Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வந்த தமிழக கரப்பந்து வீரர்கள் கவலையுடன் திரும்பினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வந்த தமிழக கரப்பந்து வீரர்கள் கவலையுடன் திரும்பினர்

 

 

ஆசிய இளையோர் கரப்பந்து (volleyball) போட்டிக்காக இலங்கை சென்றிருந்த தமிழக வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டதும், பயிற்சியாளர் ஆண்டனி, விடுதி மேலாளர் நாகராஜன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதும் தமிழக விளையாட்டு வீரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழக விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கொழும்பில் வெள்ளிக்கிழமை (05) தொடங்கிய 10-வது ஆசிய இளையோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. 

அதில் தமிழக அரசின் சிறப்பு விளையாட்டு விடுதியைச் சேர்ந்த ஹரிஹரன், மனோஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் ஹரிஹரன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 

வீரர்கள் இருவரும் இந்திய அணியுடன் இலங்கை புறப்பட்டு சென்ற நிலையில், அவர்களுக்கு அனுமதி வழங்கிய சென்னை நேரு மைதானத்தில் உள்ள அரசு சிறப்பு விளையாட்டு விடுதியின் மேலாளர் நாகராஜன், பயிற்சியாளர் ஆண்டனி ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி). 

இதுதவிர சென்னை நேரு மைதானத்தில் உள்ள தமிழ்நாடு கரப்பந்து சங்க அலுவலகத்தை உடனடியாகக் காலி செய்ததோடு, சம்பந்தப்பட்ட இரு வீரர்களையும் உடனடியாக நாடு திரும்ப எஸ்டிஏடி உத்தரவிட்டது. 

அதைத் தொடர்ந்து தமிழக வீரர்கள் ஹரிஹரன், மனோஜ் ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை விமானம் மூலம் சென்னை திரும்பினர். 

கனவு கலைந்துபோன சோகத்தை அடக்க முடியாமல் கண்களில் கண்ணீர் ததும்ப சென்னை வந்த அவர்கள் எஸ்டிஏடி அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஏமாற்றத்தையும் விரக்தியையும் சுமந்து கொண்டு ஊர் திரும்பிய அவர்களின் எதிர்காலம் இனி என்னவாகும்? அவர்கள் மீண்டும் சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா? மீண்டும் கரப்பந்துப் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவார்களா? தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் விடுதி மேலாளர், பயிற்சியாளர் ஆகியோரின் கதி என்ன? இந்த கேள்விகளுக்கெல்லாம் யாரிடமும் பதில் இல்லை. 

சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும், அதில் வாகை சூடவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு விளையாட்டு வீரனின் வாழ்க்கையிலும் உச்சபட்ச கனவாக இருக்கும். 

ஆனால் ஹரிஹரனுக்கும், மனோஜுக்கும் அந்த வாய்ப்பு மிக அருகில் வந்து மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமானால் சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பிருந்தது. ஆனால் இப்போது அவர்களின் கனவு சிதைந்து போயிருக்கிறது. 

சம்பந்தப்பட்ட இருவரும் முன்னணி வீரர்கள் ஆவர். அவர்கள் போட்டியிலிருந்து விலகிவிட்டதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

அப்படியொரு சூழல் ஏற்படுமானால் வருங்காலங்களில் நடைபெறும் போட்டிகளில் தமிழக வீரர்களை இந்திய வாலிபால் சம்மேளனம் புறக்கணிக்கலாம் என மற்ற வாலிபால் வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக எஸ்டிஏடி அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசின் கொள்கை முடிவு காரணமாகவே மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார். 

இந்தப் போட்டி தொடர்பாக எஸ்டிஏடி யிடமும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் எந்த மறுப்பும் தெரிவிக்காத எஸ்டிஏடி அதிகாரிகள், தங்களுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இரு அலுவலர்களை தற்காலிக பணிநீக்கம் செய்த தோடு, கரப்பந்தாட்ட சங்க அலுவலகத்தையும் இழுத்து மூடியதாகக் கூறப்படுகிறது. 

அரசின் கொள்கை முடிவில் யாருக்கும் மாற்றமிருக்க முடியாது. ஆனால் இலங்கையுடனான நட்புறவு போட்டியிலோ அல்லது இருநாடுகள் இடையிலான போட்டியிலோ மேற்கண்ட வீரர்கள் பங்கேற்க செல்லவில்லை. ஆசிய அளவிலான போட்டியில் அதுவும் இந்திய அணிக்காகவே விளையாட சென்றுள்ளனர். 

தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இன்னும் இரு வாரங்களில் தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை சந்திக்கிறது. 

இந்திய அணியில் தமிழக வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ஹரிஹரனும், மனோஜும் அரசின் சிறப்பு விளையாட்டு விடுதியில் இருந்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக போட்டியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். 

சர்வதேச அளவிலான போட்டிகள் என்று வரும்போது அது வெவ்வேறு நாடுகளில்தான் நடத்தப்படும். அது எங்கு நடத்தப்பட வேண்டும் என்பதை தனிப்பட்ட ஒருவரோ, வீரர்களோ முடிவு செய்ய முடியாது. 

ஒலிம்பிக் போட்டியோ, காமன்வெல்த் போட்டியோ இலங்கையில் நடைபெறுமானால் அதில் பங்கேற்காமல் புறக்கணிக்க முடியுமா? 

தனிநபர் விளையாட்டுகளில் உள்ளவர்கள் தாய்நாட்டுக்காக விளையாட முடியாது. எங்களின் தனிப்பட்ட போட்டிகளுக்கே முக்கியத்துவம் என போர்க்கொடி தூக்கி வரும் வேளையில் தாய்நாட்டுக்காக விளையாட சென்ற இந்த இளம் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை சக வீரர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

தமிழக விளையாட்டுத் துறையை மேம்படுத்த முதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் வாலிபால் வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டிருப்பதும், பயிற்சியாளர் உள்ளிட்ட இரு அலுவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதும் தமிழக வீரர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்களுக்காக ஆண்டு தோறும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் முதல்வர், இந்த விஷயத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட வீரர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் இரு அலுவலர்களின் தற்காலிக பணிநீக்க உத்தரவை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விளையாட்டு வீரர்களின் நலன் கருதி அனைத்து நாடுகளில் நடை பெறும் சர்வதேச போட்டிகளிலும் தமிழக வீரர்கள் பங்கேற்க முதல்வர் அனுமதி வழங்க வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பு. 

(தி ஹிந்து)

 

 

 

 

 

http://tamil.adaderana.lk/news.php?nid=61214

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.