் பெயர், உங்கள் குடும்பம், உங்கள் உடம்பு என்பதெல்லம் தள்ளி தான் யார் என்று மனதுக்குள் தேடி, இனி தேட ஒன்றுமில்லை. தேட எதுவுமில்லை என்று சுருண்டு கிடக்கிற மனோபாவம் வந்து, அந்த சுருண்டு கிடக்கிற சக்தியிலே மனம் லயிக்கும்போது அந்த சுருண்டு கிடக்கும் சக்தியின் நடுவே இருக்கின்ற ஒரு சக்தியின் பெயர்தான் இறைவன். இதைக் குறிப்பால் உணர்த்தும்படியாக உவமையாய் சொல்லும்படியாக இந்த திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொன்வேய்ந்த அழகிய விமானத்தின் கீழ் காயத்ரி மண்டபத்துக்கு முன்பு கருவறையில் நெய் தீபங்களுக்கு நடுவே அரங்கன் பள்ளி கொண்டிருக்கிறான். அங்கே இறைவன் உறங்குவது போல காட்சி தருகிறான்.

ஆனால் அது தூக்கமல்ல. அது ஒரு யோக நிலை. அரங்கன் அமைதியாக இருக்கிறான். உங்கள் எல்லோரையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறான். என்ன நடக்கிறது என்று புன்னகை தவழும் முகத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்ரீரங்கம் சாதாரண மடமல்ல. அது கோவிலும், கோவில் சார்ந்த பகுதிகளும் கொண்ட கட்டுமஸ்தான மிகப்பெரிய ஒரு நகரம். கோட்டை சுவர்களுக்கு நடுவேயும், உள்ளேயும் சித்திர வீதி, உத்தர வீதி என்று சதுரம் சதுரமாக நகரம் அமைந்திருக்க, இந்த நகருக்கு நடுவே கோயில் இருக்கிறது. சுற்றிலும் வீதிகள், நகரம், நடுவே கோயில் என்று ஸ்ரீரங்கம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.

கோயிலுக்குள் நுழைய, மண்டபத்தின் இடப்பக்கம் அழகிய கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. இது சமீபத்தியது. ஆனால் அதிலுள்ள சிற்பங்கள் மிக மிக அற்புதமானவை. அந்த கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே ஒரு மாடிப்படி இருக்கிறது. அந்த மாடிப்படியில் ஏறிப் போனால் நீங்கள் ஒரு சமதளத்திற்கு வருவீர்கள். அந்த சமதளத்திலிருந்து பார்த்தால், நாலுபக்க கோபுரங்களும், மிகப்பெரிய கோயிலின் மேற்பரப்பும், பொன்வேய்ந்த விமானமும் சூரியவெளிச்சத்தில் தகதகத்து காட்சிதரும்.

மாடியிலிருந்து கீழே இறங்கினால் இடதுபக்கம் சக்கரத்தாழ்வார் சந்நிதி. வலது பக்கம் ராமானுஜருடைய சந்நிதி. சக்கரத்தாழ்வார் இறைவனின் ஆயுதம். தீய சக்திகள் இங்கு உள்ளே நுழைய முடியாது. சக்கரத்தாழ்வாரை வணங்கி நிற்க, நமக்கு தீவினை செய்தவர்கள் அழிந்து போவார்கள். ஏவல், பில்லி சூனியங்கள் விலகிப்போய்விடும் என்று இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.

வலதுபக்கம் உள்ள ராமானுஜர் சந்நிதி மிக அற்புதமானது. இங்கே ஒரு சுதை உருவம் நகங்களோடும், கண் புருவங்களோடும், இமைகளோடும், நாசித்துவாரங்களோடும், வடிந்த உதடுகளோடும் அமர்ந்திருக்கிறது. ராமானுஜர் உள்ளே உலோகச் சிலையாய் தன் உடம்பை மாற்றிக்; கொண்டு அமர்ந்துவிட அதன் மீது குங்குமப்பூவால் சாந்து எழுப்பி அவரை பந்தனம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், அதை இல்லையென்று மறுக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

சிலை எப்படி இருப்பினும் ஸ்ரீராமானுஜர் மிகப்பெரிய மரியதைக்குரியவர். இந்து மதத்தின் புரட்சிக்காரர். ஈரமான மனம் உடையவர். இந்துக்களில் எல்லா ஜாதியினரும் வைணவரே என்று ஜாதி, மதபேதமற்று. தான் அறிந்த ஙநமோ நாராயணாங என்ற மந்திரத்தை கோபுரத்தில் ஏறி சகலருக்கும் சொன்ன வள்ளல். ஸ்ரீரங்கம் கோயில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று எழுதிவைத்த அற்புதமான ஒரு மகான்.

இவருடைய சரித்திரம் மிக சுவாரஸ்யமானது. இவருடைய சீடர்களின் சரித்திரம் மிக அற்புதமானது. குருபக்திக்கு ஸ்ரீராமானுஜருடைய சீடர்களின் சரித்திரம் நல்ல உதாரணம்.

இந்த இரண்டு சந்நிதிகளையும் தரிசித்து உள்ளே போனால் அற்புதமான கருடமண்டபம் இருக்கிறது. மிக உயரமான கருடர் சிலை இருக்கிறது. அந்த சிலை சுதையால் ஆனது. பெரிய விழிகளும், கூர்மையான மூக்கும், கூப்பிய கைகளும், படபடக்கும் இறக்கையும் கொண்டது. இந்தச் சிலையை உற்றுப் பார்க்க லேசாய் ஒரு பயம் வருவது இயல்பு. இந்த இடத்தில் தத்தை முனி என்பவர் சமாதி கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதும் உண்டு. அந்த மண்டபம் முழுவதும் அரசர்களின் சிலைகளும், சேனாதிபதிகளின் சிலைகளும் நிறைந்திருக்கும். அங்கிருக்கும் அரசர்களுடைய உருவங்களையும், உடைகளையும், தொப்பிகளையும் வியப்போடு பார்த்தவண்ணம் நீங்கள் இன்னும் உள்ளே நுழையலாம்.

உள்ளே நுழைய வலது பக்கம் பத்து படிக்கட்டுகளுக்கு மேல் ஒரு சிறிய ஆஞ்சநேயர் சிலை அமர்ந்து கைகூப்பிய நிலையில் இருக்கிறது. அந்த ஆஞ்சநேயர் மிகப்பெரிய வரம். எது கேட்டாலும் தருகின்ற சக்தி உடையவர். படிகள் ஏறி அந்த ஆஞ்சநேயரை வலம் வந்து, நமஸ்கரித்து, உங்களுடைய வேண்டுதல்களை அவரிடம் நீங்கள் தெரிவித்துவிட்டு வரலாம்.

கொடிமரம் தாண்டி இடது பக்கம் திரும்பினால் அங்கே கருப்புசாமி சிலை இருக்கும். கருப்புசாமி சிலை மரத்தாலானது. நான்கு மனைவியரோடு பீச்சாங்குழல் கையில் தாங்கி, அவர்களோடு நீர் அடித்து விளையாடுகின்ற இந்தச் சிலை சற்று பின்னப்பட்டிருந்தாலும் அந்த இடத்தின் அதிர்வுகள் மிக அற்புதமானது. அங்கே ஒரு கணம் நின்று கருப்புசாமியை தரிசித்துவிட்டு திரும்ப கோவிலுக்குள் புகுந்து, மண்டபத்தைச் சுற்றிக்கொண்டு வரிசைவழியே நகர்ந்து ரங்கநாதரை தரிசிக்க உள்ளே போனால் காயத்ரி மண்டபம்.

காயத்ரி மண்டபம் தாண்டி ரங்கநாதர் இருக்கின்ற அழகிய கருவறை. ரங்கநாதர் பாதம் முதல் உச்சந்தலை வரை அமைதியாய் தரிசித்துவிட்டு ரங்கா, ரங்கா, ரங்கா, என்று இடையறாது சொல்லி விட்டு பிரகாரத்தை வலம் வந்து கிளி மண்டபத்தில் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டு, அந்த கிளிமண்டபத்திலிருந்து தெரிகின்ற விமான ரங்கநாதரையும் பார்த்துவிட்டு வெளியே வந்து வெளிச்சுற்று பிரகாரம் வழியாக தாயார் சந்நிதிக்கு நடந்துபோக வேண்டும்.

தாயார் சந்நிதிக்கு நடந்து போகிற வழியில்தான் மிகப்பெரிய யுத்தங்கள் நடந்திருக்கின்றன. அந்நியர்கள் உள்ளே புகுந்து, எவர் எதிர்பட்டாலும் வெட்டிக் கொன்று ரத்தக்களரியான இடம் அது. அந்த இடத்தைத் தாண்டி போகும்போது வழியில் தன்வந்திரியின் சந்நிதி இருக்கிறது.

தன்வந்திரி இந்துமதத்தின் வைத்தியசாஸ்திர நிபுணர். தேவ வைத்தியர். அவரை நமஸ்கரிக்கும்போது உங்கள் உடற்குறை அறவே தீருகிறது. அவரை நமஸ்கரித்து உங்கள் உடல்பிணியை அவருக்கு எதிரே சொல்லி நோய் தீர்க்க வேண்டிக் கொள்ளலாம் அந்த தன்வந்திரியின் வலதுகையில் ஒரு அட்டைப்பூச்சியின் உருவம் இருக்கும். அந்தக் காலத்தில் ரத்தத்தைச் சுத்தம் செய்ய அட்டையை உடம்பில்விட்டு கடிக்கச்செய்து ரத்தத்தை வெளியேற்றுவார்கள். அப்படி கெட்ட ரத்தம் வெளியேற்றுகிறபோது உள்ளே புது இரத்தம் ஊறி உங்கள் உடம்பு சௌக்கியமாவது நிதர்சனம். ஆகவேதான் தன்வந்திரி கையில் மருந்தோடு அட்டையும் வைத்திருக்கிறார்.

தன்வந்திரியின் சந்நிதி தாண்டி உள்ளே போனால் மிக அழகான பெரிய மண்டபம். அங்கே நிறைய பேர் பூ விற்றுக் கொண்டிருப்பார்கள். உள்ளே நுழைந்தால் தாயாரின் சந்நிதி எதிர்ப்படும்.

தாயார் ரங்கநாயகி பொலிவும் அழகும் மிக்கவள். சுடற்தெரிக்கும் ஆபரணங்கள் கொண்டவள். பின்னப்பட்ட பழைய சிலை பின்னால் இருக்க, முன்னே ஒரு சிலை இருக்கும். அதைத் தாண்டி உற்சவருக்குத்தான் கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். உற்சவரை வணங்கி செல்வம் நிறைய வேண்டுமென்று வணங்கிக் கொண்டு வெளியேவந்தால், சிறிய மண்டபம் ஒன்று இருக்கும். உலகத்தினுடைய அற்புதமான காப்பியமான கம்பராமாயணம் அங்குதான் அரங்கேற்றப்பட்டது. கம்ப நாட்டாழ்வார் அங்கு நின்று, தன் பாட்டை உரக்கச் சொல்லி விளக்கியிருப்பார் என்று நினைக்கிற போது அந்த இடத்தை விழுந்து வணங்க உங்களுக்குத் தோன்றும்.

அங்கிருந்து வலமாகச் சுற்றி சந்தன புஷ்கரணி தாண்டிப் போனால் ஈசான்ய மூலையில் ராமருடைய சந்நிதி இருக்கிறது. மிக அழகிய வர்ணங்களால் அந்த சந்நிதியை அலங்கரித்திருக்கிறார்கள். அங்கே எப்பொழுதும் இடையறாது வேதபாராயணம் நடந்து கொண்டிருக்கிறது. சந்நிதியின் உள்ளுக்குள்ளே வரிசையாக பத்து அவதாரங்களையும் சிலைகளாக வைத்திருக்கிறார்கள். எல்லா அவதாரங்களிலும் ஆதிசேஷன் குடைபிடித்துக் கொண்டு இருக்கிறான். மூர்த்திகள் மிக ரம்மியமாக, பார்ப்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும்.

இந்த ராமர் சந்நிதி மிக முக்கியமான இடம். கோவிலில் வேறு எங்கு தியானம் செய்ய முடியுமோ, முடியாதோ இந்த இடத்திலே நீங்கள் அமைதியாக உட்கார்ந்து நிச்சயம் தியானம் செய்ய முடியும். அருகில் ஒரு தனி அறையும் இருக்கிறது. நீங்கள் கூடுதலாக ஆழ்ந்து தியானம் செய்ய வேண்டுமென்றால் அந்த அறையைத் திறந்து விடுகிறார்கள். இல்லையெனில் வேத பாராயணம் செய்யும் இடத்தில்கூட நீங்கள் அமர்ந்து தியானம் செய்யலாம். அடிக்கடி வேள்விகள் நடக்கும் இடமென்றபடியால், தினமும் வேத பாராயணம் செய்கின்ற இடமென்றபடியால் அந்த இடத்தில் கூடுதலாக ஆழ்ந்து தியானம் செய்து உங்களால் ஒரு நல்லநிலைக்குப் போகமுடியும்.

ஒரு காலத்தில் கொள்ளிடத்தில் பெருவெள்ளம் வந்து அங்கிருந்த திருக்கோயிலை மூழ்கடித்து விட்டது. வெள்ளம் வடிந்த பின் திருக்கோயில் மணலால் மூடப் பட்டது என்றும் பிறகு வெகுகாலம் கழித்துச் சோழ அரசன் ஒருவன் அந்த இடத்துக்குப் போன போது ஒரு கிளி இந்த இட

்தில் பரம்பொருள் பள்ளி கொண்டிருக்கிறது என்னும் பொருள் படும்படியான சுலோகம் ஒன்றைச் சொல்லியதாகவும் பிறகு திருக்கோயில் கண்டெடுக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது,.  “இந்த இடத்தில் தத்தை முனி என்பவர் சமாதி கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதும் உண்டு.”

தத்தை என்பது கிளிக்கு உள்ள மற்றொரு பெயர். கோயிலைக் கண்ட சோழமன்னன் துறவறம் பூண்டு அங்கேயே திருப்பள்ளி கொண்டானோ என்பது தான் அது.

மோட்சம் தரும் தலம் இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், வியாபார  விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

ஸ்ரீர‌ங்க‌த்தை வா‌ழ்‌வி‌ல் ஒரு முறை சு‌ற்‌றி வ‌ந்தா‌ல் போது‌ம், ‌நா‌ம் இ‌ந்துவாக‌ப் ‌பிற‌ந்தத‌ன் அ‌ர்‌த்த‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம். கொ‌ள்‌ளிடமு‌ம், கா‌வி‌ரியு‌ம் இர‌ண்டாக‌ப் ‌பி‌ரி‌ந்த இட‌த்‌தி‌ல் அமை‌ந்த ஒரு ‌சி‌றிய ‌தீ‌‌வினை ஒ‌த்த இடமாக அமை‌ந்து‌ள்ளது இ‌ந்த தல‌ம்.

இ‌ந்த கோ‌யிலு‌க்கு செ‌ல்வதெ‌ன்றா‌ல், அவசர அவசரமாக போ‌ய்‌ப் பா‌ர்‌க்காம‌ல், ஒ‌வ்வொரு இட‌த்தையு‌ம் ர‌சி‌த்து‌ம், அத‌ன் ‌சிற‌ப்பு ப‌ற்‌றி அ‌றி‌ந்து கொ‌ண்டு‌ம் ‌நிதானமாக செ‌ன்றா‌ல், ஒரு தெ‌ய்‌வீக அ‌ம்ச‌ம் பொரு‌ந்‌திய ர‌ங்கநாத‌‌ர் ஆலய‌த்தை வா‌ழ்நா‌ள் முழுவது‌ம் மற‌க்காம‌ல் இரு‌ப்‌பீ‌ர்க‌ள்.

ஸ்ரீரங்கம் கோயிலில் மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை.அதற்கு பதில் கோவில் பணியாளர்களை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோவில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம்பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகு ஊட்டப்படுகிறது.

இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

மூலவர் பெரிய பெருமாள் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் தென்திசை நோக்கி பள்ளி கொண்டு உள்ளார்.முதல் சுற்று திருவுண்ணாழி திருச்சுற்று, 2வது சுற்று ராஜமகேந்தின் சுற்று, 3வது சுற்று குலசேகரன் திருச்சுற்று, 4வது சுற்று ஆலிநாடான் திருச்சுற்று, 5வது சுற்று அகளங்கன் திருச்சுற்று, 6வது சுற்று திருவிக்ரமன் திருச்சுற்று(உத்திர வீதி),7வது சுற்று கலியுகராமன் திருச்சுற்று(சித்திரை வீதிகளில் குடியிருப்புகளும்,வணிக வளாகங்களும் கொண்ட பகுதிகளாக விளங்குகிறது).இந்த ஏழு திருச்சுற்றுக்களையும் உள்ளடக்கி 156 ஏக்கர் பரப்பளவில் அடையவளஞ்சான் திருச்சுற்று எனப்படும் 8வது சுற்று மதில்சுவர் அமைந்து உள்ளது.

நான்காவது திருச்சுற்றில் தன்வந்திரி சன்னதிக்கு வடபுர கோபுர வாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு.இவ்விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வரமுடியுமாதலால் இதற்கு ஐந்து குழி மூன்று வாசல் என்பது பெயர்.இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று இந்த ஐந்து குழிகளிலும் தன்கை விரல்களை வைத்து மூன்று வாசல்கள் வழியாகவும் பார்ப்பாராம்.

கோயிலின் கருவறையின் மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது.விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. விமானத்தின் அமைப்பு தாமரையின் இதழ்களில் இருந்து வெளிவரும் நிலையிலுள்ள நான்கு தங்கக்கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மகரவடிவில் உள்ள பகுதியில் தெற்கில் பரவாசுதேவர்,மேற்கில் அச்சுதர், வடக்கில் அனந்தர், கிழக்கில் வேணு கோபாலர் அல்லது கிருஷ்ணகோவிந்தர் ஆகிய திருமாலின் திருஉருவங்கள் அமைக்கப்பெற்றுள்ளன.

ஆண்டுதோறும் துலாமாதத்தில்(ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது.துலாமாதம் 30நாட்களும் மூலவருக்கும்,உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாக இருப்பதால், அது ஒரு அழகான சுற்றுலா இடத்தில் இருக்கிறது . உலகின் அனைத்து பகுதிகளில் இருந்து மக்கள் ஒரு ஸ்ரீரங்கம் பயணம் மற்றும் தங்கும் , வணிக கட்டிடங்கள் , குடியிருப்பு குடியிருப்புகள் , கடைகள், கலைக்கூடங்கள், ஒழுக்கமான விடுதிகள் , காய்கறி சந்தைகள், போக்குவரத்து தொழிலாளர்கள் நகரம் வழிகாட்டிகள் செய்ய ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் பெற காத்திருக்கிறோம் தங்கள் பரஸ்பர நன்மைகளை . நூலகம் , அழகு பார்த்து மையங்கள், உடற்பயிற்சி , இண்டர்நெட் கஃபேக்கள் , பல்பொருள் அங்காடிகள், கர்நாடக இசை கல்லூரியாக மையங்கள் , தியானம் மற்றும் யோகா மையங்கள் மேலும் ஸ்ரீரங்கம் அலங்கரிக்கின்றன . வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் பாரம்பரிய மதிப்பு மற்றும் ஈர்ப்பு கர்நாடக இசை கல்லூரியாக கற்று . ஸ்ரீரங்கம் கல்வி முறை நன்கு நாற்றங்கால் பள்ளிகள் , தொடக்க பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வடிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறிய மருத்துவ இருந்து மருத்துவமனைகள் வரை இது நல்ல மருத்துவ வசதிகள் உள்ளன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கடிகாரம் சுற்றி கடமை வரிசையில் இருக்கின்றன .

http://bhalavinpaathai.blogspot.ca/2014/04/blog-post_7156.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.