Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்
 
 
 
நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் அது உண்மையினை கண்டறிவதன் மூலமாக மட்டுமே முடியும். நடந்த உண்மைகளை மூடிமறைத்து நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
sumanthiran1_3.jpg
 
அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பதுடன் உண்மையினை கண்டறிவதற்கான பொறிமுறையினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக சாத்வீக போராட்டத்தினை முன்னெடுப்போம். முடிவு அரசாங்கத்தின் கையிலேயே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
அதிகாரத்தினைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
 
ஐ.நா பேரவையிலே புதிய ஐ.நா ஆணையாளரின் வாய்மூல அறிக்கைக்கான முன் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மிக நீண்டதாக அமைந்துள்ள இவ்வறிக்கையில் இலங்கையின் விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்ச்சியாக முன்னெடுக்ககப்படுமென்றும் எனினும் இலங்கையின் உள்ளக விசாரணையொன்று நடத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இப்போது, இலங்கையில் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நடாத்தப்படுவதாக குறிப்பிடும் உள்ளக விசாரணை செயற்பாடுகள் நம்பத்தக்க வகையில் இல்லை என்பதை இந்த அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது. அதேபோல் இச்சர்வதேச விசாரணையில் மக்கள் சரியான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் முன்வைக்க வேண்டும் என்பது எமது தொடர்ச்சியான வேண்டுகோளாகவும் உள்ளது.
 
நாட்டில் உண்மையான நல்லிணக்கமொன்று ஏற்படுத்த வேண்டுமாயின் அது உண்மையினை கண்டறிவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். மாறாக நாட்டில் இடம்பெற்ற உண்மை நிலைமைகளை மூடிமறைத்து நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே, உண்மையான நல்லிணக்கமொன்று நாட்டில் ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச பொறிமுறையொன்று தேவையாக உள்ளது.
 
இலங்கையின் உள்ளக செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லையென்பதையும் இலங்கை மீதான சர்வதேச பொறிமுறை எந்த வகையில் இடம்பெறும் எனவும் விசாரணைக்குழுவினர் எவ்வாறு செயற்படுவார்கள் எனவும் ஐ.நா ஆணையாளர் தெளிவாக விளக்கியுள்ளார். அதேபோல் முழுமையான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, இச்சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமென நாம் மீண்டும் அரசுக்கு வலியுறுத்துகின்றோம். உண்மையினை மறைக்காமல் உண்மை வெளிவருவதைக் கண்டு பயப்படாத அரசாங்கமாக இருந்தால் இச்சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். ஐ.நா விசாரணையாளர்கள் இங்கு வருவதற்கு இடம்கொடுக்க வேண்டும்.
 
நாட்டில் நடந்துக் கொண்டிருக்கும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நாம் எமது எதிர்பினை தெரிவிக்கின்றோம். அரசு தற்போது கையாளும் நிகழ்ச்சி நிரலைக் கைவிட வேண்டும். சர்வதேச அளவில் இலங்கை ஒருமோசமான நாடு என்ற பெயர் ஏற்பட்டுள்ள பின்னும் அரசு தமது நிலையினை மாற்றியமைக்க வேண்டும். அப்படி தமது நிலைப்பாட்டினை மாற்றியமைத்து சரியான முறையில் அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளவும் அதேபோல் உண்மையினை கண்டறிவதற்கான பொறிமுறையினை அரசு ஏற்றுக்கொண்டு சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு அரசு செயற்படுமாயின் நாட்டில் பிரச்சினைகளை தீர்க்க முடியும். நாமும் அதற்கான முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளோம்.
 
இல்லாவிடின் எமது மக்களின் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் எமது மக்களின் நிலங்களை பாதுகாக்கவும் எமது பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் வன்முறைகளுக்கு உற்படுவதை தடுப்பதற்காகவும் நாம் முன்னரே அறிவித்துள்ளதைப்போல் சாத்வீக போராட்டத்தினை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். எமது போராட்டத்திற்கு இன்று சர்வதேச அளவில் ஏராளமான ஆதரவும் கிடைத்து வருகின்றது. எனவே, முன் அறிவித்தலுடன் செய்யப்போகும் இப் போராட்டத்தினை அரசு தடுக்க வேண்டுமாக இருந்தால் தம்மீதான அழுத்தங்கள் தமது முடிவினை மாற்றியமைக்க வேண்டும். அரசாங்கமே இப்போது தமது முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.