Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நுரைச்சோலை அனல் மின்னிலையத்தை எக்ஸிம் வங்கியூடாக சீனாவுக்கு வழங்க ரகசிய ஒப்பந்தம் : ஐ.தே.க.

Featured Replies

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை எக்சிம் வங்கியூடாக சீனாவிற்கு வழங்க இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஐ.தே.க. பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தினார்.
 
thissa-attanayake1_6.jpg
 
மேலும் கொழும்பு  துறைமுக நகரத்தை அமைத்து அரசாங்கம் அந்த நிலப்பகுதியினை சீன அரசிற்கே முழுமையாக வழங்கவுள்ளது. இதற்கமைய இலங்கை நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பதாகவும் அவர் சாடினார்.
 
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 
சீன அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முகாமைத்துவப் பணிகளுக்கு சீன நாட்டை சேர்ந்த பொறியியலாளர்களை நியமிக்கவுள்ளனர்.
 
இதற்கமைவான இரகசிய ஒப்பந்தமொன்று சீன ஜனாதிபதியின் விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. நமது நாட்டில் இயங்கி வரும் ஏனைய மின் நிலையங்களில் எமது நாட்டு பொறியியலாளர்கள் பணியாற்றும் போது நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு மாத்திரம் ஏன் நமது நாட்டு பொறியியலாளர்களை பணிக்கமர்த்த முடியாது. 
 
எனவே முகாமைத்துவ பணிகளை அமர்த்தி சீனாவிற்கு முழுமையாக அனல் மின் நிலையத்தை விற்பதற்கு  அரசு திட்டமிட்டுள்ளது.
 
 
இது இவ்வாறு இருக்கையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகரத்தையும் சீனாவிற்கு தாரை வார்த்துள்ளனர். தற்போது துறைமுக நகரில் சீன தேசிய கொடியே தொங்கவிடப்பட்டுள்ளது.
 
அத்தோடு குறித்த துறைமுக நகர திறப்பு விழாவிலும் சீன தூதுவர் வரும்வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ காத்திருந்தமை வேதனையளிக்கிறது.
 
எனவே இலங்கை நாட்டிற்கு சொந்தமான வளங்களை இவ்வரசாங்கம் சீனாவிற்கு விற்கின்றமை எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ஆகவே இதனை மக்கள் நன்கு உணர வேண்டும் என்றார். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.