Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர் பிடித்துச் சென்ற மருமகனை இன்றுவரை காணவில்லை! – முழங்காவில் அமர்வில் சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் பிடித்துச் சென்ற மருமகனை இன்றுவரை காணவில்லை! – முழங்காவில் அமர்வில் சாட்சியம் photo.png

[saturday 2014-09-27 19:00]
mulankavil-missing-200-news%20%281%29.JP

நள்ளிரவில் வீட்டுக்கு வந்த இராணுவத்தினர் எனது மருமகனைப் பிடித்து பவள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர், இன்றுவரை தகவல் எதுவும் தெரியாது என முழங்காவில் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு முன்னால் தாயொருவர் சாட்சியமளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2008.09.14 ஆம் திகதி வவுனியாவில் உள்ள மகள் வீட்டில் வைத்து இரவு 12 மணியளவில் வந்த இராணுவ சீருடையணிந்தவர்கள் 10 பேர் வரை வீட்டிற்குள் நுழைந்து மருமகனை நித்திரையில் வைத்து எழுப்பி பிடித்து சென்றுள்ளனர். வீட்டிற்கு வெளியிலும் 8 பேர் வரை நின்றிருந்தனர்.

  

வீட்டில் இருந்து பிடித்து சென்று கொஞ்ச தூரம் கொண்டு சென்றவர்கள் இராணுவத்தினருடைய பவள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். அதற்குப் பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அத்துடன் மனித உரிமை ஆணைக்குழு, செஞ்சிலுவைச் சங்கம் என எல்லா இடமும் அறிவித்தோம். எனினும் அவர் தொடர்பில் இன்றுவரை தகவல் எதுவும் இல்லை. எனினும் நான் அன்று நான் வீட்டில் இருக்கவில்லை. திருமண வீடு ஒன்றிற்காக கண்டிக்கு சென்றிருந்தேன். மகளும் மருமகனும் தான் அன்று வீட்டில் இருந்தனர். எனது மகள் குறித்த விடயங்களை என்னிடம் தெரிவித்தார் என்றார்.

அதேவேளை, எனது மகன் தலைமுடி வெட்ட சலூனுக்கு போனபோது இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டார் என மகனைக் காணாத தாயொருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், நாங்கள் வவுனியாவில் இருந்தோம். எனது மகன் வீட்டில் இருந்து தலைமுடி வெட்டுவதற்காக தனது நண்பர்களுடன் சென்றவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. யார் பிடித்துச் சென்றனர் என்று தெரியாது. ஆனால் எனது மகன் எங்கே என்று இதுவரை எனக்கு தெரியாது. எல்லா இடமும் தேடி அலைந்து விட்டோம். எங்கும் என் பிள்ளை இல்லை. எனது மகன் பிடிபடும் போது 13 வயது. எனது மகன் பிடிபடுவதற்கு முன்னர் எனது மகளின் கணவரை இராணுவம் வந்து வீட்டில் வைத்து பிடித்துச் சென்றனர்.

அதற்குப் பின்னர் தான் எனது மகனும் காணாமல் போனார். எனது மகனைக் காணாத கவலையில் கணவர் மனநோயாளி ஆகிட்டார். தற்போது ஒவ்வொரு மாதமும் வவுனியாவிற்கு மருந்துக்கு போய் வருகின்றோம். வருமானம் எதுகும் இல்லை. பஸ்சிற்கு பணம் செலுத்தவும் மிகவும் கஸ்ரப்படுகின்றோம்.இன்றைக்கு இங்கு வரக்கூட 30 ரூபா ஒருவரிடம் கடன்வாங்கித்தான் வந்தேன். எனக்கு எனது மகன் உயிரோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளை நம்பிக் கொண்டு மகன் வருவார் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்றார்.

 

mulankavil-missing-270914-seithy.JPG

http://www.seithy.com/breifNews.php?newsID=117626&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.