Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேமாப் பூ

 

1517841_976475839059857_3201447280192896

 

 

10376826_976475829059858_390893330830820

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1960947_111923019139146_7494477079393737

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்,

இந்நாள் இனிதாகட்டும்...

10430469_1537805323145297_82331033386566

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11194392_10155608334955637_9203634482142

மே 18இல் முள்ளிவாய்க்காலில் அலையென அணிதிரள்வோம்.

முள்ளிவாய்க்காலில் எங்கள் உடன்பிறப்புக்களை, எங்கள் புதல்வர்களை, புதல்விகளை, தாய்மாரை, கர்ப்பிணித்தாய்மாரை, முதியோரை, நோயுற்றோரை, பசித்திருந்தோரை, நடக்க முடியாது இளைத்திருந்தோரை சிங்கள கொலை இயந்திர இராணுவம் ஈவிரக்கமின்றி சுமாராக ஒன்றரை லட்சம் மக்களை கொன்று குவித்தது. 

சுமாராக பத்தாண்டு கால வியட்நாம் யுத்தத்தின் போது மொத்தம் முப்பது லட்சம் வியட்நாமிய மக்கள் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். அதன்போது மொத்தம் 58 ஆயிரம் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். அக்காலத்தில் வியட்நாமிய ஜனத்தொகையின் படி சுமாராக 6 வீத மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் (1975 ஆண்டு கணக்கின் படி அன்றைய வியட்நாமிய ஜனத்தொகை சுமாராக 5 கோடியே 25 இலட்சம் ஆகும்). 

ஆனால் முள்ளிவாய்க்காலில் ஒரு வருட காலத்தில் சுமாராக ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசாங்க பதிவேடுகளின் படி அந்தக் காலகட்டத்தில் வன்னியில் மொத்தம் 4 இலட்சத்து 20 ஆயிரம் பேர் இருந்துள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்தபோது முள்வேலி முகாம்களில் எஞ்சிய மக்கள் தொகை அரசாங்க கணக்கின் படி 2 இலட்சத்து 70 ஆயிரம் பேர். எனவே இங்கு கணக்கில் இல்லாத ஒன்றரை லட்சம் பேரும் கொல்லப்பட்டோர் ஆவர்.

இந்த கொல்லப்பட்ட மக்களின் தொகையை அங்குள்ள மொத்த மக்கள் தொகையோடு வீதாசரப்படுத்தி பார்த்தால் சுமாராக மூன்றில் ஒரு பங்கினர் அல்லது 30 வீதத்திற்கு மேல் கொல்லப்பட்ட மக்களின் வீதாசாரம் அமைகிறது. அதுவும் ஒருவருடத்தில் இப்படி இந்த வீதாசாரம் காணப்படுகிறது. ஆனால் வியட்நாமில் 6 வீத மக்கள் கொல்லப்பட்டதுடன் அதுவும் பத்தாண்டு கால இடைவெளியில் நிகழ்ந்துள்ளது. அப்படியென்றால் வியட்நாம் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொகையின் வீதாசாரத்தைவிடவும் பல மடங்கு முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டோரின் வீதாசாரம் அமைகிறது. 

இப்படிப் கணித்துப் பார்த்தால் எங்களின் மீது புரியப்பட்ட இனப்படுகொலையின் அளவானது உலக வரலாற்றில் பெரிதாகப் பேசப்படும் வியட்நாமில் கொல்லப்பட்ட மக்கள் அளவைவிட மிகப்பெரியது என்பதை புரிந்து கொண்டால் எமக்கு ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கொடூரத்தை நாம் இலகுவாக புரிந்து கொள்ளலாம். 

வியட்நாம் யுத்தம் முடிந்து ஏப்ரல் 30ஆம் தேதியோடு 40 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனாலும் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வியட்நாமில் நிகழ்ந்த நினைவுநாள் உரையின்போது வியட்நாமிய பிரதமர் கோபம் கக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி, கடும் சொற்களைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவத்தின் கொலைக்கு எதிராக பேசியிருந்தார். 

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 6 ஆண்டுகள்தான் ஆகின்றது. உறைய மறுக்கும் மக்களின் இரத்தின் பாய்ந்த நிலத்தில், அந்த முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அலையென திரண்டு மரியாதை செலுத்த வேண்டிய பொறுப்பும், அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடைய அந்த இடங்களில் பிரார்த்தனை செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் பெரிதாக உண்டு. 

கொல்லப்பட்ட எங்கள் மக்களுக்காக சர்வதேச விசாரணை வேண்டாம் என பதவியில் இருக்கும் சிறிசேன - ரணில் அரசாங்கம் மறுக்கிறது. ஆனால் தமிழ் மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்த இந்த புதிய அரசாங்கம் குறைந்த பட்சம் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மத கிரியைகளையோ, பிரார்த்தனைகளையோ, மரியாதை செலுத்துவதையோ இலகுவில் தடுக்க முடியாது. ஆதலால் தமிழ் மக்கள் இத்தருணத்தை பயன்படுத்தி முள்ளிவாய்க்காலில் பெரு வெள்ளமென திரண்டு கொல்லப்பட்டவர்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடி தமது வரலாற்றுக் கடமையை செய்வார்களாக.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுர் ஆட்சிசபை உறுப்பினர்கள் என அனைத்து வகை மக்கள் பிரதிநிதிகளும் இப்பணியில் முன்னின்று செயற்படவேண்டியது அவர்களது வரலாற்றுக் கடமையாகும். 

கொல்லப்பட்ட மக்களைச் சார்ந்த மதத் தலைவர்கள், மத குருக்கள், மத போதகர்கள் தத்தம் மத முறைகளுக்கு ஏற்ப கொல்லப்பட்ட மக்களின் ஆன்மா சாந்தியடைய முள்ளிவாய்காலில் அன்றைய தினத்தில் ஒன்றுகூடி அம்மக்களுக்காக விசேட மத பிரார்த்தனைகளை புரிவார்களாக.

வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு.சிவாஜிலிங்கம், திரு.இரவிகரன் மற்றும் பலர் மே 12ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் தீபமேற்றி மரியாதை செய்யும் வைபவத்தை முன்னோடிகளாக நின்று ஆரம்பித்து வைத்துள்ளமையானது அவர்களது வரலாற்றுக்கடமையை உணர்த்தி நிற்கிறது. அதேபோல யாழ்பல்கலைக் கழகத்தில் இதே தினத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் தீபங்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளமை எமது இளைய சமுதாயமும் தமது வரலாற்றுக்கடமையை உணர்ந்து செயற்படுத்துகிறார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. 

ஆதலால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும், தமிழ் காங்கிரஸ் கட்சியினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள தனித் தனி கட்சிகளும் கூட்டாகவும், தனியாகவும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முள்ளிவாய்க்காலில் பெருந்திரளான மக்களுடன் பங்கேற்று முன்நின்று நடத்துவார்கள் என்பது இயல்பாகவே எதிர்ப்பார்கக்கூடிய ஒன்றுதான். 

முள்ளிவாய்க்கால் நினைவு வார அஞ்சலி விடயங்களுக்கு ஊடகங்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது. சமூகப் பொறுப்புடன் அவர்கள் இதனை ஆற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

"அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பதற்கு இணங்க மக்கள் வெள்ளத்தின் திரட்சி ஒரு தனிப்பெரும் அரசியல் சக்தியாய் உலகின் கண்களில் தெரியும் என்பது உண்மை. இந்த உண்மையை நோக்கி பொறுப்புடன் ஈழத்தமிழ் மக்கள் எல்லா வழியிலும் செயற்பட்டு தம் பங்கையும், பணியையும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று உலகிற்கு முள்ளிவாய்க்காலில் திரண்டு நின்று நிருபிப்பார்களாக.

நன்றி 

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”

தமிழீழத் தேசியச் சிந்தனையாளன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில் கொல்லப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையை கண்டித்து அதற்கு நீதிகோரி வித்தியாவின் படங்களையும் சுலோகங்களையும் ஏந்தியவாறு இன்று கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக திரண்ட கிளிநொச்சி பிரபல பாடசாலைகளான கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், தேசியப்பாடசாலை கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசாள் மகிளிர் கல்லூரி, மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலை சமுகத்தினர் ஊர்வலமாக சென்று கிளிநொச்சி கச்சேரியில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் ஜனாதிபதிக்கான மகஜரை கையளித்ததுடன் மாணவர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் தங்கள் கண்டனங்களையும் வெளியிட்டனர்.மாணவர்கள் ஜனாதிபதிக்காக வழங்கிய மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்வருமாறு.

பள்ளிச்சிறுமி பாதி வழியில் படுகொலை…!

இக்கொடூரமானகொடியகொலைமிகவும் கொதிப்புணர்வுடன் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இப்பாதகமானசெயலைச் செய்துஈவு இரக்கமற்றமுறையில் கொலையைசெய்தபாவிகளைஉடனடியாகக் கைதுசெய்துசட்டத்தின் முன் நிறுத்திதண்டிக்கவேண்டுமெனதவிக்கும் மனதுடன் மனவிரக்தியுடன் கூறுகின்றோம். இவ்வாறானசம்பவங்கள் இனிமேலும் நடக்கக்கூடாதுஎன்பதற்காகபின்வருவனவற்றைவேண்டிநிற்கிறோம்.

01. மாணவர்களதுபாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும.

02. மாணவர்களதுமாண்புகள் மதிப்பப்படல் வேண்டும்.

03. மாணவர்களின் கல்விகற்றலுக்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

04. எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளமாணவர்களினதுநிலைஉறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

05. மாணவர்களாகியஎங்களுடையஉயிரையார் பாதுகாப்பது?

06. எமதுகல்விக்கானஉத்தரவாதத்தையார் தருவார்கள்?

07. எமக்கானஅமைதியான சூழலையும் அழகியவாழ்வையும் உறுதிப்படுத்துவதுயார்?

08. நாளாந்தம் அஞ்சிஅஞ்சிகல்விகற்கமுடியாமல் நமைச்சலுக்குஉள்ளாகும் எம் வாழ்கைக்குயார் பொறுப்பு?

09. வாழும் போதிலுள்ளஎமக்கானஉரிமைகள் மதிக்கப்படுமா?

10. இன்னும் இன்னும் இது போன்றஎத்தனைதுன்பியல் அவலங்களைநாம் சந்திப்பது? எம்மை வழி நடாத்தும் மாண்புமிகு ஜனாதிபதிஅவர்களே! இதனைத் தங்கள் மேலானகவனத்திற்குத் தெரியப்படுத்துகிறோம்.

 

http://www.canadamirror.com/canada/43039.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வித்தியா சிவலோகநாதன் அவர்களுக்காக , நாளை 17.05.2015 மாலை 5 மணி தொடக்கம் கண்டனக் கூட்டமும் அஞ்சலி நிகழ்வும் கனடா ஐயப்பன் இந்து ஆலயத்தில் நடை பெற இருக்கிறது..

 

 

vidiyaa.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் 

இனிய காலை வணக்கங்கள்... 

 

988558_977172072323567_77010398583426345

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
11027954_582581925177687_207084461602057
 
உலக தகவல் சமூக நாள் (றுழசடன ஐகெழசஅயவழைn ளுழஉநைவல னுயல) என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டது.
 
இதற்கு முன்னதாக பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் 1865ஆம் ஆண்டு இந்த நாளன்று நிறுவப்பட்டதைக் கொண்டாடும் விதமாக உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள் என அறியப்பட்டு வந்தது. ஜ2ஸ 1973ஆம் ஆண்டு இதற்கான தீர்மானம் மாலேகா-டொர்ரெமோலினோசில் நடந்த முழு அதிகாரம் கொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
 
உலக தகவல் சமூக நாளின் முகனையான நோக்கம் உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்களாலும் இணையத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்ப்பதாகும். மேலும் இது எண்ணிம இடைவெளியைக் குறைப்பதற்கு உதவிடும் இலக்கையும் கொண்டுள்ளது.

 

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11214233_582582358510977_725615161668700

 

உலகில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொள்ளை கொண்ட கொடிய நோய் அம்மை நோய். இக்கொடிய கொள்ளை நோய் உலகிலிருந்து ஒழிவதற்கு மூலகாரணமாக செயல்பட்டவர் ' எட்வர்டு ஜென்னர்' . இப்பூவுலகில் பதினெட்டாம் நூற்றாண்டில் அம்மை நோயினால் சுமார் ஆறு கோடி பேர் மடிந்தனர்.

மக்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிவதைக் கண்டு மனம் வருந்தினார். எப்பாடுபட்டாவது அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்து மக்களின் காப்பாற்ற வேண்டும் என மனதில் உறுதியேற்றார். 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். கவ் பாக்ஸ்(Cow-pox) நோய் கண்ட பெண்ணின் விரலில் இருந்து கிருமியை எடுத்து ஒரு சிறுவனுக்கு செலுத்தினார். சிறுவனும் நோயால் தாக்கப்பட்டான். 7- வாரங்கள் கழித்து பெரியம்மையால் தாக்கப்பட்டவர் உடலில் இருந்து கிருமியை எடுத்து அதே சிறுவன் உடலில் செலுத்தினார்.

 

ஆனால், அந்த சிறுவனை பெரியம்மை நோய் தாக்கவில்லை. தொடர்ந்து பலரிடம் நடத்தப்பட்ட சோதனைகள் வெற்றியடைந்தது. தமது ஆராய்ச்சி முடிவுகளை1796 ஆம் ஆண்டு வெளியிட்டார். மனித குலத்தை அளவுகடந்து நேசித்த எட்வர்டு ஜென்னர் தமது அரிய கண்டுபிடிப்புக்கு எந்த காப்புரிமையும் பெறாமல் இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மை ஊசி போட்டார். தினமும் இவரது அறைக்கு முன்பு 300 க்கும் மேற்பட்டவர்டள் வரிசையில் நின்று அவரிடம் அம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டனர். @ எட்வர்டு ஜென்னரை கெளரவித்து பிரிட்டிஷ நாடாளுமன்றம் 1802 ஆம் ஆண்டு 10 ஆயிரம் பவுண்டுகள் வழங்கியது. அந்தத் தொகையைக்கொண்டு 1808 ஆம் ஆண்டு தேசிய தடுப்பூக் கழகத்தை நிறுவினார். அப்போதைய இரஷ்ய நாட்டு ஜார்ஜ் மன்னர், எட்வர்டு ஜென்னருக்கு விலையுயர்ந்த மோதிரத்தை பரிசாக வழங்கி பாராட்டினார்.

 

பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தி நெப்போலியன் அவரைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார். மருத்துவ உலகுக்கு தன்னிகரில்லாத கொடையை வழங்கி, கோடிக்கணக்கான மனித உயிர்களைக் காத்தவரும், நோய் தடுப்பூசிகளின் தந்தை என்று போற்றப்படுபவருமான எட்வர்டு ஜென்னர் 1823 ஆம் ஆண்டு மறைந்தார். @ இன்று (17.05.2015) எட்வர்டு ஜென்னர் அவர்களின் 266 ஆவது பிறந்த தினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

vithya-merder-angaly-canada-170515-777se

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1506755_954033364658685_8586167019485865

 

 

11017555_954033474658674_568753152350535

11262304_857317437681075_386503906534622

11269009_699469646823767_609956400413960

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 6 ஆம் ஆண்டு நினைவலைகள்'!! 

ஒரு கணம் இழந்த நம் உறவுகளுக்கு ,தலைசாய்ப்போம்!

 

11295932_990779884287908_417306975059282

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் பேரவல 6ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்.

 

11295659_1636086663295495_26185087705252

 

11259519_1636086666628828_52288064183123

 

17097_1636086669962161_86303296049221992

 

11009177_1636086703295491_17768701528849

 

11263991_1636086706628824_86161628344900

 

11295559_1636086713295490_58962234703855

 

10422564_1636086719962156_66151792101818

 

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூரும் சோக நாளான இன்று (18.05.2015)

விடுக்கப்பட்ட முதலமைச்சரின் அறிக்கை

கடைசிக் கட்டப் போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை நினைவுகூரும் நாளே இன்றைய நாளாகும். இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை மாத்திரமன்றி உலக நாடுகளில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களினதும் நெஞ்சங்களை உலுக்கிய சோகமான செய்திகளை காவிவந்த இந்த நாளானது யுத்தத்தால் உயிரிழந்த எம் இனிய உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் புனித நாளாகும்.

உலகளாவிய ரீதியில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களின் ஒருமித்த மனித சிந்தனையில் களங்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வே முள்ளிவாய்க்கால் சம்பவம். மனித உரிமைகள் மறக்கப்பட்டு, ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு, சாட்சியில்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால். தடை செய்யப்பட்ட போராயுதங்கள் பாவிக்கப்பட்டன என்று பறைசாற்றின பல்நாட்டு ஊடகங்கள் அப்போது. வெளிநாட்டு உதவிகள் உதாசீனப்படுத்தப்பட்டு, உள்நாட்டு உதவிகள் மறுக்கப்பட்டு, உண்மைநிலை உரைக்காது விட்டு, மக்கள் தொகையைக் குறைத்துக் கூறி, அப்பாவிப் பெண்கள், பிள்ளைகள், குழந்தைகளின் உயிர்களைக் காவிச் சென்றதே முள்ளிவாய்க்கால். முள்ளிவாய்க்கால் எமது சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப் பதிவு.

போரிலே உயிரிழந்த எம் உறவுகளை என்றென்றும் நினைவுகூரத் தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டு உள்ளோம். முள்ளிவாய்க்கால் எமது வருங்கால அரசியல் பயணத்திற்குத் தளம் அமைத்துக் கொடுத்துள்ள ஒரு சம்பவம் என்பதில் எமக்குள் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

ஒன்று இரண்டு அல்ல ஆறு வருடங்கள் கடந்து போய்விட்டன. ஆனால் அக்கொடிய போரிலே உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பான உண்மைநிலை இதுவரை வெளிக் கொணரப்படவில்லை. அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிவதற்கான உண்மையானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததும், அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுமான விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலை தமிழ்மக்கள் மத்தியில் விரக்தியை உருவாக்கியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் நேரடித் தலையீட்டை ஏற்படுத்தும் பொருட்டு தமிழர் தரப்பும் சர்வதேச நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அவை இன்னமும் ஓர் தீர்க்கமான கட்டத்துக்குள் உள்நுழையவில்லை என்பதே உண்மை நிலையாகும். ஐக்கியநாடுகளுக்கான மனிதவுரிமைகள் மாநாடு நடைபெறுகின்ற ஒவ்வொரு தடவையும் போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்படுவதும் அது இறுதியில் ஓர் காலநீட்சியுடன் முடிவடைந்து போவதுந் தான் நாம் கண்டுள்ள யதார்த்தம். ~~காலங்கடந்து கிடைக்கின்ற நீதி கிடைக்காத நீதிக்குச் சமனாகும்|| எனக் கூறப்படுவதுண்டு.(னுநடயலநன தரளவiஉந ளை னநnநைன தரளவiஉந). எனவே சர்வதேச நாடுகளும் அதனோடு சம்பந்தப்பட்ட அமைப்புக்களும் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது உயிரிழந்த எமது அப்பாவிப் பொதுமக்கள் தொடர்பிலான உண்மை நிலையினை வெளிக்கொணரும் பொருட்டும் அவர்களுக்கான நீதி கிடைக்கும் பொருட்டும் பொருத்தமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கான நீதியைத் தமிழ்த்தரப்பு வேண்டிநிற்பதன் நோக்கம் வெறுமனே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுமட்டுமல்ல. இது தொடர்பில் வெளிக் கொணரப்படுகின்ற உண்மைகள் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்த உதவும். இதனால்த்தான் எமது வடமாகாண சபை இனப்படுகொலை சம்பந்தமான தீர்மானத்தை ஏக மனதாக ஏற்று வெளிக்கொண்டு வந்தது. உண்மையை உலகறியச் செய்தது. அதுமட்டுமல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கின்ற நீதி தமிழ்ப் பேசும் மக்களது அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கும் உந்துசக்தியாக அமையும்.

இலங்கையில் வாழ்கின்ற தமிழ்ப்பேசும் மக்களது அரசியல் உரிமைக்கான கோரிக்கை என்பது இன்று நேற்றல்ல இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. தமக்கென ஓர் தனியான மொழி, சமயங்கள், பண்பாடு, பாரம்பரியம், வரலாறு, ஏன் இலங்கையின் மற்றைய நிலப்பகுதிகளில் இருந்து மாறுபட்ட நிலப்பரப்பைக் கூடக் கொண்டிருந்து, பல நூற்றாண்டு காலமாக வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற தமிழ்த்தேசிய இனம் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த போதிலும் மாறி மாறி வந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் வெறுமனே காலத்தைக் கடத்தி வந்தார்களே தவிர தமிழ் மக்களது நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு ஏற்ற பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாறாக வடகிழக்கைப் பெரும்பான்மை இனத்தவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு காரியமாற்றி வந்துள்ளனர். ஆட்சிக்கு வருகின்ற புதிதில் தம்மைச் சமாதானத் தூதுவர்களாகக் காட்டிக்கொள்ளும் இலங்கையின் அரச தலைவர்கள் தமிழ்ப் பேசும் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண்பது போன்ற தோற்றப்பாட்டினை உருவாக்குவதும் பின்னர் காலப்போக்கில் தமிழர் விரோதப் போக்கிற்கு மாறுவதும் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளன. இந் நிலை இனியும் நீடிக்கக் கூடாது.

எனவே தற்போது தோன்றியுள்ள ஓர் சாதகமான நிலைமை மாற்றமடைவதற்கு முன்னர் காலதாமதத்தை மேற்கொள்ளாது தமிழ்ப்பேசும் மக்களது பிரதான பிரச்சினையான அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் விரைந்து செயற்பட வேண்டிய கடமை நம் அனைவரின் முன்னும் உள்ளது. விரைந்து செயற்படாத தன்மையும் அளவுக்கதிகமான காலநீட்சியும் பிரச்சினைகளினதும் அதற்கான தீர்வுகளினதும் பரிமாணங்களை மாற்றியமைக்கும் அபாயம் கொண்டதாவன என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் ஆட்சியாளர்கள் எம்முடனும் மற்றும் சர்வதேச சமூகத்துடனும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியத்தின் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் விரைந்து தீர்வுகாண முன்வர வேண்டும். இதுவே இலங்கையில் வாழ்கின்ற பல்லின மக்களுக்கிடையில் பரஸ்பர கௌரவத்துடன் கூடிய உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்கும். இன்றைய சோகம் மிகுந்த நாளில் இதையே உங்கள் அனைவரின் சிந்தனைகளுக்குஞ் சிரந்தாழ்த்தி முன்வைக்கின்றேன். நன்றி.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணம்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119869/language/ta-IN/-6--.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11137177_400731286796781_304409849344296

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11069917_857480154331470_184812629849021

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நகுலேஸ்வரத்தில் போரில் மரணித்த மாவீர்ர்களுக்கும் மக்களுக்கும் முதலமைச்சரால் பிதரக்கடன் செலுத்தப்பட்டது..

 

11265037_687168581411313_173284711808607

10888372_430448803802672_438746571058601

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்...

 

 

 

11160012_113565508974897_333917071610464

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
யாழும் நானும் பயணித்த காலங்கள்.....யாழோடு மட்டுமே இத்தனை ஆண்டுகள் ......என்ன செய்தேன் எனக்கே தெரியாது....
 

யாயினி

Member Since 19 May 2009

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோடிக்கு குதிரையை பரிசாக அளித்த மங்கோலிய பிரதமர்..

 

11219355_113564222308359_648058981700291

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தான் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசேஷமென்றாலும், அதை ஆதரவற்றோர், அநாதை இல்லங் களில் கொண்டாடுகிற வழக்கம் ஜெய்சங்கருக்கு உண்டு. அநாதைக் குழந்தைகளுக்கான விருந்தைப் பிரபலமானவர்கள் கையால் பரிமாற வைப்பாராம்.

''எல்லாச் செலவுகளையும் நீங்க பண்ணிட்டு, அதை ஏன் அவங்க கையால தரச் சொல்றீங்க?'' என்று ஒரு நண்பர் கேட்டபோது,

''நான் கூப்பிட்டு வர்ற வி.ஐ.பி-க் கள் யாரும் இந்த மாதிரி இடங்களுக்கு இதுவரைக்கும் வந்திருக்க மாட்டாங்க. அதனால, இது ஒரு வாய்ப்பா இருந்து, இந்த உதவி அவங்கள்ல சிலர் மனசைத் தொட்டாக்கூடப் போதும்... நாளைக்கு அவங்களும் இதுமாதிரி உதவிக ளைச் செய்ய என் முயற்சி ஒரு தூண்டுதலா அமையும் இல்லியா, அதுக்காகத்தான்!'' என்றாராம் ஜெய்சங்கர்.

 

10559874_925898540802270_102794660620846

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

11219140_925848067473984_828919375090372

 

 

'டாங்க்’ வரலாறு - பொக்கிஷ பகிர்வு

நடமாடும் எஃகுக் கோட்டை - 'லிட்டில் வில்லி’

நடமாடும் எஃகுக் கோட்டை ஒன்றைத் தயாரித்து, அதை ஒரு போர்ச் சாதனமாக உபயோகிக்கலாம் என்று ஓர் எண்ணம். 1913-ல் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளில் ஒருவரான கேப்டன் எப்.ஜே.பூலர் என்பவர்தான் முதன்முதலாக இந்த யோசனையை வெளியிட்டார். அப்போது சமாதான காலமாக இருந்ததால், இதுபற்றி பிரிட்டிஷ் பாதுகாப்பு இலாகா உரிய கவனம் செலுத்தவில்லை.

பூலர் இந்த யோசனையைத் தெரிவித்த சில மாதங்களுக்குள்ளேயே, அதாவது 1914 ஆகஸ்ட் 4-ம் தேதி, முதலாவது உலக மகா யுத்தம் தொடங்கிவிட்டது. அப்போது ராணுவ அதிகாரியான லெப்-கர்னல் ஸ்வின்டன், நடமாடும் எஃகுக் கோட்டைகள் தயாரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அவற்றை இயக்குவதற்குச் சங்கிலிச் சக்கரங்களைப் (Chain wheels) பயன்படுத்தலாம் எனவும் யோசனை கூறினார். அவர் கூறிய இந்த யோசனையின் அடிப்படையில் பிரிட்டிஷ் ராணுவ இன்ஜினீயர்கள் பலர் இது சம்பந்தமான ஆராய்ச்சிகளை உடனடியாக மேற்கொண்டனர்.

''இந்த ஆராய்ச்சி பூர்த்தியாகி முதல் நடமாடும் எஃகுக் கோட்டை போர் முனையில் செயலாற்றத் தொடங்கும் வரை, இதுபற்றி துளி செய்திகூட யாருக்கும் தெரியக் கூடாது. பரம ரகசியமாக இந்தக் காரியம் நடந்தேற வேண்டும்'' என பிரிட்டிஷ் ராணுவ இலாகா கருதியது. இதனால், இந்த ஆராய்ச்சிபற்றி மூடி மறைப்பதற்காகப் பொய்யான செய்தி ஒன்றை அது வெளிக்கிளப்பியது. 'எந்த நிலையிலும் ஒழுகாத 'தண்ணீர்த் தொட்டி’ (Tank) ஒன்றைக் கண்டுபிடிப்பதிலேயே அந்த ராணுவ இன்ஜினீயர்கள் கவனம் செலுத்திவருகிறார்கள்’ என்பதே அந்தச் செய்தியாகும். ஆகவே, இதனால் முதல் நடமாடும் எஃகுக் கோட்டையை மேற்படி இன்ஜினீயர்கள் முதன்முதலாகத் தயாரித்து வெளிக்கொண்டுவந்தபோது, பிரிட்டிஷ் பொதுமக்கள் அதை ஒருவகைப் புதுத் தண்ணீர்த் தொட்டி என்றே நினைத்தார்கள். இதனால் 'டாங்க்’ என்றே அதை அழைத்தார்கள். தவறாக அவர்கள் இவ்விதம் நடமாடும் எஃகுக் கோட்டைக்கு 1916-ல் இட்ட பெயரே, பிறகு அப்படியே நிலைத்துவிட்டது.

பிரிட்டனில் தயாரான தனது முதல் டாங்கை, 1916 பிப்ரவரி 8-ம் தேதி முதன்முதலாக பிரிட்டன் போரில் ஈடுபடுத்தியது. இந்த முதல் டாங்குக்கு 'லிட்டில் வில்லி’ எனப் பெயரிடப்பட்டது.

ஆனால், இந்த 'லிட்டில் வில்லி’ போர் நடவடிக்கை களுக்கு அவ்வளவு சிறந்ததாக இல்லை. இதனால், அதில் பல மாற்றங்கள் செய்து 'பிக் வில்லி’ (Big willy) என மற்றொரு டாங்கைத் தயாரித்தார்கள். 10 ராணுவ வீரர்கள் ஏக காலத்தில் இதற்குள் இருக்கலாம்.

இந்த 'பிக் வில்லி’ டாங்கை முதன்முதலாக 1916 செப்டம்பர் 15-ம் தேதி பிரான்ஸில் சோம் (Somme) போர் முனையில் பிரிட்டன் ஈடுபடுத்தியது. அப்படி ஈடுபடுத்திய 49 டாங்குகளில் 17 டாங்குகளின் இன்ஜின்கள் சரியாகச் செயலாற்றவில்லை. 18 டாங்குகள் போர்முனைக்குக் கிளம்பவே மறுத்து விட்டன. 5 டாங்குகள் போரில் ஈடுபட்டு இருந்தபோதே நடுவில் செயலற்று நின்றுவிட்டன. 9 டாங்குகள்தான் கடைசி வரை நன்றாக இயங்கின.

தான் இவ்விதம் முதன்முதலில் போரில் அதிக அளவில் ஈடுபடுத்திய 'பிக் வில்லி’ டாங்குகளை 'மார்க்-1’ என பிரிட்டிஷ் ராணுவ இலாகா அழைத்தது. இதை ஆதாரமாகக்கொண்டு மேன்மேலும் அபிவிருத்தி செய்து, புது மாடல்களைத் தயாரிக்கத் தொடங்கியது. அபிவிருத்தி செய்யப்பட்ட டாங்குகளை 'மார்க்-2’ எனப் பெயரிட்டு 1917 ஏப்ரல் 8-ம் தேதி பிரான்ஸில் போர் முனையில் முதன்முதலாக பிரிட்டன் ஈடுபடுத் தியது. 1918 நவம்பரில் இரண்டாவது உலகப் போர் முடிவதற்குள்ளாக 'மார்க் 3, 4, 5’ ஆகிய மேலும் அபிவிருத்தி செய்யப்பட்ட டாங்குகளை பிரிட்டன் போரில் ஈடுபடுத்தியது.

இப்போது டாங்குகளில் பிரதானமாக மூன்று ரகங்கள் உள்ளன. லேசான டாங்குகள், நடுத்தர டாங்குகள், கனமான டாங்குகள் என்பவையே ஆகும். லேசான டாங்குகள் எந்த இடத்துக்கும் சுலபமாகக் கொண்டுசெல்ல ஏற்றவை. விமானங்கள், கப்பல்கள் மூலம் ஏற்றிச் செல்லவும் வசதியானவை. மலைப் பிரதேசங்களிலும் பயன்படும். ஓரளவு துரிதமாகவும் செல்லக் கூடியவை. லேசான டாங்கு, கனமான டாங்கு இரண்டுக்கும் இடைப்பட்டது நடுத்தர டாங்கு. சமவெளிகளில் சாதாரண யுத்த நடவடிக்கைகளுக்கு இதையே மிகுதியாகப் பயன்படுத்துவது வழக்கம். கனமான டாங்குகள் மற்ற எல்லாவற்றையும்விட சக்தி வாய்ந்தவை. அதிகப் பாதுகாப்பானவை. எவ்விதத் தாக்குதல்களையும் சமாளிக்கக்கூடியவை. ஆனால், அவை மிக மெதுவாகவே நகர்ந்து செல்லும். போர் முனைகளில் விசேஷமான நிலைகளில் மட்டும் பயன்படுத்துவதற்கு என இவை தயாரிக்கப்படு கின்றன.

இந்த மூன்று வகை டாங்குகள் தவிர, வேறு பல விசேஷ வகை டாங்குகளும் இப்போது உண்டு.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கும் நமக்கும் இடையே நடந்த போரில் பாகிஸ்தான் படைகள் 'பாட்டன்’ என்ற ஒரு வகை டாங்குகளை மிகுதியாகப் பயன்படுத்தின. இது நடுத்தர வகையைச் சேர்ந்தது; 1952 ஜூலையில் இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்த பிறகு தயாரிக்கப்பட்டது. புகழ்பெற்ற அமெரிக்க ஜெனரலான ஜார்ஜ் எஸ்.பாட்டன் இதைக் கண்டு பிடித்ததால், 'பாட்டன் டாங்கு’ எனப் பெயர் பெற்றுள்ளது.

இதில் 'எம்-47’, 'எம்.-60’, 'எம்-113’ என்று பல ரகங்கள் உண்டு. 'எம்-113’ என்பது மிக நவீன ரகம். 'எம்-47’ என்பது மிகப் பழைய ரகம். 'எம்.’ என்றால் மீடியம் (நடுத்தரம்) எனப் பொருள்படும். அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அளித்து அது நமக்கு எதிராக உபயோகித்த 'பாட்டன் கள்’ 'எம்-47’ ரகத்தைச் சேர்ந்தவையே.

இந்த வகை பாட்டன் டாங்குகளைக் கொரியப் போரில்தான் முதன்முதலாக அமெரிக்கா ஈடுபடுத்தியது. இதில் பொருத்தப்பட்டுள்ள பீரங்கி மிக சக்தி வாய்ந்த போர்க் கருவியாகும். 12 மைல் தூரம் குண்டுகளைச் சுடும் ஆற்றல் இந்தப் பீரங்கிக்கு உண்டு. இதில் இருந்து கிளம்பும் குண்டுகள் விநாடிக்கு 3,000 அடி (நிமிஷத்துக்கு 1,80,000 அடி) வேகத்தில் செல்லக் கூடியவை.

பாகிஸ்தான் படைகள் 'பாட்டன்’ அன்றி 'ஷெர்மன்’ என்ற மற்றொரு வகை டாங்குகளையும் நமக்கு எதிராக ஏவின. இவை 'எம்-4’ என்ற வகையைச் சேர்ந்தவை. 1941 செப்டம்பரில் முதன்முதலாக இவை தயாரிக்கப்பட்டன. இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்துகொண்டு இருந்தபோதே 49,234 'ஷெர்மன்’ டாங்குகள் தயாராகிவிட்டன. ஒரே ரகத்தில் இவ்வளவு அதிக டாங்குகள் உலகில் இதுவரை எங்கும் தயாரிக்கப்பட்டது இல்லை.

வட ஆப்பிரிக்காவில் ஜெனரல் ரோமலின், ஜெர்மன் டாங்குப் படை களோடு மோதி வெற்றி வாகை சூடியவை இந்த ஷெர்மன் டாங்குகளே. 3,000 மைல் பயணம் செய்தால்கூட இதன் இணைப்புப் பகுதிகள் தேய்வது இல்லை. இந்த டாங்குகளின் எடை 33 டன். இவற்றில் இப்போது ஏழு ரகங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினின் ஆற்றல் வெவ்வேறு விதம். 1956-ல் இருந்து இந்த டாங்குகள் தயாரிப்பதை அமெரிக்கா நிறுத்திவிட்டது.

நம்மிடமும் பல ஷெர்மன் டாங்குகள் உண்டு. நாம், சொந்தமாக சென்னை அருகே ஆவடியில் டாங்குகள் தயாரிக்க இப்போது ஏற்பாடாகி வருகிறது. 1966 ஆரம்பத்தில் முதல் டாங்கு தயாராகி வெளிவரும்.

ஆவடியில் தயாராகும் இந்த இந்திய டாங்குகளுக்கு 'வைஜயந்த்’ எனப் பெயர்.

- அ.ராம்கோபால்

- ஆனந்த விகடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10888872_912099398822931_652301925986386

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் வெள்ளையாக தெரிவது தான் ஒட்டகம் .. கறுப்பாக இருப்பது அதன் நிழல் தான்... 
Best picture award வாங்கிய ஒரு புகைப்படம் ...

 

10845827_935066673192870_481548012783274

 

பார்த்த,படித்த இடங்ககளில் இருந்து காவிட்டு வருவது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோ புரட்சி அவர்களின் காட்டிலே 'ஆஷா நாயும் அவளும்' சிறுகதை நூல் வெளியிடப்பட்டபோது  மரத்திலே வைக்கப்பட்ட சுடர்..ஒரு மரம், இரண்டு ஆணி, போத்தல்களின் பாதி இவ்வளவும் தான் இதில் இருக்கு...புதுமை.

 

11330017_114768802187901_644204006937177

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் இடர்களினால்,நம்பிக்கையீனங்களால் வேலை செய்யனும் என்ற ஆவர்வமே இல்லாது போய் விடுகிறது..நினைக்கும் போது அழுவதா சிரிப்பதா என்றே தெரியாது போய் விடுகிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.