Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சடலத்துடன் பொதுமக்கள் இராணுவ முகாமிற்கு முன் ஆர்ப்பாட்டம்

Featured Replies

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள வீட்டின் உரிமையாளரது இறுதிக்கிரியைகளை நடத்த அனுமதிக்குமாறு கோரி சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட protest-_14.jpgபொதுமக்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் அடித்து விரட்டியுள்ளனர்.
 
இச்சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
 
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள தனியார் ஒருவரின் ஆதனத்தினையும் அவர் குடியிருந்த வீட்டையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளரான க.சிங்கரத்தினம் என்ற முதியவர் அந்த வீட்டினையும் ஆதனத்தினையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு இராணுவத்தினரிடம் தொடர்ச்சியாக கோரியிருக்கைவிடுத்து வந்துள்ளார். ஆனால் இராணுவம் அந்த வீட்டினையும் அவருடைய ஆதனத்தினையும் வழங்க மறுத்துள்ளது. இதனால் குறித்த வயோதிபர் தனது குடும்பத்தினருடன் வாடகை வீடொன்றில் குடியிருந்துள்ளார்.
 
இந்நிலையில் அந்த வயோதிபர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். அவருடைய சடலத்தினையாவது குறித்த வீட்டில் வைத்து இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு இராணுவத்தினரிடம் உறவினர்கள் கோரியுள்ளனர். ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
இதனால் ஆத்திரமடைந்த அப்பிரதேச மக்கள் நேற்று பிற்பகல் உயிரிழந்த சிங்கரத்தினத்தின் சடலத்தினை இராணுவமுகாம் அமைக்கப்பட்டுள்ள அவருடைய வீட்டிற்கு முன்பாக வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அவ்விடத்திற்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் சடலத்தையும் தூக்கிக்கொண்டு கலைந்து செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரருக்குக் கட்டளையிட்டுள்ளனர்.
 
ஆனால் அவ்வாறு கலைந்து செல்ல முடியாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பொழுது பொலிஸார் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு கையால் அடித்து கலைந்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
 
இதனால் அச்சமடைந்த அம்மக்கள் அவ்விடத்திலிருந்து சடலத்தை தூக்கிக்கொண்டு நகர்ந்து சென்றுள்ளனர்.
 
உயிரிழந்த முதியவரின் சடலம் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
 
இறுதி யுத்தத்தின் பின்னர் புதுக்குடியிருப்புப் பகுதியில் பலருடைய வீடுகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.