Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச ஆதரவை இழக்கிறது இலங்கை அரசு! – அம்பலப்படுத்துகிறார் தயான் ஜயதிலக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஆதரவை இழக்கிறது இலங்கை அரசு! – அம்பலப்படுத்துகிறார் தயான் ஜயதிலக

[sunday 2014-09-28 09:00]
dayan-jayatilleka-150-news-1.jpg

சர்வதேச மட்டத்திலான ஆதரவை இலங்கை பெருமளவில் இழந்துள்ளதாக, சிரேஸ்ட ராஜதந்திரியும் பிரான்ஸிற்கான முன்னாள் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 நாடுகள் ஆதரவளித்துள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் யதார்த்தமற்றது. இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் சர்வதேச ரீதியான விசாரணை நடாத்துவது அவசியமற்றது எனவும், தேவையற்ற தலையீடு எனவும் தெரிவித்து 22 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

  

இலங்கையில் உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைம மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளன. எகிப்து தலைமையிலான இந்த நாடுகளில் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், கியூபா, இந்தோனேஸியா, தென்சூடான், சிம்பாப்வே, பங்களாதேஸ், அல்ஜீரியா, பொலிவியா, ஈக்வடோர் உள்ளிட்ட நாடுகள் கூட்டாக இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. மொத்தமாக 22 நாடுகள் கையொப்பமிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இதனை ஓர் ராஜதந்திர ரீதியான வெற்றியாக கருத முடியாது. நாடு ராஜதந்திர ரீதியில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. யதார்த்தமாக நோக்கினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு நாளுக்கு வீழ்ச்சியடைந்து வருகின்றமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஓர் அபாயகரமான நிலைமை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு 29 நாடுகள் ஆதரவளித்து வந்த போதிலும் தற்போது வெறும் 7 நாடுகள் மட்டுமே ஆதரவளிக்கின்றன. 22 நாடுகள் கூட்டாக இணைந்து சர்வதேச விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் அதில் ஏழு நாடுகள் மட்டுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வாக்களிக்கும் உறுப்புரிமை உடையவை. கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது 12 நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்திருந்தன. எனினும் தற்போது இந்த எண்ணிக்கை 7 ஆக குறைவடைந்துள்ளது.

ஆறு மாத காலத்தில் ஐந்து நாடுகளின் ஒத்துழைப்பு இழக்கப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகள் அறிக்கையில் கைச்சாத்திடாமை பற்றி தாம் பேசவில்லை. உறுப்பு நாடுகளில் பல இலங்கைக்கு ஆதரவாக கையொப்பமிடவில்லை. குறிப்பாக வியட்நாம், பிரேஸில், தென்ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த அறிக்கையில் கைச்சாத்திடவில்லை. ஐந்து நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பிலும் சீனாவும் ரஸ்யாவும் மட்டுமே இலங்கைக்கு ஆதரவளித்துள்ளன. தென் ஆபிரிக்கா, இந்தியா மற்றும் பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கவில்லை.

இந்தியா, தென் ஆபிரிக்கா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைக்கப்பெறாமை பாரிய பிரச்சினையாகவே கருதப்பட வேண்டும். நாடு பாரியளவிலான ராஜதந்திர அபாய நிலைமையை எதிர்நோக்கி வருகிறது. உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற அர்த்தத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்திய பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டிருந்தனர். எனினும், மார்ச் மாத வாக்கெடுப்பின் போது இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை, மாறாக வாக்களிப்பில் பங்கேற்காமல் இருந்தது.

நாளுக்கு நாள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைகின்றமை ஆரோக்கியமான நிலைமை கிடையாது. நாட்டின் ராஜந்திர பொறிமுறை முற்று முழுதாக சீர்குலைந்துள்ளமையே இதன் மூலம் வெளிப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=117648&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.