Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவையால் முடியுமா?

Featured Replies

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை கடிவாளத்தை கையில் எடுத்துள்ளார். தலையணை ஒன்று உறை வித்தியாசம் என்பது போல தமிழ்த் தேசியத்தின் கொள்கையும் கோட்பாடும் ஒன்றே. அந்த வகையில் தேசியக் கட்சிகளின் தலையும் தலைமைத்துவமும் மாறுகின்ற போது ஏற்படக்கூடிய எதிர்பார்ப்பு விடுதலை உரிமைப் போராட்டம் நடத்துகின்ற கட்சிகளுக்கு இருக்க முடியாது. இது ஒருவகை அஞ்சலோட்டம் போன்றது.

 

தடியை  மற்றவரிடம் கைமாற்றுகின்ற போது  கையிலெடுத்துக் கொள்பவர் ஓட வேண்டியதுதான். வெற்றியில்லாத நீண்ட அஞ்சலோட்டமாக மாறியிருக்கும் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் சமகாலத்தில் தடியை கையிலெடுத்திருப்பவர் மாவை என்று கூறலாம். தனக்கு ஆப்பு வைப்பதற்கு முன்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியை தம்மகப்படுத்தி காத்துக் கொண்ட ஆனந்த சங்கரி ஆதங்கங்களை இன்னும் கொட்டிக் கொண்டே இருக்கின்ற தருணத்தில், அவருக்கு எதிராக அப்போதே இலங்கைத் தமிழரசுக் கட்சியை மாவை போன்றோர் மீண்டும் அரசியல் படுத்தியமை தெரிந்ததே. எவ்வாறாயினும் சம்பந்தன் செய்த அரசியல் பணியை மாவையாலும் செய்ய முடியும்.

 

மட்டுப்படுத்தப்பட்ட மக்களுக்கான அபிவிருத்திச் சேவை திறந்த நீடித்து நிற்கும் உரிமைக்குரல். இவற்றைத் தவிர வேறு எதனையும் சாதிப்பது கடினமானதாகும். கசப்பான உண்மை ? குற்றச்சாட்டுகள் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பெரும்பான்மையினத்தவரின் சாதனையாளர் மகுடத்தை சூடிக்கொள்ளும் கால நேர சூழ்நிலை அதிர்ஷ்டம் மஹிந்தவுக்கு கிட்டியமை  மாவை உள்ளிட்ட தமிழ்க் கூட்டமைப்புக்கு கசப்பான உண்மையாகும்.

 

ஜே.ஆர். ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற ஜனாதிபதிகளாலும் அவர்களது அரசுகளாலும் அடையப்பெற, அதிர்ஷ்டம் கிட்டாமை போன்று தந்தை செல்வா, எம்.  சிவசிதம்பரம், ஏ. அமிர்தலிங்கம், ஆர்.சம்பந்தன் போன்ற மிதவாதிகளாலும் பிரபாகரன் மற்றும் இதர இயக்கங்களாலும் அதிகாரம் பகிரப்பட்ட தமிழ்த் தேசியத்தை மாவையின் காலப்பகுதியில் காணமுடியுமாக இருந்தால் அதுவும் சிங்கள தேசியவாதிகளுக்கு கசப்பான உண்மையே.

 

அவ்வாறான அதிர்ஷ்டம் மாவைக்கும் மாவையின் காலப்பகுதிக்குள்ளும் நடந்தேறுமாக இருந்தால் அதுவும் வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக்கதுமே. மக்களும் மாவையின் காலத்தை பூவைத்துப் பார்க்கத் தயங்கார். சமாதானம் ஜனநாயகம் பூச்சாண்டி ரணில் பிரபா, படங்களை ஒன்றிணைத்து சமாதானம் ஜனநாயகம் காண்பித்த வடக்கு மக்களின் கரங்களில் 2005 ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தத்தளித்துக் கொண்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் அன்று வெற்றிபெற்றிருந்தால் பெரும்பான்மை வாதிகளுக்கு தோல்வி முஸ்லிம் மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் என்றாகியிருந்திருக்கும் என்பது யதார்த்தம்.

 

புலிகளின் பகிஷ்கரிப்பை புறந்தள்ளி மக்களால் வாக்களிக்க முடியாதிருந்திருக்கும் என்றாலும் ரணில் வெல்லவைக்கப்பட வேண்டும் என்பதையும் மக்கள் வாக்களிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்பதையும் வெளிப்படையாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துக்கூற மாவை உள்ளிட்ட குழுவினர் தவறிவிட்டனர். இன்று வரையில் அதுபற்றி பிரஸ்தாபித்ததாக தெரியவில்லை. தவறவிட்ட சந்தர்ப்பங்கள் காரணமாக சமகால உரிமைப் போராட்ட கோஷங்களில் வலிமை குன்றியிருப்பதான தோற்றப்பாடு புலனாகிறது. பாதி பாதியான முக்கியத்துவம் புலிகளை நாங்கள் வெறுத்தவர்கள் அவர்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று பேரினவாதிகளுக்கு சம்பந்தன் இடையிடையே பதிலடி கொடுத்து வருகின்றமை தெரிந்ததே.

 

இங்கு எந்தளவுக்கு புலிகளின் பதிலிகளாக தமிழ்க் கூட்டமைப்பினர் பேரினவாதிகளின் மனங்களில் இழையோடியுள்ளனர் என்பது கூறத்தக்கது. பேச்சுவார்த்தையை ஆரம்பித்தல், கால எல்லை நிர்ணயித்தல், ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்குள் தீர்வு, சர்வதேச மத்தியஸ்தம் போன்றவை தமிழக் கூட்டமைப்பின் பிடிப்புக்கும் சிங்கள தேசியவாதிகளின் கடிப்புக்கும் உள்ளானவை என்பது உண்மையே என்றாலும் பேச்சுவார்த்தைக்கான கதவு திறபட்டு, கால எல்லை நிர்ணயித்து, சர்வதேச மத்தியஸ்தத்துடன் மனம் திறந்து கலசமாற பரஸ்பரம் பேசப்படுவது சமகாலத்திற்குள் அசாத்தியமாகியுள்ளமை சகலரும் அறிந்த விடயமாகும்.

 

ஆகவே மாவையின் புதிய தலைமைத்துவத்துடன் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடிப்படைக் கொள்கைக்கு குந்தகம் ஏற்படாதவகையில் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன, தமக்குரியது கிடைத்தால் போதும் என்றிராமல், ஜனாதிபதி மாற்றம், ஆட்சி மாற்றம் போன்ற தேசியத் தேவையோடு இரண்டறக் கலந்து செயற்படலாம். பேச்சுவார்த்தையும், அதிகாரப்பகிர்வும் இன்னுமொரு சாராரால் மாத்திரமே ஆரம்பிக்கப்படலாம் என்ற தோற்றப்பாடுண்டு. ஜனாதிபதி மாறுகிறாரோ இல்லையோ, ஆட்சி மாறுகிறதோ இல்லையோ அத்தகைய நிலைமை ஏற்பட்டால் தான் தமிழக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் திரும்பிப் பார்க்கப்படும் என்றிருந்தால் பாதி பாதியாக விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படலாம்.

 

மக்களாதரவுப் பின்னணி  1989 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் பாராளுமன்ற எம்.பி.யாக பணியாற்ற ஆரம்பித்த மாவை 15.02.1989 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 2820 விருப்பு வாக்குகளையே பெற்றிருந்தார். 2001 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் யாழ். மாவட்டத்துக்காக போட்டியிட்டிருந்த அவர் 33,831 வாக்குகளைப் பெற்றார். பட்டியலில் இரண்டாமிடத்தை தமதாக்கினார். 02.04.2004 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 38,783 விருப்பு வாக்குகளைப் பெற்ற போதிலும் மாவையால் எட்டாமிடத்துக்கே வரமுடிந்தது. அதேவேளை ஏப்ரல் 8 ஆம் திகதி 2010 இல் கடைசியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் 20,501 விருப்பு வாக்குகளைப் பெற்ற மாவை யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தமிழரசுக் கட்சிப் பட்டியலில் முதலாமிடத்தை தக்கவைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

தீர்மானம் தீர்மானதாரர்கள் இப்பேர்ப்பட்ட அரசியல் பின்புலத்தைக் கொண்ட மாவை, ஒரு பெரிய தமிழ்க் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தலைமை தாங்குகின்ற போதிலும் சரியோ, பிழையோ தனிக்கட்சித் தீர்மானம் மேற்கொள்ள முடியாது. பல கட்சிகளைக் கொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களைக் கொண்டதான தீர்மானத்தினையே மேற்கொள்ளமுடியும்.

 

பதவிகளுக்கான போராட்டமாகவல்லாமல் மக்களின் உரிமைகளுக்கான போராட்டமாக அமையப் பெற்றிருப்பதால் ஒருமுகமான தீர்மானத்தை எடுத்து செயல்படுவது கஷ்டமான காரியமல்ல. இதேவேளை தமிழரசுக் கட்சி, வடமாகாண சபை ஆகியன நிறைவேற்றிய தீர்மானங்களின் பால் சுதந்திரக் கட்சியினதும், ஆளும் கூட்டமைப்பினதும் கவனம் திரும்பியிருக்கிறது சர்வதேச விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து பிரவேசிக்க அனுமதிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை வடமாகாண சபை நிறைவேற்றியது.

 

அது கொழும்பின் பார்வையில் தேசத்துரோகம் போன்றிருந்தாலும் சர்வதேச நியமங்களுக்கு கட்டுப்பட்டுக் கொண்டுள்ள இலங்கை மீதான சர்வதேச மனித உரிமைகள் தீர்மானத்தை அமுலாக்குங்கள் என்பதே தீர்மானதாரர்களின் நிலைப்பாடாகும். கோதாபயவின் விருப்பம் இதேவேளை முதலமைச்சர் விக்கியை சந்திக்கவேண்டும் என்ற விருப்பத்தை பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தல் நடத்தக்கூடாது அதிகாரங்களை அகற்றிவிட்டே தேர்தல் நடத்தப்படவேண்டும், விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என்ற கருத்தை கொண்டிருந்தவர் கோதாபாய ராஜபக்ஷ என்று அவரே முன்வந்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாட தூதனுப்பியிருப்பது சினேகபூர்வமான சந்திப்புக்காகவா? அல்லது பொலிஸ் மற்றும் நிர்வாக அதிகாரப்பகிர்வு பேச்சுக்காகவா என்பது தெரியவில்லை.  

 

சில அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே என்றால், அன்று ஜனாதிபதி ஊடகஸ்தர்களில் ஒருதடவை சரத் பொன்சேகாவை விடுவிக்கக்கூடாது என்று கூறிய கோதாதான், தற்போது அவரை விடுவிக்குமாறு கோருகிறார் என சிலாகித்தார். அத்தகைய சிலாகிப்பை தற்போது கூட மீள நினைவுக்குக் கொண்டுவரலாம். நாங்கள் கேட்பது பாதுகாப்பு அதிகாரங்களையல்ல பொலிஸ் நிர்வாக அதிகாரங்களையே என்று சம்பந்தன் கூறியதும் குறிப்பிடத்தக்கது. கோதா விக்கி சந்திப்பு நல்லபடியாக நடந்து வடமாகாண சபை ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கான திருப்புமுனை தோன்றவேண்டும் என்பதே புத்திஜீவிகளின் அபிலாஷையாகும்.

 

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனவரி 2015 வரை தமிழ்க் கூட்டமைப்பு காலக்கெடு விதித்திருப்பதாகவும் அதற்குப் பிறகும் எதுவும் நடக்காவிடில் மாவை தலைமையிலான தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்க் கூட்டமைப்பினர் வன்முறையற்ற போராட்டமான சத்தியாக்கிரகத்தில் இறங்கப்போவதான செய்திகளும் அடிபடுகின்றன. அப்படி நடந்தால் உத்தேச ஜனாதிபதித் தேர்தலை பாதிக்கலாம் என்ற அச்சம் ஆளும் கூட்டமைப்புக்குள் தோன்றியிருக்கிறதாம்.

 

அப்பேர்ப்பட்ட அறவழிப் போராட்டங்கள் அகோரமாகுகையில் எதிர் நடவடிக்கைகளை முடுக்கிவிடவேண்டிய நிலைமையும் தோன்றலாம். அந்தவகையில், இப்பேர்ப்பட்ட போராட்டங்கள் காரணமாக தமிழ்க் கூட்டமைப்பினர் கைதுக் கட்டளைகளுக்கும் உள்ளாகலாம் என்ற அனுமானம் உண்டு.

 

எல்லாவற்றுக்கும் மேலாக போராட்ட பாணியுடைய அகோரப்பேச்சுகளுக்கு பழக்கப்பட்டு போன மாவை எவ்வளவு தூரத்துக்குள் தனது சேவையை முன்னெடுக்கவுள்ளார் என்பது பன்னோக்குடைய கேள்வியாகும். கட்டுரையாளர் சட்டத்தரணி, சுயாதீன தேசிய முன்னணி ஸ்லைசோ தலைவர், ஒலி ஒளிபரப்பாளர்.

 

 

 http://thinakkural.lk/article.php?article/bqxsjyyfne5545e4270771aa11524ixyyj8df98b3317d174170ca0469rfri#sthash.PjO2SECV.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.