Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Surge of radical Buddhism in South Asia - தெற்காசியாவில் பௌத்தத்தின் தீவிர எழுச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

மூலம்: globaltamilnews.net 

 

Roma Rajpal Weiss தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஈசா:-

 

 

Wirathu%20on%20times_CI.jpg

Surge of radical Buddhism in South Asia - தெற்காசியாவில் பௌத்தத்தின் தீவிர எழுச்சி- Roma Rajpal Weiss தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஈசா:-

இலங்கையிலும் மியன்மாரிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள மத வன்முறைகள் பௌத்த மதகுருமார் முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைகளை தூண்டுவது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.


யூன் 15ம் திகதி இலங்கையின் தென்பகுதியில் பௌத்தர்கள் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களின் போது அளுத்கம, பேருவல, தர்ஹா நகர் பகுதிகளில் 3பேர்  கொல்லப்பட்டதுடன் 85 பேருக்கு மேல் காயமடைந்தனர். பௌத்த துறவியை முஸ்லீம் ஒருவர் தாக்கிவிட்டார் என்ற வதந்தியே இந்த வன்முறைகளுக்கு காரணம். எனினும் உண்மையில் இடம்பெற்றது பௌத்த மதகுருவின் வாகனச்சாரதிக்கும் முஸ்லீம் இளைஞர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் மாத்திரமே.


இந்த வன்முறைகளுக்கு பொதுபலசேனா என்ற பௌத்த மத அமைப்பொன்றின் மீதே குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. ஞானசார தேரர் என்ற அதன் முக்கிய தலைவர் வன்முறைகளுக்கு முன்னர் முஸ்லீம்களால் பௌத்தர்களுக்கு ஆபத்து என உரையாற்றினார்.


இதற்கு சில வாரங்களுக்கு பின்னர் மியன்மாரின் இரண்டாவது முக்கிய நகரான மண்டலாயில் வன்முறைகள் வெடித்தன, பௌத்த பெண்ணொருவர் இரு முஸ்லீம்களால் பாலியல் வல்லுறவிக்குட்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் வந்த தகவல்களே வன்முறைகளுக்கு காரணம்--இருவர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானவர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் குறிப்பிட்ட பெண்மணி தான் தெரிவித்தது பொய் என்பதை ஏற்றுக்கொண்டார் கைது செய்யப்பட்டார்.


2012 இல் ரகினில் வன்முறைகள் வெடித்த காலம் முதல் மியன்மாரில் பௌத்த –முஸ்லீம் உறவுகள் பதட்டம் மிகுந்தவையாகவே காணப்படுகின்றன. அந்த வன்முறையின் போது 1.2 மி;ல்லியன் மக்கள் இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டனர். பௌத்த மத குருமாரே காடையர் கும்பலை வழிநடத்தியதாக மனித உரிமை கண்காணிப்பகம் அவ்வேளை குற்றம்சாட்டியிருந்தது.
 
ஆசியாவில் தீவிரவாத போக்குகொண்ட பௌத்தர்களின் நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்து வருவதாக அச்சம் வெளியிடும் ஆய்வாளர்கள்,இலங்கை, மியன்மார் தாய்லாந்து போன்ற நாடுகளில் அவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவியும் ஆதரவும் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


இந்த நாடுகளில் உள்ள கடும்போக்கு பௌத்தர்கள் இஸ்லாமை பார்த்து அஞ்சுகின்றனர், இஸ்லாமியர்களுக்கு வலுவான நாடுகளின் ஆதரவுள்ளது, பணபலமுள்ளது, பல அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் அவர்களிற்கு ஆதரவளிக்கின்றனர் என கருதும் அவர்கள் அந்த மதத்தை ஒரு சர்வதேச சக்தியாக பார்க்கின்றனர், என சுட்டிக்காட்டும் சர்வதேச நெருக்கடிக்குழுவின் இலங்கை குறித்த ஆய்வாளர் அலன் கீனன் இதன் காரணமாக பௌத்தர்கள் தங்களுக்கு ஆபத்து என கருதுகின்றனர், அதன் தொடர்ச்சியாக பிராந்திய தொடர்புகளை பயண்படுத்தி சர்வதேச வழிமுறைகளுடாக பதிலளிக்க முயல்கின்றனர்  என தெரிவிக்கின்றார்.


மியன்மாரிலும் இலங்கையிலும் முஸ்லீம்கள் மொத்த சனத்தொகையில் 10 வீதமே உள்ள அதேவேளை பௌத்தர்களே இந்த இரு நாடுகளினதும் பெரும்பான்மை மதத்தினர்.


மியன்மாரில் முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு 969 என்ற இயக்கமே காரணம் என பரவலாக குற்றம்சாட்டப்படுகின்றது. இஸ்லாமியர்கள் மீதான அச்சத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் தலைவராக விராது என்ற பௌத்த மதகுரு காணப்படுகின்றார்-   பர்மாவின் ஒசாமா-பின்-லாடன் என அழைக்கப்படும் இவரது வெறுப்புணர்வும் கசப்புணர்வும் நிறைந்த மத பிரச்சாரங்கள் பெருமளவிற்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை கக்குபவை.இவர் தனது மத போதனைகளின் போது முஸ்லீம் வர்த்தகர்களை புறக்கணிக்குமாறு கோரியுள்ளார். மதங்களுக்கிடையிலான திருமணங்களை தடுக்கும் கடும் சட்டங்களை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு மனு கொடுத்துள்ளார்.


இவ்வருடஆரம்பத்தில் விராது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு  பொதுபல சேனாவுடன் பேச்சுக்களை மேற்கொண்டார். பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தே இந்த பேச்சுக்கள் இடம்பெற்றதாக தெரியவருகிறது.


இரு அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து எதனையும் அவர்கள் பகிரங்கப்படுத்தவில்லை வெளியுலகிற்கு இது குறித்து எதனையும் அறிந்து கொள்ளமுடியவில்லை என்கிறார் தேசிய சமாதான பேரவையின் இயக்குநர் ஜெஹான்பெரேரா .


எனினும் இந்த தீவிரவாத பௌத்த குழுக்கள் எவ்வித தடையுமின்றி பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும், தாங்கள் துரோகிகள் என கருதுவோரிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், சிறுபான்மை மதத்தவர்.இனத்தவர்களின் கூட்டங்களை குழப்புவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன''


அரசாங்கத்தின் அணுகுமுறை


தேர்தல் கால வாக்குகளுக்காக பெருமளவிற்கு பௌத்தர்கள் பக்கமே சாய்ந்துள்ள அரசாங்கத்தின் நேரடி ஆதரவில்லாமல் இலங்கையில் நிலவரம் இவ்வளவு தூரம் தீவிரமடைந்திருக்காது என்கிறார் அலன் கீனன்.ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய பொதுபல சேனாவிற்கு முழுiயான ஆதரவை வழங்கவதாகவும் வதந்திகள் உண்டு.


ஷஷஇந்த குற்றச்செயல்கள் யாரும் தண்டிக்கப்படாமல் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன. பொலிஸார் தலையிடுவதில்லை, யாராவது கைது செய்யப்பட்டால் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர். நான் அறிந்தவரையில் எவரும் எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படவில்லை- ஆனால் இவர்களுக்கு எதிரான வீடியொ ஆதாரங்கள், கண்ணால்கண்ட சாட்சியங்கள் உள்ளன''


நாட்டில் தீவிரவாத போக்குடைய சிங்கள பௌத்தர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்கிறார் ஐ.நாவிற்கான முன்னாள் தூதுவர் தயான் ஜெயதிலகஷஷ காடையர் கும்பல்களை ஊக்குவிப்பதில் பௌத்த மதகுருமாரின் பங்கு குறித்துஅனைவரும் கருத்து தெரிவிக்கின்றனர், ஆனால் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எடுக்கும்என்றும் கருதவில்லை என்கிறார் அவர்.


பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதலிற்குப் பின்னர் சமூக அளவில் நம்பிக்கையின்மையும் கவலையும் அச்சமும் காணப்படுகிறது எனத் தெரிவிக்கும் அவர் ஏதாவது ஒரு வன்முறை சம்பவம் கட்டுக்கடங்காமல் போய் நாடு இன்னொரு பாரிய வன்முறையை எதிர் கொள்ளலாம் என்ற அச்சமும் காணப்படுகிறது எனத் தெரிவிக்கிறார்.
 
சமூகத்தில் ஆழமான காயங்கள்


வன்முறையால் சேதமடைந்த வீடுகளையும் கட்டடங்களையும் திருத்துவதற்கு இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர். முஸ்லிம்களின் சேதமடைந்த கட்டடங்களின் புனரமைக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கும் தயான் புனர் நிர்மானம் என்பது கட்டடங்கள் மட்டும் தான் சமூக அளவில் கவலையும் ஏமாற்றமும் விரக்தியும் காணப்படுகிறதுஎன சுட்டிக்காட்டுகின்றார்.


சமூகங்களுக்கு இடையிலான உறவில் பாரிய பாதிப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது நீண்ட காலம் நீடிக்கும் என ஆய்வாளர்கள் அச்சம் வெளியிடுகின்றனர். மத தீவிரவாதம் மற்றும் வன்முறை தொடர்பான செயலணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் தயான்.


இலங்கை அரசு இவ்வாறான சூழலை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்பதை வெளிநாட்டு அரசாங்கங்களும் ஐ.நா. உம் வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பிடும் கீனன் இலங்கை மியன்மார் அரசாங்கங்களுக்கு இரு நாட்டு தீவிர பௌத்த குழுக்கள் மத்தியிலான தொடர்புகளை துண்டிக்குமாறும் சர்வதேச சமூகம் கேட்டுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கின்றார்.
 

Roma Rajpal Weiss தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ஈசா:-

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111041/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=145107

 

இந்தச் செய்தியை முன்பே.... நாம் வாசித்து விட்டோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.