Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன் வருடாந்திர மகோற்சவம்...09.08.2016.படங்கள்;- நல்லூரான் இணையம்...

001

002

003

004

0005

005

006

007

008

009

010

011

012

013

001

  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
  • அயல் தேசக் கதைகள் 

தமிழண்ணா, படங்கள் : ஜெயசூர்யா

 

1,000 ஆண்டுகளுக்கு முன்பு கொரியக் கிராமம் ஒன்றில், அண்ணன் தம்பி இருவர் வசித்துவந்தனர். அண்ணன் பெயர், நோல்பு. தம்பி பெயர் கியூங்பு.

நோல்பு, பெரிய பணக்காரன். ஆனால், பேராசைக்காரன். இரக்கம் இல்லாதவன். எந்த நல்ல குணமும் அவனிடம் இல்லை. தன் தம்பிக்குக்கூட தோட்டத்தில் விளையும் தானியத்தில் கொஞ்சமும் கொடுக்காதவன். தம்பி கியூங்பு, ஏழையாக இருந்தாலும் அடுத்தவருக்கு உதவும் குணம் உள்ளவன்.

ஒரு நாள்... குயில் ஒன்று கால் ஒடிந்து வலியால் துடிப்பதைக் கண்டான் கியூங்பு. உடனே அந்தக் குயிலைத் தன் வீட்டுக்கு எடுத்துச்சென்று, மருந்து போட்டு கவனித்துக்கொண்டான். அதற்கு, உண‌வும் நீரும் கொடுத்துப் பராமரித்தான்.

குயில் நன்றாகக் குணம் அடைந்ததும், கியூங்புவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் பறந்துபோனது.  தனக்கு உதவி செய்த கியூங்புவுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ நினைத்தது. வசந்த காலம் துவங்கியபோது, பூசணி விதை ஒன்றை கியூங்புவிடம் கொடுத்துவிட்டுச் சென்றது.

ch56.jpg

கியூங்பு, அந்தக் குயில் கொடுத்த விதையைத் தன் வீட்டுக்கு முன்பாக விதைத்தான். பூசணிக்கொடி நன்கு வளர்ந்து பெரிய பெரிய பூசணிகள் காய்த்தன.அந்தப் பூசணிகளைப் பறித்து, ஊர்ச் சந்தையில் விற்க  நினைத்தான்.

அன்று இரவு, சமைப்பதற்கு ஒரு பூசணியை எடுத்து வெட்டினான். உள்ளே  விதைகளுக்குப் பதிலாக தங்கக் கட்டிகள் இருந்தன. கியூங்புவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அடுத்தடுத்த பூசணிகளை வெட்டினான். எல்லாக் காய்களில் இருந்தும் தங்கக் கட்டிகள் கொட்டின.

இப்போது, கியூங்பு தன் சகோதரன் நோல்புவைவிட பெரிய பணக்காரன் ஆகிவிட்டான். சிலருக்கு பணம் வந்துவிட்டால், குணம் மாறிப்போகும். ஆனால், கியூங்பு பணக்காரன் ஆன பிறகும் எளிமையாக இருந்தான்.  இல்லாதவர்களுக்கு உதவினான்.

திடீர் பணக்காரத் தம்பியின் ரகசியத்தை அறிய நோல்பு விரும்பினான். ‘இது வரை எந்த உதவியும் செய்யாத நாம் போனால், தம்பி பேசுவானா... அப்படியே பேசினாலும் பணக்கார ரகசியத்தைச் சொல்வானா?’ என்ற தயக்கத்துடன் தம்பியின் வீட்டுக்குச் சென்றான்.

ch56a.jpg

திடீரென்று வீடு தேடி வந்த அண்ணனை முக மலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தான் கியூங்பு. எப்போதுமே வராத அண்ணன், தேடி வந்ததில்  மகிழ்ச்சியே. அண்ணனுக்கு விருந்து கொடுத்து நன்கு உபசரித்தான்.

“எல்லாம் சரி தம்பி, உனக்கு எப்படி இவ்வளவு வசதி வந்தது?” என்று கேட்டான் நோல்பு.

கள்ளம் கபடம் இல்லாத கியூங்பு, “அதுவா அண்ணே, எல்லாம் ஒரு குயில் புண்ணியத்தால் வந்தது” என்று சொன்னான்.

“ஆச்சரியமா இருக்கே. குயிலால் எப்படி உன்னைப் பணக்காரன் ஆக்க முடிந்தது?” என்று கேட்டான் நோல்பு.

நடந்த விஷயங்களை அண்ணனிடம் சொன்னான் தம்பி. வீட்டுக்குத் திரும்பிய பேராசைக்கார அண்ணன், கால் ஒடிந்து எங்காவது குயில் விழுந்து கிடக்கிறதா என்று தேட ஆரம்பித்தான்.

பல நாள் தேடியும் கால் ஒடிந்த குயில் தென்படவில்லை. பேராசைக்காரனுக்கு புத்தி நல்ல வழியில் வேலை செய்யாதுதானே. நோல்பு விஷயத்திலும் அப்படித்தான் ஆயிற்று. காட்டுக்குச் சென்று, ஒரு குயிலைப் பிடித்துவந்தான். நன்றாக இருந்த‌ அதன் காலை ஒடித்தான். அது, வலியால் துடித்தது. ஒடித்த குயிலின் காலுக்கு மருந்து போட்டு, அது குணமாகும் நாளை எதிர்பார்த்தான்.

ch56b.jpg

குயிலுக்கு காயம் ஆறியதும் பறந்து போய்விட்டது. நோல்பு வசந்த காலத்துக்காக காத்திருந்தான். வசந்த காலமும் வந்தது. அந்தக் குயிலும் வந்தது.

ஒரு பூசணி விதையை நோல்புவுக்குக் கொடுத்துவிட்டுப் பறந்துபோனது. பேராசைக்கார நோல்பு இதைத்தானே எதிர்பார்த்தான். குயில் கொடுத்த பூசணி விதையை நட்டு வளர்த்தான். பூசணிக் கொடியில் பூசணி காய்க்கத் தொடங்கியது. நோல்பு மகிழ்ச்சி அடைந்தான். பூசணிக்காய்கள் பெரிதாகும் வரை தவிப்போடு காத்திருந்தான்.

ஒருவழியாக, காய்கள் பெரிதானதும் எல்லாவற்றையும் பறித்துவந்து, நடு வீட்டில் வைத்தான். பூசணியை அறுக்கும்போது யாரும் வீட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்று ‌வீட்டின் எல்லாக் கதவுகளையும் உள்பக்கமாகத் தாளிட்டான். ஜன்னல்களையும் மூடித் தாளிட்டான்.

ஒரு பெரிய கத்தியை எடுத்துவந்து, ஆவலுடன் பூசணியை வெட்டினான். தங்கத்துக்குப் பதிலாக தண்ணீர் கொட்டியது. ஏமாற்றம் அடைந்த நோல்பு, அடுத்த பூசணியையும் வெட்டினான், அதிலிருந்தும் தண்ணீர்தான் கொட்டியது.

‘ஒருவேளை இந்தப் பூசணியில் இருக்குமோ, அந்தப் பூசணியில் இருக்குமோ’ என்று ஒவ்வொரு பூசணியாக எடுத்து, வெறியுடன் வெட்டினான். எல்லாப் பூசணியில் இருந்தும் அருவி போல தண்ணீர் கொட்டியது.

நோபுலுக்கு அப்போதும் புத்தி வரவில்லை. இந்தத் தண்ணீர் எல்லாம் தங்கமாக மாறும் என்று நம்பினான். அவன் கழுத்து அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. இப்போது, நோல்புவுக்கு உயிர் பயம் வந்தது. ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று வீட்டுக் கதவைத் திறந்தான். ஆற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மரக்கட்டை போல‌ வெளியே வந்து விழுந்தான். வீட்டில் இருந்த செல்வம் எல்லாம் பூசணியில் இருந்த தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டது.

நோல்பு ஏழையாகிப் போனான். சாப்பிடக்கூட பணம் இல்லை. தம்பியைப் பார்க்க வெட்கப்பட்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தான்.

அண்ணன் நோல்பின் நிலையைக் கேள்விப்பட்டு, தம்பி கியூங்பு வருத்தப்பட்டான். அண்ணனைச் சந்தித்து, தன்னிடம் இருந்த தங்கத்தைப் பகிர்ந்து கொடுத்தான். தம்பியின் பாசத்தால் நோல்பு மனம் திருந்தினான்.  இப்போது,  அந்தக் கிராமத்தில் இருவருமே எல்லோருக்கும் உதவும் பாசம் மிக்க சகோதரர்கள்.


கொரியா...

கிழக்கு ஆசியாவில் உள்ள தீபகற்ப நாடு, கொரியா. இது, 1948-ல் தென் கொரியா மற்றும் வட கொரியா என இரண்டு நாடுகளாகப் பிரிந்தன. 

கொரியத் திருவிழாக்களில் ஒன்று, சசோக். சசோக் திருவிழா என்பது, நமது பொங்கல் திருவிழா வைப்போன்றது. கொரியர்கள் இதை அறுவடைத் திருவிழாவாக‌க்  கொண்டாடுவார்கள்.அந்த ஆண்டு முழுவதும் பெரியவர்களிடம் கீழ்ப்படிந்து நடப்போம் என்று சிறுவர்கள் 
உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்.

கொரிய விளையாட்டுகளில் குச்சியையும் கல்லையும் அதிகம் பயன்படுத்தி விளையாடுவார்கள்.  நம் ஊர் கோலிக்குண்டு, சிறுமிகள் விளையாடும் ஐந்து கல் ஆட்டம் போன்ற விளையாட்டுகளை கொரியாவிலும் விளையாடுகிறார்கள்.

ஜேக் என்ற விளையாட்டில், ஒரு வட்டம் போட்டு, அதன் நடுவில் கற்களைக் குவித்து வைப்பார்கள். தூரத்தில் இருந்து ஒரு பந்தை அந்தக் கற்குவியல் மீது வீசுவார்கள். யார் அதிகமாக கற்களை வட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறார்களோ, அவர்களே வென்றவர்கள்...

vikatan.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

நல்லூர் கந்தன் வருடாந்திர மகோற்சவம்...10.08.2016.படங்கள்;- நல்லூரான் இணையம்...

13908901_1397002566981763_10029856039530

13995386_1397002716981748_54049199152633

13925023_1397002670315086_82839943829365

13975302_1397002743648412_68767048686357

13920112_1397002866981733_25483540483322

13920297_1397002996981720_37701698329812

13923855_1397002993648387_72707451266021

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி – உலக சிங்க தினம்

 

உலகளாவியரீதியில் அருகிவருகின்றஉயிரனமாக IUCN அமையத்தினால்வகைப்படுத்தப்பட்டுள்ள சிங்கங்களை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் தொடர்பாகவிழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலகசிங்க தினம் கொண்டாடப்படுகின்றது.
 
 
அந்தவகையில், சிங்கங்கள் தொடர்பிலானசுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

 
 
  • சிங்கங்களின் கர்ஜனை ஓசை 5 மைல்களுக்குஅப்பாலும் கேட்கக்கூடியதாகும்.
Pair_of_lions.jpg
  • சிங்கங்கள் நடக்கின்றபோது அவற்றின்குதிகால்கள் தரையில் படுவதில்லை.
21-David-Lazar-Lion-Family.jpg
  • சிங்கங்கள் ஒரு நாளில் 16 – 20மணித்தியாலங்களை தூக்கத்திலும்,ஓய்விலுமே செலவிடுகின்றன.
Lion+sleeping-835939.jpeg
  • சிங்கங்கள் மிகச்சிறப்பான இரவு நேரபார்வையினைக் கொண்டவையாகும். இதன்காரணமாக அவை சில வேட்டையாடுதல்களைஇரவு நேரத்திலேயே மேற்கொள்கின்றன.
  • ஆண் சிங்கங்களை விடவும், பெண் சிங்கங்களேபெரும்பாலான வேட்டையாடல்களைமேற்கொள்கின்றன. ஆண் சிங்கங்கள் தனது ஆட்சிபுலத்துக்குரிய பிராந்தியத்தினையும், தனது குட்டிகளினையும் பாதுகாப்பதிலேயே தனது நேரத்தினை செலவிடுகின்றது.
 
 
  • பெரிய பூனை இனங்களில் சிங்கங்கள்மாத்திரமே சமூகவியலானவையாகும்.சிங்கங்கள் வழமையில் குழுக்களாகவேவாழ்கின்ற இயல்பினைக் கொண்டவையாகும். ரு குழுவில் அண்ணளவாக 30 வரையானசிங்கங்கள் ஒன்றாகவே வாழ்கின்றன.

 
resting-lions-tanzania_56400_600x450.jpg
  • சிங்கங்கள் மணித்தியாலத்திற்கு 81கிலோமீற்றர் (50 mph) வேகத்தில்ஓடக்கூடியவையாகும்.
 
 
o-LION7-900.jpg
  • சிங்கங்கள் 5-6 நாட்கள் வரையில் நீரின்றி தனதுகாலத்தினை கழிக்கக்கூடியவையாகும்.
 
 
lions_small.jpg
  • தனது உடற் பருமனுடன் ஒப்பிடுகின்றபோதுமிகச்சிறிய இதயத்தினைக் கொண்டுள்ளவிலங்கினம் சிங்கம் ஆகும். சிங்கத்தின்இதயமானது, அதன் உடற்பருமனில் 1% இலும்குறைந்த வகிபாகத்தினையே வகிக்கின்றது.
 
 
  • ஒரேஅமர்வில் சிங்கங்கள் 30 kg இற்கும் இறைச்சியினை உட்கொள்ளும் ஆற்றலைக் கொண்டவையாகும்.
 
 
  • உலகில் மிகப்பிரபலமான தேசிய விலங்கு என்கின்ற பெருமைக்குரிய விலங்கினம் சிங்கம் ஆகும்.  ஆர்மேனியா, நெதர்லாந்து, பெல்ஜியம், , பல்கேரியா, லக்ஸ்சம்பேர்க், இங்கிலாந்து, எதியோப்பியா, ஈரான், கென்யா, லைபீரியா, லிபியா, மஸிடோனியா, மொராக்கோ  ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு சிங்கம் ஆகும்.
 

 

Y உங்களுக்குத் தெரியுமா - 1972ம் ஆண்டுவரை இந்தியாவின் தேசிய விலங்கினமாக சிங்கம் விளங்கியது.
 
 
"லோகநாதனின் பகிர்வுகள்" பக்கத்தினை
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லைகந்தப்பெருமானுக்கு இன்று 4ஆம்தி ருவிழா ......  August 11, 2016

IMG_8371.jpg

IMG_8393.jpg

IMG_8409.jpg

IMG_8410.jpg

IMG_8411.jpg

IMG_8431.jpg

IMG_8436.jpg

IMG_8462.jpg

IMG_8496.jpg

IMG_8500.jpg

hariengineering logo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தது முதல்தான் எத்தனை படிப்பு 
முதுமையில் படிக்கும் புத்தகம் ஏக்கம் 
முடிவினில் படிக்கும் புத்தகம் தூக்கம் 
படித்ததை முடித்ததன் பரீட்சைதான் இறப்பு!

-கவிஞர் வாலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் 12: சர்வதேச இளையோர் நாள் இன்று.

இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

11873728_167202643611183_129919337151993
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

13975380_1193439944048175_87676878451363

முப்பது வருடங்களுக்கு முன் 155 இலங்கைத் தமிழர்கள் கடல்வழிப் பயணத்தால் கனடாவின் நியூபவுன்லாந்துக்கு சென்றடைந்த போது அவர்களை காப்பாற்றி பாதுகாப்பாக கரை சேர்த்த கனடிய கரையோர பாதுகாப்பு கப்பல் முன் வரலாற்று சிறப்புமிக்க ... தமிழ்ப் பயணம் 1986. நாளை நினைவுகூர்ந்த கனடியத் தமிழர்கள் .......Aug 11,2016
.நிகழ்வுகளுடன் ekuruvi..

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி – உலக யானை தினம்

 
உலகளாவியரீதியில் யானைகளினை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலக யானை தினம் கொண்டாடப்படுகின்றது.

 
உலகளாவியரீதியில் யானைகள் தத்தங்களுக்காகவும், ஏனைய செயற்பாடுகளுக்காகவும் கொல்லப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன, மேலும்  மனிதன் - யானை மோதல்களின் காரணமாகவும் யானைகள் கொல்லப்படும் நிகழ்வுகளும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.
 
ele2%2B(2).JPG
www.facebook.com/kkloganphotography
 
1980ம் ஆண்டளவில் ஆபிரிக்காவில் 1.2 மில்லியன்யானைகள்  வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது,ஆனால் தற்சமயம் அண்ணளவாக 430,000யானைகளே வாழ்வதாககணிப்பிடப்படப்பட்டுள்ளது.  
 
அந்தவகையில், யானைகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

 
  • தரைவாழ் விலங்கினங்களில் மிகப்பெரிய விலங்கினமான யானைகளில் ஆபிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்ற இரண்டு வகையினங்கள் உண்டு. ஆசிய யானைகளை விடவும் ஆபிரிக்க யானைகள் பெரியவையாகும்.
7159-1.jpg
  • ஆபிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டு இனங்களுக்கும் கொம்புகள் உண்டு. ஆனால் ஆசிய யானைகளில் ஆண் இனத்திற்கு மாத்திரமே கொம்பு உண்டு. யானைகள் தனது கொம்பினை நிலத்தினை தோண்டுவதற்கும், உணவினை கண்டறிவதற்கும் பயன்படுத்துகின்றன.
 
original-29952-1403096446-15.jpg
 
  • தரைவாழ் உயிரினங்களில் மிகப்பெரிய மூளையினைக் கொண்டவையாக யானைகள் விளக்குகின்றன. இதன் நிறை 5 கிலோகிராமிலும் அதிகமாகும்.
  • யானைகள் பெரும்பாலும் நின்றுகொண்டே தூங்கும் தன்மை கொண்டவையாகும். யானை தூங்கும் போது அதன் எடை முழுவதையும் ஒவ்வொரு காலுக்கும் மாற்றி மாற்றி 

    வைத்துக்கொள்ளும்.
Phant.jpg
  • விலங்கினங்களில் மிகநீண்ட கர்ப்ப காலத்தைக்கொண்ட விலங்கினம் யானை ஆகும். பெண்யானைகள் 22 மாதங்களின் பின் குட்டியினைபிரசவிக்கின்றது.
elephant-family.jpg
  • யானையின் தும்பிக்கையில் 40,000 இற்கும் மேற்பட்டதசைநார்கள் உண்டு.
  • யானைகளுக்கு 24 பற்கள் உண்டு.
  • யானைகள் தெளிவான கண்பார்வையினைக் கொண்டிருக்காவிடினும், அவை மிகச்சிறந்த மோப்ப சக்தியினையும், கேட்டல் சக்தியினையும் கொண்டவையாகும்.
  • பாலூட்டிகளில் துள்ளிக் குதிக்க முடியாத ஒரே உயிரினம் யானை ஆகும்.
  • யானை ஒரே நேரத்தில் தனதுதும்பிக்கையினால் 7.5 லீற்றர் நீரினைஉறிஞ்சிக்கொள்ள முடியும்.
original-21664-1403098154-16.jpg
  • ஐவரி கோஸ்ட், கென்யா, லாவோஸ், மொசாம்பிக், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு யானை ஆகும்.
 
"லோகநாதனின் பகிர்வுகள்"
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார்.
அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.
அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது
.கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்.....,
''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.
உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுதிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.
.அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.
என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.
ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது''.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். 

# Osho #

 
Image may contain: one or more people

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
CBC.CAMENU

Menu

 
 

Medals

Rank
Country
GGold Medal
SSilver Medal
BBronze Medal
TotalTotal
 
United States 
16 12 16 44 Go to United States Medal
China 
13 10 14 37 Go to China Medal
Japan 
7 3 14 24 Go to Japan Medal
Russia 
5 9 8 22 Go to Russia Medal
Great Britain 
7 8 6 21 Go to Great Britain Medal
Australia 
5 6 7 18 Go to Australia Medal
France 
5 6 5 16 Go to France Medal
Italy 
4 7 4 15 Go to Italy Medal
South Korea 
6 3 4 13 Go to South Korea Medal
10 
Germany 
6 3 2 11 Go to Germany Medal
11 
Canada 
2 2 5 9 Go to Canada Medal
12 
Hungary 
5 1 1 7 Go to Hungary Medal
13 
Kazakhstan 
2 2 3 7 Go to Kazakhstan Medal
14 
Netherlands 
2 2 2 6 Go to Netherlands Medal
15 
New Zealand 
1 5 0 6 Go to New Zealand Medal
16 
North Korea 
1 2 2 5 Go to North Korea Medal
17 
Thailand 
2 1 1 4 Go to Thailand Medal
18 
Spain 
2 0 2 4 Go to Spain Medal
19 
Sweden 
1 2 1 4 Go to Sweden Medal
20 
Brazil 
1 1 2 4 Go to Brazil Medal
21 
South Africa 
0 3 1 4 Go to South Africa Medal
22 
Denmark 
0 2 2 4 Go to Denmark Medal
23 
Switzerland 
2 0 1 3 Go to Switzerland Medal
24 
Belgium 
1 1 1 3 Go to Belgium Medal
24 
Slovenia 
1 1 1 3 Go to Slovenia Medal
26 
Poland 
1 0 2 3 Go to Poland Medal
26 
Chinese Taipei 
1 0 2 3 Go to Chinese Taipei Medal
28 
Ukraine 
0 2 1 3 Go to Ukraine Medal
29 
Croatia 
2 0 0 2 Go to Croatia Medal
30 
Colombia 
1 1 0 2 Go to Colombia Medal
30 
Slovakia 
1 1 0 2 Go to Slovakia Medal
30 
Vietnam 
1 1 0 2 Go to Vietnam Medal
33 
Czech Republic 
1 0 1 2 Go to Czech Republic Medal
33 
Ethiopia 
1 0 1 2 Go to Ethiopia Medal
33 
Greece 
1 0 1 2 Go to Greece Medal
33 
Romania 
1 0 1 2 Go to Romania Medal
37 
Azerbaijan 
0 2 0 2 Go to Azerbaijan Medal
37 
Indonesia 
0 2 0 2 Go to Indonesia Medal
39 
Cuba 
0 1 1 2 Go to Cuba Medal
39 
Georgia 
0 1 1 2 Go to Georgia Medal
39 
Lithuania 
0 1 1 2 Go to Lithuania Medal
42 
Egypt 
0 0 2 2 Go to Egypt Medal
42 
Israel 
0 0 2 2 Go to Israel Medal
42 
Norway 
0 0 2 2 Go to Norway Medal
42 
Uzbekistan 
0 0 2 2 Go to Uzbekistan Medal
46 
Argentina 
1 0 0 1 Go to Argentina Medal
46 
Fiji 
1 0 0 1 Go to Fiji Medal
46 
Independent Olympic Athlete 
1 0 0 1 Go to Independent Olympic Athlete Medal
46 
Iran 
1 0 0 1 Go to Iran Medal
46 
Kosovo 
1 0 0 1 Go to Kosovo Medal
51 
Belarus 
0 1 0 1 Go to Belarus Medal
51 
Ireland 
0 1 0 1 Go to Ireland Medal
51 
Kenya 
0 1 0 1 Go to Kenya Medal
51 
Malaysia 
0 1 0 1 Go to Malaysia Medal
51 
Mongolia 
0 1 0 1 Go to Mongolia Medal
51 
Philippines 
0 1 0 1 Go to Philippines Medal
51 
Turkey 
0 1 0 1 Go to Turkey Medal
58 
Estonia 
0 0 1 1 Go to Estonia Medal
58 
Kyrgyzstan 
0 0 1 1 Go to Kyrgyzstan Medal
58 
Portugal 
0 0 1 1 Go to Portugal Medal
58 
Tunisia 
0 0 1 1 Go to Tunisia Medal
58 
United Arab Emirates 
0 0 1 1 Go to United Arab Emirates Medal
 
In Pro

BREAKING NEWS

 
Close
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க் கந்தன் ஐந்தாம் திருவிழா..12.08.2016

 
Image may contain: outdoor and one or more people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடக்க 
முடியாமலேயே போன......
தன் மகனுக்காக 
தந்தை எழுப்பிய கல்லரை..........

 
Image may contain: grass, outdoor, text, nature and one or more people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


Today 15:28

5 புள்ளிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. நன்றி! :)

Green

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) .:)

பிறந்த குழந்தைகளில் சிலருக்கு வளர் இளம்பருவத்தின்போது இயற்கையாகவே இடது கை பழக்கம் இருக்கலாம். இந்த பழக்கம் உள்ளவர்களின் வளர்ச்சி பருவத்துக்கு ஏற்ப விவேகத் திறனுடையவர்களாக இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகளவில் பெரும்பாலோர் எல்லா பணிகளையும் வலது கையால் மேற்கொள் வதனால்தான், அனைத்து பொருட்களும் வலது கை பழக்கம் உடையவர்களை கவனத்தில் கொண்டே தயாராகிறது. வீடுகளில் கதவுகளைத் திறப்பது, தண்ணீர் குழாய்களைத் திறப்பது, தற்காலத்தில் கணினியின் மவுஸ் பிரயோகம் என அனைத்தும் வலது கை பாவனைக்கேற்ற முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிறவிலேயே சிலருக்கு இடது கை பழக்கம் ஏற்பட்டிருக்கும். இடது கை பழக்கம் உடையவர்கள் கத்தரிகோல், தாழ்ப்பாள், பீரோ கைப்பிடி, கிடார், கருத்தரங்குகளில் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மேசை உள்ளிட்ட பொருட்களை கையாளும்போது பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள்.
இந்த பழக்கத்தை மாற்ற முயற்சிக்கும்போது பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது ஓர் அறிவியல் ஆய்வு. நவீன விஞ்ஞான விளக்கங்களின்படி இடது கை பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்களாகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவர்களாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி, அமெரிக்க அதிபர்களான ரொனால்டு ரீகன், கிளின்டன், புஷ், ஒபாமா, டேவிஸ் டென்னிஸ் கோப்பையைத் தொடங்கிய டேவிஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இடது கை பழக்கம் உடையவர்கள். இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், இவர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறு பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்டு 13-ம் தேதி, சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் வித்யாசங்கர் கூறும்போது, “இடது கை பழக்கம் பிறப்பிலேயே சிலருக்கு ஏற்படுகிறது. பெருமூளை, சிறுமூளை மற்றும் நீள்வளைய மைய விழையம் (மெடுல்லா ஆப்லங்கட்டா) என மூன்று பகுதிகளை மனித மூளை கொண்டுள்ளது. இதில் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. பெரும்பாலானோருக்கு இடதுபக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலதுபக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படும். ஒரு சிலருக்கு வலதுபக்க அரைக்கோளம் மேலோங்கி இருப்பதால் இடதுபக்க பழக்கம் ஏற்படுகிறது. இப்படி இயற்கையாக அமைந்ததை மாற்ற முயற்சித்தால் அவர்களது கை எழுத்து சிதைவதுடன், பின்னாளில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்” என்றார்.
தனித்துவமான போக்கினைக் கொண்ட இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல் களை விரைவில் பரிமாறிக் கொள்ள முடியும். நுட்பமான பணிகளை மேற்கொள் வதிலும், விளையாட்டுத் துறையிலும் முன்னிலையில் இருப்பார்கள, விவாதத் திறனும், விமர்சன ஆற்றலும் மிக்கவர்களாக இருப்பார்கள் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 
No automatic alt text available.
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, யாயினி said:


Today 15:28

5 புள்ளிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. நன்றி! :)

 

Green

2 உங்களுக்கு..

போராடியவர் நீங்க தானே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Am also left hand user :)

 
Image may contain: 13 people , people smiling , text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 நல்லை ஆறுமுகவேலவர்க்கு இன்று ஆறாம் திருவிழா...13.08.2016

13934823_1102111529859772_66862919809487

IMG_9087

IMG_9095

IMG_9096

IMG_9118

IMG_9122

IMG_9145

IMG_9065

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

2 உங்களுக்கு..

போராடியவர் நீங்க தானே...

போராட்டம் அப்படி எல்லாம் ஒன்றுமே இல்ல...சில வேகைளில் 3 புள்ளிகளும் தீர்ந்து விட்ட  பின் உண்மையாக உடனயே சில விடையங்களுக்கு புள்ளி போட வேண்டும் போல் இருக்கும்..ஆனால் புள்ளி தீர்ந்து போய் இருக்கும்..அதனால் தான் சின்ன வேண்டுகோள்...நடை முறைக்கு வரும் என்று நப்பிக் கேட்கவில்லை...யாழ் நிர்வாகத்தினர்க்கு மனம் நிறைந்த நன்றிகள். original_thank-you-cards.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

rio2016_logotype.svg

Medals

 
Rank
Country
GGold Medal
SSilver Medal
BBronze Medal
TotalTotal
 
1
United States 
21 14 17 52 Go to United States Medal
2
China 
13 10 15 38 Go to China Medal
3
Great Britain 
8 10 6 24 Go to Great Britain Medal
4
Japan 
7 3 14 24 Go to Japan Medal
5
Russia 
5 9 8 22 Go to Russia Medal
6
Australia 
6 6 7 19 Go to Australia Medal
7
France 
5 7 5 17 Go to France Medal
8
Italy 
4 7 4 15 Go to Italy Medal
9
Germany 
7 4 3 14 Go to Germany Medal
10
South Korea 
6 3 4 13 Go to South Korea Medal
11
Hungary 
5 3 3 11 Go to Hungary Medal
12
Canada 
2 2 6 10 Go to Canada Medal
13
New Zealand 
2 6 0 8 Go to New Zealand Medal
14
Kazakhstan 
2 2 3 7 Go to Kazakhstan Medal
14
Netherlands 
2 2 3 7 Go to Netherlands Medal
16
Spain 
3 0 2 5 Go to Spain Medal
17
North Korea 
1 2 2 5 Go to North Korea Medal
18
South Africa 
0 4 1 5 Go to South Africa Medal
19
Thailand 
2 1 1 4 Go to Thailand Medal
20
Sweden 
1 2 1 4 Go to Sweden Medal
21
Brazil 
1 1 2 4 Go to Brazil Medal
21
Poland 
1 1 2 4 Go to Poland Medal
21
Romania 
1 1 2 4 Go to Romania Medal
24
Denmark 
0 2 2 4 Go to Denmark Medal
25
Croatia 
2 1 0 3 Go to Croatia Medal
26
Switzerland 
2 0 1 3 Go to Switzerland Medal
27
Belgium 
1 1 1 3 Go to Belgium Medal
27
Slovenia 
1 1 1 3 Go to Slovenia Medal
29
Czech Republic 
1 0 2 3 Go to Czech Republic Medal
29
Chinese Taipei 
1 0 2 3 Go to Chinese Taipei Medal
31
Ukraine 
0 2 1 3 Go to Ukraine Medal
32
Colombia 
1 1 0 2 Go to Colombia Medal
32
Slovakia 
1 1 0 2 Go to Slovakia Medal
32
Vietnam 
1 1 0 2 Go to Vietnam Medal
35
Ethiopia 
1 0 1 2 Go to Ethiopia Medal
35
Greece 
1 0 1 2 Go to Greece Medal
37
Azerbaijan 
0 2 0 2 Go to Azerbaijan Medal
37
Indonesia 
0 2 0 2 Go to Indonesia Medal
39
Cuba 
0 1 1 2 Go to Cuba Medal
39
Georgia 
0 1 1 2 Go to Georgia Medal
39
Lithuania 
0 1 1 2 Go to Lithuania Medal
42
Egypt 
0 0 2 2 Go to Egypt Medal
42
Israel 
0 0 2 2 Go to Israel Medal
42
Norway 
0 0 2 2 Go to Norway Medal
42
Uzbekistan 
0 0 2 2 Go to Uzbekistan Medal
46
Argentina 
1 0 0 1 Go to Argentina Medal
46
Fiji 
1 0 0 1 Go to Fiji Medal
46
Independent Olympic Athlete 
1 0 0 1 Go to Independent Olympic Athlete Medal
46
Iran 
1 0 0 1 Go to Iran Medal
46
Kosovo 
1 0 0 1 Go to Kosovo Medal
46
Singapore 
1 0 0 1 Go to Singapore Medal
52
Belarus 
0 1 0 1 Go to Belarus Medal
52
Ireland 
0 1 0 1 Go to Ireland Medal
52
Kenya 
0 1 0 1 Go to Kenya Medal
52
Malaysia 
0 1 0 1 Go to Malaysia Medal
52
Mongolia 
0 1 0 1 Go to Mongolia Medal
52
Philippines 
0 1 0 1 Go to Philippines Medal
52
Turkey 
0 1 0 1 Go to Turkey Medal
59
Estonia 
0 0 1 1 Go to Estonia Medal
59
Kyrgyzstan 
0 0 1 1 Go to Kyrgyzstan Medal
59
Portugal 
0 0 1 1 Go to Portugal Medal
59
Tunisia 
0 0 1 1 Go to Tunisia Medal
59
United Arab Emirates 
0 0 1 1 Go to United Arab Emirates Medal
more
  • கருத்துக்கள உறவுகள்

பலதரப்பட்ட சுவாரசியமான தகவல்களையும் ஒருங்கே இணைத்து தரும் யாயினிக்கு மிக்க நன்றிகள்.

தொடர்ந்தும் சுவாரசியமான தகவல்களை இணைப்பீர்கள் என நம்புகின்றேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேதம் நீ இனிய நாதம் நீ..(2), நிலவு நீ கதிரும் நீ, அடிமை நான் தினமும் ஓதும், வேதம் நீ, இனிய நாதம் நீ..(2), நிலவு நீ கதிரும் நீ, அடிமை நான் தினமும் ஓதும், வேதம்.., நீ, இனிய நாதம் நீ..(2), கருணை மேவும் பூவிழிப்பார்வையில், கவிதை இன்பம் காட்டுகிறாய்..(2), இளைய தென்றல் காற்றினிலே.., ஏ.., இளைய தென்றல் காற்றினிலே, இனிய சந்தப் பாட்டினிலே, இளைய தென்றல் காற்றினிலே, இனிய சந்தப் பாட்டினிலே, எதிலும் உந்தன் நாதங்களே, நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும், (வேதம் நீ..(1), அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய்..(2), தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ..(2), மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே, மலையும் கடலும் நதியும் அறியும் வடிவே, நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது, நித்தம் ஒரு புத்தம் புது இசைத் தமிழ் வடித்தது, ஒருமுறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும், மனம் குணம் அறிந்தவள், குழலது சரியுது சரியுது, குறுநகை விரியுது விரியுது, விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும், (வேதம் நீ..(1), – VEDHAM NEE INIYA NAADHAM NEE – MOVIE:- KOVIL PURA (கோவில் புறா)

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, தமிழரசு said:

பலதரப்பட்ட சுவாரசியமான தகவல்களையும் ஒருங்கே இணைத்து தரும் யாயினிக்கு மிக்க நன்றிகள்.

தொடர்ந்தும் சுவாரசியமான தகவல்களை இணைப்பீர்கள் என நம்புகின்றேன். 

உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி தமிழரசு.. Red-coloured-thank-you.gif

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.