Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மனித கேடயங்களாகப் பயன்படுத்தினரா? – சாட்சியமளித்தோரிடம் ஆணைக்குழு கேள்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மனித கேடயங்களாகப் பயன்படுத்தினரா? – சாட்சியமளித்தோரிடம் ஆணைக்குழு கேள்வி. photo.png

[Monday 2014-09-29 08:00]
mulangavil-witness-200-news.jpg

காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினர், முழங்காவிலில் நேற்று நடத்திய இரண்டாவது அமர்வில், 43 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சாட்சியமளித்தவர்களில் அதிகளவானோர் படையிருக்கும், புலனாய்வாளர்களுக்கும் எதிராகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் மேற்படி அமர்வு நடைபெற்றிருந்தது. இதில் கடந்த காலத்தில் நடைபெற்ற அமர்வுகளில் இவ் ஆணைக்குழுவினால் கேட்கப்படாத பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

  

குறிப்பாக 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றபோது படையினர் மக்களை நாகரீகமாக நடத்தினரா? படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் செல்லும் போது படையினர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினரா? விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினார்களா? என பல கேள்விகளை ஆணைக்குழு எழுப்பியிருந்தது.

எனினும் இதற்குப் பதிலளித்த மக்கள், படையினர் எமக்கு உணவு கொடுத்தார்கள். எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. ஆனால் தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள் என சாட்சியத்தில் குறிப்பிட்டனர். இதேவேளை, அ.நிக்ஸன் என்பவர் தன்னுடைய மகன், மருமகள், பேரன் ஆகியோர் 2009ம் ஆண்டு இரணைப்பாலை பகுதியில் கடுமையான ஷெல் வீச்சினால் காணாமல்போனமை தொடர்பாக சாட்சியமளித்த போது, எவ்வாறு அவர்களைத் தவறவிட்டீர்கள்? பின்னர் அவர்களைத் தேடவில்லையா? என ஆணைக்குழு கேள்வி கேட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த அவர், தொடர்ந்தும் அவர்களை தேட முடியாத நிலை காணப்பட்டது. தொடர்ச்சியாக ஷெல் வீசப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்குள் படையினர் எங்களைச் சுற்றி வளைத்து விட்டார்கள். பின்னர் தேட முடியவில்லை என சாட்சியத்தில் குறிப்பிட்டார். மேலும், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும்போது எவ்வாறான பாதை வழியாக வந்தீர்கள்? வந்த வழியில் மக்கள் காயமடைந்தும், உயிரிழந்தும் கிடந்தனரா? என ஆணைக்குழு அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்குப் பதிலளித்த அவர், நாங்கள் நெஞ்சளவு நீர் உள்ள பகுதிக்குள்ளாக வந்தோம். நாங்கள் வந்த வழி முழுவதும் மக்கள் இறந்து கிடந்தார்கள். காயமடைந்த பலர் அந்த காயங்கள் பழுதடைந்த நிலையில், குற்றுயிராக கிடந்தார்கள். ஆனால் தொடர்ச்சியாக ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதனால் யாரும் யாரையும் தூக்கும் மனோநிலையில் கூட இல்லை என சாட்சியமளித்தார்.

இதேபோன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் காணாமல்போனவர்கள், காணாமல்போனதன் பின்னர் இருக்கிறார் என அலைக்கழிக்கப்பட்டமை தொடர்பிலும் அதிகளவாள முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

 

mulangavil-witness-290914-seithy%20%281%

 

mulangavil-witness-290914-seithy%20%282%

 

mulangavil-witness-290914-seithy%20%284%

 

mulangavil-witness-290914-seithy%20%285%

http://www.seithy.com/breifNews.php?newsID=117715&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.