Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் வசித்திரமான வழக்கம் இருந்தது. பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்..

எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.

இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!

ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.

உடனே, அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான் நடந்து கொண்டே.

அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?

இங்கே போடப்பட்டுள்ள கிளைகளின் வாசனையைக் கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.

"வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயார் பயனற்றவரா? என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன்வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .

அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டில் வசித்திரமான வழக்கம் இருந்தது. பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்..

எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.

இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!

ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.

உடனே, அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான் நடந்து கொண்டே.

அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?

இங்கே போடப்பட்டுள்ள கிளைகளின் வாசனையைக் கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.

"வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயார் பயனற்றவரா? என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன்வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .

அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.

 

இதே மாதிரி இன்னுமொரு கதையும் உண்டு, யாயினி!

 

ஒரு காதலன், தனது சுயநலம் பிடித்த காதலியிடம்... உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்..தருகிறேன் என்கிறான்!

 

அந்தக் கபட மனம் கொண்ட காதலியும், அவனது அம்மாவினது இதயத்தைக் கொண்டு வந்து தரும்படி கேட்கிறாள்!

 

அவனும், தாயைக்கொன்று அவளது இதயத்தைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வரும்போது.. கல் தடுக்கிக் கீழே விழுகிறான்!

 

அப்போது அந்தத் தாயின் இதயம்.. அவனது கையிலிருந்து விலகிக் கொஞ்சத் தூரத்துக்கு உருண்டு போய்க் விழுந்து கிடந்தது!

 

அந்த இதயத்திலிருந்து, ஏக்கத்துடன் ஒரு கேள்வியும் வந்தது!

 

எங்காவது அடி பட்டிருக்கிறதா மகனே என்று..!!! :o

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று[20.01.2015] தை அமாவாசை .அபிராமிப்பட்டர் தினம் .

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

ஸ்ரீ அபிராமிப்பட்டரைப் பற்றி ..

 

Abirami_Ma.jpg

இந்தியாவின் பொன்னி நன்னதி பொய்யாது பாயும் சோழ நாட்டிலேதிருக்கடவூர் என்ற பதியிலே அன்னை அபிராமி அம்மனுக்கு ஓர் ஆலயம் இருக்கின்றது .ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் சரபோஜி மன்னன் ஆட்சிபுரிந்த காலம் .திருக்கடவூரிலே அந்தணர் மரபில் தோன்றிய ''சுப்பிரமணியர் ''என்னும் பெயருடைய பக்தர் இசைக்கலையிலே வல்லவராய் விளங்கினார் .இவர் அரசவையிலேபஞ்சாங்க கணிப்புக்களைச் செய்வதில் பனி புரியும் ஒருவர் .இவ் வடிகளார் அபிராமி அம்மனை ஒளி வடிவமாகக் கண்டு பேரின்பத்தில் ஆழ்ந்து விடுவார் .இவருடைய ஆழ்ந்த பக்தியை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை .இவர் பித்தர் போல உலகப் பற்று அற்றவராய் விளங்கினார் .அன்று அமாவாசை தினம் சரபோஜி மன்னன் திருக்கடவூர் அம்மனுடைய ஆலயத்துக்குள் வந்தார் .சுப்பிரமணியர் அச் சந்நிதியில் தியான நிலையில் உலகையே மறந்து அமர்ந்திருந்தார் .அவருடைய முகத்தில் புத்தொளி வீசியது .மன்னர் ''இவர் யார் ''? என அங்கிருந்தவர்களைக் கேட்டார் .

அரசவையில் பணிபுரியும் .இவர் ஒரு பித்தர் போன்றே நடந்து கொள்கின்றார் என்று அங்கிருந்தோர் கூறினார்கள் .மன்னன் பட்டரின் பக்கத்தில் நின்று ''இன்றைக்கு என்ன திதி '' என்று கேட்டார் .அம்மையை ஒளி வடிவமாய் கண்ட பட்டர்'' பௌர்ணமி '' என்று கூறினார் .அரசன் இவர் பித்தர் .மனநிலை சரியில்லாதவர் என்று எண்ணினார் .மன்னன் அரண்மனைக்கு திரும்பிய பின் சுய நினைவு வந்த பட்டர் நடந்த சம்பவத்தை எண்ணி அழுதார் .ஆலயத்திலே அக்கினிக் கிடங்கு அமைத்தார் .நூறு இழைகளில் உறி அமைத்தார் .அதில் அமர்ந்தார் .அம்பிகையை நோக்கி ''உதிக்கின்ற செங்கதிர் '' என்று ஆரம்பித்துப் பாடத் தொடங்கினார் .ஒவ்வொரு பாடலாகப் பாடினார் .ஒவ்வொரு பாடல் முடிவிலும் உறியின் ஒவ்வொரு இழை அறுக்கப்பட்டது .சூரியன் மறையும் நேரம் வந்து விட்டது .எழுபத்தொன்பதாவது பாடல் முடிந்து விட்ட நேரம் அபிராமியின் காட்சி: அன்னை தனது காதணியை வீசிப் பூரணை ச் சந்திரனாய் வானத்தில் காட்சி அளித்தாள்.அரசனும் அங்கிருந்தவர்களும் வியக்க வானத்தில் ஒளி தெரிந்தது .சுப்பிரமணியர் ''அபிராமிப்பட்டர் '' என்று அழைக்கப்பட்டார் .பட்டர்நூறு பாடல்காளையும் பாடினார் .அபிராமி அந்தாதி அன்னை அபிராமியின் அருளால் பாடப்பெற்றது .

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியகாலை வாழ்த்துக்கள்....

 

188850_192443164122840_5335032_n.jpg?oh=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by யாயினி

நல்ல கதைகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்.....

 

10626375_929115913768391_590421760811490

உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Dr.jeyanthashree...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வாழ்த்துக்கள்....

 

1383407_547686231972929_781761477_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1391550_547264768681742_318466910_n.jpg?

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

539712_512445695496983_483192857_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தறிவு

உயிர்களுக்கு உள்ள பாசத்தில் ..

ஒரு துளி கூட

சில மனிதர்களுக்கு இருப்புது இல்லை...

ஐந்தறிவு

உயிர்களுக்கு உள்ள பாசத்தில் ..

ஒரு துளி கூட

சில மனிதர்களுக்கு இருப்புது இல்லை...

 

உண்மை தான் அக்கா...

என்ன ஆயிற்று ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்.....

 

180158_187958487904641_5748819_n.jpg?oh=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மித்திரன் வாரமலரில் வெளிவந்த  பேட்டி  '(நிலவைத்தேடும் வானம் வெற்றிக்கு பின்னர் )

 

1015184_340709529391730_1372761051_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய ஞாயிறு காலை வணக்கங்கள்..

 

265351_227221343978355_7422234_o.jpg

 

268432_227220303978459_4595008_n.jpg?oh=

 

Osoyoos-Pocket-Desert in british colombia.பிரிட்டிஷ்கொலம்பியாவில் உள்ள குட்டிப் பாலைவனம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – குரு (Jupiter)

ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்ய மாட்டார்கள். தனக்கு எதிரியான 6 எண்காரர்களுக்கும் இவர்கள் நன்மையே செய்வார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு உதவாமல், பல பிரச்சினைகளைக் கொடுப்பார்கள். தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள்.

தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று மட்டும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். முகஸ்துதி செய்வதன் மூலம் மற்றவர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்க மாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை அணிகிறோம் என்று மட்டும் நினைப்பார்கள். அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். சுயகௌரவம் பார்ப்பது இவர்களது குறைபாடாகும். இதனாலேயே பல நல்ல வாய்ப்புகளை இவர்கள் வாழ்க்கையில் இழந்திருப்பார்கள். இவர்கள் பழைய சாத்திரங்கள், பழைய பழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளை மீறப் பயப்படுவார்கள்.

பெயர் கெட்டு விடுமோ என்று பெரிதும் அஞ்சுவார்கள். உயிருக்குச் சமமாக கௌரவத்தைக் காப்பாற்றுவார்கள். இவர்கள் அடுத்தவர்களின் வேலைக்காக மிகவும் அலைவார்கள். இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, விதி, நேர்மை, பாலம் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள். இவர்கள் சுதந்திரமாக வாழவே பிரியப்படுவார்கள். கோயில் நிர்வாகம், ஊர்த்தலைமை போன்ற பதவிகளில் கௌரவமாக (ஊதியம் பெறாமல்) வேலை செய்ய விரும்புவார்கள். அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். சில சமயங்களில் ஆவேசமாகவும் எதிர்ப்பார்கள். கையில் பணமிருந்தால் அழுகுக்காகவும், சிக்கனத்திற்காகவும் (தேவையைப் பற்றிக் கவலைப்படாமல்) பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வார்கள்.

சொத்துக்கள் விஷயத்திலும் விட்டுக் கொடுக்கும் குணம் அதிகம் உண்டு. ‘‘என் தம்பிதானே வைத்துக் கொள்ளப் போகிறான், வைத்துக் கொள்ளட்டும்.’’ என்று எதார்த்தமாக நினைப்பார்கள். தங்களத உரிமையை விட்டுக் கொடுத்து விடுவார்கள். இந்தக் குணத்தால் பல அன்பர்கள் பிற்காலத்தில் கவலைப்படுவார்கள். இவர்கள் தீனிப்பிரியர்கள். காபி, டீ, டிபன் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள். குரு ஆதிக்கம் நன்கு அமையப் பெற்றவர்கள். அன்பிலும், பக்தியிலும், சிறந்தவர்கள்.

ஏதாவது ஒரு துறையில் தனித் திறமையைக் காட்டுவார்கள். தேசப்பற்றும் நினைந்தவர்கள். பிறந்த நாட்டிற்காக உயிரையும் கொடுக்கத் தாயராவார்கள். பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்திருப்பார்கள். பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தோன்றினாலும், வெள்ளை மனதுடன் மற்றவர்களிடம் பழகுவார்கள். ஆனால் குரு பலம் குறைந்தவர்கள் கடன் என்னும் பள்ளத்தில் விழுந்து விடுவார்கள். சிந்திக்காமல் பல காரியங்களில் இறங்கித் தாங்களே சிக்கிக் கொள்வார்கள். சில அன்பர்களுக்குக் காதல் தோல்விகளும் ஏற்பட்டிருக்கும்.//

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1960 காலங்களில் இருந்து பாலபோதினியில் காணப்பட்ட "ஈ" -ஈழம்

 

10351955_837044569670809_727229850633119

சிங்கப்பூர் அரச நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் 2015 நாட்காட்டியில் தமிழ் நாட்களும். #தை 1

 

10892027_820047594703840_426190852111608

அப்பிடி இருந்த ஈழம் இப்ப ஊதி பெருசாயிட்டு
 
Tamil-flag.gif
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபல்யமான உணவக ஊழியர் ஒருவருக்கு கெப்பரைட்டிஸ் ஏ காணப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து சனிக்கிழமை நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பூசி பெறுவதற்காக Guelph பகுதியில் குழுமினர்.
வெல்லிங்டன் பகுதியில் வேர்குஸ் என்ற இடத்தில் உள்ள பிரபல்யமான உணவகமான Marj’s Village Kitchen உணவு கையாளுநர் ஒருவருக்கு குறிப்பிட்ட தொற்று நோய் கண்டிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அப்பகுதி பொது சுகாதார பிரிவினர் வியாழக்கிழமை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
இது வரை 1250-ற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
Marj’s உணவகத்தில் ஜனவரி மாதம் 2-ந் திகதிக்கும் ஜனவரி மாதம் 20-ந் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் உணவருந்தியவர்கள் அவசியம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
காய்ச்சல், குமட்டல், வாந்தி ,அடர் நிற சிறுநீர், கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாதல் போன்றன இந்நோய்க்கான அறிகுறிகள் என கூறப்பட்டுள்ளது..

 

1920208_334397543428267_6313861994847907

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்.....

 

1965500_919149218125853_3254208788039033

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா நாள் (Australia day) என்பது ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளன்று ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய ரீதியாகக் கொண்டாடப்படும் நிகழ்வாகும். இது ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக பிரித்தானியக் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூரும் முகமாக கொண்டாடப்படுகிறது. 1788 இல் இந்நாளில் நியூ சவுத் வேல்ஸ் ஜாக்சன் துறையில் ஆளுநர் ஆர்தர் பிலிப் என்பவரால் முதலாவது குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா நாள் நாடு முழுவதும் ஒரு பொது விடுமுறை நாளாகும்.

முதலாவது ஆஸ்திரேலியா நாள் 1808 ஆம் ஆண்டில் கொண்டாடப்படட்து. அப்போது ஆளுநராக இருந்த லக்லான் மக்குவாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 2004 ஆண்டில்இ கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மக்கள் நாடெங்கும் நிகழ்ந்த வைபவங்களில் கலந்து கொண்டனர்.
 

 

1280px-Flag_of_Australia.svg.png

 

 

Australia Day Picnic, Brisbane, 1908

 

Australia_Day_Picnic_1908.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கங்களுடன் gσσ∂ мσяηιηğ ђคνє д ηι¢є ∂αу...

 

 

420951_372042349537319_1435294814_n.jpg?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.