Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

12661861_917624898307067_897302181376849

இந்தப் பக்கத்தை புரட்டிச் செல்லும் அனைவருக்கும் வார விடுமுறை  நாள் வாழ்த்துக்கள்...........கனேடிய உறவுகளுக்கு நீண்ட வார விடுமுறை நாள் வாழ்த்துக்கள்..

 

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

St Valentine's finger beckons lovers to Coventry

relic and church

As romance beckons for lovers on Valentine's Day, there is the rare chance to see part of the saint "himself". A relic - purported to be a fragment of bone from St Valentine's finger - is on display at a church in Coventry. But what is it doing there?

Those hoping for a macabre thrill will be disappointed. This is no shrivelled finger on a cushion. The shard of bone is sealed inside a reliquary, an ornate case about 4 in (10 cm) tall.

But church warden Ann Tuesley hopes people will flock to a special Sunday Mass, which she described as "perfect for couples who are getting engaged".

There is no concrete reason St Valentine's finger should be in Coventry, although as church council member Cam Morgan said: "Coventry is a city of peace and reconciliation and it seems right that someone who valued courtly love is associated with our city".

St Valentine Image captionThere were three St Valentines associated with 14 February there are 11 St Valentines in total

In the early 1800s a catacomb in Rome purported to contain St Valentine was excavated.

According to theologian Kenneth L. Woodward, popes have tended to be generous with the remains of saints, which were treated as a "spiritual treasury". Many important visitors to Rome came away with the gift of a saint's body - or at least part of one.

Relics became symbols of prestige for churches and cities, and St John's Church was a well-established and influential place of worship. It was founded in 1344 following the death of Edward II by his widow Queen Isabella, and continued to have royal patronage.

Following Henry VIII's dissolution, the church closed in 1546. It reopened in 1734, soon resuming its earlier prominence - although Anglo Catholic rather than Roman Catholic.

When St Valentine was parcelled up and posted around the world, it was natural a piece of him was sent to St John's.

"We normally keep the relic locked away in a safe," Ms Morgan said. "So it's quite special to have it out for people to see.

"I think it's really romantic that it's the finger which may well have blessed all those young couples so long ago."

St Valentine Image captionSt Valentine is believed to have been a priest who was jailed for marrying young couples against the Roman Emperor's wishes

Can we be certain the bit of bone is actually a bit of St Valentine?

No. But like artwork, genuine relics are accompanied by a certificate of authenticity. They are issued by the Roman Curia - the administrative body through which the Pope conducts the affairs of the universal Catholic Church.

In addition, the reliquary in which the relic is placed has a wax seal affixed to it which also has a stamp of authenticity.

In the end though, Ms Morgan said: "Like many things, it's a leap of faith".

Grey line

Who was St Valentine?

According to the Catholic Encyclopaedia, at least three Saint Valentines are mentioned in the early martyrologies under the date of 14 February. One is described as a priest in Rome, another as a Bishop of Interamna (now Terni in Italy) and the other lived and died in Africa. The one we think of today is probably the Roman priest - and it is purported to be his finger which is in Coventry.

The basic story is one of a priest imprisoned for marrying sweethearts in secret in defiance of the emperor, who believed unmarried soldiers fought better, as they were unfettered by worry by what would happen to their wives or families if they died.

While in prison, Valentine healed the jailer's blind daughter and they became friends, with her visiting him. On the day of his execution, the saint left a note for the girl signed 'Your Valentine'.

Grey line  

http://www.bbc.com/news/uk-england-35523310

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Torontonians brace for coldest weekend of the season

 
Codi Wilson, CP24.com 
Published Saturday, February 13, 2016 6:40AM EST 
Last Updated Saturday, February 13, 2016 8:24AM EST

It may be a good weekend to stay indoors as the coldest weekend of the season hits Toronto and the GTHA.

On Saturday, Toronto will see a daytime high of -15 C but the temperature will feel closer to -30 and -40 this morning with wind chill values improving only slightly this afternoon.

An extreme cold warning issued by Environment Canada and an extreme cold weather alert put in place by the city remain in effect for Toronto.

PHOTOS

 
Cold weather

For those who need to be outdoors this weekend, the national weather agency is reminding people to wear appropriate fabrics for insulation and to dress in layers, which includes wearing a wind-resistant outer layer.

During the months of January and February, the city operates two 24-hour drop-in centres for people to get out of the cold.

Sunday is expected to be marginally warmer with a high of -10 C and wind chill values in the area of -30.

Relief should be on the way on Family Day with seasonable temperatures in the forecast.

One NBA player in town for All Star Weekend took to Twitter to express his displeasure with the recent bout of cold weather.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பொதுமக்கள் வீடுகளை சொந்தமாக வாங்குவதற்கு அதிக வட்டியுடன் கடன் வழங்கிய பெண் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடந்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.ரொறோன்ரொ நகரை சேர்ந்த ஜயவதி(ஜானகி)உக்வாடேகே பெரிரா(51) என்ற பெண் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.

இதே சமயம், வீடுகளை சொந்தமாக விலைக்கு வாங்கி அதன் சந்தை மதிப்பு அதிகமாகும்போது கூடுதலான விலைக்கு மற்றவர்களிடம் விற்பனை செய்து வருவது அந்நகரில் பிரபல தொழிலாக இருந்து வருகிறது.
இதனை பயன்படுத்திக்கொண்ட அந்த பெண், தன்னிடம் குறுகிய கால முதலீடு செய்து அதிக வட்டியுடன் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேபோல், மற்ற நபர்களை தன்னிடம் சிபாரிசு செய்தால், அந்த நபர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்பதால், Muskoka பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பெண்ணிடம் முதலீடு செய்து வந்துள்ளனர்.இந்த பண பரிவர்த்தனைகள் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்துள்ளது.ஆனால், ஒரு நிலையில் வாடிக்கையாளர்களால் முதலீடு செய்ய இயலாதபோது, அவர்கள் செலுத்திய ரொக்க தொகையை அந்த பெண் திருப்பி செலுத்த தவறியுள்ளதாக புகார்கள் எழுந்தது.

இவற்றில் ஒரு புகாராக வாடிக்கையாளர்களிடம் சுமார் 5,000 டொலர் வரை மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.
புகாரை பெற்ற பொலிசார், மோசடியில் ஈடுப்பட்டு வந்த பெண்ணை கடந்த வியாழக்கிழமை அன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.எனினும், பெண்ணிடம் மோசடியில் சிக்கிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு மோசடிக்கு ஆளான வாடிக்கையாளர்கள் விசாரணை அதிகாரியான ரூத் மோரன் என்பவரை 416-808-7319 என்ற தொலைப்பேசி எண்ணில் அல்லது ruth.moran@torontopolice.on.ca என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்புக்கொண்டு புகார் அளிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

torontopolice.on.ca

 

canada_ladyarrest

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லிங்கன் தன் மகனை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..

அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்குதெரிவியுங்கள் .

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது , கோழைத்தனம் என புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடிலா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும்,சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும் ,பசுமையான மலை யடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என அறிவுறுத்துங்கள் .எனினும் உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள் .. துயரமான வேளைகளில்

சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள் ;. போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். அவனை கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

 

இப்படிக்கு,

ஆபிரஹாம் லிங்கன்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பெப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.

 

பிப்ரவரி 13 - உலக வானொலி நாள்

இன்று உலக வானொலி நாள் ஆகும். 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பெப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது.

உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். ´நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை´ எனப்படுபவர்.

´கம்பியற்ற தகவல்தொடர்பு முறை´ மற்றும் ´மார்க்கோனி விதி´ ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார்.

இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் ´மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்´, ´வானொலி´ மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்து விட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான்.

தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.

ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை, ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர், மின்காந்த அலைகளை ,டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.

பின்னர், இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி, (1874-1937) வானொலியை கண்டறிந்தார். இன்று உலக முழுவதும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது.


 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள் !
 

வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள் !

 

காதலன், காதலர் தினம், காதலர் தினம் வரலாறு, காதலகாதல், சேவியர், வேலண்டைன் வரலாறு, வேலண்டைன்ஸ் டே

 

St Valentine

 

1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரியவந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.

 

2. அமெரிக்கா இந்த ஆண்டைய காதலர் தினத்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்துடன் கொண்டாடுகிறது. “வேலண்டைன்ஸ் டே” எனும் பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஜெஸிகா அல்பா, கேத்தி பேட்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெஸிகா பேல் ஆகியோர் நடித்துள்ளனர். கேரி மார்ஷல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலும், காமமும் இழையோடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

 

3. காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு. உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், சிடிக்கள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் பிஸினஸ் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !

 

4. அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.

 

5. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.

 

6. கிரீட்டிங் கார்ட் பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். இமெயில், எஸ் எம் எஸ், இ-கார்ட், இண்டர் நெட் என ஹைடெக் வாசமடிக்கும் டிஜிடல் உலகம் இது. ஆனாலும் எந்த டெக்னாலஜியாலும் வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு !

 

7. அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.

 

8. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.

 

9. காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.

 

10. காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.

 

11. காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காண வேண்டுமே என பெண்கள் பதறுவார்களாம். காரணம் புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாய் இருக்குமாம். கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பானாம் !

 

12. காதலர் தின பூக்களைப் பொறுத்தவரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா சர்வதேச அளவில் காதல் மொழி பேசுகிறது. சிவப்பு ரோஜா கொடுத்தால் “காதல்” எனும் ஒரே மீனிங் தான் உலகெங்கும். சிவப்பு ரோஜா கொடுக்காத காதலர்கள், காதலியரின் பிரியத்துக்குரிய பூக்களைப் பரிசளிக்கிறார்கள். உலக அளவில் அதிகம் விற்கப்படுவதும், பரிமாறப்படுவதும், நேசிக்கப்படுவதும் சிவப்பு ரோஜாவே தான்.

 

13. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.

 

14. இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் சேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ் பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வேலண்டைன்ஸ் டே” என்று துவங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600 களில் வேலண்டைன்ஸ் டே பிரபலமாய் இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.

 

15. கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை “ஜேக்” என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.

 

16. பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித.வேலண்டைன் என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போலத் தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வேலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர். டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய்பிரண்ட் மற்றும் கேள் பிரண்ட் தினம் !

 

17. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் ஸ்பெஷல் தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.

 

18. பிப்பிரவரி 14ல் என்ன விசேஷம் என்று கேட்பார்கள் பிரேசிலில். அவர்களுக்கு நோ வேலண்டைன்ஸ் டே. ஆனால் அவர்கள் ஜூன் 2ம் தியதி காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் இத்யாதி எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ளும் நாள் இது. ஐயோ, அப்போ பிப்பிரவரி 14ல் ஒண்ணுமே இல்லையா என பதட்டப்படாதீர்கள். அந்த நாளை ஒட்டி அவர்கள் ஒரு விழா கொண்டாடுகிறார்கள். அதை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கிறார்கள் ! அப்புறம் என்ன ?

 

19. இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதல் மைய இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான். இருந்தாலும் வேலண்டைன்ஸ் டே அன்று கலவரம், மண்டை உடைப்பு, சட்டை கிழிப்பு எல்லாம் நடப்பதும் நம் நாட்டில் தான். இத்தனை களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. குறிப்பாக ஆசியாவில் காதலர் தின மார்க்கெட் அதிகம் உள்ள இடங்களில் முக்கிய இடம் இந்தியாவுக்கு.

 

20. சவுதி அரேபியாவில் காதலர் தினம் தடை மத அமைப்புகளால் தடை செய்யப்ட்டிருக்கிறது. இது இஸ்லாமிய சட்டங்களுக்கு விரோதமான விழா என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த விழா ஆண்களும் பெண்களும் சந்தித்து சில்மிசங்களில் ஈடுபட வழி வகுத்து விடும். ஏற்கனவே திருமணமான பெண்கள் சபலமடைய வழி வகுத்துவிடும் போன்றவையெல்லாம் அவர்கள் சொல்லும் காரணங்களில் சில. இருந்தாலும் திருட்டுத் தனமாக அங்கே காதலர் தினத்தைப் பலர் கொண்டாடுகின்றனர். ரகசியமாய் பூங்கொத்துகள் ஆர்டர் செய்து, அதை நள்ளிரவிலேயே மனசுக்குப் பிடித்தவர்களுக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பலர் இந்த நாளில் பெஹ்ரைன், எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்குப் பறந்து வேலண்டைன்ஸ் டே கொண்டாடி விட்டு சைலண்டாகத் திரும்பி விடுவதும் உண்டு.

 

21. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோர்க்கவில்லையே என புலம்பும் சிங்கிள் பார்ட்டீஸ் இரண்டு மாசம் கண்ணைக் கசக்கியபின் கொண்டாடும் விழா. இந்த விழாவில் கொரியன் நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு முக்கிய அம்சம். அதற்கு ஊற்றப்படும் சாஸ் கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் !

 

22. கிரீட்டிங் கார்ட் இல்லாமல் வேலண்டைன்ஸ் டே இல்லை எனும் நிலை தான் அமெரிக்காவில். வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் பல வாழ்த்து அட்டை கம்பெனிகளையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் வாழ்த்து அட்டைகளில் 25% வாழ்த்து அட்டைகள் வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் எனப்து புள்ளி விவரக் கணக்கு.

 

23. செல்போனில் தனது காதலை வீடியோவாய் பதிவு செய்து உள்ளம் கவர்ந்த கள்வனுக்கோ கள்ளிக்கோ செல்போனிலேயே அனுப்பி விடுவது லேட்டஸ்ட் காதல் சொல்லும் முறை. சிலர் அதை அப்படியே அலேக்காக யூ டியூப் போன்ற இணைய தளங்களிலேயே பதிவு செய்து உலகுக்குத் தங்கள் காதலை உரக்கச் சொல்கிறார்கள்.

 

24. வேலண்டைன்ஸ் டே ஒரு நல்ல வியாபாரக் களம் என்பதைக் கண்டு முதலில் வாழ்த்து அட்டை உருவாக்கிய பெருமை எஸ்தர் ஏ ஹௌலாண்டா மவுண்ட் ஹோலியோக் –ஐச் சாரும். 1840ல் அமெரிக்காவில் இவர் வாழ்த்து அட்டைகள் உருவாக்கி விற்பனை செய்தார்.

 

25. ஜப்பானின் வேலண்டைன்ஸ் டே என்றாலே நினைவுக்கு வருவது சாக்லேட்! ஜப்பான் கடைகளெல்லாம் வேலண்டைன்ஸ் டேக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சாக்லேட்களால் குவியும். வித விதமான வகைகளில், பாக்கெட்களில் விற்பனையாகும் சாக்லேட்களை வாங்குவது பெண்கள் தான். ஜப்பானில் பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த எல்லா ஆண்களுக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அதனால் யாராவது சாக்லேட் தந்தால் உடனே காதல் என்று டூயட் பாட முடியாது ! காதலர்களுக்குக் கொடுக்க பெண்கள் கடைகளிலிருந்து சாக்லேட் வாங்க மாட்டார்களாம். ஸ்பெஷலாக வீட்டிலேயே எக்ஸ்குளூசிவ் ஆக தயாராக்கி கையோடு ஊட்டியும் விடுவார்களாம்.

 

26. கொரியாவில் பிப்பிரவரி 14 தான் காதலர் தினம். காதலியர் தங்கள் காதலர்களுக்குச் சாக்லேட் பரிசளிப்பது தான் இந்த நாளின் விசேஷம். ஆனால் காதலர்கள் அந்த நாளில் காதலியருக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமை இது என புலம்பிய கொரியா மார்ச் 14ம் தியதியை வயிட் டே, வெள்ளை தினம், என கொண்டாடுகிறது. இந்த நாளில் காதலர்கள் காதலியருக்கு சாக்லேட்களை வட்டியும் முதலுமாக வாங்கிக் கொடுக்கவேண்டும் !

 

27. காதலர் தினத்தின் இன்னொரு ஸ்பெஷல் டின்னர். மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் மங்கலான மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் காதல் வழியும் கண்களுடன் டின்னர் சாப்பிடுவது இந்த நாளின் முக்கிய அம்சம். கடற்கரை உணவகங்கள், கப்பல் ரெஸ்டாரண்ட்கள், மொட்டை மாடி ரெஸ்டாரண்ட்கள் போன்ற ஸ்பெஷல் இடங்கள் பல வாரங்களுக்கு முன்பே புக் ஆகி விடுமாம். வேலண்டைன் சாப்பாட்டின் போது ஷான்பைன் அருந்தாமல், வைன் அருந்தவேண்டும் என்பது எழுதப்படாத வழக்கம்.

 

28. அமெரிக்க ஆண்களில் 74 சதவீதம் பேர் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் இந்த மூன்று நாட்களுக்கு அடுத்தபடியாக சாக்லேட் அதிகம் விற்பனையாவது வேலண்டைன்ஸ் டேயில் தான். சுமார் 1105 மில்லியன் டாலர்கள் பணத்தை சாக்லேட் வாங்கியே செலவழிக்கிறார்களாம்.

 

29. அமெரிக்க பெண்கள் தங்களுக்கு பாய் பிரண்ட் இல்லை என்பதை கொஞ்சம் கௌரவக் கொறச்சலாகப் பார்க்கிறார்கள். அதனால் பாய் பிரண்ட் இல்லாத பார்ட்டிகள் தங்களுக்குத் தாங்களே பூக்களை அனுப்பிக் கொள்கிறார்கள். அப்படியே வீட்டுக்கு டெலிவரி வரும் போது, ஓ.. மை ஸ்வீட் ஹார்ட் என பில்டப் கொடுத்து வாங்குகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 15 சதவீதம் பெண்களுக்கு இப்படித் தான் வேலண்டைன் பூக்கள் வருகின்றனவாம் !

 

30. ரிச்சர்ட் காட்பரியை வேலண்டைன்ஸ் தினத்தில் ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள். அவர்தான் 1800ல் முதன் முதலாக வேலண்டைன் சாக்லேட் பாக்ஸை அறிமுகப்படுத்தி வைத்தவர். அவர் ஆரம்பித்த பழக்கம் உலகெங்கும் பரவி விட்டது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் வேலண்டைன் தினத்திலும் செலவாகும் சாக்லேட் பாக்ஸ்களின் எண்ணிக்கை 3.6 கோடி !

 

31. ஓர்லான்ஸ் பகுதியின் மன்னனான சார்லஸ் 1415ல் லண்டன் சிறையில் கிடந்தார். சிறைத் தனிமையில் தனது மனைவியை ரொம்பவே மிஸ் பண்ணினார் மனுஷன். அதனால் ஒரு கவிதை எழுதி வேலண்டைன் தினத்தன்று மனைவிக்கு அனுப்பினார். அது தான் நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வேலண்டைன் காதல் கவிதை. அவர் போட்டது தான் இன்று மானே, தேனே பொன்மானே என எல்லோரும் எழுதித் தள்ளும் வேலண்டைன் கவிதைகளின் பிள்ளையார் சுழி.

 

32. வேலண்டைன்ஸ் தினத்தை விடுமுறை நாளாக்கி காதலர்களின் மனதில் லவ் வார்த்தவர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி. 1537ல் இவர் வேலண்டைன் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக்கினார். எட்டாம் ஹென்றி மன்னன் காதல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர் என்பது தான் அதன் சீக்ரட் காரணம்.

 

33. காதலர் தினத்தில் காதலி சிணுங்குவாளோ இல்லையோ எல்லா செல்போன்களும் சிணுங்கோ சிணுங்கென்று சிணுங்கும். நல்ல வேளை கிரகாம்பெல் போனைக் கண்டு பிடித்தார். கிரகாம்பெல், காதலர் தினம், தொலைபேசி இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு. தொலைபேசியின் காப்புரிமைக்காக 1876ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தார். அந்த நாள் பிப்பிரவரி 14 ! அட என்ன ஒரு தீர்க்கத் தரிசி அவர் !

 

34. காதலர் தின பரிசை யாரெல்லாம் வாங்குவார்கள் ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியாத இடத்தில் இருப்பது செல்லப் பிராணிகள். மேலை நாடுகளில் 3 % செல்லப் பிராணிகள் தங்கள் எஜமானர்களிடமிருந்து காதலர் தின பரிசுகளைப் பெற்றுக் கொள்கிறதாம் !

 

35. வாழ்த்து அட்டைகள் தயாரிப்பதில் மிக முக்கியமான ஒரு நிறுவனம் ஹால்மார்க். ஹால்மார்க் நிறுவனத்தில் 1330 வகையான வேலண்டைன் ஸ்பெஷல் கார்ட் வகைகள் இருக்கின்றன. காமத்துப் பால் உட்பட 1330 குறள்கள் எழுதியவர் நமது வள்ளுவர். ஆனலும் இந்த 1330 க்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

 

36. ஐ லவ் யூ – என்றால் மனசுக்குள் மழையடிக்கும். ஆனால் ஐ லவ் யூ என்றால் மனதுக்குள் திகிலடித்த ஒரு நிகழ்வும் உண்டு. ஐ லவ் யூ எனும் ஒரு வைரஸ் 2000 ஆண்டில் முப்பது இலட்சம் கம்ப்யூட்டர்களுக்கு மேல் பாதித்து செயலிழக்க வைத்து விட்டது. ஐ லவ் யூ என்று தலைப்பிட்டு எந்த மெயில் வந்தாலும் மக்கள் அலறோ அலறென்று அலறினார்கள் ! கம்ப்யூட்டர் வைரஸ் வரலாற்றில் இந்த ஐ லவ் யூ வைரஸ் நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டது.

 

1910609_969130459788954_9052426149398101

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

12715646_444481929091636_874041475437843

12711181_444319025774593_723535193526068

இனிய நற்காலை அன்பு வணக்கம் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுதப் படிக்கத் தெரியாத காதலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்த காதலன் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும்? இதோ நம் தோழர் கார்க்கி தன் ரஷ்ய காதலிக்கு கடிதம் எழுத நேர்ந்தால் நடக்கும் சங்கடங்களை குறித்து பேசுகிறார்:

அன்புள்ள ஓல்கா,

உனக்கு கடிதம் எழுதவேண்டும் என்ற ஆசை என் மனத்தில் எழும்போது கூடவே கொஞ்சம் வேதனையும் எழுகிறது, உனக்குப் படிக்கத் தெரியாது. என் அன்புக் கடிதத்தைப் புரிந்து கொள்ள நீ வேறுயாருடைய உதவியாவது நாட வேண்டும். இந்தத் தடங்கலின் காரணமாக என் இதய உணர்ச்சிகளை அடக்கிக் கடிதம் எழுத வேண்டியிருக்கிறது.

உனக்கு இயற்கையாகவே அமைந்துள்ள அழகு மாதிரி கல்வியும் இருக்கக்கூடாதா, என்று என் மனம் ஏங்குகிறது. ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னிடம் கல்வி இருக்கிறது, உன்னிடம் அழகு இருக்கிறது. இரண்டும் ஒன்று சேர்ந்தால் அதுவே ஓர் ஒப்பற்ற சக்தியாகத் திகழும். உன் நீலநிறக் கண்களில் வீசும் இன்ப ஒளி கல்வியை விட உயர்ந்த்து என்பது என் கருத்து...

 

அன்புள்ள

கார்க்கி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TORONTO WEATHER

600_cp24_5day.jpg?ver=2425852

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12715245_10153544960816374_4170800780711

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Toronto is colder today than the coldest city in Canada

Sat Feb 13 2016

An extreme cold weather is in effect in Toronto. With wind chills approaching -40 C, exposed human flesh can freeze in around 20 minutes.

There’s a reason why Torontonians say ‘we the north.’

Toronto is currently colder than Yellowknife, the city known to be the coldest in Canada. Yellowknife is sitting at -14 C today as Torontonians are facing temperatures at -26 C with wind chills at -39 C.

Today is the coldest Feb. 13 since 1979, says climatologist Dave Phillips of Environment Canada.

In 1979, temperatures went as low as -23.2C.  

With wind chills approaching -40 C, exposed human flesh can freeze in around 20 minutes, Phillips says.

However, this year, temperatures have not been as bad as what we saw last year, says Phillips.

“Last year, we had 37 days in a row where we didn’t get a melting temperature in Toronto,” Philip says.

“This year, we’ve had seven days at the most.”

On Valentine’s Day this Sunday, conditions are expected to improve. The city will be at a high -10 C with a wind chill of -30 C.

On Monday, which is Family Day, the city will be at a high of -2 C with some flurries in the air.

The extreme cold weather alert is still in effect in the city. It was issued Thursday morning when temperatures were at -16 C and felt more like -25 C with the wind chill.

The alerts are issued by the Medical Officer of Health when temperatures of -15 C or colder or a wind chill of -20 C or colder are expected in the city.

With current freezing temperatures, Hydro One was reporting many power outages. In a tweet Saturday morning, Toronto Hydro reported that about 500 homes were without power in the city. There still has been no confirmed time for when the power will be restored.

 

http://www.thestar.com/news/starweather/2016/02/toronto-is-colder-today-than-the-coldest-city-in-canada.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12705318_1040215782709102_23524932234670

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவைதவிர என்ன செய்ய முடியும்….

 
அவளின் தொலைபேசி அழைப்புகளை
நிராகரித்து கொள்ளுகின்றேன்
அவளுக்கான என் அழைப்புகளையும் 
தவிர்த்து கொள்ளுகின்றேன்
அடிக்கடி அவள்மீதான
கோபத்தினை தேவையின்றி  காட்டுகின்றேன்;
அவளைக் காணும்போதெல்லாம் 
பாராதது போலவே செல்கின்றேன்
அவளைவிட்டு விலகிட எனக்கு
இவைதவிர வேறு என்ன செய்ய முடியும்…
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனதை உடலை எத்தனை ரணம் ஆக்கிரமித்தாலும் இரவும் பகலும் வந்து போய்க்கொண்டே இருக்கிறது...."மூலதனம்' நூலை எழுதி "கம்யூனிஸத்தின் தந்தை' என்று பெயரெடுத்த கார்ல் மார்க்சின் மனைவியின் பெயர்தான் ஜென்னி. மார்க்சை அறிந்த உலகிலுள்ள மக்கள் அனைவரும் அவரது மனைவி ஜென்னியைப் பற்றியும் அறிவர். அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது என்பது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்கிறது என்று குறிப்பிட்டார் மார்க்ஸ். மார்க்ûஸ விட ஜென்னி 4 வயது மூத்தவர். ஜென்னியின் அழகு, அமைதியான பண்பு, சிறந்த கல்வி அறிவு ஆகியவை கார்ல் மார்க்ûஸப் பெரிதும் கவர்ந்தது.

மார்க்ஸும் ஜென்னியும் ஜெர்மனியிலிருந்தும், பிரான்சிலிருந்தும், பெல்ஜியத்திலிருந்தும் மாறி மாறி விரட்டப்பட்டனர். மார்க்ஸின் புரட்சிகரமான பணிகளால் காவல்துறை ஜென்னியையும் கைது செய்தது. அவர் இருண்ட சிறைக்குள் தள்ளப்பட்டார்.

மார்க்சோ, ஜென்னியோ அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் பொதுமக்களுக்குத் தெரியாதபடி தான் வாழ்ந்தார்கள். வறுமையிலும் நோயிலும் அடிபட்டதால், ஜென்னியின் உடல் மகனுக்கு பால் கொடுக்கும் நிலையில் இல்லை. என் மகனுக்கு இருந்த பசியில் அவன் பலமாக உறிஞ்சியதன் விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி, தோல் வெடித்து விட்டது. அதனால் நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது என்று மனம் திறந்து குடும்ப நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ஜென்னி குறிப்பிட்டார் .

ஒரு நேரத்தில் மார்க்ஸ் குடும்பம் உணவின்றித் தவிக்க ஆரம்பித்தது. மார்க்சின் கோட்டும் பேண்டும், அடகுக் கடைக்குப் போய்விட்டன. எனவே அவர் வெளியே வர முடியாமல் இருந்தார். கடிதம் எழுதுவதற்குக் கூட வெள்ளைத் தாள் வாங்க முடியாத நிலையில் இருந்தனர். வறுமையின் உச்சக்கட்டத்தில் இருந்த இந்த நேரத்தில் அவர்களுடைய சின்னஞ்சிறு மகள் பிரான்சிஸ்கா மரணமடைந்தாள். அந்த மகளைப் புதைப்பதற்குக் கூட இருவரும் மிகவும் சிரமப்பட்டனர்.

அந்த நேரத்தில் ஒரு பிரெஞ்சு அகதி ஒருவர் இங்கிலாந்தின் பணமான இரண்டு பவுண்டு கொடுத்து உதவினார். அந்தப் பணம் தான் சவப்பெட்டி வாங்குவதற்குப் பயன்பட்டது. அந்தக் குழந்தை பிறந்தபொழுது தொட்டில் வாங்குவதற்குக்கூட அவர்களிடம் பணமில்லை. இறந்த போது சவப்பெட்டி வாங்கவும் முடியவில்லை என்கிறார் ஜென்னி.

1880-ம் ஆண்டில் ஜென்னியை நுரையீரல் நோய் பாதித்தது. 
அந்தப் புற்றுநோயின் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஜென்னி 1881-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி காலமானார். உயிர்போகும் கடைசி வினாடி வரை நல்ல நினைவுடன் இருந்தார். கடைசியாகத் தன் கணவர் மார்க்சிடம் என்னுடைய பலம் குறைந்து வருகிறது என்று கூறினார். ஜென்னி இறந்ததைக் கண்ட மார்க்சின் உயிர் நண்பர் ஏங்கல்ஸ், "மார்க்ஸ் செத்து விட்டார்' என்று குறிப்பிட்டார்.

எல்லாவற்றையும் இழந்து நின்ற இவர்களின் வாழ்க்கைப் போராட்டம், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மலை, வட ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதற்கு Uluru என்று பெயர். மழைக்காலத்தில் இந்த சிவப்பு மலையின் உச்சியில் இருந்து பால் போல தண்ணீர் கொட்டும் அழகான காட்சியைக் காண அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்களாம்.

10714505_679582772144268_867101827444104

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12717790_10153642409468801_7771925930173

 

ஒரு தலைவியின் கவிதைகள்! தமிழினி அக்காவின் கவிதை புத்தகத்திற்கு எழுதிய முன்னுரை

ஒரு கரும்புலிகள் நாள். கிளிநொச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் புலிக்கொடியை ஏற்றி பேசத் தொடங்கினார் தமிழினி அக்கா. வலிமையான குரல். செறிந்த கருத்துக்கள். விடுதலை நோக்கிய கம்பீரமான முகம். ஈழப் போராட்டத்தில் மிக முக்கியமானதொரு போராளித் தலைவி தமிழினி அக்கா. அந்த நிகழ்வின் பின்னர் தமிழினி அக்காவின் உரையை பல்வேறு மேடைகளில் நிகழ்வுகளில் கேட்டிருக்கிறேன். பத்திரிகைகளில் அவரது ஆபச்சை ஆர்வத்தோடு வாசிப்பேன். 

2007இல் என்னுடைய கவிதைகளைப் பற்றி தமிழினி அக்கா வெற்றிச்செல்வி அக்காவுடன் பகிர்ந்த அபிப்பிராயங்களை வெற்றிச்செல்வி அக்கா சொன்னார். அப்போதும் தமிழினி அக்கா பல்வேறு புனைபெயர்களில் கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதிக்கொண்டிருந்தார். போர், தாயகத்தில் நடந்த நிகழ்வுகளில் பற்கேற்பது என்று பல்வேறு வேலைச் சுமைகளின் மத்தியிலும் அவர் எழுதினார், வாசித்தார். இலக்கியம் குறித்து உரையாடினார்.

எங்களுடைய போராட்டம் மிகவும் முக்கியமான பல ஆளுமைகளை உருவாக்கியது. பல்வேறு சாதனைகளை அடையாளங்களை கொண்டு உலகில் பேசப்பட்ட போராட்டங்களில் ஒன்றானது. அந்த வகையில் ஒரு பெண் போராளியாக போராளித் தலைவியாக தமிழினி அக்காவுக்கு ஈழப் போராட்டத்தில் மிகவும் முக்கியமான இடம் உண்டு. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண்களுக்கு சம இடம் இருந்தது. பெண் போராளிகள் போர்க்களங்களில் சிறந்த போர் வீராங்கனைகளாக சிறந்த போர்த்தளபதிகளாக இருந்தனர். தமிழினி அக்கா போர் மண்ணில் சிறந்த தலைமைத்துவத்தோடும் ஆளுமையோடும் உருப்பெற்றார். போராட்டக் களத்தில் பெண்களின் பிரச்சினை, சமூகப் பிரச்சினை போன்ற விடயங்களில் தனது ஆளுமை மிக்க பார்வையை, கவனத்தை செலுத்தினார். 

தமிழினி அக்காவின் அடையாளம் தமிழ் சூழலில் புதிய அடையாளம். அதனால் அவர் தமிழ் சமூகத்தில் மிகவும் நேசிப்பிற்கும் கவனத்திற்கும் உரியவராக மாறினார். குழந்தைகள், சிறுவர்களுக்கு பிடித்த ஒரு போராளியானார். தலைவியானார். அவ்வாறுதான் தமிழினி அக்கா எனக்கும் பிடித்த ஒரு போராளியாக, போராளித் தலைவியாக இருந்தார். 
000

தமிழினி அக்கா வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த நிகழ்வில் பிடித்த சில புகைப்படங்களையும் பத்திரிகையாளர் சஞ்சித் எனக்கு அனுப்பியிருந்தார். அந்தப் புகைப்படங்களைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். சரணடைந்தபோது இருந்த தமிழினி அக்கா போராட்டத்தில் இணைந்த காலத்தில் இருந்தைப்போல இருந்தார் அந்தப் புகைப்படங்களில். தமிழினி அன்று தமிழினி இன்று என்று ஊடகங்கள் அவரது புகைப்படத்தை பிரசுரித்தன.

அவரது அடையாளத்தை காணவில்லை. முகத்தில் இருந்த கம்பீரத்தை காணவில்லை. இருள் சூழ்ந்து சோகம் நரம்பி மெலிந்து போயிருந்தார். ஒரு ஆளுமை மிக்க போராளியை தடுப்புச் சிறை இப்படித்ததான் சிதைத்துவிடுமா? எல்லாவற்றையும் இழந்து வெறும் நிராயுத பாணியாக நிற்பதைப்போல் இருந்தார். எங்கள் இனம் 2009 யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்ததைப்போல தமிழினி அக்கா யாவற்றையும் இழந்துபோயிருந்தார். 

2013ஆம் ஆண்டில் தமிழினி அக்கா விடுவிக்கப்பட்டபோது கொழும்பில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவரிடம் நேர்காணல் ஒன்றை எடுக்க தொலைக்காட்சி நிர்வாகம் விரும்பியது. தமிழினி அக்காவின் தொலைபேசி எண்ணை ஒருவாறு பெற்றுக்கொண்டு அவருக்கு அழைத்தபோது தமிழினி அக்கா இருக்கிறாரா என்று கேட்டேன். “அப்படி யாரும் இல்லை“ என்று எதிரிலிருந்து பதில் வந்தது. சிவகாமி அக்கா இருக்கிறாவா என்றேன் மீண்டும். “அப்படியும் யாருமில்லை“ என பதில் வந்தது. 

மீண்டும் அவரது எண்ணை சரிபார்த்தேன். அவரது எண்தான். தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது இந்த சமூகத்தில் யாருடனும் பேச விரும்பாமல் அவரிருக்கும் சூழ்நிலையை புரிவது அவ்வளது கடினமானதல்ல. அப்போது அவர் அரசியலில் ஈடுபடுவார் என்று கருத்துக்கள் வெளியிடப்பட்டதோடு அரச தரப்பு அவரை அரசியலில் ஈடுபட வற்புறுத்தியது. அரசியலில் ஈடுபடமாட்டேன் என் குடும்பத்துடன் வாழ்கையை கழிக்க விரும்புகிறேன் என்று தமிழினி அக்கா கூறியிருந்தார். 
000

ஒருநாள் முகப்புத்தகத்தில் தமிழினி ஜெயதேவன் என்ற பெயரில் நட்புக் கோரிக்கை வந்திருந்தது. உண்மையில் தமிழினி அக்காவா? அல்லது அவரது பெயரில் வேறு யாராவது உருவாக்கியுள்ளார்களா என்று சந்தேகத்துடன் வணக்கம், நீங்கள் யார்? தமிழினி அக்காவா? என்று பேட்டேன். தமிழினி அக்காவின் பதில்களின் ஊடாக அவர்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். என்னுடைய எழுத்துக்களை வாசித்தத்தைப் பற்றி அவரது அபிப்பிராயங்களை வாழ்த்தை ஊக்குவிப்பை உள்பெட்டியில் எழுதினார். 

எந்த சூழ்நிலையிலும் படிப்பை கைவிடாத உங்கள் கெட்டித்தனத்தை நினைத்தால் எனக்குப் பெருமை என்று ஒருநாள் எழுதியிருந்தார். அக்கா காலச்சுவட்டில் பிரேமா ரேவதி எழுதிய தமிழினி நலமா படித்தீர்களா? என்று கேட்டேன். தடுப்பில் இருந்தபோது யாரோ கொண்டு வந்து தந்து படித்ததாக சொன்னார். அக் கட்டுரையை படித்தபோது மிகவும் வருத்தமுற்றேன் என்றேன். ஏன் என்று கேட்டார். தெரியவில்லை அக்கா என்றேன். 
000

திருமணத்தின் பின்னர் தமிழினி அக்கா வெளிநாடு செல்ல இருக்கிறார் என்று கேள்விபட்டேன். ஒரு நாள் அக்கா நீங்கள் வெளியில் போகப் போகிறீர்களா என்று கேட்டு உள்பெட்டியில் எழுதினேன். ஆம் தம்பி என்று பதிலிட்டார். போக முன்னர் உங்களை ஒருமுறை பார்க்க வேண்டும் என்றேன். தற்போது கொழும்பில் மருத்துவம் பெற்றுக்கொண்டிருப்பதாகவும்வீடு வந்ததும் அழைக்கிறேன் என்று முகவரியை அனுப்பினார். எனது எண்ணை பெற்றுக்கொண்டார். 

சேனனின் லண்டன் காரர் நாவலை கொண்டு வீட்டுக்கு வருமாறும் எழுதியிருந்தார். இப்படி தமிழினி அக்காவை பார்க்க இருந்த நாட்களில்தான் அவர் சாவடைந்தார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியானது. அவர் எனக்கு அனுப்பிய முகவரியை வைத்துக்கொண்டு உயிரற்ற தமிழினி அக்காவின் உடலை சென்று சந்தித்த அந்த தருணத்தின் துயரை எப்படி எழுதுவது? 
000

தமிழ் சூழலில் மன்னர்கள் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். ஈழப் போராட்டத்தில் போராளிகள் கவிஞர்களாக இருந்திருக்கின்றனர். தமிழினி அக்கா ஒரு தலைவியாகவும் கவிஞராகவும் எழுத்தாளராகவும் காணப்படுகிறார். ஒரு இனத்திற்காக போராடிய இயக்கத்தின் தலைவி ஒருத்தியின் கவிதைகள் போராட்டம் சார்பில் மிகவும் முக்கியமானதொரு குரலும் சாட்சியும் ஆவணமும்.

போர், போரில் அழியும் மனம், போரின் கொடுமை, போரின் விளைவு, போரின் அகோரம், போரின் உள்முகம் என பல்வேறு விடயங்களை மிகவும் அழகியலோடும் கவிதை தரத்தோடும் தமிழினி அக்கா இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். 2009க்கு முன்னரான கவிதைகளும் இந்த தொகுப்பில் இடம்பெற்றால் இன்னும் கனதியாக இத் தொகுப்பு வந்திருக்கும். 

தமிழினி அக்காவின் மீள் எழுத்துப் பிரவேசம் ஈழப் போர் குறித்த போரில் ஈடுபட்டவர்களின் சாட்சிகளாக குரல்களாக எழுத்துக்கள் பதிவு செய்யப்படும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. போராளிகள் போர் வெறியர்களல்ல, அவர்கள் எதிரில் வந்த போரை முறியடிக்கும் போராட்டத்திலேயே ஈடுபடுகிறார்கள். போர் குறித்த வெறுப்பும் எதிர்ப்பும் தொடர்ச்சியாக போராளிகள் கவிஞர்களின் கவிதைகளில் இடம்பெறுவது இதற்குக் சான்றாகும். 

போரை வெறுக்கும் போரின் கொடுமைகளை வெறும் ஈழப் போராளிகளைத்தான் இந்த உலகம் பயங்கரவாதிகள் என்கிறது. எமது போராளிகள் பயங்கரவாதிகள் இல்லை, எமது போராளிகள் வாழ விரும்பும் வாழ்வும் கனவும் என்ன என்பதை போராளிக் கவிஞர்களின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அப்படித்தான் தமிழினி அக்காவின் கவிதைகளில் போரின் கொடுமை குறித்த சாட்சியமாக ஈழப் போராளிகளின் குரலாக முக்கியத்துவம் பெறுகின்றது. 

தமிழினி அக்கா இன்னும் நிறைய எழுதுவார் என்றும் எமது இனத்தின் உள் மனக்குரலாய் என் எழுத்துக்களை முன்வைப்பார் என்றும் எங்கள் இனத்தின் உள் முகமாய் இருப்பார் என்றும் நினைத்திருந்தபோதே அவரது இழப்பு நிகழ்ந்துவிட்டது. ஆனாலும் அவர் எழுதிவிட்டுச் சென்ற இச் சில கவிதைகளே பெரும் சாட்சியமாக, பெரும் குரலாக, பெரும் ஆணவமாக, பெரும் கவிதையாக தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைபெறும். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் எவ்வாறு தமிழினி என்ற பெயரை தவிர்க்க முடியாதோ, அதைப்போலவே தமிழ் இலக்கியத்திலும் ஈழத் தமிழ் போர் இலக்கியத்திலும் தமிழினி என்ற பெயரை தவிர்க்க இயலாது.

-தீபச்செல்வன்

புத்தகம்- போர்க்காலம்
வெளியீடு - சிவகாமி ஞாபகார்த்த நிறுவனம், கிளிநொச்சி

ஜெயன் தேவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12208278_766178483488369_2223507790176608979_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்கையில் பிடிக்காதவர்களை,
வெறுத்ததை விட நேசித்தவர்களை,
வெறுத்ததே அதிகம்.!!நம்பிக்கையும்,
அன்பும் அதிகம் வைத்து ஏமாந்ததனால்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12745631_446507442222418_610470457227474

12729087_1046387925425221_27366131604014

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!

2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, 'பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். 'நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.

பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.

வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் 'குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.

மூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாட, கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார்.

எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல... கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு... பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்!

பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் இராசம்மா. சிங்கள இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த இராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் இராசம்மா சொல்ல... அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.

பத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.

வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள இராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது. இந்த வீட்டுக்கு இவர்கள் குடிவந்தபோது, ஏதும் அறியாத சிறுவன்தான் பிரபாகரன்.

ஆனால், 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே. சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும், பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும், பின்னர் அதை எடுத்துச் செல்வதையும் பார்வதி பார்த்தார்.

சின்னச்சோதி, நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும், பிரபாகரனைவிட மூத்த குட்டிமணியின் நட்பும் அன்னையை யோசிக்க வைத்தது. மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போயிருந்தது. மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி.

''நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்?'' என்று வேலுப்பிள்ளை கேட்டார். ''நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும். அது நானூறு மொட்டை ஆகும்'' என்று சொல்லிவிட்டுப் போன பிரபாகரனை இருவரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள்.

அதன் பிறகு வந்த பொலிஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி. 1975-ல் தொடங்கி 2010 வரை ஒரு நிமிடம்கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார். மாறாக, பெருமையாகக் கழித்தார். 2000-ம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன.

இலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கியதால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி. 2003-ல் தாயகம் வந்தார்கள் இருவரும். சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக்கொண்டது.

மக்களைப் பிரியா மன்னவனும்... மன்னனைப் பிரியா அன்னை அவளும் இருக்க... சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது!

புலியை வளர்த்த குயில் பறந்துவிட்டது. குயில் பாட்டும் புலிச் சீற்றமும் கேட்டுக்கொண்டே இருக்கும்!

 
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று.... உலக தாய் மொழிகள் தினம்

Today is World Mother Language Day

This year, World Mother Language Day is celebrated under the theme Quality education, languages of instruction and learning outcomes.

In 2007, the United Nations General Assembly, in its resolution, called upon member states “to promote the preservation and protection of all languages used by peoples of the world”.

The date represents the day in 1952, when students demonstrating for recognition of their language, Bangla, as one of the two national languages of the then Pakistan, were shot and killed by police in Dhaka, the capital of today’s Bangladesh.

Meanwhile, Professor J.B Dissanayake of the University of Colombo said that mother languages should change according to the time period.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.