Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யோன் ரங்கினிடம் மகஜர் கையளிப்பு -

Featured Replies

Saji_CI.JPG

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யோன் ரங்கினிடம் வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றக் குழுவின் தலைவரும் வலிவடக்கு பிரதேச சபையின் உப தவிசாளருமாகிய சண்முகலிங்கம் சஜீவனால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்த மகஜரில் வலிகாமம் வடக்கில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் வலிகாமம் வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தைத் தடுத்து வேறு பிரதேசங்களில் குடியேற்றப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. 

சீமெந்து ஆலை உடைக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் வெளி இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதால் வலி வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் வேலை வாய்ப்பின்றி முகாம்களில் வாழ்வதாகவும், முகாம் காணி உரிமையாளர்களால் முகாம் மக்களை வெளியேற்ற முற்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் எடுத்துக்ப் கூறப்பட்டதாக சஜீவன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார்.
 

 

 

 

To :

Mr.John Rankin

British High Commissioner,

Colombo.

Resettlement in Valikamam North

 

The Valikamam North area situated at the northern part of Jaffna District comprises of 45 Grama Niladhari divisions (Village headman). People of this area got displaced in 1990 due to the war situation.

 

Out of these, resettlement was allowed fully in 21 Grama Niladhari divisions and partly in 08 Grama Niladhari divisions. The balance areas of the 08 Grama Niladhari divisions and the whole areas under the 16 Grama Niladhari divisions have not been allowed for resettlement.

 

Due to this, 34,368 people from 9968 families have to be resettled in this area with 25 sq.meters and 6500 acres of land. For the last 24 years these people are living in welfare centers, and with their friends and relatives. In addition several places of worship are getting ruined due to lack of maintenance.

 

These people, whose main livelihood earnings are agriculture and fishing, have lost their means of earnings and are leading a miserable life with the relief too having been stopped. In addition to these people, there are thousands of people of this area living as refugees in India and other countries are to be resettled in this area.

 

The security forces are forcibly occupying this area under the cover of "Security" and are refusing to allow the people to resettle in  the area by ignoring the order made by the Supreme Court in a case filed in 2003.

 

The statement that the security forces can acquire any land, without consulting the owners of lands and the Members of Parliament who are the elected representatives of the people is not acceptable. Establishment of Tourist Hotels and yoghurt factories by the army in this area too cannot be considered as security purposes.

 

Furthermore, there is no necessity to keep these lands owned by the people by the Army under the pretext of harbour development and airport development. All these were under the civil administration earlier and there can be no problem to anyone in continuing with thatarrangement.

 

A proposal to establish an Airport at Weeraketiya in Hampahtota in southern Sri Lanka was abandoned due to the objections by the farmers of that area and it was shifted to a different site. However what is the justification for grabbing the lands belonging to the Tamil farmers and fishermen? Why cannot it be handled in the same way? as it was handled at weraketiya.

 

Amidst all these, the owners of the lands in which the displaced people are living are pressurizing them to vacate their lands.

 

We would like to point out about the resolution passed by the United Nations Human Rights Commission based on the recommendations of the Learned Lessons and Reconciliation Commission appointed by the President to allow the displaced people to resettle in their own lands.

 

Further the committee wishes to bring your Excellency’s notice that the armed forces stationed in the area, Are still being engaged in the destruction and demolishing the houses, temples, school shopping complexes and other buildings and earnestly appeal and request your Excellency to prevent armed forces from further engaging in such distraction.

 

Under these circumstances, we request you to allow the people of this area to resettle in their own lands and ensure their own occupations at the earliest.

 

We believe that only international community can help us to solve our problems and

sorrows.

 

 

 

On behalf of the Valikamam North

Resettlement  & Rehabilitation Committee

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111187/language/ta-IN/article.aspx


முல்லையில் பிரி.தூதுவர் சென்ற வீட்டுக்குப் புலனாய்வுப் பிரிவினரும்! 
 
british%20321.jpg
 
வடக்கு மாகாணத்துக்கு மூன்று நாள் விஜயமாக நேற்று வந்து சேர்ந்த பிரித்தானிய தூதுவர் ரன்கினும் அவரது பிரதிநிதிகளும் இன்று நண்பகல் 12.15 அளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 3 குடும்பங்களை அவர்களின் இல்லங்களுக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர். அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் கேட்டு அறிந்தும் கொண்டனர். அதேவேளை சற்று முன்னர் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அவர்கள் பார்வையிட்ட இல்லங்களில் ஒன்றுக்குச் சென்றுள்ள இராணுவ புலனாய்வுத் துறையினர் அக்குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர் என அறிய முடிகிறது என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
 
வலிகாமம் வடக்கு பிரதேச சபை உபதலைவர் சஜீவன் அவர்கள் இந்த ஏற்பாட்டுக்கு உதவியாக இருந்தார் .புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 3 குடும்பங்களைப் பார்வையிடுவதால், இதனை வடமாகாணசபை உறுப்பினர் மேரிகமலா குணசீலன் அவர்களுக்கும் தெரியப்படுத்தி இச்சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தேன். மக்களின் 3 வீடுகளுக்கும் சென்ற பிரித்தானிய உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஒவ்வொரு வீடுகளிலும் மக்களின் கருத்துக்களை பொறுமையாக கேட்டறிந்தனர்.
 
தற்போதைய வரட்சி நிலை, உள்ளக வீதிகள் திருத்தப்படாமையால் மக்கள் படும் சிரமங்கள் மீனவர்கள், எதிர்நோக்கும் தொழில் பிரச்சினைகள், விவசாயிகளின் நிலை, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட வெளியே வந்த இளையோர் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் உட்பட சகல விடயங்களையும் மக்களிடம் கேட்டு அறிந்த அவர் இவ்விடயங்களில் தாங்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவர் என்றும் அம்மக்களுக்குத் தெரிவித்தனர். இறுதியாக வலி வடக்கு பிரதேச சபை உபதலைவர் சஜீவன் அவர்கள் பிரதிநிதிகளிடம் மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தார். என்றார். சற்று முன் கிடைத்த தகவல்களின் படி , பிரித்தானிய தூதுவரும் குழுவினரும் பார்வையிட்ட இல்லங்களில் ஒன்றுக்குச் சென்றுள்ள இராணுவ புலனாய்வுத் துறையினர் அக்குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர் என அறிய முடிகிறது. - என்றார்.
 
british%20322.jpg
 
british%20324.jpg
 
british%20323.jpg
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.