Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியும் அரசுடன் தானா? முஸ்லிம் காங்கிரஸ் மரம் தாவ தயாராகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இனியும் அரசுடன் தானா? 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களும் ஒரே மாதிரியான முடிவுகளையே தந்தன. அரசுக்கு அமோக வெற்றி; எதிர்க்கட்சிகள் படுதோல்வி. ஆனால், அந்த நிலைமை இப்போது மாறத் தொடங்கியுள்ளது. மெல்ல மெல்ல வெற்றியை எட்டிப்பிடிக்கும் அரசு வீழ்ச்சியடையும் நிலை ஏற்படத் தொடங்கியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தலில் இந்த நிலை ஆரம்பமானது. ஊவா தேர்தலும் அவ்வாறுதான். இருந்தாலும் மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர் தலைவிட ஊவா தேர்தல் பல செய்திகளை எமக்குக் கூறியுள்ளது.

அச்செய்தியில் முக்கியமானது தான் முஸ்லிம்களின் நிலைப்பாடு. முஸ்லிம்களுக்கு எதிரான இன வாதத்தை ஊட்டி வளர்க்கும் அரசுடன் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு முக்கியமான செய்தி யொன்றை முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர்.

“”உடனடியாக அரசிலிருந்து விலகுங்கள். நீங்கள் அரசில் இருந்துகொண்டு எந்தத் தேர்தல்களில் இறங்கினாலும் உங்களை நாங்கள் ஆதரிக்கமாட்டோம்” என்பதே அந்தச் செய்தி.

அந்தச் செய்தியை முஸ்லிம் கட்சிகள் இப்போது நன்றாக விளங்கியுள்ளன. அரசில் இருந்துகொண்டு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற முடியாது என்பதை நாம் விளங்கியுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

ஊவா மகாணத்தைப் பொறுத்த வரை 30 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களே உள்ளனர். வாக்குகளைச் சிதறடிக்காமல் அளிப்பதன் மூலம்தான் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களைப் பெறமுடியும். இதன் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஒன்றிணைந்து போட்டியிட்டன.

இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு ஆதரவாக பதுளை மாவட்ட உலமா சபையும் செயற்பட்டது. பள்ளிவாசல்களும் ஆதரவு வழங்கின. இதனால், முஸ்லிம் உறுப்பினர்கள் இருவர் தெரிவாகுவர் என முஸ்லிம் கூட்டணி நம்பியது.
ஆனால், தேர்தல் நெருங்கும் போது ஓர் ஆசனமும் கிடைக்காது என்ற சைகை முஸ்லிம்களிடமிருந்து வெளிப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று அரசுடன் இணைந்து இருப்பீர்களா அல்லது எதிர்க்கட்சியில் இருப்பீர்களா என முஸ்லிம்கள் கேட்கத் தொடங்கினர். அதற்கு முஸ்லிம் கூட்டணியால் சரியாக பதில் வழங்கமுடிய வில்லை.

மு.கா. செயலாளர் ஹசன் அலியை பதுளையில் வைத்து சந்தித்த சில புத்திஜீவிகள், “”உங்களின் முஸ்லிம் கட்சிகளை நம்பி அரசிலிருந்து விலகுவோம் என ரொம்ப சிரமம் எடுத்து வாக்குறுதி வழங்காதீர்கள்” எனக் கூறினார்கள்.

அப்போதே விளங்கிவிட்டது முஸ்லிம்கள் அரசிலுள்ள முஸ்லிம் கட்சிகளை நம்பத் தயாரில்லை என்றும் இத்தேர்தலில் தாம் வெல்லப்போவதில்லை என்றும்.
பதுளை முஸ்லிம்கள் வழங்கிய இத்தீர்ப்பைப் பார்த்து ஏனைய பகுதிகளிலுள்ள முஸ்லிம்களும் விழிப்படைந்துள்ளனர்.  

குறிப்பாக, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இத்தீர்ப்பைச் சரியான தீர்ப்பாகப் பார்க்கின்றனர்.முஸ்லிம்களுக்கு எதிரான பேரின வாதத்தாக்குதல்கள் இடம்பெற்ற போதெல்லாம் முஸ்லிம்கள் அரசை விடவும் அரசில் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகளையே கடுமையாகச்சாடினர். அரசில் இருந்துகொண்டு முஸ்லிம்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் தொடர்ந்தும் அரசுடன் இணைந்து இருக்கவேண்டியதன் தேவை என்ன? என முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு முஸ்லிம் கட்சிகள் இதுவரை சரியான பொருத்த மானபதிலை வழங்கவில்லை.

அளுத்கம சம்பவத்துக்குப் பிறகும் முஸ்லிம் கட்சிகள் இணைந்திருப்பதை முஸ்லிம்கள் விரும்பவில்லை. இவ்வளவு அழிவை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய பிறகும் அரசை விட்டு வெளியேறாமல் அரசைப் பாதுகாத்துக் கொண்டு இருப்பதால் முஸ்லிம் தலைவர்கள் தூரோகிகளாகவே முஸ்லிம்களால் பார்க்கப்படுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு ஓர் ஆபத்து வரும்போது பாதுகாப்பு வழங்க முடியாமல் எல்லாம் நடந்துமுடிந்ததன் பின் நிவாரணம் வழங்குவதற்காகச் செல்வதாயின், அப்படியான முஸ்லிம் தலைவர்கள் தேவை இல்லை. வரும் முன்காப்பதற்காகவே இவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அது முடியாவிட்டால் பின்னர் எதற்கு அரசில் இருக்கவேண்டும்?

ஓர் அனர்த்தம் நடந்துவிட்டால் அனைவரையும் முந்திக்கொண்டு அரசியல்வாதிகளையும் முந்திக்கொண்டு பொது அமைப்புகள், பொதுமக்கள்தான் நிவாரணங்களை வழங்குகின்றனர். இதுதான் நடைமுறை. எவ்வகையிலேனும் நிவாரணங்களைப் பெற்று விட முடியும். பாதுகாப்பை அப்படிப் பெறமுடியாது. அந்தப் பாதுகாப்பை முஸ்லிம்களுக்கு உறுதிப்படுத்த வேண்டியவர்கள்தான் முஸ்லிம் தலைவர்கள். நிவாரணப்பணியைச் செய்வதற்கு அவர்கள் தேவையில்லை.

அளுத்கம சம்பவத்தை வைத்து முஸ்லிம் கட்சிகள் அரசிலிருந்து விலகியிருந்தால் அது நிச்சயம் அரசில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்; சர்வதேசம் வரை அது ஓங்கி ஒலித்திருக்கும்; பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கும்; அச்சம்பவத்தின் அகோரத்தை சர்வதேசத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும்; அரசுக்கு தலையிடியைக் கொடுத்திருக்கும்; முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு எதையாவது செய்வதற்கு அரசு தள்ளப்பட்டிருக்கும்.

ஆனால், அப்படி அநியாயம் நடந்தும் நாம் அரசைக் கவிழ்க்கமாட்டோம் என ரவூப் ஹக்கீம் கூறியது வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருந்தது.
அளுத்கம சம்பவத்துக்குப் பிறகு முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றால் இந்த அரசு கவிழ்க்கப்படுவது தான் ஒரே வழி என்றாகிவிட்டது. ஆனால், நாம் அரசைக் கவிழ்க்கமாட்டோம் என ரவூப் ஹக்கீம் கூறியமை மூலம் இவர் முஸ்லிம்களை அல்ல, அரசைத்தான் பாதுகாக்கிறார் என முஸ்லிம்கள் விளங்கினர்.

இந்த அரசு இருக்கும் வரை முஸ்லிம்களுக்குப் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். அப்படியாயின், இந்த அரசைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் இந்த முஸ்லிம் கட்சிகள்தான் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்குக் காரணம் என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் வந்துவிட்டனர்.

இந்த முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம்களின் உண்மையான பிரதிநிதியாக இருந்தால் அரசைவிட்டு உடன் விலக வேண்டும். தேர்தல் காலத்தில் மாத்திரம் தனித்துப் போட்டியிட்டு  பொய்யாக அரசை விமர்சித்து பின் வென்றதும் மீண்டும் அரசுடன் இணைந் திருப்பது வழக்கமாகிவிட்டது.

அந்த ஏமாற்றுவித்தை இனியும் எடுபடாது; அந்த நாடகங்களை இனியும் முஸ்லிம்கள் நம்பப்போவதில்லை அது தொடர்பில் இப்போது அனைத்து முஸ்லிம்களும் விழிப்படைந்து விட்டனர்.  ஊவா தேர்தலின் ஊடாக முஸ்லிம்கள் அந்தச் செய்தியை மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர். ஏனைய தேர்தல்களிலும் இனி அது தொடரும் என எதிர்பார்க்கலாம்.

ஊவா தேர்தலில் முஸ்லிம் கூட்டணி எதிர்க்கட்சியை விடவும் மோசமாக அரசை விமர்சித்தது; முஸ்லிம் தனித்துவம் பற்றிப் பேசியது; முஸ்லிம் பாதுகாப்புப் பற்றிப் பேசியது. அனைத்தையும் கேட்டுவிட்டு முஸ்லிம்கள் ஐ.தே.கவுக்கே வாக்களித்துள்ளனர்.

உண்மையில், இந்த முஸ்லிம் கூட்டணி போட்டியிடாமல் இருந்திருந்தால் ஐ.தே.கவில்.இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியிருப்பார்கள். இக்கூட்டணி 5,000 வாக்குகளைப் பிரித்தெடுத்ததால் எந்தக் கட்சிக்கும் முஸ்லிம் உறுப்பினர் இல்லாமல்போனது.

அரசிலுள்ள முஸ்லிம் கட்சிகள் சிந்திக்கவேண்டியது இனி அவர்களின் இருப்பைப் பற்றிதான். முஸ்லிம்களின் நலன்களுக்காக அல்ல. அவர்கள் அரசுடன் மேலும் இணைந்திருந்தால் முஸ்லிம்கள் புறக்கணிப்பார்கள்; விலகி இருந்தால் ஆதரிப்பார்கள். ஆனால், அவர்கள் சாக்குபோக்கைச் சொல்லிக்கொண்டு அரசுடன் ஒட்டிக் கொண்டே இருப்பார்கள் என்றே தெரிகிறது.

அரசின் மீதும் அரசிலுள்ள முஸ்லிம் கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்துள்ள முஸ்லிம்கள் இன்று மாற்று வழியை நாடத் தொடங்கியுள்ளனர். அந்த மாற்றுவழியை ஏற்பதாக ஐ.தே.க. மட்டும்தான் உள்ளது. அக்கட்சியையே இப்போது முஸ்லிம்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.

முஸ்லிம் கட்சிகள் தொடர்ந்தும் அரசுடன் இணைந்திருக்கும் பட்சத்தில் எழுச்சியடைந்து வரும் ஐ.தே. கவின் பின்னால் முஸ்லிம்கள் செல்வது தவிர்க்கமுடியாமல் போய் விடும் - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=691523473924223230#sthash.Rf8do7WA.dpuf

எந்த முஸ்லிம் கட்சி வெற்றி பெற்றாலும் அவர்கள் இணையப்போவது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியில்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.